அரசியற் சுதந்திரமும், இலங்கையின் வளர்ச்சியும்

இலங்கையின் அரசியற் சுதந்திரம் பொருண்மிய நிலையிலும், பண்பாட்டு நிலையிலும், தேசிய இனங்களின் நிலையிலும், சமூகத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை நிலையிலும் முற்றான விடுதலையாக அமைந்ததா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக குடியேற்ற நாடுகள் பெற்ற அரசியற் சுதந்திரம் என்பது ஆட்சி அதிகாரத்தைத் தேசிய உயர்ந்தோர் குழாத்தினருக்கு அதாவது மேட்டுக்குடியினருக்குக் கையளித்த செயற்பாடாகவே காணப்படுக்கின்றது. இவர்களது நோக்கையும், நலங்களையும் அடிப்படையாகக் கொண்டே சுதந்திரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் அமைக்கப்பெற்றன. இலங்கையின் கல்வி தொடர்பான 1950 ஆம்…