அகநானூறு வினை உவமையில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்கவர்கள்

புலவர்கள் தாம் கூற விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த அவர்கள் அறிந்த ஒன்றின் மீது ஒப்புமைப்படுத்திக் கூறுவதுஉவமையாகும்.  உவமைகளின் வழி விளக்கப்பெறும் கருத்துக்கள் மக்கள் மனதில் எளிதில் விரைவாகச் சென்று சேர்வது தனிச்சிறப்பாகும். அகநானூறு அகநானூறு இறையனார் அகப்பொருள் உரையில், ‘நெடுந்தொகை நானூறு’ என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது,  பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றோரும் இதனையே முதல் தொகைநூலாகக் குறிப்பிட்டுள்ளனர்,  மேலும் இந்நூல் நெடுந்தொகை என்னும் பெயருடன் அகம், அகப்பாட்டு என்னும் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகிறது. முதற்பொருளும் கருப்பொருளும் இந்நூலில்…

சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்

மனித வாழ்க்கையில் பொழுதுபோக்காக அமைவது விளையாட்டு.  விளையாட்டு எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்து வருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அதிக இடங்களில் நினைந்து உள்ளன. சங்ககால மக்கள் தங்கள் வாழ்வில் பெரும்பாலும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது வீரத்தை பறைசாற்றும் வகையில் விளையாடி உள்ளனர். இக்காலத்தில் விளையாட்டு ஒரு துறையாக மாறிவிட்டது. இப்பொழுது யாரும் வெளியே சென்று விளையாடுவது இல்லை. வீட்டிற்குள்ளே இருந்தபடியாக விடியோ கேம்ஸ் மற்றும் இணையம் வழியாக குழ்ந்தைகள் விளையாடுகின்றனர்.…

அப்துல்ரகுமான் கவிதைகளில் அங்கதம்

புதுக்கவிதைகளில் அங்கதம் ஓர் உத்தியாக கவிஞர்களால் படைக்கப்பட்டு வருகிறது. இவ்வுத்தி கிரேக்க நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ளது போலவே தொல்காப்பியம் தொடங்கி இக்காலம்வரை தமிழ் இலக்கியத்திலும் அங்கதம் இடம் பெற்றுள்ளது. இது தொடக்க காலத்தில் ஓர் இலக்கிய வகையாக இருந்துள்ளது. பின்னர் உத்தியைக் குறிப்பதாக மாறிவிட்டது. தமிழ்க் கவிதைகளுக்குப் புதிய தரிசனங்களைத் தந்த அப்துல்ரகுமான் நடுவுநிலைமையோடு சமுதாய நிகழ்வுகளைத் தம் கவிதைகளில் பாடுவதில் சிறந்து விளங்கியவர். சமூகச் சீர்கேடுகளைக் கண்டு கோபம்கொண்டு, அச்சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டுவதோடு அந்நிலை மாற வேண்டும்…