Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

வைணவ சமய நெறிமுறைகள்

Keywords:

Abstract:

வைணவ சமயம் விவை முழூமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம்  இந்து  சமயத்தின் ஆறு  உட்பிரிவுகளில் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும்போது விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக்கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.ஆனால் திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கன மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் ஆகும். அதே போல் உபநிதடங்கள் 14-ம் சிறப்பாகப் பேசப்படுகிறது..

வைணவ சமயம் விவை முழூமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம்  இந்து  சமயத்தின் ஆறு  உட்பிரிவுகளில் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும்போது விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக்கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.ஆனால் திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கன மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் ஆகும். அதே போல் உபநிதடங்கள் 14-ம் சிறப்பாகப் பேசப்படுகிறது..

குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்குப்பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது. இந்து சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபநிஷத்து, பகவத்கீதை, பஞ்சரந்த ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட, நாரதிய, பத்ம, வராஹ புராணங்கள் போன்றவற்றில் வைணவத்தத்துவம், வைணவத்தில் மோட்சம், வைணவ சமயநெறி, வைணவத்தில் கடவுள், வைணவத்தில் ஆழ்வார்களின் பக்தி நெறி ஆகியவை எவ்வாறு போற்றப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

வைணவசமய நெறி:

மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துதலே சமயநோக்கம். இந்து சமயத்தின் ஒருபிரிவான வைணவம் தொன்மை மிக்கது. ஆழமான பக்தியுணர்வையும், நுணுக்கமான விளக்கங்களையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறது. மனித வரலாற்றில் மிகப்பழங்காலம் முதலே வேதநெறி தழைத்தோங்கி இருக்கிறது. அந்த வேதநெறியில் மலர்ந்த சமயங்களில் வைணவம் தனிச்சிறப்புப்பெற்று இருக்கிறது. “பழமையும் பெருமையும் வாய்ந்த இப்பாரத கண்டத்தில் அநாதியாக நிலைபெற்ற மதங்களிலே திருமால் சமயமும் ஒன்றே என்பதற்கு வேதமும், வேத ஆகமங்களும், இதிகாச புராணங்களுமே தக்க சான்றுகளாக உள்ளன.” ஏன்கிறார் மு.இராகவையங்கார். தொல்காப்பியரும் முல்லை நிலத்திற்குரிய தெய்வத்தைக் குறிப்பிடுகையில் “மாயோன் மேய காடுறை உலகமும்” என்று குறிப்பிடுகிறார்.

 வைணவத்தத்துவம்:

இராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதிபரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரமம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவையாவும் முடிவில்லாத அளவிற்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர்போக்கி தன்னுடன் சேர்த்துக்கொள்ள வழி வகுக்கின்றன. பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜூவன்கள் அனைவரும் மற்றுமுள்ள பிரபஞ்சம் அனைத்தும் பிரமத்தின் உடலாகும்.

“யோ விஞ்ஞானே திஷ்டன்,

விஞ்ஞானாதந்தர யம் விஞ்ஞானம் நவேத

யஸ்ய வஞ்ஞானம சரீரம் யோ

விஞ்ஞான மந்தரோ யமயதிஏஷ ஆத்மா

அந்தர்யாம் யம்ருத ”

இப்பாடலின் உட்பொருளாக எவன் அறிவுக்குள் உறைபனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா அழியாமல் உள்ளுறைபவன்.

உயிரும் உடலும் வெவ்வேறானாதால் பிரமத்திற்கு தன்னுள் வேற்றுமை(ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரமத்திற்குச் சமானமான வேறு உண்மைகள் இல்லை. ஆதனால் பிரமத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமைக்கும் (விஜாதீய பேதம்) கிடையாது. ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். புpரமத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆதனால் இராமனுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம் (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். வுpசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.

 வைணவத்தில் கடவுள்

இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணு, இராமர்,கிருஷ்ணர் உட்பட அவருடைய பல அவதாரங்களும் யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் ;அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனை வருக்கும் தாயும் தந்தையாகவும் இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை ஆகும்

வைணவமும் ஆழ்வார்களும்:

ஆழ்வார்கள் தம் இறையனுபவத்தால் பக்தித்தமிழில் பாசுரங்களைப் பாடியவர்களாவர். ஆழ்வார்களின் பாசுரங்களே பின்னர் தோன்றிய சமயத்தத்துவ நூல்களுக்கு எல்லாம் அடிப்படையாக அமைந்ததாகும். பொய்யான உடலைக்கொண்டு மெய்யான இறைநிலையைக் கண்டவர்கள். இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளியைப் பக்தி என்னும் பாலத்தின் மூலம் எளிதாகக் கடக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். தனக்குள் இறைவனும், இறைவனுக்குள் தானும் இருக்கும் இருப்பை உணர்ந்து, அதனை உலகுக்கு எடுத்துச்சொல்லி மகிழ்ந்தனர்.

இறை நீதியைக் கூறாமல், இறைநெறியை மக்களுக்குக் காட்டினார். ஆவதாரங்களின் வழி ஆண்டவன் உலக உயிர்களிடத்தில் கொண்டிருக்கும் நீர்மைப் பண்பினைத் தன் புலன்களுக்கு அறிவுறுத்தும் வகையில் உலக மக்களுக்கு உணர்த்தினர். தாம் பெற்ற இறை அனுபவங்களை உலக மக்களும் பெற, அவர்களை அருள்நெறியில் ஆற்றுப்படுத்தினர்.

ஆழ்வார்களது பாசுரங்கள் இறையருள் பெற்ற தன்னுணர்வின் வெளிப்பாடாக அமைந்து விளங்குகிறது. இறையுணர்வால் ஆழ்வார்களது ஐம்புலன்களும், இறைவனையே நாடவேண்டும் என்று, அவர்களுக்கே உபதேசிப்பது போல, உள்ளுணர்வு நிலையில் அமைந்து விளங்குகிறது.

“அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன்

புண்பு ஆழித்தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி

காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்

பூண் ஆரம் பூண்டான் புகழ்”

ஏன்கிறார் பெய்கையாழ்வார்.

நல்லதோர் உணவை உண்ட நாக்கு மறுமுறை அவ்வுணவை தன்னிச்சையாகத் தேடும். நல்ல காட்சிகளைக் கண்ட கண்கள் மீண்டும் அக்காட்சியினைக் காண விரும்பும். கண்ணும் நாக்கும் நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதைப்போலவே பெருமானைப் பாடியும், வணங்கியும், பார்த்தும் அனுபவித்துப் பழக்கப்பட்ட உடற்பொறிகள் தன்னிச்சையாக அவ்வழிபாட்டில் ஆழ்ந்து பழக்கமாக்கிக் கொண்டுவிடுகின்றன என்ற பொருள் அறியப்படுகிறது.

 

புன்னிரு ஆழ்வார்கள் வரிசையை உபதேசரத்தினமாலை,

“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

ஐயனருள் மாறன் சேரலர்கோன்-துய்யப்பட்ட

நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத் தடைவா  மிங்கு.

என்று கூறுகிறது.

ஆழ்வார்கள், துன்பத்தாலும், உணர்ச்சிகளாலும் பாதிப்பு அடையாதவாறு, தங்களைக்காட்டிக் கொண்டால், அவர்களது அவதார நோக்கம் நிறைவேறாது. இறைவனின் எண்ணமும் ஈடேறாது. அதற்காகத் தான் ஆழ்வார்கள், வாழ்க்கைப்புயலில் சிக்கி அலையுண்டு, மோதுண்டு கதறுவதாகவும், புலம்புவதாகவும் பாசுரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதனை,

“அடைந்த அருவினையோடு அல்லல், நோய்,பாவம்

மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில்-நுடங்கு இடையை

முன் இலங்கை வைத்தான் முரண் அழிய, முன் ஒருநாள்

தன் வில் அங்கை வைத்தான் சரண்.

ஆழ்வார்கள் பாசுரங்களின் வழி பக்தி நெறி

இறைவனது திருநாமங்களை ஓதுவது ஒன்றே, அவனை எளிய முறையில் அடைவதற்குரிய வழி என்று உபதேசித்தவர்கள் ஆழ்வார்கள்.

“என் அவயங்கள் பரமன் தொடர்பையே நாடும்”

(ஜ வத்சன்-பா-1,1984,ப-793)

ஏன்று இறைவனை அடைய பொய்கையாழ்வார் முயற்சிக்கிறார்.

பூதத்தாழ்வார்,

“நாவுடையேன் பூடையேன் நின்னுள்ளி நின்றமையால்

காவடியேன் பட்ட கடை”

என்று வணங்குகிறார்.

இறைவனை மட்டுமின்றி இறையடியார்களையும் வணங்கும் பண்புடையராய்த் திகழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்.

“அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வுடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வுடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே”;

(நா.தி.பி.பா-2)

என்று தன்னைப் படைத்த இறைவனுக்குப் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.

திருமழிசையாழ்வார்,

“நானுன்னை அன்றி இலேன் கண்டாய்

நாரணனே”

(பா-2388)

என்றும்,

“பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ

நீரும்நீ ஆய்நின்றநீ”

(நா.தி.பி.மூன்-தொ- பா-2595)

என்று ஐம்பெரும் பூதங்களாய்த் திகழும் இறைவனைப் பாடுகிறார் நம்மாழ்வார்.

“வாழ்க் கண்டோம், வந்து காண்மின் தொண்டீர்காள்”

(நா.தி.பி.பா-1800)

என அடியவர்களை நோக்கிப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

வைணவத்தில் மோட்சம்:

படைத்தல என்பது ஒரு மாயையல்ல. அது கடவுளின் ஓர் உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளின் எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்படியில் உறையும் பொருள்களின் பலவிதச் சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த வினை, நல்வினையையொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே.ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவதில்லை. புpறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோடசம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான்முடியும்.

முடிவுரை:

இவ்வாறாக, வைணவம் என்றால் என்ன என்பதும் அதில் சொல்லப்பட்ட தத்துவங்களும், சமயநெறிமுறைகளையும், ஆழ்வார்களின் பக்திநெறிளும். இறைவனை அடைவதற்க்கான வழிமுறைகளையும் இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.