முனைவர் சு. செல்வக்குமார்,                                                                              உதவிப் பேராசிரியர்,                                                                              தமிழிலக்கியத் துறை,                                                                              என்.ஜி.எம். கல்லூரி,                                                                              பொள்ளாச்சி.

 பண்பாடும் புதின இலக்கியமும்

பரந்த இப்புவிப்பரப்பெங்கும் பல்வேறு விதமான இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.ஒவ்வொரு தனிப்பட்ட இனமும் தனக்கேயுரிய வாழ்க்கை முயோடு ஒரு பண்பாட்டுத் தன்மையுடன் இயங்கி வருகிறது.ஒரு இனக்குழுவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முரையானது மற்ற இனக்குழுவின் வாழ்க்கை முரைகளிலிருந்து பெரும்பாலும் வேறுபட்டு அமைகிறது. இந்த வேறுபாட்டுத் தன்மையே அந்த இனக்குழுவின் தனித்தன்மைக்கு காரணமாக அமைகின்றது.ஓர் இனத்தின் பண்பாடு அவ்வின மக்களின் கலை, இலக்கியம்,வாழ்க்கைமுறை எனப் பலதளங்களில் வெளிப்படுகிறது. ஒரு பண்பாட்டைச் சேர்ந்தவர் மற்றொரு பண்பாட்டினரிடமிருந்து தெரிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் நிறாய உள்ளன. ஓர் இனத்தின் பண்பாட்டை அடையாளங்காணவும் அப்பண்பாட்டை அறிந்து பயன்பெறவும் பண்பாட்டு விதிகள் குறித்த புரிதல்கள் தேவையாகின்றன.

பண்பு:சொல் விளக்கம்

‘பண்பாடு’ என்ற சொல்லானது தமிழில் மிக அண்மை காலத்தில் தோன்றிய சொல்லாக பல அறிஞர்கள் கூறியுள்ளனர். தமிழில் ‘பண்பு’ என்ற சொல்லே தொன்மை காலந்தொட்டு வழங்கி வந்துள்ளமையை இலக்கண, இலக்கியங்களின் வழி நின்று காணமுடிகிறது. தமிழில் தோன்றிய மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

இசையினும் குறிப்பினும் பண்பினுந்தோன்றி” (தொல்., சொல்., உரி., நூற்.1)

என்று  இடம் பெற்றுள்ள வரியில் ‘பண்பு’ என்ற சொல்லுக்குப் “பொறியானுணரப்படுங்குணம்” என்று பொருள் தருகின்றார் சேனாவரையர்.

சங்க இலக்கியங்களிலும் ‘பண்பு’ என்ற சொல் காணாப்படுகின்றது. “பாடறிந்து ஒழுகும் பண்பினரே”(புறம்-197)  என்ற புறனானூற்று அடியில் ‘பண்பு’என்ற்ற ச்சொல் இடம் பெற்றுள்ளது.சிறிய ஊரையுடைய வேந்தராயினும் எம்மிடத்துச் செயும் முறைமையை அறிந்து நடக்கும் குணத்தினையுடையோர்காண்” என்று பழைய உரை கூறுவதாக செ.பழனிச்சாமி குறிப்பிடுகிறார்.(புறனானூற்றில் தமிழர் பண்பாடு, ப. 10). இங்கு “பண்பினர்” என்பது “குனமுடையவர்” என்று பொருளைத் தருவதாக நூலாசிரியர் கூறுகிறார்.

பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுத்ல்” (கலி.,பா.133)

என்ற கலித்தொகை வரி’பண்பு’ என்ற சொல்லுக்கு விளக்கம் தருகிறது. இதற்கு உரை கூறும் நச்சினார்க்கினியர், “மக்கட்பண்பு என்று சொல்லப்படுவது உலக வழக்கம் அரிந்தொழுகுதலை” குறிக்கும் என்று விளக்கம் தருகின்றார்.

பண்பாடு என்னும் சொல் விளக்கம்:

‘பண்பாடு’ என்ற சொல்லனது ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் வெய்த்துச் சொல்ல முடியாதவாறு பரந்த பொருளமைதியைக் கொண்டு விளங்குகிறது. இச்சொல்கடந்த நூர்றாண்டில் உருவாக்கப்பட்ட்து என்பதட்கு, 1937-ல் டி.கே.சிதம்பரம் முதலியார் cultural எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழில் பண்பாடு எனும் சொல்லட்சியை உருவாக்கினார் என்பார் பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை”.

மொழிஞாயிறு  ஞா. தேவநேயப்பாவானர் ‘பண்பாடு’ என்பதற்கு தரும் விளக்கம் பின்வருமாறு:

“பண்படுவது பண்பாடு,பண்படுதல் சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ்” (தனிப்பாடல்)என்றும் சொல்வது வழக்கம்.

‘பண்’ என்னும் பெயர்ச்சொல்லுக்கு மூலமான’பண்ணுதல்’ என்னும் வினைச்சொல்லும் சிரப்பாக ஆளப்பெரும் போதும்,பல்வேறு வினைகளைத் திருந்தச் செய்தலையும் பல்வேறு பொருள்களைச் செம்மையாய் அமைத்தலையும் குறிக்கும்.

பண்ணுதல்

  1. நிலத்தைத் திருத்துதல்(பண்பட்ட மருத நிலம்-பண்ணை)
  2. ஊர்தியைத் தகுதிப்படுத்துதல்.

பூத நூல் யானையொடு புனைதேர் பண்ணவும்”(புரம்.,12)

  1. சுவடித்தல்(அலங்கரித்தல்)

பட்டமொடிங்கல் பண்ணி”(சூளா. கல்யா.14)

  1. இசையலகமைத்தல்

பண்ணல் பரிவட்டனை ஆராய்தல்”(சீவக.651 உரை)

  1. பண் அமைத்தல்

மருதம் பண்ணிய கருங்கூட்டு சீறியாழ்”(மழைபடு.534)

  1. சமைத்தல்

பாலுமிதவையும் பண்ணாது பெறுகுவிர்”(மலைபடு.417)

‘செய்’ என்னும் வினைச் சொல்லினின்று ,திருந்த அல்லது அழகாய் செய்யப்பட்ட்து என்னும் பொருளில் ‘செய்’ என்னும் நிலப்பெயரும் தோன்றி இருப்பது போன்றே ‘பண்’எனும்  வினைச்சொல்லினின்றும் திருந்த அல்லது இனிதாய் செய்யப்பட்ட்து என்னும் பொருளில் பண்ணை என்னும் நிலப்பெயரும் பண் எனும் இசைத்தமிழ் அமைப்பின் பெயரும் தோன்றீயுள்ளன.

பண்பாடு பல பொருட்கு உரியதேனும், நிலமும் மக்கள் உள்ளமும் பற்றியே பெரு வழக்காகப் பேசப்பெறும்.ஆங்கிலத்தில் CALTURE எனும் பெயர்ச்சொல் சிரப்பாக நிலப்ப்பண்பாட்டையும் உளப்பண்பாட்டையும் குறிப்பது கவனிக்கத்தக்கது. CALTIVATE என்னும் வினச்சொல்லும் அங்கனமே இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்காளைத் தழுவிய உளப்பாடே சிறப்பாகக் கொள்ளவும் சொல்லவும் பெறும்.

உள்ளம் பண்படுவது பெரும்பாலும் கல்வியாலாதலால் பண்பாடு கல்வி மிகுதியைக் குறிக்கும். தமிழின் தன்மையை குறிக்கும் சொற்களுள் இயல்பு என்பது இயற்கையான தன்மையையும் பண்பு என்பது பண்படுத்தப்பெற்ற நல்ல தன்மையையும் குறிக்கும்” என்று ஞா. தேவநேயப்பாவாணர் பண்பாடு என்பதற்கு விளக்கம் தறுகிறார்.(பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்,பக்.5-6)

வண.பிதா தனிநாயகம் அடிகள் பண்பாடு என்பதற்கு, “பண்பாடு என்றால் ஒரு இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழ்க்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டு முறைகள், களவொழுக்கம், கரற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகல், ஆடை அணிகலங்கள், திருவிழாக்கள், உணவு, பொழுதுபோக்கு விளையாட்டுகள், ஆகியவற்றாய்யெல்லாம் குறிக்கும்”( வண.பிதா தனிநாயகம் அடிகள் தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்களும்.ப.23)என்று கூறுகிறார்.

பண்பாடு என்பதற்குச் சமூகவியலாளர்கள் தரும் விளக்கங்களாக தா. ஈசுவரப்பிள்ளை தன் நூலில் பின்வரும் பல மேற்கோள்கலைக் காட்டுகிறார். “பண்பாடு என்பது சமுதாயத்திலிருந்து உறுப்பினர்களால் கற்கப் பெறுவனவும் பங்கிடப் பெருவனவும் ஆகும்.சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் மதிப்பிகளையும் நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் (BEHAVIOURS) கற்பதால் தான் மனிதர்களாக வாழ்கின்றனர்” (எ.கா. மேற்கோள் : தா. ஈசுவரப்பிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, பக்.136-137)

மக்களின் வரலாற்றில் அவர்கள் படைத்துக்கொண்ட கருவிகள் சமூகப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், ஒழுக்கங்கள், கொள்கைகள் முதலானவற்றின் சாராம்சங்களைப் பண்பாடு எனப் பொதுவாக்க் கூறலாம்”(மேலது)

திறனாய்வாளர் தி.சு.நடராசன் பண்பாட்டுக்குத் தந்துள்ள விளக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன.

“மனிதனுடைய வாழ்நிலைகளில் சாராம்சமாகக் காண்ப்படுகின்ற ஒழுகலாறுகள், நடத்தைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள், சுற்றி இருப்பவை பற்றிய உணர்வு நிலைகள் முதலியவற்றைக் குறிப்பது பண்பாடு. சமூகக் குழுக்கள்,நாடுகள், இன்ங்கள் என்ற நிலைகளில் காணப்படும் பல்வேறு, பட்ட உறவுகள், கலை அழகியல் வெளிப்பாடுகள், சடங்குகள், வழிபாடுகள் என்று இத்திறத்தினவற்றைக் குறிப்பது பண்பாடு. இது தூலமானதல்ல, தூலமானவற்றின் மேல் அமைந்த அவற்றின் புலப்பாடுகள். மனிதர்களை இணைப்பது; அதே போன்று மனிதர்களை வேறுபட்டுத்திக் காட்டுவது, மரபு சார்ந்தது அதே போன்று புதியதைத் தழுவிக்கொள்வது; தகுதியாக்க் காட்டிக் கொள்வது, அடையாளமாக அமைவடு” (தி.சு. நடராசன், பண்பாட்டு வெளிகள், ப.1)

“தமிழில் பண்பாடு எனும் இன்தச் சொல், கனமான,உயிர்ப்பானதொரு சொல்தான். பண், பண்(ணு), பண், பண்படு, பண்டு – இந்தச் சொற்களெல்லாம் சேர்த்து நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும். பண்பெனப்படுவது, பாடறிந்தொழுகுதல் – பண்பாடு என்றால் RAW I COOKED என்ற இருநிலை எதிர்வில், அது ஆகுதல், ஆக்குதல், வளர்தல் என்ற பொருள்னிலைகள் கொண்டதாகும். களர் நிலமோ, கன்னி நிலமோ எதுவாயினும் பயிறுவதற்கு வாகாய்ப் பக்குவப் படுத்துவதையும் பண்படுத்துவது என்றுதான் சொல்கிறோம்.

‘பண்பாட்டு மானிடவியல்’ என்ற நூலை எழுதிய பக்தவச்சல பாரதி, “பண்பாடுன் என்பதுன் தலைமுறை தலைமுறையாக அறிவிசார்ந்த நிலையில் கற்றுணர்ந்த நட்த்தை முறைகளைக் குறிக்கின்றது என்பது அறியப்பெறும். மனிதன் பிறந்த நாள் முதற்கொண்டு இறக்கும் நாள் வரை அவனது பண்பாட்டைச் சமுதாய வயமாக்கம், பண்பாட்டுமயமாக்கம் மூலம் கற்கிறான். கர்பிக்கும் நிறுவனம் குடும்பமாகவோ, பெற்றோர்களாகவோ, ஒப்பார் குழுவாகவோ, பிற நிறுவனகளாகவோ இருக்கின்றான.” (பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல்,ப.149) என்று பண்பாட்டின் இயல்பை விளக்குகிறார்.

பண்பாட்டின் வரையறைகளும் வேறுபாடுகளும் பலவாறாக இருக்கின்றன என்று சொல்லும் பக்தவச்சல பாரதி, குரோபர், குளுக்கான் என்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களைப் பின்வருமாறு எடுத்துக்கூறி பண்பாடு என்பதை புரிதலுக்குட்படுத்துகிறார்.

அ. பண்பாடு என்பது மக்களால் ஆக்கப் பெற்ற கருவி.அந்த ஊடகத்தை கொண்டே மக்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்கின்றனர்.

ஆ. பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் போது உண்டாகும் நட்த்தை முரைகளின் சேர்ம்மாகும். இது அந்தந்த சமுதாயத்திற்கு மட்டுமே உரியது.இது உயிரியல் நிலையில் மரபுரிமையாக வாராதது.

இ. மக்கள் தலைமுறை தலிமுறையாக சேர்ந்து கற்ற நட்த்தௌ முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.

ஈ. பண்பாடு என்பது மனிதனின் உடல்சாராத தகவமைப்பு.

உ. பண்பாடு என்பது மனிதனால் தோர்றுவிக்கப் பட்ட சுற்றுச் சூழல். இதில் பொருள்சாராப் பண்புகள், சட்டங்கள், நம்பிக்கைகள் முதலானவை அடங்கும்.

ஊ.பண்பாடு என்பது மரபு  வழியில் புரிந்து கொண்டுள்ளவை பற்றிய ஓர் அமைப்பு. இது கற்றலின் மூலம் பெறப்படுவது, கற்றல் நடத்தை முறையின் வழி உருவாக்கப்பட்டது.

எ. பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும், சமுதாய மரபுரிமையாகப் பெற்ப்பட்ட நம்பிக்கைகளும், பழக்கங்க்ளும் அடங்கிய தொகுப்பாகும்(மேலது.,ப.151)

          பண்பாட்டுக்கு வரையறைகள் பலவாறாக இருந்த போதிலும் அவ்வரையறைகள் ஓர் இனத்தின் பல கூறுகளைச் சுட்டிக்காட்டுவதில் ஒன்றுபடுவதையே காணமுடிகிறது. எனவே பண்பாடு என்பதைப் பின் வருமாறு விளக்கிக் கொள்ளலாம்.

          ஒரு சமூகம் தான் வாழுகின்ற வாழிடச் சூழலுக்கேற்ப வாழும் முறைகள், உடன் வாழும் மனித்ர்களோடு ஓர் ஒத்திசைவு பெர்று நடந்து கொள்ள ஏற்படுத்திக்கொள்ளும் நட்த்தை முறைகள் , மனித வாழ்வின் மேன்மைகளாக்க் கருதி அச்சமூகம் கொண்டுள்ள உணர்வுகள், எண்ணங்கள், வாழ்வில் தளராத தன்மையோடு தொடர்ந்து பயணம் செய்யவும், தடைகளை எதிர்கொண்டு நழ்வழியில் நடைபோடவும் அச்சமூகம் கொண்டுள்ள நம்பிக்கைகள், ஒரு மனிதனின் உயிர்த் தன்மையை மேம்படுத்த அச்சமூகம் கொண்டுள்ள சடங்குகள், சராசரியான மனிதப் புரிதல்களுக்கு அப்பாலானத் தெய்வீகத் தன்மையை உணர அச்சமூகம் பின்பற்றும் நெறிகள், அந்தச் சமூகம் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு வரும்  மரபுகள் அச்சமூகத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இருக்கின்ற உள்ளார்ந்த தன்மைகள்,இயற்கையோடும் சக மனிதகளோடும் கொண்டுள்ள இனக்கம் இவற்றை எல்லாம் உள்ளடக்கியதை ஒரு சமூகத்தின் பண்பாடு எனக் கொள்ளலாம்.

          ஒரு சமூகத்தினர் சூட்டிக்கொண்டுள்ள பெயர்கள், வழிபடும் தெய்வங்கள், கொண்டாடும் விழாக்கள், அவற்றின் வாழ்வியல் மதிப்பீடுகள், அவற்றைத் தாங்கிய இலக்கியங்கள், அச்சமூகத்தினரின் உடன்பாட்டு, எதிர்மறைத் தன்மைகள், விழாக்களின் போதும், சடங்குகளின் போதும், வழிபாடுகளின் பொழுதும் அவர்கள் உண்ணும் உணவுகள் அப்போதுகளில் அவர்கள் பின்பர்றும் நடத்தை முறைகள், தன் இனம் குறித்த மனப்பாண்மைகள், தங்களின் வாழ்வியல் விதிகளாக அவர்கள் கொண்டுள்ள நெறிமுறைகள், இயற்கைக்கும் அவர்களுக்குமான உறவின் தன்மை, கையாளும் கருவிகள் மீதான அறிவுநிலை அல்லது தொழில் நுட்பத் தன்மை, அவர்களின் மண் சார்ந்த உணர்வுகள், அவர்களின் மொழி போன்ற ஒரு சமூகத்தின் பல்வகைப்பட்ட கூறுகள் அச்சமூகத்திற்கான பண்பாட்டை வடிவமைக்கின்றன.

Leave a Reply