பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலை

இருபதாம் நூற்றாண்டினை ஒரு தொழிற்புரட்சிக் காலம் என்று சொல்லலாம். சமுதாயத்தில் பெரும்பாலோராக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே. இவ்வுலகம் இயங்குவதற்கும் மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாற்றங்களுக்கும் உழைப்பின் பயனே அடிப்படையாக அமைகின்றன.. எனவே தொழிலாளர்களைச் சமுதாயச் சிற்பிகள் என்றும் சமுதாய மாற்றத்திற்குக் கிரியா ஊக்கிகள் என்றும் கூறுவர். இதனை உணர்ந்த தமிழ்க் கவிஞர்கள் உழைப்பின் பெருமையையும் உழைப்போரின் இழிநிலைமையையும் அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற அலட்சியப் போக்கினையும், உழைப்பாளர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய நல்வாழ்வையும்…

Read more

பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

முன்னுரை குழந்தைகள் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வ10ட்டும் செல்வங்கள்.  மொட்டாக அரும்பி, மலர்களாக மலர்ந்து மணம் வீசுங்கால் அந்தக் குடும்பம் குதூகலத்தில் குலுங்கும்.  சிறப்பும் மேன்மையும் அடையும்.  குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலச் சிற்பிகள்.  குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அணிகலன்கள்.  மகாகவி பாரதியும் அவரது பரந்த பார்வையில்  குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆத்மார்த்த சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களைப் பதித்துள்ளார். …

Read more

குறிஞ்சி, முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை

முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம். வேட்டையாடல்:- குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை…

Read more

ஹைக்கூ கவிதைகளில் நாட்டுப்புறவியல் கூறுகள்

முன்னுரை: நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புறம் சார்ந்த இயற்கை எழில்கள், கிராம மக்களின் வீடுகள், தெருக்கள்,மரம்,செடி, கொடிகள், குளம்,குட்டைகள், பறவைகள், அம்மக்களின் இயல்பான வாழ்க்கைப் பதிவுகளையும் கிராமப்புற மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகள், உணவு முறைகள், விளையாட்டுகள், தாலாட்டுப் பாடல் முதல் ஒப்பாரிப் பாடல் வரையிலான இன்ப – துன்ப நிகழ்ச்சிகளையும் அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஏற்படும் விரயங்கள்,அவர்களின் பேச்சு வழக்கு, திருவிழாக்கள் போன்ற அனைத்து நிலைகளிலும் அனுபவம் சார்ந்த கவிஞர்கள்…

Read more

சுவடிகளின் வகைகள்

முன்னுரை: சுவடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஓலைச்சுவடிதான். தமிழகத்தில் முன்பெல்லாம் முதியோர் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும் ஓலைச்சுவடிகள் இருக்கும். அக்காலத்தில் ஓலையில் தான் கணக்கு எழுதுவர். சுவடி என்பது எழுத்துக்கள் பதிமாறு (சுவடு) எழுதப் பெற்ற ஏடுகளில் தொகுப்பு சுவடி எனப் பெயர் பெறுகின்றது. சான்றாக, “பூ வாரடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே” – மாணிக்கவாசகர் “யாதும் சுவடு பாடாமல் ஐயாநடைகின்ற போது” -திருநாவுக்கரசர் இதில் சுவடு என்னும் சொல்…

Read more

மாமூலனார் பாடல்களில் இடம்பெற்றுள்ள புறச்செய்திகளின் பின்புலம்

முன்னுரை மாமூலனார் குறுந்தொகையில் (பாலைத்திணை – 11) ஒன்று, நற்றிணையில் (பாலைத்திணை -14, குறிஞ்சித்திணை – 75) இரண்டு, அகநானுாற்றில் (பாலைத்திணை – 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393) இருபத்தேழு என மொத்தம் 30 பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நற்றிணை 75 ஆம் பாடலைத்…

Read more

தமிழர்களின் இறை நம்பிக்கை

தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் பரவி இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவமும் நமது நாட்டில் புகுவதற்கு முன் சைவம், வைணவம் ,புத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் நிலவின.ஆனால் சமயங்களை வேண்டாம் என்பவரும் சமய நெறிகளைப் பின்பற்றாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உலக ஆயுத என்பர். இருப்பினும் சமயம் என்பது மிகப் பழமையானது. சமயம் என்ற ஒன்றைத் தமிழர்களிடம்…

Read more

நாலடியார் உணர்த்தும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்

முன்னுரை சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி…

Read more

கல்வியும், ஒழுக்கமும்!

மனிதன் சிகரம் தொட அடிப்படைக் காரணமாக அமைவது கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி நம்மை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே. இதனை உணர்ந்த ஜாம்பவான்கள் கல்வியின் சிறப்பினை, “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” “இளமையில் கல்” “எண்ணும் எழுத்தும்_கண்ணெனத் தரும்” “கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” “கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” “கல்வி கரையில கற்பவர் நாள்; சில மெல்ல நினைக்கின் பிணிபல” என்று கூறினர். மேற்கூறிய கூற்றுகள்…

Read more

சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)

வழக்காறுகளைப் பற்றிய வழக்காறுகள் என்ற சொல்லாட்சி கூர்ந்து நோக்கத்தக்கது. வழக்காற்றினைக் குறிக்கும் சொற்கள், சொல்லிலிருந்து உருவான வழக்காறுகள் என்ற இருநிலைகளில் நோக்கும்போது பெரும்பான்மையான சொற்கள் வழக்காற்றிலிருந்து கிளைத்தவையாகும். வழக்காறுகளின் ஆன்மா என்பது நிகழ்த்துதல் மற்றும் இயங்குதலில் உறைகின்றது. சொல்வழக்குகளும் அதன் நிலைபேறில்தான் உயிர்த்திருக்கின்றன. சொல்லோடு தொடர்புடைய பண்பாடும், வழக்காறுகளும் அச்சொல்லின் நிலைபேற்றிற்கு அடிப்படையானவை. செயல்தன்மைக்கொண்ட வழக்காறுகளைக் குறிக்கும் சொற்கள் தகவமைப்பு, சமூகம், மரபு, மொழி, பண்பாடு போன்றவற்றின் தொன்மையினைக் கணிக்கும், ஊகிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. ஒரு வழக்காற்றிலிருந்து…

Read more