1.மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் சொற்பொழிவுகள் கருத்தரங்குகள் ஆகியவை 6 அறக்கட்டளைகளின் நிதியுதவியுடன் நடத்தபெற்று வருகின்றன.

2.; ஆகஸ்ட் 2017 முதல் தமிழ்த்துறையில் களஞ்சியம் மின்னிதழ் தொடங்கப்பட்டு, இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை வெளிவருகின்றது.  பல அறிஞர்களும்,  ஆய்வாளர்களும் கட்டுரை வழங்கி வருகின்றனர்.
3.தமிழ்த்துறையானது தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக சுவடியியல் துறையுடன் 11.03.2019 அன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வழியாக சுவடியியல் படி எடுத்து பயிற்சியினை மேற்கொள்ளவும், சுவடியியலில் உள்ள பல்வேறு கருத்துக்களைப் பயிலவும்; ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4.தமிழ்த்துறையில் இலங்கை, மலேசியா போன்ற அயலக இலக்கியங்கள் குறித்த 400 நூல்கள்  இடம் பெற்றுள்ளன.

5.செவ்வியல் இலக்கியங்களில் ஆய்வினை மேற்கொள்ளும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலிருந்து ஆய்வு உதவித்தொகை பெற வழிகாட்டப்படுகிறது. இதுவரை 5 மாணவர்கள் உதவித்தொகையாக 15,60,000 பெற்றுள்ளனர்.
6.பல்கலைக்கழக மானியக் குழுவில் ஆய்வு உதவித்தொகையாக 11,58,000 பெற்று முனைவர் பட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.