அகநானூறு வினை உவமையில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்கவர்கள்

புலவர்கள் தாம் கூற விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த அவர்கள் அறிந்த ஒன்றின் மீது ஒப்புமைப்படுத்திக் கூறுவதுஉவமையாகும்.  உவமைகளின் வழி விளக்கப்பெறும் கருத்துக்கள் மக்கள் மனதில் எளிதில் விரைவாகச் சென்று சேர்வது தனிச்சிறப்பாகும். அகநானூறு அகநானூறு இறையனார் அகப்பொருள் உரையில், ‘நெடுந்தொகை நானூறு’ என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது,  பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றோரும் இதனையே முதல் தொகைநூலாகக் குறிப்பிட்டுள்ளனர்,  மேலும் இந்நூல் நெடுந்தொகை என்னும் பெயருடன் அகம், அகப்பாட்டு என்னும் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகிறது. முதற்பொருளும் கருப்பொருளும் இந்நூலில்…