அருங்கலச் செப்பு உரைக்கும் அணுவிரதம் -முனைவர் ப.வடிவேல்

முனைவர் ப.வடிவேல், தமிழ் இணைப்பேராசிரியர், ந.க.ம கல்லூரி, பொள்ளாச்சி. ———————————————————————————————– அருங்கலச் செப்பு உரைக்கும் அணுவிரதம் இல்லறத்தார் ஒழுக்க நூலென்று குறிப்பிடப்படுகின்ற பெருமையுடையது அருங்கலச் செப்பு என்னும் சைனசமய நூல். இது 181 பாக்களில் நற்காட்சி/ நல்ஞானம்,நல்லொழுக்கம் இவற்றைப் போதிக்கின்றது. அரிய கருத்து மணிகளின் பெட்டகம் இந்நூல். இரத்தின கரண்டகம், சிராவகாசாரம் என்னும் இருநூல்கள் இதன் முதல்நூல் என்றும், இரத்தின கரண்டக சிராவகாசாரம் எனும் சமஸ்கிருதநூலின் பெயர் கொண்டே இந்நூற்பெயர் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இருநிலைக் கருத்துகள் உண்டு.…

திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் – முனைவர் த.கீதாஞ்சலி

முனைவர் த.கீதாஞ்சலி, தமிழ் உதவிப்பேராசிரியர், என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி ————————————————————————————————– திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள் ஒரு வாழ்க்கை இலக்கியம். இலக்கியம் மனித வாழ்க்கையினின்றே மலர்வது. வாழ்க்கைக்கே உரியது. வாழ்க்கைக்காகவே அது நிலைப்பெற்று உள்ளது என்பார் ஹட்சன் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர். வாழ்வின் எல்லாக் கூறுகளும் உண்மை  நெறியில் வைத்துப் பேசப்பட்டன. “சிறந்த கருத்துக்களின் பதிவே இலக்கியம்” என்பார் எமர்சன். அந்த வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான…

தனிமனித அறங்கள் -வெ.பரிமளம்

                                                                        வெ.பரிமளம், உதவிப் பேராசிரியர்,                                                                    தமிழிலக்கியத் துறை,                                                                    என்.ஜி.எம்.கல்லூரி,                                                                    பொள்ளாச்சி. தனிமனித அறங்கள் உலக உயிரினங்களில் தனித்துவம் மிக்கவனான மனிதன் காலத்திற்கேற்ப தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் படைத்தவன். தன்னைப் பற்றிச் சிந்திக்க தொடங்கிய பிறகு நல்லது கெட்டதைப் பற்றிப் பகுத்தறிய ஆரம்பித்தான்.பகுத்தறியும் போது குழப்பம் விழையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமல் இருக்கவும் சில வரையறைகள் தேவைப்பட்டன.அந்த வரையறைகளே அறம் என வழங்கப்ப்பட்ட்து எனலாம். அறம் – விளக்கம்:           அறம் என்ற…

பண்பாடும் புதின இலக்கியமும் – முனைவர் சு. செல்வக்குமார்

                                                முனைவர் சு. செல்வக்குமார்,                                                                              உதவிப் பேராசிரியர்,                                                                              தமிழிலக்கியத் துறை,                                                                              என்.ஜி.எம். கல்லூரி,                                                                              பொள்ளாச்சி.  பண்பாடும் புதின இலக்கியமும் பரந்த இப்புவிப்பரப்பெங்கும் பல்வேறு விதமான இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.ஒவ்வொரு தனிப்பட்ட இனமும் தனக்கேயுரிய வாழ்க்கை முயோடு ஒரு பண்பாட்டுத் தன்மையுடன் இயங்கி வருகிறது.ஒரு இனக்குழுவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முரையானது மற்ற இனக்குழுவின் வாழ்க்கை முரைகளிலிருந்து பெரும்பாலும் வேறுபட்டு அமைகிறது. இந்த வேறுபாட்டுத் தன்மையே அந்த இனக்குழுவின் தனித்தன்மைக்கு காரணமாக அமைகின்றது.ஓர்…

உரையாசிரியர் பாரதி – முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்

                                 முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்,                                                                          பொள்ளாச்சி உரையாசிரியர் பாரதி பாரதியார் படைப்புகளை வியந்துரைக்கும்போது திறனாய்வாளர் ஆர்.கே.கண்ணன் ‘அவன் ஒருவனே வெல்லடற்கரியவன்’ என மொழிவார். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் துறைதோறும் அப்பேராசானின் ஒளி பரவி இருப்பதைக் கருத்தில் கொண்டுதான் அவர் இவ்வாறு கூறி இருக்க வேண்டும்.           கட்டுரையாளர், சிறுகதை முன்னோடி, நாவலாசிரியர், கவிதை நாடகப் பரிசோதனையளர், புதுக்கவிதை தலையூற்று எனப் படைப்புலகிலும் தேசியம், சமுதாய சீர்திருத்தம், பெண் விடுதலை, பொருளாதாரம், பன்னாட்டரசியல்,…