இரா.ஜெயந்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி.
தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தொல்காப்பியம் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்களாக 27 இயல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் வாழ்வானது அகம், புறம் என்ற தன்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. அக வாழ்விற்கு அளித்த முக்கியத்துவத்தை புற வாழ்விலும் காணமுடிகின்றது. போரில் வீரமரணம் அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ் சமுதாயம் விளங்கியதை கண்கூடாகக் காணமுடிகின்றது.