மொழிவிளக்கம்
எண்ணங்களையும் உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தப் பயன்படும் வாய்மொழி மற்றும் எழுத்துக் குறியீடுகளே மொழி எனப்படும். பேச்சொலிகள் சொற்களாக இணைகின்றன. அச்சொற்கள் தொடராகஅமைகின்றன. மொழி முதலில் பேச்சு நிலையில் பிறக்கும். பிறகு எழுத்துமொழி தோன்றி இலக்கிய இலக்கணங்கள் தோன்றும். மொழியின் ஒழுங்குக்குஇலக்கண வல்லோரின் பங்கு இன்றியமையாதது.மொழியை உயர்ந்த கலைகளில் ஒன்றாக எண்ணுவர் அறிஞர். (டுயபெரயபநஇ யுகவநச யடட ளை யn யசவ ழநெ ழக வாந கiநௌவயசவள –ழு.துநளிநசளழnஇ டுயபெரயபந வைள யெவரசந னநஎநடழிஅநவெ யனெ ழசபைin. P.441)என்ற நூலின் மூலம் அறியப்படுகிறது.
2 ஆய்வுச்சுருக்கம்
ஆட்சிமொழித்திட்டத்தைச் செயல்படுத்தும் போது மொழிச் சிக்கல்தோன்றும். பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் படிப்பதனால் அவர்கள் தமிழில் கோப்பு எழுதும்போது இடர்பாடு உருவாகும். எனவே பயிற்றுமொழி காரணமாகச் சிக்கல் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் கோப்பு எழுதும்பழக்கம் நெடுங்காலமாகவே நடைமுறையிலுள்ளது. அக்கோப்புகளைத்தமிழில் எழுத முற்படும்போது மொழிபெயர்ப்புச்சிக்கல் தோன்றுகிறது. புதுசொற்களை உருவாக்க வேண்டிய இன்றியமையாமையும் ஆட்சிமொழித்திட்டத்தில்நேர்கிறது. அப்போது சொல்லாக்கம் காரணமாகவும் சிக்கல் தோன்றுகிறது.தமிழ் ஆட்சி மொழியில் தனித்தமிழ்ச் சொற்களே எல்லா நிலையிலும் இடம்பெற வேண்டும். ஆனால் தொடக்கத்தில் செய்யப்படட சொல்லாக்கத்ரின் போது வடமொழிச் சொற்களே மிகுதியாக உருவாயின. இதனால் ஆட்சி மொழி வளர்ச்சியில் சிக்கல் தோன்றியது.இந்த வகை மொழிச் சிக்கல்களைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ்-பயிற்றுமொழிதமிழ்ஆட்சிமொழி நடைமுறையில் வெற்றியாக அமையவேண்டுமானால், அதைப் பயன்படுத்தும் அலுவலர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி, தமிழார்வம், தமிழ்ச் சொல்வளம் ஆகியவை இருக்க வேண்டும். அதற்குத் தமிழைக் கற்கும் நிலையும் அவர்களுக்கு இளமையிலேயே இயல்பாக அமைந்திருக்க வேண்டும்.முக்கியமாக தமிழ் பயிற்சி மொழியாக இருந்தால்தான் தமிழில் கோப்புகளைப் பிழையின்றி வரையும் நிலையை அவர்கள் பெறமுடியும். தமிழ் ஆட்சி மொழியாக அமைய வேண்டுமென்போர், எல்லா நிலைகளிலும், பயிற்று மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவது நமது கடமையாகும்.வேதநாயகம் பிள்ளையின் மொழிபற்றுதமிழ்மொழிமீது அதிக பற்று கொண்டு தாய்மொழியை அனைவரும் ஓம்பவேண்டும்என்று அறிவித்தவர் மாயூரம் வேதநாயகம்பிள்ளை. பலதுறைகளிலும் வழிகாட்டியாக விளங்கிய இவர், தமிழர்கள் தமிழ்ப்பற்றுடன்
வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவர் காலமும் சூழலும் காரணமாகத் தன் வேட்கையைத் தான் படைத்த புதினத்தில் உறுப்பினர்கள் வாயிலாகக் கூறினர். (மாயரம் வேதநாயம் பிள்ளை, பிரதாப முதலியார், சரித்திரம், ப.210) வேதநாயகம்பிள்ளை சினம் கொப்பளிக்கும் நிலையில் கடுமையான மொழியில் “தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில்வசிக்க யோக்கியதை உடையவர்கள் அல்லர்.
அவர்கள் எந்த ஊர்ப் பாஷைகளைப் படிக்கிறார்களோ அந்த ஊரே அவர்களுக்கு தகுந்த இடமாகையால் சுயபாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பிவிடுவோம்.பிரான்சு மட்டும் படிக்கிறவர்களைப் பாரீசு பட்டணத்துக்கு அனுப்புவோம். இலத்தீனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்தப் பாஷைப் படிக்கிறவர்களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம். (மு.நூல்.ப.120) தமிழில் உரைநடை நூல் இல்லை என்று சிலர் காரணம் காட்டியபோது மற்ற மொழிகளுடன் தமிழையும் படிக்க வேண்டும்என்று எடுத்துரைத்தார். திரு.வி.கல்யாணசுந்தரனார் முதன் முதலாகத் தமிழில் அரசியல் சொற்பொழிவு செய்து வழிகாட்டியவர். தன் தமிழ்ப்பற்றைவெளிப்படையாகத் தெரிவித்தார். தாய்மொழியில் பற்றுடைய என்னைச் சிறப்பித்தது தாய்மொழியைச் சிறப்பித்ததாகும் என்று அறிவித்தார். தாய்மொழியில் பற்றில்லாதவரிடத்தில் நாட்டுப்பற்று நிகழ்தல் அருமை என்று கூறியவர். வடஇந்தியர் தாய்மொழியின் மீது காதல் கொள்வது போல தென் இந்தியரும் (தமிழரும்) தம் தாய்மொழியின் மீது காதல் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் வங்காள தாய்மொழியின் மீதுள்ள பற்றை உணர்ந்து கொள்ளமுடிகிறது.உலகப்புகழ் பெற்ற கவிஞர் தாகூரும் தாய்மொழிபற்றுமிக்கவர். அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 13.02.37 அன்று பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவை நிகழ்த்தினார். அப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதன் முறையாகத் தாய்மொழியில் அவரால் தான் உரை நிகழ்த்தப்பட்டது.பாரதியாருக்கும் மொழிப்பற்று உண்டு. தமிழைவிட மற்றொரு பாஷைசுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு சாதியின் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை என்று பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில்
பாரதி குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் பாரதி காலத்தில் தமிழுக்காகச் „சாஸ்திர பரிபாஷை‟என்ற மாதப் பத்திரிக்கை, சேலத்தில் தொடங்கப்பெற்றது. ஆனால் அது ஆங்கிலத்தில் தொடங்கப்பட்டது. அதுகுறித்து அவர் தன் ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அவர் தமிழர்களுக்கு ஆணையிட்டார் (பாரதியார் கட்டுரைகள், ப.133) என்பதை அறியலாம். „ரோலோ‟என்பவர் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றியப் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னகத்து மொழிகள் அறிவியல் கற்பதற்கு தகுதியற்றவை என்று கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த பாரதி, “இயற்கை நடையில், இங்கிலீஷைக் காட்டிலும் தமிழ் அதிகம் நேர்மையுடையது. ஆதலால் சாஸ்திர பிரவசனத்திற்கு அதிக சீருடையது. இந்த சங்கதி நம்மவர்களிலே கூட சில இங்கிலீஷ் பண்டிதருக்கு தெரியாது”என்றுமொழிந்திருக்கிறார். (நூஃமான், பாரதியின் மொழி சிந்தனைகள், ப.39)என்பதை,பாவேந்தர் பாரதிதாசனும் தமிழின் இன்றியமையாமையைபுகழ்ந்து உரைப்பர்.“தமிழ்மொழி தாமும்;தமிழன் தாழ்வான்தமிழ்அழிந்திட்டால் தமிழர் அழிவர்”(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி-4, ப.31)“வாணிகர் தம்முகவரியைவரைகின்ற பலகையில் ஆங்கிலமாவேண்டும் என்று வினவி முகவரியை செந்தமிழால் வரைக என்று வணிகத் துறையிலும், தெலுங்கு தமிழ் நாட்டிலேன்? செத்த வடமொழிக்கு இங்கே என்ன ஆக்கம்? என்று கேள்வி கேட்டு இசைத்துறையிலும், தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள், படக்கதைகள், நாடகத்திரைப்படத்துறையிலும் அறிஞர் தம் இதயஓடைஆழநீர் தன்னை மொண்டு வர வேண்டும் என்று சொல்லியச் செய்திதான், சமயம் மொழிப்போரே வேண்டுவது, தொடக்கம் செய்வீர், வெல்வீர், மொழிப்போர் வெல்க என்று கூறி இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும், என முழங்கி அரசியலிலும், மாதொருத்தி வேண்டும்,எனக்கும் தமிழ் மகளாயிருந்தான்
5இனிக்கும் என்று மொழிந்து அகத்துறையிலும் தமிழுக்கே முதன்மை தந்துள்ளார் பாரதிதாசன். “தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில்கட்டாயம் என்பதொருசட்டம் செய்க”(பாரதிதாசன், தமிழியக்கம், அரசியல்சீர்வந்தார், ப.15)“…………தமிழறியான்செந்தமிழ் நாட்டவரின் மேற்செல்லலாமோ?”(மு.நூல்.ப.16) “ஆங்கிலத்தைக் கற்கையிலும்அயல்மொழியைக் கற்கையிலும்……எந்த நாளும்தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டைஉயிராய் கொள்வீர்”(பாரதிதாசன், தமிழியக்கம், மாணவர், ப.31)என்று மாணவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். சோமசுந்திரபாரதியாரும் கூறுகையில் தாய் மொழியாலே எத்தரக் கல்வியும் எவர்க்கும் தரலாம். நாட்டு மக்கள் பகுத்தறிவு எய்தாக்கேட்டினை (தமிழ்மொழிக் கல்வி மூலம்) எளிதில் போக்கவும் கூடும் என்று பறைசாட்டுகின்றார். மு.வரதராசன் அவர்களும் தாய்மொழியில் கற்பது இயற்கைக் கால்களைக் கொண்டு நடப்பதைப் போன்றது என்றும் அயல்மொழியின் வாயிலாக நம் நாட்டு மாணவர்கள் கற்பது பொய்க்கால் கட்டிக் கொண்டு நடப்பதைப் போன்றது என்றும் அதன் காரணமாக பிறநாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களை இந்நாட்டு மாணவர்கள் எட்டிப்பிடிக்க முடியாமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லைஎன்று தன் மனக்குறையை மொழிகிறார் (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு-43, ப.214) என்பதை அறியமுடிகிறது.
தமிழண்ணல் கூறுகையில் தமிழ்மொழியில் பற்றுக்கொள்ளுங்கள் அதை வளருங்கள். பிறநாடுகளில் பெரும்பாண்மையானவற்றில் இயக்கங்கள் ஏற்படவில்லை. காரணம் அங்கெல்லாம் மக்களுக்கு இயல்புணர்ச்சி மாளவில்லை என்று கூறித் தமிழர்களுக்கு இயல்பாக அமைந்த தமிழ்ப்பற்றின்மையை சுட்டி வருந்துகிறார் (தமிழண்ணல், மொழிவழிச் சிந்தனைகள், ப.25) என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. வா.செ.குழந்தைசாமி கூற்றுப்படி பண்டைய இலக்கிய மொழியான தமிழை இன்றைய கல்வியறிவுத் துறையனைத்திலும் ஆங்கிலம் போல் பயன்படும் மொழிக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிப்பதன் மூலம் தமிழைப் பற்று மொழியாக அமைத்துக் கொள்ள வழி கூறுகிறார் (களஞ்சியம், 2-3, சூலை.87, ப.6)என்பதை அறியலாம். மொழிப் பற்றிகவிஞர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கருத்து கவிஞர், அறிஞர், கல்வியாளர் பலரும் தாய்வழிக் கல்வி வேண்டும் என்று கூறினார்கள். அரசியல் தலைவர்களுக்கும் இக்கருத்து உடன்பாடே. அவரவர் தம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை இருக்க வேண்டும் என்பது லெனின் கருத்து. (லெனின், மொழியைப் பற்றி, ப.35) உருகிய (ரட்சிய) புரட்சியின் வெற்றிக்கு தன்தாய்மொழியும், நூல்களும் மிகுந்த அளவுக்கு வலிமையோடு பயன்பட்டிருக்கின்றன என்பதை அறிவுறுத்தி புரட்சியாளர்களுக்குத் தாய்மொழி ஒரு பெரிய ஆற்றல் வாய்ந்த படைக்கலம் என்று அறிவித்திருக்கிறார். (லெனின் மொழியைப் பற்றி, ப.6)லெனின் ஆவேசத்துடன் எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமென்றால் நான் இன்றே நம் மாணவர்கள் அந்நிய மொழி மூலம் கல்வி கற்பதை நிறுத்திவிடுவேன். எல்லா ஆசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் உடனே தாய்மொழியின் மூலம் கற்பிக்கும் படியாகக் கட்டளையிடுவேன். இம்மாற்றத்தை எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து விலக்கி விடுவேன். பாட புத்தகங்கள் தயாராகும் வரையில் காத்திருக்கமாட்டேன். பயிற்சிமொழி மாறியபின் அவை தாமாகவே வந்துவிடும். அந்நியமொழி மூலம் கல்வி கற்பிக்கும் இக்கேட்டுக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் எனச் சாடியுள்ளார். (காந்தி. தாய்மொழி, ப.27) இதன் வழி உற்று நோக்கத்தக்கது.
நேருவும் இந்நிலையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கருத்துடையவர். மாணவர்கள் தத்தம் தாய்மொழி மூலமே கல்வி பயில வேண்டும் என்று அவர் 1963 -ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஆங்கிலப் பயிற்சி மைய நிலையக் கூட்டத்தில் பேசினார். காமராசரும், இக்கருத்தையே கொண்டவர். தாய்மொழியிலே பாடங்களைக் கற்றுக் கொடுப்பது தான் இயற்கை என்றும் அந்நிய மொழியில் கல்வி பயில்வது சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்காக என்று கருதுகிறார் (காமராசர், மக்களாட்சி, ப.33) என்பதை இதன்வழி அறியலாம். இராசாசி தாய்மொழி மூலமே கற்பிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர். கல்லூரிகளில் தமிழே கற்பிக்கும் மொழி ஆதல் வேண்டும். கட்டாயமான இடங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்ச் சொற்கள் ஆக்கிய பிறகு தமிழில் கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம் என்று காத்துக் கொண்டு இராமல் தமிழில் கற்பிக்கத் தொடங்கினால் குறைபாடு நீங்கும். கற்பிக்கும் போதே தக்க தமிழ்ச் சொற்கள் ஆக்க முடியும் என்று சென்னை மாநிலக் கல்லூரியில் 17.02.1956 அன்று நடைபெற்ற கல்லூரிப் பேரவை நிறைவு விழாவில் அவர் பேசினார். “அறிஞர் அண்ணாத்துறையும் தமிழைப் பயிற்சி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அமைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கவும் ஒருசில ஆண்டுகளுக்குள்ளாவது தமிழிலேயே எல்லா அலுவல்களும் நடைபெறுவதற்கான வழிவகைகளைக் காணவும் அவர் விழைந்திருக்கிறார்”(நவமணி, 2512.1963) என்பதை அறியலாம்.ம.பொ.சிவஞானம் தமிழிலேயே எல்லாவற்றையும் கற்றுத்தர வேண்டும் என்ற கருத்தைப் பலகாலும் வலியுறுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.சுப்பிரமணியம் தமிழ்மொழியாம் தாய்மொழியே பயிற்று மொழியாக வேண்டும் என்பதற்காகத் „தமிழலால் முடியும்‟என்ற நூலை எழுதி வெளியிட்டவர்.தமிழ் உரிய முறையில் ஆளப்படவில்லை என்பதைப் பொற்கோ எழுதிய „தமிழ் உணர்ச்சி‟, „தமிழ் வளர்ச்சி‟, „தமிழ் ஆட்சி‟என்ற நூலின் மூன்றாம் பகுதி விளக்கமாக கூறியிருப்பதைக் காணலாம்.
முடிவுரை
மக்களைஏமாற்றுவதற்கே புரியாத மொழி (அயல்மொழி) பயன்படுகிறது. எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய தாய்மொழியில் பேசினால் மக்களை ஏமாற்ற முடியாது என்பது காமராசரின் கருத்து. (காமராசர், மக்களாட்சி, ப.179) தாய்மொழியே பயிற்று மொழியாகிவிடுமாயின் இந்த நிலை அமைய வாய்ப்பில்லை. பிறமொழிச் செய்திகளைத் தாய்மொழியில் கற்பிக்கும் போது மொழி வளர்கிறது. வளம் பெருகிறது. நுண்ணிய சிக்கலான கருத்துக்களைக் கூட வெளியிடும் திறன் வளர்வதே ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அடையாளம். தாய்மொழி வழிக்கல்வி மொழி வளர்ச்சிக்கு உதவுகிறது.ஆங்கிலத்தை முழுமையாகத் தன்வயப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் மேல்நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் படிக்கும் போது பெரிதும் துன்புறுவார்கள். அவர்கள் துறை அறிவையும் பெறமுடியாமல், மொழியறிவையும் எய்தமுடியாமல் கல்வியின் இடைவழியிலேயே தேங்கிவிடுவார்கள். கல்வியின் எல்லாமட்டத்திலும் தாய்மொழியே அமையுமாயின் இத்தகைய தேக்கமோ இடைவழி நீக்கமோ ஏற்டாது. இறுதியாக தமிழ்ப் பயிற்றுமொழி காரணமாக மாணவரின் சொல்வளம் அதிகமாகிறது. தான் நினைத்ததை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதியாகிறது. எனவே தமிழ் ஆட்சிமொழி வெற்றிபெற வேண்டுமானால் தமிழ்ப் பயிற்றுமொழியாகக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். அதைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய எல்லா மட்டங்களிலும் முனைப்போடு செயல்படுத்த வேண்டும்.
துணைநூற்பட்டியல்
1.இலெனின்.,-மொழியைப் பற்றி த.கோவேந்தன் (தமிழ்ச் சுருக்கம்)அப்பல்லோ வெளியீ,சென்னை.1987.
2.சுப்பிரமணிய பாரதியார்.,-பாரதியார் கட்டுரைகள் (ஒரு மொழியியல் நோக்கு)யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்,கலைப்பீட வெளியீடு.முதற்பதிப்பு-1981.
3.சீனிவாசன்.ர.,-தாய்மொழிதமிழ்நாடு காந்தி நினைவு நிதி,மதுரை.முதற்பதிப்பு-1962.
4.சோமசுந்தரப் பாரதியார்.சு.,-நற்றமிழ்மலர்நிலையம்,சென்னை.முதற்பதிப்பு-1955.
5.தமிழண்ணல்., -மொழிவழிச் சிந்தனைகள் சோலை நூலகம்,மதுரை.இரண்டாம் பதிப்பு-1980.
10
6.நுஃமான்.,-பாரதியின் மொழிச் சிந்தனைகள்(ஒரு மொழியியல் நோக்கு)யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்,கலைப்பீட வெளியீடு. 1984.
7.பாரதிதாசன்.,-தமிழியக்கம்முல்லைப் பதிப்பகம், சென்னை.முதற்பதிப்பு-1945.
8.பாலசுப்பிரமணியம்.சி.,-புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாரி,சென்னை.1986.
9.மாயூரம் வேதநாயகம்பிள்ளை.,-பிரதாப முதலியார் சரித்திரம்1957.
10.துநளிநசளநn (ழுவவழ)-டுயபெரயபந வைள யெவரசநஇ னுநஎநடழிஅநவெ யனெ ழசபைinஇ புநசழசபந யடடநn ரூ ருறெin டiஅவைநனஇடுழனெழn.