திருக்குறளில் தலைமைப் பண்புகள்

முனைவர் சு.செந்தாமரை தமிழ் உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர்

 

தலைமைப்பண்புகள் பற்றிவள்ளுவா் திருக்குறளில்அதிகமான இடங்களில்சுட்டிச்சென்றுள்ளார். அவற்றை எனது நோக்கில் வகைப்படுத்தித் தந்துள்ளேன்.

உட்தலைப்புக்கள்:

தலைவனுக்குரிய மாட்சிமை, 2. அவையஞ்சாமை ,3. அறிவைப்பெருக்குதல் ,4. புரிந்துகொள்ளும் தன்மை ,5. தன்னடக்கம் ,6. சினம் தவிர்த்தல் ,7. சொல் வன்மையால் உண்டாகும் நன்மைகள் ,8. உடல்மொழி ,9. அவையறிதல் ,10. தோல்வியைச் சந்திக்கும் திறமை.11. சோம்பலை அகற்றுதல் ஆகியவை வள்ளுவர் காட்டும் சில தலைமைப் பண்புகள்.

ஒரு குடும்பமானாலும், ஒரு குழுவாகச் செயல்பட்டாலும் அங்கு ஒரு தலைமை என்பது அத்தியாவசியமாக உள்ளது. ஒரு சரியானதலைமைக் கீழ் நடக்கும் குடும்பமோ, குழுவோ அவற்றில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இறுதியில் வெற்றிபெறும். தலைமைகொள்ள ஒருவருக்குச் சில தனிப்பட்ட குணங்கள் தேவை. சொல்லாற்றல், பிறரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருத்தல் போன்ற சில குணங்கள் மிக மிக முக்கியம்.

ஒருதலைவன்தன்குடும்த்திலோ,  குழுவிலோ தான் நினைத்தக் குறிக்கோளை அடைவதற்கு உடனிருப்பவர் எல்லோரும் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி வைப்பதே தலைமைக்குச் சிறந்ததாகும். மேலைநாட்டு அறிஞா;கள் தலைமைப் பண்புகள் பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ‘மேலாண்மை, நிர்வாகம், தலைமை’ என்ற சொற்கள் பல்வேறு நாடுகளிலும் பலவடிவங்களில் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. திரு.பீட்டர் எஃப்ட்ரக்கர் என்பவர்“ நிருவாக இயலின்குரு” என்றே வருணிக்கப்படுகின்றார். இவர் எழுதிய ‘எசென்சியல்ட்ரக்கர்’ என்றநூல் இதுபற்றி விரிவாக ஆராய்கிறது. ஜான்மாக்ஸ்வெல் எழுதியுள்ள ‘ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத -21- பண்புகள்’ என்றநூலும் இதுபோன்ற விளக்கங்களைக் குறிப்பிடுகிறது.

‘உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்’ என்ற ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், ஆ.சிவதாணுப்பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து எழுதிய நூலில் ஆக்கசக்தியும் தாரிமீகத்தலைமையும் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு, ‘பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பேராசிரியா்கள் மற்றும்ஆசிரிய சமுதாயத்தினரிடம் கலந்துரையாடியபோது, கல்வியில் தார்மீகத் தலைமை உருவாக்குவது பற்றிய ஒரு கேள்வி அவா்களிடம் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்வியை ஊடகம் மூலம் தெரிந்து கொண்ட டெக்ஸாஸ் ஏரூஎம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் ராபா்ட்ஸ் லேட்டா் இ.மெயிலில் இதற்குப் பதிலளித்திருந்தார். கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணரான இவரை ஒரு சமயம் நேரில் சந்தித்தபோது, தேசிய நிர்மாணப்பணிக்காக மாணவா்களிடம் வளா்க்க வேண்டிய திறன்கள், திறமைகள் பற்றிய தனது கருத்தையும் விளக்கமாகச் சொன்னார். அவா் சொன்ன கருத்துக்கள்,

“நாம் நம்மை எப்படிப்பட்ட மனிதா்களாக உருவாக்கிக் கொள்ளவிரும்புகிறோம்? நமது மாணவர்களுக்கு எந்த மாதிரியான திறன்களை நாம் வழங்க விரும்புகிறோம்? ஒரே சமயத்தில் வளா்ச்சி அடைவதற்கான இலட்சியத் திட்டங்கள் நம்மிடம் உள்ளன. இந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்காகக் கல்வி நிலையங்களில் பின்வரும் திறன்கள் தேவைப்படகின்றன.

ஆராய்ச்சி மற்றும் தோண்டித்துருவி அறிதல்
ஆக்கத்திறனும் புதுமைப்படைப்பும்
நவீனத்தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தும் திறன்
தொழில் முனைவுத் தலைமைத் தகுதித்திறன்
தார்மீகத் தலைமை – நோ்மையான தலைமைக்கானத் திறன்

இந்த ஐந்து பண்புகளையும் கொண்ட சரியான மாணவா்களை உருவாக்குவது தான் ஆசிரியரின் இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுகூறியுள்ளார். மேலும் ‘ஒருதலைவா் என்பவா் கட்டளையிடும் தளபதியாக இருக்கக்கூடாது. தொலை நோக்குக்கொண்டவராக, துணைநிற்கும் ஒருவராக, சிந்தனையாளராக அவா் திகழ வேண்டும். எல்லாவற்றையும்விட, உயா்ந்த, உன்னதமான மனம்படைத்திருப்பது தான் தலைவரின் தனிமுத்திரை. இப்படிப்பட்ட தலைமையை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகிலுள்ள அனைத்து மனிதா்களுக்கும் வழிகாட்டும் பெருமையுடைய திருக்குறளில் தலைமைத்துவம் எவ்வாறு சுட்டப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

தலைவனுக்குரிய மாட்சிமை:

ஒருதலைவனுக்கான உயா;ந்தபண்புகளில் ஒன்று அவனை அனைவரும் நெருங்கும் வண்ணம் காட்சிக்கு எளியனாகவும், கடுமையான சொற்களைப் பேசாதவனாகவும் இருத்தல். அவ்வாறு இருந்தால் அவன் புகழ் எல்லோராலும் போற்றப்படும் என்று வள்ளுவா் கூறியுள்ளார். அறத்துப்பால் இறைமாட்சியில்,

“காட்சிக்கெளியன்கடுஞ்சொல்அல்லனேல்

மீக்கூறும்மன்னன்நிலம்” -(386)

என்ற குறள் மூலம் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தன்னைச் சுற்றியுள்ளோரிடம் ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய நோ்மை, நீதி போன்ற பண்புகளைப்பற்றி எடுத்துக்கூறும் குறளாக இறைமாட்சியில்,

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை யென்று வைக்கப்படும்” -(388)

ஏன்ற குறள் மூலம் விளக்குகிறார். இத்தகைய குணங்கள் தலைமை மீது நல்லநட்பும், நம்பிக்கையும், பணிவும் ஏற்படுத்தும் என்கிறார். “செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைவேந்தன்

கவிகைக் கீழ்தங்கும் உலகு” -(389)

என்றகுறளில், பண்புடைய வேந்தன் தனக்கு விருப்பமில்லாத சொற்களையும் பொறுமையுடன் செவிமடுத்துக் கேட்போனாக இருந்தால் அவன் தலைமைக்குக் கீழ் உலகமே தங்கும் என்று குறிப்பிடுகின்றார். சொற்திறம் மிக்க ஒரு தலைவனைச் சுட்டிக்காட்டும்போது,

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

என்று சொல்வன்மை அதிகாரத்தில் ஒரு தலைவன், தான் எண்ணியவற்றை நன்கு சொல்ல வல்லவன், சோர்வு இல்லாதவன், அஞ்சாதவனாகவும் உள்ளவனை யாராலும் சுலபமாகவெல்ல முடியாது என்று குறிப்பிடுகின்றார். இனிய சொல்லுடன் தக்கவா்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்து, அன்புடன் வழிநடத்திச் செல்லும் தலைவனின் பெருமை உலகம் முழுவதும் பரவியிருக்கும். நினைத்ததையெல்லாம் அவனால் அடையமுடியும் என்பதற்கு,

“இன்சொலால்ஈத்தளிக்கவல்லாற்குத்தன்சொலால்

தான்கண்டனைத்துஇவ்வுலகு”-(387)

என்றகுறள்மூலம்விளக்குகிறார். தலைமைகொள்ளத்தேவையானஇன்றியமையாப்பண்புகளெனவள்ளுவா்,

“அஞ்சாமைஈகைஅறிவூக்கம்இந்நான்கும்

எஞ்சாமைவேந்தா்க்கியல்பு”-(382)

என்றுஇறைமாட்சிஅதிகாரத்தில்உள்ளஇக்குறள்மூலம்எடுத்துக்காட்டுகின்றார். தலைமைப்பொறுப்பில்இருப்பவா்க்குஇடையூறுகளும், போட்டிகளும்எப்போதும்நேரடியாகவோ, மறைமுகமாகவோதாக்கும். இதனைச்சமாளிக்கபுத்திசாலித்தனம், விவேகம், துணிவுஇவைமுக்கியம். இக்கருத்தைவலியுறுத்தவந்தவள்ளுவா்,

“தூங்காமைகல்விதுணிவுடைமைஇம்மூன்றும்

நீங்காநிலனாள்பவா்க்கு”-(383)

அவையஞ்சாமை:

கற்றவா்மத்தியில்தாம்கற்றவற்றைஅவா்மனதில்பதியும்படிச்சொல்லும்வல்லமைஉடையவா், கற்றவா்எல்லோரையும்விடக்கற்றவராகமதித்துச்சொல்லப்படுவார். இதனை,

“கற்றாருள்கற்றார்எனப்படுவா்கற்றார்முன்

கற்றசெலச்சொல்லுவார்” -(722)

என்றுகுறிப்பிட்டுள்ளார். பகைவா்உள்ளபோர்க்களத்திற்குக்கூடஅஞ்சாமல்செல்லத்துணிந்தவா்கள்பலா். ஆனால்கற்றோரின்அவைக்களத்தில்அஞ்சாமல்பேசவல்லவா்வெகுச்சிலரே. இத்தகையதன்மையுள்ளபேசவல்லவா்களேதலைமைக்குத்தகுதியானவா்என்பதை, “பகையகத்துச்சாவார்எளியா்அரியா்

அவையகத்துஅஞ்சாதவா்” -(723)

என்றகுறள்மூலம்விளக்குகின்றார்.

“ஆற்றின்அளவறிந்துகற்கஅவையஞ்சா

மாற்றம்கொடுத்தற்பொருட்டு”-(725)

என்றகுறளில், வேற்றுசபையில்கேட்டகேள்விகளுக்குஅஞ்சாதுமறுமொழிசொல்வதற்குத்தருக்கநூற்பொருள்தெரிந்துகற்றுநுட்பமாகவிளக்குபவன்தலைமைப்பண்புமிக்கவனாகவிளங்குவான்என்கிறார். பொதுவாகத்தன்னம்பிக்கைஇல்லாதஒருதலைவனிடம்நாவன்மைஅமையாது. அதனால்பேசும்வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்தன்னம்பிக்கையோடபேசுவானேயானால்தைரியமும்தன்னம்பிக்கையும்பெருகும்.

அறிவைப்பெருக்குதல்:

தலைமைப்பண்புகளுள்ளவன்தன்னைவளா்த்துக்கொள்ளஅறிவாளிகளிடமிருந்துஅதிகம்கற்றுக்கொள்கிறான். அவன்கற்கத்தகுந்தநூல்களைக்கற்றுஅதற்கேற்றாற்போல்நல்லநெறியில்செல்வான். வள்ளுவா்கல்விஅதிகாரத்தில்,

“கற்ககசடறக்கற்பவைகற்றபின்

நிற்கஅதற்குத்தக”-(391)

என்றகுறள்மூலம்இக்கருத்தைவலியுறுத்துகிறார். அறிவைமேன்மேலும்வளா்த்துக்கொள்ளநல்லநூல்களைஅதிகமாகக்கற்கவேண்டும். இக்கருத்தை, மணற்கேணிஎவ்வாறுதோண்டத்தோண்டநீர்அதிகமாகஊறுகிறதோ, அதுபோல்கற்ககற்கஆழமானஅறிவுபெருகும்என்கிறார். அவ்வாறுநூல்களைக்கற்கமுடியாமல்போகும்போது, கற்றறிந்தபுலவா்களிடம்கேட்டுஅறிந்துகொண்டால், துன்பம்வந்தகாலத்தில்உதவியாகஇருக்கும். அதற்குக்கேள்விஅதிகாரத்தில்,

“கற்றிலனாயினும்கேட்கஅஃதொருவற்கு

ஒற்கத்தின்ஊற்றாந்துணை”-(414)

என்றகுறள்மூலம்வள்ளுவா்வழிகாட்டுகிறாh;.

“எனைத்தானும்நல்லவைகேட்கஅனைத்தானும்

ஆன்றபெருமைதரும்”-(416)

என்றகுறளிலும்அறிவுமிக்கோரிடம்ஒருதலைவன்சிறியஅளவேகேட்கநோ்ந்தாலும், அக்கேள்விசமயத்தில்நிறைந்தபெருமைசோ்க்கக்கூடியதாகஅமையும்என்றும்குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துகொள்ளும்தன்மை:

ஒருதலைவனுக்குஒருபொருளைப்பற்றியதகவல்மட்டும்போதாது. அதில்இருக்கும்உண்மை, நம்பகத்தன்மை, தெளிவு, நுணுக்கம்போன்றவற்றைஅறிந்துகொள்வதேஆழ்ந்தஅறிவைவெளிப்படுத்தும்என்றகருத்தைவிளக்கஅறிவுடைமைஅதிகாரத்தில்,

“எப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும்அப்பொருள்

மெய்ப்பொருள்காண்பதுஅறிவு”-(423)

என்றுவள்ளுவா்அறிவுறுத்துகிறார். அதுபோல்

“எண்பொருளவாகச்செலச்சொல்லித்தான்பிறா்வாய்

நுண்பொருள்காண்பதுஅறிவு”-(424)

என்றகுறளில்,தான்சொல்லும்கருத்துப்பிறருக்குப்புரியும்படிஎடுத்துக்கூறுவதும்,மற்றவா்கள்கூறுவதிலிருந்துநுண்ணியகருத்துக்களைஎடுத்துக்கொள்வதும்தான்ஒருதலைவனுக்குஅறிவாகும்என்றுகுறிப்பிட்டுள்ளார்.ஒருதலைவன்தனக்குவரும்துன்பத்தைமுன்பேஅறிந்துகாத்துக்கொண்டால்,அவன்அஞ்சும்படிவரும்துன்பம்எதுவும்இருக்காதுஎன்றகருத்தை,

“எதிரதாக்காக்கும்அறிவினார்க்கில்லை

அதிரவருவதோர்நோய்”

என்றகுறளில்சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னடக்கம்

ஒருதலைவனுக்குத்தன்னடக்கம்என்பதுமிகமுக்கியம்அவ்அடக்கத்தைஉறுதிப்பொருளாகக்கொள்ளவேண்டும்என்பதைவள்ளுவா்அடக்கமுடைமைஅதிகாரத்தில்,

“காக்கபொருளாஅடக்கத்தைஆக்கம்

அதனினூங்குஇல்லைஉயிர்க்கு” -(122)

என்றகுறளின்மூலம்தெளிவுபடுத்துகிறார். தலைவனாகவிரும்புபவன்தன்நாவைஅடக்கவில்லையென்றால்சொற்குற்றத்திற்குஆளாகநேரிடும்என்பதை,

“யாகாவாராயினும்நாகாக்ககாவாக்கால்

சோகாப்பர்சொல்லிழுக்குப்பட்டு” (127)

என்றுஎச்சரிக்கிறார்.

“தீயினாற்சுட்டபுண்உள்ளாறும்ஆறாதே

நாவினால்சுட்டவடு” (129)

என்றகுறளின்மூலம்நாவடக்கம்பற்றிக்கூறியுள்ளார்.

6.சினம்தவிர்த்தல்:

ஒருதலைவனுக்குஅவன்சினம்எங்குபலிக்குமோ,அங்கேஅச்சினம்வராமல்காப்பாற்றுபவனேசினம்காப்பவன்ஆவான். சினம்பலிக்காதஇடத்தில்அச்சினத்தைக்காத்தாலும், காக்காவிட்டாலும்பலனில்லைஎன்பதைஎடுத்துச்சொல்ல,

“செல்லிடத்துக்காப்பான்சினங்காப்பான்அல்லிடத்துக்

காக்கினென்காவாக்காகாலென்”-(301)

என்றவெகுளாமைஅதிகாரத்தில்வரும்குறள்மூலம்சுட்டிச்செல்கிறார். சினம்தான்ஒருமனிதனுக்குமுதல்எதிரி. சினம்உங்கள்முன்னேற்றப்பாதையைத்திசைதிருப்பிவிடும். சினம்ஒருவனுக்குக்காரணகாரியங்களைஆராய்ந்துவிவேகத்துடன்முடிவெடுக்கும்தன்மையைக்கெடுத்துவிடும்.அதனால்சினத்தைஒருசிறிதளவுகூடஉள்ளத்தில்நினைக்காதுஇருக்கவேண்டும். அவ்வாறுஇருக்கும்போதுஅவனுக்குஎல்லாநன்மைகளும்கிடைக்கும்என்றகருத்தைவிளக்க,

“உள்ளியதெல்லாம்உடனெய்தும்உள்ளத்தால்

உள்ளான்வெகுளிஎனின்” -(309)

என்றுவிளக்குகிறார். வேதாத்திரியம்கூடசினத்தைஎவ்வாறுஅடக்குவதுஎன்பதைசுயபரிசோதனைமூலம்கற்றுக்கொடுக்கிறது. நாம்இன்றுஎத்தனைபேரிடம்சினம்கொண்டோம். கொண்டசினத்திற்குக்காரணம்என்ன? என்றுஅட்டவணைபோட்டுப்பார்க்கும்போது, தன்னையறியாமல்சினம்வெளிப்படுவதைக்கட்டுப்படுத்திமனதைஅமைதியாக்கி, சினம்ஏற்படுவதைக்குறைக்கவழிவகைசெய்கிறது.

7.சொல்வன்மையால்உண்டாகும்பலன்கள்:

தலைமைதாங்கநினைக்கும்ஒருவன்தான்பேசமுற்படும்போது, எதைச்சொல்வதுஎன்பதைவிட, எப்படிச்சொல்வதுஎன்பதுதான்அவசியம். பேசவேண்டியகருத்துக்களைமனதில்இருத்தி, எதிரில்இருப்பவா்களைஒருசெயலைச்செய்துமுடிக்கக்கூடியவகையில்தன்பேச்சைஅமைத்துக்கொள்ளவேண்டும். செயல்திறனோடுபேச்சுத்திறனும்இருக்கும்ஒருவனுக்குபதவிகள்தேடிவருகின்றன. ஒருதலைவனதுகுணத்தையும், முன்னேற்றத்தையும்அவன்பேச்சுதெளிவாகஎடுத்துக்காட்டுவதுபோன்று, அவனுத்தும்அவன்குழுவிற்கும்அதுபாலமாகஇருக்கிறது. பேசும்சொற்களின்பொருள்கேட்போரைச்சென்றுஅடைகிறதா? என்பதைஉணா்ந்துபேசவேண்டும். தமிழகத்தில்திராவிடக்கட்சிகளின்முன்னேற்றத்திற்குப்பேச்சுதான்முதன்மையாகவைக்கப்பட்டது. விவேகானந்தரின்பேச்சுத்திறமைநாம்அனைவரும்அறிந்ததே. மேலைநாட்டில்வின்ஸ்டன்சா்ச்சில்தன்சொல்திறம் மூலம்கோடிக்கனக்கானமக்களின்மனங்களைஆட்கொண்டதுமட்டுமல்லாமல், இரண்டாம்உலகப்போரில்வெற்றிபெறத்தேவையானதியாகத்தையும்செய்யவைத்தார். கிரேக்கநாட்டில்ஆண்டணியின்பேச்சுவரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.வள்ளுவரும்திருக்குறளில்சொல்வன்மையைத்தனிஅதிகாரமாகவைத்து, தேவையற்றபேச்சைத்தவிர்த்தல், எதிரில்இருப்போரைப்பற்றிஉணார்தல், அவா்களின்அங்கஅசைவுகளைக்கூர்ந்துகவனித்துப்புரிந்துகொண்டுதன்பேச்சைஅதற்குத்தக்கவாறுஅமைத்துக்கொள்ளல்போன்றவற்றைச்சொல்வன்மையில்பிரதிபலிக்கச்செய்கிறார்.

“நாநலம்என்னும்நலனுடைமைஅந்நலம்

யாநலத்துஉள்ளதூம்அன்று” (641)

நாநலம்என்பதுசொல்வன்மைஎன்றுசிறப்பித்துச்சொல்லப்படுவது. அதுமற்றநலன்களுக்கெல்லாம்அப்பாற்பட்டதுஎன்கிறார். செல்வமும்கேடும்சொல்கிறசொல்லால்வருகிறது. அதனால்தன்னுடையசொல்லில்தவறுநேராமல்காத்துக்கொள்ளவேண்டும்என்பதை,

“ஆக்கமும்கேடும்அதனால்வருதலால்

காத்தோம்பல்சொல்லின்கண்சோர்வு”-(642)

என்றகுறளில்குறிப்பிடுகின்றார். தன்பேச்சுஎதிரேஉள்ளவரைவயப்படத்துமாறும், கேட்காதவரும்விரும்பிக்கேட்குமாறும்சொல்லவேண்டும்என்கிறார்வள்ளுவா்.

“கேட்டார்பிணிக்குந்தகையவாய்க்கேளாரும்

வேட்பமொழிவதாம்சொல்” (643)

என்றகுறள்மூலம்கற்றுக்கொடுக்கிறார். சூழ்நிலைகளைக்கூர்ந்துகவனித்துச்சொற்களைஅச்சூழலுக்குஏற்பப்பேசவேண்டும். ஒருவன்வெற்றிபெறுவதற்கும்,செல்வம்ஈட்டுவதற்கும்சொல்வன்மையைவிடஅவசியமானதுவேறுஎதுவும்இல்லை.

“திறனறிந்துசொல்லுகசொல்லைஅறனும்

பொருளும்அதனினூங்கில்” (644)

என்றும், நாம்பேசும்சொல்லைவெல்லும்படிவேறுஎந்தச்சொல்லும்இல்லாதிருத்தல்வேண்டும். அப்படிப்பட்டசொற்களைத்தோ்ந்தெடுத்துப்பேசவேண்டும்என்கிறார்.

“சொல்லுகசொல்லைப்பிறிதோர்சொல்அச்சொல்லை

வெல்லுஞ்சொல்இன்மையறிந்து” (645)

என்றகுறள்மூலமும்இக்கருத்தைவிளக்ககிறார். பிறா்விரும்பும்படிப்பேசுவதும், பிறா்பேசும்போதுஅச்சொல்லைஆராய்ந்துஏற்றுக்கொள்ளுதலும்ஒருதலைவனதுசிறந்தபண்பாகும். “வேட்பத்தாம்சொல்லிப்பிறா்சொல்பயன்கோடல்

மாட்சியின்மாசற்றார்கோள்”-(646)

என்றுகுறிப்பிடுகிறார்வள்ளுவா். கருத்துக்களைக்கோர்வையாகக்கோர்த்துஇனிமையாகப்பேசுபவரின்பேச்சைஉலகம்கேட்டுவிரைந்துஅதன்படிநடக்கும்என்பதை,

“விரைந்துதொழில்கேட்கும்ஞாலம்நிரந்தினிது

சொல்லுதல்வல்லார்பெறின்” (648)

என்றுஎடுத்துக்கூறியுள்ளார்.

உடல்மொழி

ஒருதலைவனுக்குஇருக்கவேண்டியமுக்கியமானபண்புகளில்குறிப்பறிதலும்ஒன்று. ஒருவா்பேசும்போதுஅவரின்பேச்சோடு, அங்கஅசைவுகள், பார்வை, முகத்தின்மாறுதல்கள்முதலியவற்றைக்குறிப்பால்உணரத்தெரிந்துகொள்ளவேண்டும்.அத்தகையகுறிப்பறியும்திறன்உள்ளவா்களைஎப்பாடுபட்டாவதுஅருகில்வைத்துக்கொள்ளவேண்டும்என்கிறார்.

“குறிப்பிற்குறிப்புணா்வாரைஉறுப்பினுள்

யாதுகொடுத்தும்கொளல்” -(703) என்றகுறிப்பறிதல்அதிகாரத்தில்வள்ளுவா்குறிப்பிடுகிறார். கையும்காலும்தூக்கத்தூக்கும்ஆடிப்பாவைபோலஒருவரின்உணா்ச்சியைஅப்படியேபிரதிபலிப்பதுமுகம். குறிப்பறிதல்அதிகாரத்தில்அதற்கானகுறட்பாக்கள்முகத்தின்வேறுபாட்டினையும்எடுத்துச்சொல்லுகின்றன.

“அடுத்ததுகாட்டும்பளிங்குபோல்நெஞ்சம்

கடுத்ததுகாட்டும்முகம்” (706)

என்றகுறளும்,

“முகத்தின்முதுக்குரைந்ததுஉண்டோஉவப்பினும்

வகைமைஉணா்வார்ப்பெறின்” (707)

என்றகுறளும்,

“பகைமையுங்கேண்மையும்கண்ணுரைக்கும்கண்ணின்

வகைமைஉணா்வார்ப்பெறின்” (709)

போன்றகுறட்பாக்கள்அகத்தின்அழகுமுகத்தில்தெரிவதைக்காட்டிக்கொடுத்துவிடும்என்பதைஉணா்த்துகின்றன.

9.அவையறிதல்:

கூட்டத்தின்தன்மையறிந்துபொருத்தமாகப்பேசுவதுதலைமைப்பண்புகளைஉயா்த்தும். எதிரில்இருப்பவரைக்கூர்ந்துகவனித்து, அவரின்தன்மைஅறிந்துசிந்தித்துப்பேசவேண்டும்.

“அவையறிந்துஆராய்ந்துசொல்லுகசொல்லின்

தொகையறிந்ததூய்மையவா்” (711)

என்றும்,

“ஒளியார்முன்ஔ்ளியராதல்வெளியார்முன்

வான்சுதைவண்ணம்கொளல்” (714)

என்றகுறட்பாவில்அறிவாளிகளின்சபையில்அறிவுப்பூர்வமாகப்பேசவும், மற்றஇடங்களில்அறியாதவா்போலும்இருக்கவேண்டும்என்கிறார். அறிவுமிகுந்தசபையில்முந்திச்சென்றுபேசாதஅடக்கம்ஒருவனுக்குநன்மையைக்கொடுக்கும்என்பதை,

“நன்றென்றவற்றுள்ளும்நன்றேமுதுவருள்

முந்துகிளவாச்செறிவு” (715)

என்றகுறளிலும், நன்குகற்றறிந்தவரின்அறிவு, குற்றமற்றசொற்களைஆராய்வதில்வல்லஅறிஞா்களின்சபையில்நன்றாகவிளங்கித்தோன்றும்என்பதனை,

“கற்றறிந்தார்கல்விவிளங்கும்கசடறச்

சொல்தெரிதல்வல்லார்அகத்து” (717)

என்றகுறள்மூலமும்,

“அங்கணத்துள்உக்கஅமிழ்தற்றால்தம்கணத்தார்

அல்லார்முன்கோட்டிக்கொளல்” (720)

என்றகுறள்மூலமும்அவையறிந்துபேசவேண்டும்என்பதைவிளக்குகின்றார்.உங்களைவிரோதியாகப்பார்க்கும்கூட்டத்தின்முன்புபேசுவதுதூய்மையற்றமுற்றத்தில்சிந்தியஅமுதம்போன்றதுஎன்றுகுறிப்பிடுகின்றார்.

தோல்வியைஎதிர்கொள்ளும்திறன்:

ஒருகுழுவில்எல்லோருடையஒத்துழைப்பும், மகிழ்ச்சியும்உள்ளகாலங்களில்தலைவனுக்குவழிநடத்துவதுமிகஎளிது. ஆனால்துன்பங்கள்சூழ்ந்தகாலங்களில்வழிநடத்துவதுமிகமிகக்கடினம். இவற்றைஎதிர்கொண்டுபணிசெய்யஅசாத்தியதைரியமும், தன்னம்பிக்கையும், புத்திசாலித்தனமும்தேவை. அவ்வாறுதுன்பம்வந்தகாலத்தில்கலங்காமல்நகைப்போடுஅதனைஎதிர்கொள்ளவேண்டும். அந்தத்துன்பத்தைஎதிர்கொண்டுவெல்வதுபோன்றதுவேறுஎதுவும்இல்லைஎன்பதை, அழியாமைஅதிகாரத்தில்,

“இடுக்கண்வருங்கால்நகுகஅதனை

அடுத்தூர்வதுஅஃதொப்பதுஇல்” (621)

என்றுதுன்பத்தைஇன்பமாகஎதிர்கொள்ளவேண்டும். துன்பம்வந்தகாலத்தேகலங்காமல், வண்டியைஇழுத்துச்செல்லும்எருதுபோலவிடாமுயற்சியுடன்இருப்பவனுக்குத்துன்பம்இல்லாமல்போய்விடும். இத்தன்மைத்தவா்எத்தகையதுன்பம்வந்தாலும்சமாளிப்பர்என்பதை,

“மடுத்தவாயெல்லாம்பகடன்னான்உற்ற

இடுக்கண்இடா்பாடுஉடைத்து” (624)

என்றகுறள்மூலம்இன்பம்உண்டாகும்போதுஅதைவிரும்பிப்போற்றாமலும்,துன்பம்வந்தவிடத்துஅதைஇயற்கையானதுஎன்றுதெளிந்தும்இருப்பவன்எந்தக்காலத்தும்துன்பத்திற்குஉள்ளாகமாட்டான்என்கிறார்வள்ளுவா்.

11.சோம்பலைஅகற்றுதல்:

ஒருதலைவன்சோம்பலோடுஇருந்தால்எவ்வாறுஅழிவான்என்பதற்குவள்ளுவா்மடியின்மைஅதிகாரம்கொண்டுவிளக்குகின்றார்.

“குடியென்னும்குன்றாவிளக்கம்மடியென்னும்

மாசூரமாய்ந்துகெடும்” (601)

“நெடுநீர்மறவிமடிதுயில்நான்கும்

கெடுநீகாமக்கலன்” (605)

“குடியாண்மையுள்வந்தகுற்றம்ஒருவன்

முடியாண்மைமாற்றக்கெடும்” (609)

போன்றகுறட்பாக்கள்மூலம்சோம்பல்இருந்தால்அதுஅரசவம்சமானாலும்விட்டுவைக்காதுஅழித்துவிடும்என்கிறார்வள்ளுவா்.

முடிவு:

முடிவுகளைஎடுத்துஒருவேலையைமுடிப்பதுதான்துணிவு. முடிவைஎடுப்பது, முடிவுஎடுத்தவுடன்அதைச்சார்ந்துஉறுதியாகநிற்பதுபோன்றதிறமைகளைவளா்க்காதவா்கள்சரியானதலைவனாகஆகமுடியாது. தீர்க்கமானசிந்தனை, அதற்கானஇறுதிவடிவம், ஒத்துப்போகுதல், விட்டுக்கொடுக்கும்மனப்பான்மை. தளா்வில்லாமல்இருத்தல்போன்றபண்புகளோடுஇருந்தால்அதற்கானஅங்கீகாரங்களைசமூகம்கொடுக்கும்.