June 2023

தமிழர்களின் இறை நம்பிக்கை

தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் பரவி இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவமும் நமது நாட்டில் புகுவதற்கு முன் சைவம், வைணவம் ,புத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் நிலவின.ஆனால் சமயங்களை வேண்டாம் என்பவரும் சமய நெறிகளைப் பின்பற்றாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உலக ஆயுத என்பர். இருப்பினும் சமயம் என்பது மிகப் பழமையானது. சமயம் என்ற ஒன்றைத் தமிழர்களிடம்…

Read more

நாலடியார் உணர்த்தும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்

முன்னுரை சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி…

Read more

கல்வியும், ஒழுக்கமும்!

மனிதன் சிகரம் தொட அடிப்படைக் காரணமாக அமைவது கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி நம்மை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே. இதனை உணர்ந்த ஜாம்பவான்கள் கல்வியின் சிறப்பினை, “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” “இளமையில் கல்” “எண்ணும் எழுத்தும்_கண்ணெனத் தரும்” “கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” “கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” “கல்வி கரையில கற்பவர் நாள்; சில மெல்ல நினைக்கின் பிணிபல” என்று கூறினர். மேற்கூறிய கூற்றுகள்…

Read more

சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)

வழக்காறுகளைப் பற்றிய வழக்காறுகள் என்ற சொல்லாட்சி கூர்ந்து நோக்கத்தக்கது. வழக்காற்றினைக் குறிக்கும் சொற்கள், சொல்லிலிருந்து உருவான வழக்காறுகள் என்ற இருநிலைகளில் நோக்கும்போது பெரும்பான்மையான சொற்கள் வழக்காற்றிலிருந்து கிளைத்தவையாகும். வழக்காறுகளின் ஆன்மா என்பது நிகழ்த்துதல் மற்றும் இயங்குதலில் உறைகின்றது. சொல்வழக்குகளும் அதன் நிலைபேறில்தான் உயிர்த்திருக்கின்றன. சொல்லோடு தொடர்புடைய பண்பாடும், வழக்காறுகளும் அச்சொல்லின் நிலைபேற்றிற்கு அடிப்படையானவை. செயல்தன்மைக்கொண்ட வழக்காறுகளைக் குறிக்கும் சொற்கள் தகவமைப்பு, சமூகம், மரபு, மொழி, பண்பாடு போன்றவற்றின் தொன்மையினைக் கணிக்கும், ஊகிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. ஒரு வழக்காற்றிலிருந்து…

Read more

சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்

அறிமுகம் கற்பு என்ற சொல் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு விவாதப் பொருளாகவே இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது.  என்றாலும் கற்பு என்ற சொல் பற்றிய கருத்தாக்கம் பாரதி,  தந்தை பெரியார் போன்றவர்களிடம் வந்து சேருகிறபோது கடுமையான  விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.  குறிப்பாக பெரியார், ‘கற்பு என்பதற்குப் “பதிவிரதம்” என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு…

Read more

பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவின் விடிவெள்ளியாகத் தோன்றியவர். விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்துமுகமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியுள்ளார். சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறாள். பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும்…

Read more

“செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்

தமிழக நிலபரப்பு ஐவ்வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நிலஅமைப்புக்கேறிய ஐவ்வகையான தெய்வ வழிபாடுகளை மக்கள் வழிபட்டு வந்தனர். அதில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மக்கள் கையாண்டு வந்தனர். இதனை ஆரியர் வருகைக்குப் பின் இந்நிலமைப்பில் சிறுதெய்வ வழிபாட்டு முறை மாறி, அனைத்தும் பெருதெய்வ வழிபாட்டு முறையாக மடைமாற்றம் செய்தனர். இதனால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகிய ஆரியர் வருகையினால் சிறுதெய்வ வழிபாடு பெரிதும் முடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவம் மிகவும் காலுன்றியது எனலாம். இந்துவத்தினால் இங்குள்ள மக்கள்…

Read more

தமிழ் இலக்கியங்களில் நீதி

மக்களின் வாழ்க்கையை முழுமை படுத்தவும் செம்மைப் படுத்தவும் எழுந்தவை தான் நீதி இலக்கியங்கள் எனப் பொருள் கொள்ளலாம். மனிதன் வாழ்க்கையில் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைப் பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதுதான் நீதிநூல்கள். மக்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஓர் அளவுகோலாக இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியமான புறநானூறு; அற இலக்கியமான திருக்குறள், நாலடியார் போன்றவை நீதியை எடுத்தியம்பும் உயர்ந்த நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது. மனித சமுதாயத்தில் நீதி கோட்பாடுகள் பழந்தமிழர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் மக்களாக விளங்கினர்.…

Read more

தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி

தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும். சமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா…

Read more

பாரியும் பனையும்

முன்னுரை உலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும்.  தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.  அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன.  தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின.  இது காலத்தின் தேவையாக இருக்கின்றது.  அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர்…

Read more