பழங்குடிகள் தங்களுக்கு என்று ஒரு சமூக கலாச்சார அமைப்பில் தொன்று தொட்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இருளர்களில் ஆண்இ பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. குறிப்பாக மணவிலக்கு (விவாகரத்து) முறை இவர்களிடையே காணப்படவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இவர்கள் கொண்டாடும் தனித்துவமான விழாக்கள் திருமணவிழாஇ காதணிவிழாஇ பூப்படைதல் விழா போன்ற விழாக்கள் மற்றும் இறந்தவர்களுக்கு செய்யும் ஈமச்சடங்கு ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. சமுதாயம் நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பாரம்பரியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதால் இவர்கள் பொது வெளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். இவ்வாறு தங்கள் பாரம்பரிய கொள்கையில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கமும்இ மக்களும் அவர்களின் வளர்ச்சி திட்டங்களின் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றாமல் (சீர்குலைக்காமல்) காப்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர்களின் கலாச்சாரத்தையும்இ அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் சமுதாய நிலை
Author: பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர், முனைவர். சி.கமலாதேவி, உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை.
Abstract: பழங்குடிகள் தங்களுக்கு என்று ஒரு சமூக கலாச்சார அமைப்பில் தொன்று தொட்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இருளர்களில் ஆண்இ பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. குறிப்பாக மணவிலக்கு (விவாகரத்து) முறை இவர்களிடையே காணப்படவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இவர்கள் கொண்டாடும் தனித்துவமான விழாக்கள் திருமணவிழாஇ காதணிவிழாஇ பூப்படைதல் விழா போன்ற விழாக்கள் மற்றும் இறந்தவர்களுக்கு செய்யும் ஈமச்சடங்கு ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. சமுதாயம் நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பாரம்பரியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதால் இவர்கள் பொது வெளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். இவ்வாறு தங்கள் பாரம்பரிய கொள்கையில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கமும்இ மக்களும் அவர்களின் வளர்ச்சி திட்டங்களின் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றாமல் (சீர்குலைக்காமல்) காப்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர்களின் கலாச்சாரத்தையும்இ அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.