முனைவர் ச.முத்துவேல், தலைவர்மற்றும்இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, என்.ஜி.எம்கல்லூரி, பொள்ளாச்சி.

————————————————————————————————–

மனிதத்தேடல்

மனிதன்

‘அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது’ எனும்ஔவைகூற்றிப்படி இம்மானிடப்பிறவி என்பது மிகவும் உயரிய பிறவியாகும். மானுடத்தின் சிறப்பை உணர்ந்த வள்ளுவர்,

வையத்துள்வாழ்வாங்குவாழ்பவன்வானுறையும்

தெய்வத்துள்வைக்கப்படும் (குறள் 50)

என்றார். மனதினை உடையவனே மனிதன். மனிதன் எப்போது சிந்திக்கத் தொடங்குகிறானோ அப்போதே அவனுடைய மனம் முழுமை பெறாமல் ஏதோ ஒன்றைத் தேடுவதாக அமைகிறது. சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உரியது. சிந்தனையின் வெளிப்பாடு அறிவு. அறிவின் பயன்தத்து வார்த்தக் கண்டுபிடிப்புகள். அறிவுக்குணத்தின் இயல்பு ஒன்றைப்பகுத்தறிவது; திட்டம்தீட்டுவது; வழிகாட்டுவது; கட்டுப்படுத்தி நிர்வகிப்பது. ஆற்றல்பண்பு அறிவுப்பண்புக்கு ஒத்துழைத்து வந்தால்தான் மனிதன் நீதிநெறியில் நிலைத்து நிற்க முடியும்.

படிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படியிருக்கவேண்டும், எதைத்தேடவேண்டும் என்ற படிப்புதான் என பிளேட்டோ. பறவைகளோ விலங்குகளோ நேற்றைப் பற்றியோ நாளை பற்றியோ சிந்திப்பதில்லை. பஞ்சபூதங்களும் அவைசார்ந்த இயற்கைகளும் அப்படியேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதனுடைய இயக்கம் பொருளைத் தேடுவது, அழகைத்தேடுவது,  அன்பைத்தேடுவது, பொன்னைத் தேடுவது. அவன் தேடியபட்டம், பதவி, பொன், பொருள், புகழ் ஆகியன கிடைக்கின்றன. ஆனால் அவன் மனம் நிறைவு பெற்றுவிடுகிறதா ஆம் என்ற பதில் அவனிடம் இருக்குமானால் அது அவன் அறிவின்மையை வெளிக்காட்டுகிறது. இக்கட்டுரையின் நோக்கமே அறிவின் துணைகொண்டு மனிதனுக்குள் மனிதத்தைத்தேடி இவ்வுலகில் மனிதனை அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்ய வழிகாட்டுவது தான்.

நான்யார்?

எங்கிருந்து என்னைத்தேடுவது? இதோ இருக்கிறேன் எங்கிறீர்களா? உன்னைத்தேடு. உனக்குள் ஒலி, ஒளிபொருந்திய ஒருஜீவன் இருக்கிறது. தன்னால் சிந்திக்கமுடியும் என்று உணர்ந்து மனிதரின் மூளையில் முகாமிட்ட முதல் கேள்வி நான் யார்? என்பதாகத்தான் இருந்திருக்கமுடியும். சந்திரன், செவ்வாய், சனி போன்ற கோள்களையெல்லாம் ஆராய விழையும் இன்றைய அறிவியலையும் மனிதரையும் குழப்புகின்ற கேள்வியும் இதுதானே. ‘அறிவின் எதிரில்அறியாமைதலைவணங்குகிறது’ என்றார் பிளாட்டோ. ஆனால் சாக்ரடீஸோயாரைப் பார்த்தாலும்  ‘உன்னையேஅறிந்துகொள்’  என்று உணர்த்தினார். இந்தத்தேடலில் முழுவெற்றியடைவது சாத்தியமா? எங்கெல்லாம்தேடுவது? எப்படியெல்லாம் அணுகுவது? ‘யார்நீ?’ என்றுயாராவது கேட்டால். பெயர்,  படிப்பு, வகுப்பு இவற்றோடு நிறுத்தி விட்டால், ‘அவ்வளவுதானாநீ? என்றமறு கேள்வி எழுப்பலாம். திரும்பத் திரும்பக்கேள்வி எழுந்துகொண்டே போகலாம். நான் ஏன் பிறந்தேன்? நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும்,  இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும்,  சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது என் பிறப்பிற்கும் ஒருநோக்கம் இருந்தாகவேண்டும். நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத்தெரியும். ஆகவே “நான்யார்?”  என்ற கேள்விக்கு ஒருசில வரிகளில் பதில் சொல்ல முடியாது.“நான்”  என்றம மதையக் களைந்துவிட்டு ஒருமையில் பன்மையைத்தேட முயல வேண்டும்.

  • என்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர், என்னோடு நெருக்கமாக உறவாடிய சகோதரசகோதரிகள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?
  • என் உள்ளத்திள் தென்றலாகத் தவழ்ந்து வந்து என் மனதையே மகிழ்ச்சியால் நிரப்பும் உணர்வுகள் எவை? புயலாக உள்ளேயே மையம் கொண்டு ஆவேசமாகச் சீறுகின்ற உணர்வுகள் எவை? என் உள்ளத்தில் உறையும் வேறு பல உணர்வுகள் எவை?
  • என் தேவைகள் யாவை? ஆபிரகாம், மாஸ்கோ கூறியபடி, தேவைகளை, உடல்தேவைகள், உளத்தேவைகள் என்று பிரிக்கலாம். இந்தத் தேவைகளில் எந்தத் தேவைக்கு நான் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவிடுகிறேன்.
  • வாழ்க்கைக் குறிக்கோளை என்அறிவுவானில் விண்மீனாக என்மனக் கண்முன் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருப்பது எது? எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தாலும் அது தரும் ஒளியில் என் அன்றாடப் பாதையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளமுடிகிறதா?
  • எனக்குப் பெருமை தேடித்தரும், என் சாதனைகளுக்கு வித்திடும் கிரீடத்தில் நவரத்தினங்களாகப் பிரகாசிக்கும் திறமைகள் யாவை?

மேலே உள்ள கேள்விகளுக்குப்பதில் கண்டுபிடிக்கும் பணி எளிதல்ல. இது ஒரு தொடர்தேடல். அவனுக்கு எல்லாம் இருந்தும் இல்லாதது போன்று உணர்வுப்பிரமை. கார், பங்களா, வேலையாட்கள், குழந்தைகள், வேலை, திருமணம், எதிர்ப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் உள்ளன. இந்த நவீனயுகத்தில் செல்வத்தையும்  சுகபோகத்தையும் வைத்தே ஒருவன் மதிப்பிடப்படுகிறான். உண்மை, அன்பு, அறிவு, ஆற்றல், திறமை இவற்றிற்கெல்லாம் இன்றுமதிப்பில்லாத நிலை உருவாகிவிட்டது.

ஆனால் நமது பாரம்பரியத்தைச் சற்றே திரும்பிப் பார்ப்போமானால் பண்டையபாரதம் தொட்டு செல்வத்தைச் சேர்த்து வைத்தவர்களை விட அதனைத் துறந்து வாழ்ந்த துறவியாரும்(வள்ளலார், இராமகிருட்டினர், புத்தர், விவேகானந்தர்) சான்றோர்களும் தான் சமுதாயத்தில் முதலிடத்தில் வைத்துப் போற்றப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஏன்?

ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு சேர்த்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன்தன்னை இழக்கிறான். தன்னைச் சுற்றியுள்ள பொருட்களிலும் உறவுகளிலும் தன்னைப் பிணைத்துக் கொள்வதால் அவன் தன்னிலிருந்து விலகி, பிரிய நேர்ந்தது காரணம் நமது சிறிய வாழ்வைப் பிரபஞ்ச வாழ்வுடன் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்த உலகமாகிய புதிய சூழ்நிலையில் வந்ததும் நாம் நம்மை இந்த உலக வாழ்விற்கு ஏற்புடையவர்களாகச் செய்ய முயற்சிக்கிறோம். அதில் தோல்வியடையும் போது ஒரு பாதுகாப்பற்ற நிலையையும் தனிமையையும் உணர்கிறோம். இந்த நிலையில்தான் நாம் நம்மைத் தேட, நம்மை அறிய முயற்சிக்கவேண்டும்.

மனிதர்உயர்ந்தவர்

இரசாயனவல்லுநர்கள்மனிதரைப்பற்றிச்சொல்லும்போது, ‘ஒருமனிதரிடம்இரண்டுவாளித்தண்ணீரும், 10- சிறியஇரும்புத் துண்டுகளும், 50 தீக்குச்சிகளும் இன்னும் பல இரசாயனப் பொருள்களும் இருக்கின்றன என்று கூறுகின்றனர். பொருளாதார வல்லுநர்கள் ‘மனிதர் ஆசைகளின் கட்டுக்கோப்பு என்று வருணிக்கின்றனர். அரசியல்வாதிகள் மனிதர்களை வாக்குவங்கிகள்’ என்றுநினைக்கின்றனர். இப்படியேஞானிகள், துறவிகள், சிந்தனையாளர்கள், சமூகவியளார் எனப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

ஆனால் மனிதர்கள் இவைகள் மட்டும் அல்ல. இவைகளை விடச்சிந்திக்கும்திறனும், செயல்களில் தெளிவும் இலட்சியத்தில் பிடிப்பும் அழியாத உள்ளமும் கொண்டவர் என்பதனை நாம் மறுக்க முடியாது. அத்தகைய தனித்துவம் நிறைந்த நிலையிலே தான் அவர் மற்ற உயிர்களிடம் இருந்து வேறுபடுகிறார். தனக்கே உரிய குணத்தோடு வாழுகிறார். தரணியில் வாழும் ஏனைய உயிர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் உயர்ந்தவராகத் திகழ்கிறார். மற்ற  பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவராக அவைகளைக் கட்டுப்படுத்துகின்றவராக விளங்குகிறார். அதன் மூலம் வாழ்வின் மகிழ்வை, வாழ்வின் அர்த்தத்தை அடைய விரும்புகிறார்.

சக்தி மிகு எண்ணங்கள்

மனிதர் தம்மிடம்  சக்தி வாய்ந்த எண்ணங்களைக் கொண்டிருகிறார் .இந்த எண்ணத்தின் வழியே நம்பிக்கையைப் பெற்றெடுக்கிறார். நம்பிக்கையின் வழியே செயல்புரியும் வாழ்வை மேன்மையாக்கிக் கொள்கிறார். ஆனால் மனமோ அலைபாயக் கூடியது . மனித மனம் ஒரு குரங்குஅடிக்கடி தாவும். கருணையாளனைக் கொலைக்காரனாக்குவதும் மனம்தான். கொலைக்காரனை ஞானியாக்குவதும் மனம்தான். இது சரி இது தவறு என்று எடைப்போடக் கூடிய அறிவை மனத்தின் இராகங்கள் அழித்து விடுகின்றன.

மனிதருடைய வாழ்விற்கும் செயலுக்கும் அடிப்படை அவருடைய எண்ணங்களே. அந்த எண்ணம் சக்தி கொண்டது. மனிதர் எப்பொழுதும் தமது எண்ணத்தில் நேர்மறையாக ஆக்கிக்கொள்வார் என்றால் அவரே வாழ்வில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். எதிர்மறையான எண்ணங்களை நோக்கி அவர் உள்ளத்தில் ஓர் ஈர்ப்பு இருந்தாலும் அவர் நேர்மறையாகத் தன்னைச் செலுத்துவதற்குப் பக்குவப்பட்டவராகத் திகழ்கிறார். எனவே இவைகளைப் பயன்படுத்தும்போது அவர் முழுமனிதராக உருப்பெறுகிறார்.

உன்னை நீ ஏற்றுக் கொள்

தவளை- பசு கதை படித்திருப்போம். தண்ணீர் குடிக்கப் போன தவளை பசுவைப் பார்த்ததும் தானும் பசுவாக விரும்பியதாம் அளவுக்குமேல் தண்ணீர் குடித்து இறந்து விட்டதாம். தவளை தவளையாக இருக்க விரும்பி இருந்தால் இறந்திருக்காது. தவளை தான் இருக்க முடியாத ஒன்றாக ஆக விரும்பியதால் தன் வாழ்வை இழந்தது.

‘வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதொப்பது இல் .

ஒருவர் தான் உருப்பெறுகின்ற வரை அவர் இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும் . தம் சக்திகளோடும் தம் இயல்லாமைகளோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஒருவர் தம்மை அவ்வாறு ஏற்றுக்கொண்டுவிட்டால் ஏற்கனவே பாதி வெற்றி அடைந்ததாக அர்த்தம். இழ்ந்த நம்மை பெற்று தன்னை அறிந்து தன்னை ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற முழுமனிதராக இவ்வுலகில் பரிணமிப்போம்.

வையத்துள் நிறைவாழ்வு வாழ்வோம்

      மனிதத் தேடலிலே வெற்றி பெறுவோம்.

Leave a Reply