குறுந்தொகையில் தோழியின் நிலை

முன்னுரை:- தோழியானவள் குறுந்தொகையில் மிகவும் சிறப்புற்று மிகுந்த அறிவுத்திறனையும், நுட்பத்தையும், அன்பையும் உடையவளாக விளங்குகின்றாள். தோழி தலைவிற்குக் குறிப்பினை மாற்றிக் கூறுவதும் பின்பு அறத்தோடு நிற்கின்ற சூழலும், தலைவியன் நிலையினைப் பார்த்துத் தோழி வருந்துவதும்,  பருவத்தினைத் தலைவிக்காக மறுத்துக் கூறுவதும், தோழி தலைவிக்கு வாயில் மறுத்ததும், குறிப்பினை அறிந்து தோழி கூறியதும், அறிவுரை கூறுகின்ற திறனும், ஆறதல் கூறுகின்ற சிறப்பும், பிரிவின் போது தோழி தலைவிக்காக வருந்துவதும், தோழியின் கருத்தும், பிரிவின் போது எழுகின்ற துணிந்து கூறுகின்ற…

நற்றினையில் பழக்க வழக்கங்கள்

முன்னுரை:- நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் என்று கூறப் படுகின்றன. அறிவுநிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர். பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சீரிய சிந்தனை, அறிவியல், கருவி ஆகியவை காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் பொழுது அவை சடங்காக மாறுகின்றது. சடங்கென்பது நிர்ணயிக்கப்பட்ட தெளிவான நடத்தைகளின் வடிவமாகும். இது தனி மனிதனுடைய பண்பாட்டின் தனிச் சிறப்புகள் ஆகும். அதனைப் பற்றிப் பார்ப்போம். பொருளுரை:- நம்பிக்கைகளும் பழக்கங்களும்:- பழங்காலம் முதல் மக்களிடையே நம்பிக்கைள் போற்றப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில்…

புறநானூற்றில் கையறுநிலைப்பாடல்கள்

முன்னுரை:- எட்டுத் தொகை நூல்களுள் புறநானூறும்,  பதிற்றுப் பத்தும் புறப்பொருள் பற்றிப் பேசுகின்றன. பண்டைத்தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாக விளங்கும் இவற்றுள் புறநானூறு மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. விரிவு கருதி புறநானூற்றின் கையறுநிலைப் பாடல்கள் மட்டும் ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளன. புறநானுறு, வீரத்தை முதன்மையாகக் கருதிய வீரநிலைக்கால இலக்கியமாகும். மன்னர்கள் மற்றும் மறவர்களின் வீரத்தையும் கொடைச்சிறப்பையும் புலவர்கள் போற்றிப் புகழ்ந்தனர். புகழ்ச்சிக்கு ஆளான மன்னர்கள் புலவர்களுக்குப் பரிசில் முதலியவற்றை வழங்கினர். புரவலர்களால் பாதுகாக்கப்பட்ட புலவர்கள் அவர்களின் இறப்பை எண்ணி…