முன்னுரை:-

தோழியானவள் குறுந்தொகையில் மிகவும் சிறப்புற்று மிகுந்த அறிவுத்திறனையும், நுட்பத்தையும், அன்பையும் உடையவளாக விளங்குகின்றாள். தோழி தலைவிற்குக் குறிப்பினை மாற்றிக் கூறுவதும் பின்பு அறத்தோடு நிற்கின்ற சூழலும், தலைவியன் நிலையினைப் பார்த்துத் தோழி வருந்துவதும்,  பருவத்தினைத் தலைவிக்காக மறுத்துக் கூறுவதும், தோழி தலைவிக்கு வாயில் மறுத்ததும், குறிப்பினை அறிந்து தோழி கூறியதும், அறிவுரை கூறுகின்ற திறனும், ஆறதல் கூறுகின்ற சிறப்பும், பிரிவின் போது தோழி தலைவிக்காக வருந்துவதும், தோழியின் கருத்தும், பிரிவின் போது எழுகின்ற துணிந்து கூறுகின்ற திறனும் தோழியானவள் குறுந்தொகையில் சிறப்புற்று விளங்குவதை இக்கட்டுரையில் காணலாம்.

தோழிவிளக்கம்:-

தலைவியின் சிறப்போடு இறந்த துணைப்பாத்திரத்தைச் சுட்ட தோழி, இகுளை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி போன்ற சொற்கள் பல்வேறு கால நிலையில் தோன்றி வழக்கிலிருந்தன. இவற்றில் தோழி என்ற சொல்லே பழமைச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

தோழியின் செயல்திறன்:-

அகப்பொருள் பற்றிய பாடல்களில் வரும் மாந்தர்களின் பெரும் பொறுப்பு உடையவள் தோழி, அறிவும், பண்பும், திறனும் மிக்கவளாக உள்ளாள். தலைவன் தiவிக்குத் தக்க வழிகாட்டியாகவும் திகழ்கின்றாள்.

தலைவன், தலைவி, செலவி, முதலியரோடு பேசும்பொழுது தோழி அவர்களின் மனநிலையை அறிந்து பேசுபவளாகவும் இருக்கின்றாள். சொல்திறன் மிக்கவள் என்பதையும் பல்வேறு பாடல்கள் குறிப்பிடுகின்றன. தோழியின் கூற்று தலைவன், தலைவி, செலவி, நற்றாய் ஆகியோரோடு உள்ளது.

களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் என இருநிலைகளிலும் கூற்றுகள் அமைந்துள்ளன. தலைவியின் அகவாழ்வில்  உள்ள இருநிலைகளான களவு, கற்பு என இருவேறு பிரிவுகளிலும் தோழியின் பங்கு முதன்மை பெருகிறது.

தோழி தலைவியிடம் மறைமுகமாக கூறியது:-

தலைவன், பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபட்ட பொழுது அவன் பரத்தையிடம் சென்று வருவதன் அடையாளமாகப் பூசப்பெற்றிருக்கும் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்கள் காட்டிக் கொடுக்கினறன. அதில் உவமையாக உழவர் காஞ்சியன் கிளையை வளைந்த தன்மையை அதில் படிந்த பூந்தாது கொடுப்பது போல சுட்டிக் காட்டப்படுகிறது.

காஞசி ஊரன் கொடுமை

கரந்தன் ஆகலின் நாணிய வருடமே                        (குறுந் . பா .10)

என்ற பாடல் அடிகளில் காணலாம்.

 

தலைவியின் நிலையை எடுத்தக் கூறும் திறன்:-

தலைவியின் காமநோய் அவளை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அதனால் அவளை நீ விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறாள். அதனை வெளிப்படுத்தும் விதமாக உவமைக் கையாளப்படுகிறது. யாரும் வளர்க்காமல் இயல்பாகவே வளர்ந்து சிறு மூங்கிலாகி வால் வேலியையுடைய வேரிலே குலைகளையுடைய பலாமரம் செறிந்த மலை நாட்டினை உடையவனே அந்த மலையின் பலாமரத்தின் சிறிய கொம்பின்கண் பெரிய பழம் தொங்கிக் கொண்டு இருப்பதைப் போலத் தலைவியின் உயிர் காணப்படுகின்றது.

வேரல்வேலி வேர்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமலி                    (குறுந். பா. 8)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன.

குறிப்பறிந்து ஆற்றுவது:-

தலைவன் பிரிவினைத் தோழியானவள் குறிப்பாக அறிந்து கொண்டு தலைவன் மழைச் சாரலானது அழகு கொள்வதற்குக் காரணமாக வலமாகச் சரிந்த மென்கடம்ப மலரையுடைய வேனிற் காலத்தில் மலர்ந்து நன்மணம் உடைய  நெற்றியினை உடையவள் என்று வருந்துவதை

“……………………………………

சிலம்பு அணி கொண்ட வலம் சரிமராஅத்து

வேனில் அம்சினை கமழும்.

என்ற பாடல் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

அறத்தொடு நிற்றல்:-

தலைவியின் உடல்நிலை மாற்றத்தை செவிலித்தாய் முதலானோர் ஆராய்ந்த காலத்தில் அறத்தொடு நின்று தலைவியின் காதலை குறிப்பாகப் புகழ்ந்து கூறும் விதமாக தெய்வங்களை அழைத்துப் பாடிச்செல்லும் காட்டுவிச்சியே சங்குமணியின் கோவையைப் போல வெண்மையான பெரிய கூந்தலையுடைய பாடலைப் பாடுக. தலைவனின் குன்றத்தைப் புகழ்ந்து பாடுவாய்.

இன்னும் பாடுக பாட்டே அவர்

நல்நெடுங் குன்றம் பாடிய பாடடே                (குறுந். பா. 23)

 

நற்றாயும் செவிலித்தாயும் தலைமகளது வேறுபாட்டினை உணர்ந்தும், இஃது எதனால் ஆயிற்று என்று காட்டுவிச்சியை வினவிக் கட்டுகின்ற காலத்து மற்றவர்கள் தலைமகளது Nவுறுபாட்டிற்கு காரணம் கட்டுவிச்சி சொன்னதைக் கட்டுத் தோழியானவள் நின்றாள்.

தோழி தலைவிக்கு ஆறூல் கூறியது:-

தலைவியே தலைவன் நின்பால் விருப்பம் மிக உடையவர். தலையலி செய்தலும் உடையவர் தலைவன். இதை மிகுந்த அன்பு உடைய தலைவன் தன்கடமையை விரைவில் வருகை புரிகின்ற தருனம் வரும்.

நசை பெரிது உடைய நல்களும் நல்குவர். (குறுந் . பா. 36)

என்று தோழி கூறுகின்றாள்

தோழியின் ஆறுதல்:-

தலைவன் பொருள் தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் தலைவி மிகவும் வருந்துகின்றாள். அதற்கு தோழி எவ்வளவு முயன்றாலும் பாலை நிலம் கடந்து சென்று கிடைத்ததற்கறிய பொருள் பெற்று மீண்டும் வருவர். ஆதலால் வருத்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்பதை,

“………………………………..

கலம் பல விளங்கிய அரும் பொரள்

நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே                 (குநற்.பா.59)

என்ற பாடல் வரிகளில் தோழி குறிப்பிடுகிறாள்.

முடிவுரை:-

குறுந்தொகையில் தோழியானவள் சிறப்பிடம் பெற்று விளங்கி வருகின்றாள். தோழியின் செயல்திறனைச் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது எனலாம். தோழியானவள் சிறந்த  பண்பினையும் தோழியின் அறிவு நுட்பத்தையும் தலைவியின் நிலையினை எடுத்துக் கூறுகின்ற திறனில் சிறப்புற்று விளக்கின்ற தன்மையும், தலைவியானவள் குறிப்பறிந்து ஆற்றுவதும் அறத்தோடு நிலை மூலமாக தோழியானவள் சிறப்புற்று விளங்குகின்றாள். பல்வேறு திறன்களின் மூலமாக தோழியானவள் குநற்தொகையில் சிறப்பான இடத்தினைப் பெற்று விளங்கி வருகின்றாள்.