Title | Excerpt | Author | Read | |
---|---|---|---|---|
The Devotional States of the Twelve Alvars | Veerakannan S, Deputy Librarian, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi 642001 | Read Artcle | ||
விருதுநகர் மாவட்ட அம்மன் கோயில்கள் | Veerakannan S, Deputy Librarian, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi 642001 | Read Artcle | ||
பெண்கவிஞர்களின் புதுக் கவிதைப் போக்கு: ஒரு ஆராய்ச்சி நிஜம் | Veerakannan S, Deputy Librarian, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi 642001 | Read Artcle | ||
தமிழர் கோவில் சிலைகளில் யோகா - யோகா முக்கியத்துவத்தை தமிழர் கோயில் சிற்பங்களின் வாயிலாகவும் அறியலாம் | இயற்கையின் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்த ஒரு பொருளாகக் கருதப்படும் தமிழர் கலாச்சாரம், பல்வேறு ஆன்மீக, பாணி மற்றும் தத்துவங்களை உள்ளடக்கியது. இந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையாகக் கொள்கைகளை விரிவாக்குவதற்கான முக்கிய ஊடகமாக கோயில்கள் செயல்படுகின்றன. தமிழர் கோயில்களில் உள்ள சிலைகள் யோகா, அதாவது உள்மயக்கம் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றின் அடையாளங்களாக விரிவாக்கப்பட்டுள்ளது. | S.Veerakannan, Deputy Librarian, NGM College, Pollachi | Read Artcle | |
Life thoughts expressed by Siddhas | The Siddhas represent a unique lineage of spiritual philosophers, mystics, and yogis originating from ancient Tamil Nadu in South India. Their teachings encompass a profound understanding of existence, the nature of the self, and the intricate relationship between the individual and the cosmos. This paper explores the thoughts of life expressed by Siddhas, emphasizing their contributions to the fields of spirituality, medicine, and ethics. Through an analysis of historical texts, philosophical doctrines, and practical teachings, we illuminate the Siddhas' holistic view on life, which continues to resonate across cultures and eras. | Veerakannan S | Read Artcle | |
Scientific Thoughts of Thirumoolar: An Exploration of ‘Thirumanthiram’ | The ‘Thirumanthiram’ is an ancient Tamil text attributed to Thirumoolar, a revered sage and one of the 63 Nayanmars, believed to have lived around 1500 years ago. This monumental work is a blend of spirituality, philosophy, and practical knowledge, encompassing various domains, including agriculture, health, music, geometry, and general science. This paper aims to unearth the scientific wisdom contained within the verses of ‘Thirumanthiram’ and juxtapose it with contemporary scientific understanding. By extracting key themes and concepts from approximately 35 songs and 30 significant points, we hope to illuminate the relevance of Thirumoolar's thoughts in today's world. | Veerakannan S, Deputy Librarian, NGM College, Pollachi | Read Artcle | |
The Empowerment of Female Characters in "Ponniyin Selvan" | Veerakannan S, Deputy Librarian, NGM College, Pollachi | Read Artcle | ||
பண்டை தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பாரம்பரியங்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகள் - ஒரு ஆய்வு. | ஆய்வுச் சுருக்கம்: மனிதன் உலகிற்கு வந்த நாளிலிருந்து தற்போது வரை, உணவு என்பது அவசியமும் தவிர்க்க முடியாததும் ஆக இருக்கிறது. உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் உணவு ஒரே மாதிரியானது அல்ல; அந்தந்த நாட்டின் காலநிலை மற்றும் மண்ணின் முதல் நான் உற்பத்தி ஆகும் உணவுகளின் பயன்பாடு மாறுபடும். சந்தைக்கேற்ப, உலகளாவிய உணவுகள் பரவலாக கிடைத்தாலும், மக்களிடம் உள்ள பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மாற்ற விரும்புவதில் குறைவாகவே இருக்கிறது. இதற்காக, உணவு முதலில் மனிதர்களால் அறிமுகம் செய்யப்பட்டபிறகு, அதன் அறுவடை, பாதுகாப்பு மற்றும் பல முறையில் சமைப்பதற்கு கட்டுமானமாக உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தான், மனிதர்களால் கெளிவான உணவுகளுக்கு மாறுபட்ட பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தினர். அன்றைய காலத்தில், பாதுகாக்கப்பட்ட உணவுகள் நீண்ட நாட்களுக்கும் கெடாமல் இருந்தன, மேலும் அவைகளை சேமிக்கவும் மற்றும் நீண்ட பயணங்களுக்கு எடுத்துச் செல்லவும் எளிதானதாக உள்ளன. அமீபா முதல் மனிதன் வரை, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கு உணவு என்பது உயிருக்கு எதிரானது. மனிதனின் நெருப்பைக் கண்டறிதல் சந்தர்ப்பத்தில், உணவின் தேவையும், புதிய உணவுகளை உருவாக்குவதும், மேலும் உணவுகளை விதவிதமாக சமைத்து அவற்றை மேம்படுத்துவதும் தொடர்ந்துகொண்டு வருகிறது. பண்டைய தமிழின் உணவுப் பழக்கங்களையும், அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் இலக்கியம் மற்றும் தொல்லியல் தரவுகள் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். | Veerakannan S | Read Artcle | |
Herbs and Medicinal Notes in Tamil Nadu Inscriptions | Introduction Tamil Nadu, a state in southern India, has a rich cultural and historical legacy that is reflected in its ancient inscriptions. These inscriptions, dating back to various dynasties, provide valuable insights into the societal values, practices, and knowledge systems of the time. Among the myriad subjects captured in these texts, the mention of herbs and medicinal practices stands out, illustrating the advanced understanding of natural remedies in ancient Tamil civilization. This paper explores the significance of herbs and medicinal notes found in Tamil Nadu inscriptions, connecting them to contemporary practices and traditional knowledge. | S.Veerakannan, Deputy Librarian, NGM College, Pollachi | Read Artcle | |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் சமுதாய நிலை | பழங்குடிகள் தங்களுக்கு என்று ஒரு சமூக கலாச்சார அமைப்பில் தொன்று தொட்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இருளர்களில் ஆண்இ பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. குறிப்பாக மணவிலக்கு (விவாகரத்து) முறை இவர்களிடையே காணப்படவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இவர்கள் கொண்டாடும் தனித்துவமான விழாக்கள் திருமணவிழாஇ காதணிவிழாஇ பூப்படைதல் விழா போன்ற விழாக்கள் மற்றும் இறந்தவர்களுக்கு செய்யும் ஈமச்சடங்கு ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. சமுதாயம் நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பாரம்பரியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதால் இவர்கள் பொது வெளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். இவ்வாறு தங்கள் பாரம்பரிய கொள்கையில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கமும்இ மக்களும் அவர்களின் வளர்ச்சி திட்டங்களின் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றாமல் (சீர்குலைக்காமல்) காப்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர்களின் கலாச்சாரத்தையும்இ அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. | பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர், முனைவர். சி.கமலாதேவி, உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை. | Read Artcle | |
சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம் | முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029 | Read Artcle | ||
பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு | பாடல்களுக்கு அழகு சேர்ப்பவை நயங்களே. மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டும் கவிக்கு அழகு சேர்க்கும் பொருட்டும் படிப்பவரின் மனதைக் கவரும் பொருட்டும் பாக்களில் நயங்கள் பயன்படுத்தப்பட்டன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறத்தினைப் போதிக்கும் வகையில் அமைந்த நூலான நான்மணிக்கடிகையில் பாநயங்கள் அமைந்து பாக்களை அழகுப்படுத்துகின்றன. நான்மணிக்கடிகையில் உவப்பு, நன்று, அதிர்வு என்னும் உரிச்சொற்கள் சொற்பொருள்பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்து சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஒரு சேர வழங்குகிறது. உரிச்சொற்கள் நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான்மணிக்கடிகை வழி ஆராய முடிகிறது. | மு.விஜயலட்சுமி (Ph.D.Ref.No.MKU22FFOL10317), முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி – 626 123. மின்னஞ்சல் முகவரி : vijayalakshmisfr@gmail.com அலைபேசி எண் - 6374942636 | Read Artcle | |
Embracing the West in Pearl S. Buck’s East Wind: West Wind | American literature started its journey in a search for ideal light directed by hope and expectation. It has always been a platform to involve the human situation in its established works. Pearl S. Buck is a successful novelist who belongs to two worlds- an American missionary world and a Chinese world. As a novelist, she was encouraged by her parents and society to write about intercultural and social understanding of different people. East Wind: West Wind is a story which depicts the life of the characters bound by the culture and traditions of upper class society. The novel compares the development and structure of two worlds- China and the West. The novel is based on the relationship with Hsu Chih-Mo, Kwei-Lan’s husband in which she finds difficult to accommodate between tradition and modernity. Through the voice of Kwei-Lan, Pearl S. Buck attempts to portray the position of women in Chinese society. | Read Artcle | ||
அறம் கூறும் அறநெறிச்சாரம் | மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம். | Read Artcle | ||
A Study on Challenges of Agricultural Labourers in India | Agriculture has always been the backbone of the Indian economy supported by the fact that nearly 67 per cent of our population and 55 per cent of the total work force depending on agriculture and other allied activities. In India a very high proportion of working population engaged in agriculture, which helps to eradicate poverty in rural area. Thus by providing employment to agricultural labourers, agriculture sector play an important role in rural development. Agricultural labourers work on the land of others on wages for the major part of the year and earn a major portion of their income as a payment in the form of wages for works performed on the agricultural farms owned by others. They will perform simple and routine tasks as part of agriculture, forestry and fishery production process. They depend on agriculture sector for their livelihood. The demand for workers in Agriculture sector is growing fast which increase their status in the society and agricultural workers play a multi-dimensional role in agriculture and in allied fields and also contribute more for the development of rural economy. Though, they are facing lot of issues such as low wages, hard work, long hours of work, seasonal unemployment, low standard of living, traditional bounded, etc.,. Hence this paper explains the problems of agricultural labourers and different programmes introduced by the Government to solve their problems in India. | Read Artcle | ||
வேளாண்மையின் வரலாறும் போக்கும் | வேளாண்மைத்தொழில் உலகில் தனிப்பெரும் தொழிலாக, உயிர்காக்கும் ஒப்புயர்வற்றதாகத் திகழ்கிறது. வேளாண்மை ஒரு வாழ்க்கைமுறையாக ஆரம்பித்து இன்று ஒரு வணிகரீதியான தொழிலாக வளர்ந்துள்ளது. நம் நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மாறிவரும் தட்பவெப்பநிலை, நிலவளக்குறைவு, நீர்வளக்குறைவு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற காரணங்களை உற்றுப்பார்த்தால் நம்முடைய பொறுப்பு முக்கியமாக உள்ளது. வேளாண்மையில் விதைத்தேர்வு, உழவுக்கருவிகள், பருவத்தே விதைப்பு, களைக்கட்டுப்பாடு, நீர் ப்பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப்பின் தானியசேமிப்பு ஆகிய உத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் தீநுண்மிக் (கொரோனா) காலக்கட்டத்தில் செயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மீண்டும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவ்வகையில் இயற்கை வேளாண்மை பற்றிச் சுட்டுவது இவண் நோக்கமாக அமைகின்றது. | Read Artcle | ||
தமிழ்மொழிச் சிக்கல்கள் | உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் சில கருத்தைத் தம் இனத்திற்குத் தெரிவித்துக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளன. கோழி ஒருவித ஒலியை எழுப்பிக் குஞ்சுகளை உணவுண்ண அழைக்கின்றது. பருந்து தன் குஞ்சுகளைத் தாக்கவரும் போது, வேறுவிதமான ஒலியை வெளிப்படுத்தி அவற்றைப் புலப்படுத்துகின்றது. இவை எண்ணத்தை வெளிப்படுத்தும் முறையில், இவ்வகை ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் இவற்றை மொழி என்று கூறுவதற்கில்லை. மொழி வளர்ச்சிக்குரியது. புதிய சிந்தனைகளை அறிவிக்கும் தன்மையுடையது. படைப்பாற்றலுக்கு இடம் தருவது. இலக்கியம் தோன்றும் சிறப்புடையது. பறவை, பாலூட்டி ஆகியவற்றின் ஒலிக்குறிகள் இத்தகைய சிறப்புகளைப் பெறவில்லை. உள்ளம், உடல் என்ற இவற்றின் துணையால் மொழி பிறக்கிறது. உள்ளத்தின் போக்கும் உடற்கூறும் எல்லா மனிதருக்கும் ஒத்திருப்பதில்லை. எனவே அவர்கள் பேசும் மொழியில் வேறுபாடு தோன்றும். எனவே மொழியின் சிக்கல் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். | Read Artcle | ||
Social Change – A Theoretical Perspective of Classical Sociologists | Sociology is the field that studies individuals, society, social institutions, and behavior. While this sociology contains various ideas, social change is also seen as an important issue. Social change refers to change in culture, behavior, social institutions and social structure. In this way, this research paper clarifies the evolution of society and social change along with the theoretical thoughts of Classical sociologists such as Auguste Comte, Karl Marx, Herbert Spencer and Emile Durkheim. In the theoretical view of Classical sociologists, it is clear that the society has passed through many stages of development and that development has caused social change. It is significant that the theoretical thoughts of the early Classical sociologists have been instrumental in the development of today's modern era and its transformation. Classical Sociologists's theories of social change have different stages of development. How society evolves and undergoes change at each stage, and how society, culture, customs, ethics, values, behavior of individuals, and the trend of social institutions are shaped at each stage by classical sociologists such as Auguste Comte, Karl Marx, Herbert Spencer and Emile Durkheim. This review also analyses theories of social change. | Read Artcle | ||
கம்பராமாயணத்தில் கிரகணம் குறித்த பதிவுகள் | வானில் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலே ’வானியல்’ என்று அழைத்தனர். பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும், கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்பினார்கள். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நக்கண்ணையார் போன்ற புலவர்கள் வானியல் துறையில் சிறந்து விளங்கினர். வானில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருந்தாலும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் குறித்துக் கம்பர் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம். | Read Artcle | ||
மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சமூக விடுதலையை நாடிய இராமலிங்கரின் சிந்தனைக் கருத்தியல்! | பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தீவிரச் செயல்பாடுகளும் ஒன்றுசேர்ந்து சைவ, வைணவ மதத்தின் சனாதன அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கின. இந்தக் காலக்கட்டத்தில் நுழைந்த நவீனக்கல்வி முறைகளால் நகரங்கள் முன்னேற்றமடைந்தாலும் சாதி, சமய அடிப்படைகளை மீறிய சிந்தனைக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. மாறாகச் சமய அடிப்படையிலான சமூக முன்னேற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது. அதேநேரத்தில் காலனியத்தின் எதிர்வினைகள் காரணமாகச் சீர்த்திருத்த மரபுகள், இயக்கங்கள் போன்றவை பல புதிய போக்குகளையும் கொள்கைகளையும் தம்மிலிருந்து உருமாற்றிக் கொண்டன. அந்த வரிசையில் மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சன்மார்க்கத்தையும் சமதர்மத்தையும் தேடியவராக வள்ளலார் காட்சியளிக்கிறார். | Read Artcle | ||
Yoga - Scientific method that benefits | Yoga is a scientific method that benefits our body by surpassing time. However, there is a question whether yoga is understood only with its corresponding true meaning. | Read Artcle | ||
Yoga and Tamil Culture: A Historical Connection | Yoga is an ancient practice that has been around for thousands of years, tracing its roots to the Indu Valley civilization in South Asia. It has been a part of Tamil culture since its inception and continues to play a key role in the daily lives of many Tamil people. This paper will explore the history of yoga, its influence in Tamil culture, and the various ways it is practiced | Read Artcle | ||
கம்பராமாயணத்தில் கட்குடியர் மெய்ப்பாடு | கள் குடிப்பதை சங்கால மக்கள் தவறாகக் கருதவில்லை. ஊர் வளத்தைப் பேசும்போதும், கள்ளின் மிகுதியையும் பேசியுள்ளனர்.நன்கு புளித்த கள் “தேள் கடுப்பன்ன” கடுமை உடையதாகும். உள் நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாடுகளிலிருந்தும் வருவித்துக் குடித்தனர். மன்னனின் சிறப்பைக் கூறும்போதும் கள் குடித்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது. கள் உண்டு களிக்கும் விழா ’உண்டாட்டு விழா’ எனப்படும். வீரர்களுக்கு மன்னன், தன் கையால் கள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மதியை மயக்கும் மதுவை அருந்துதல் கூடாது. மது அருந்துவது என்பது தனிமனித ஒழுக்கக்கேடு. சமுதாயத் தீமை. மது உண்பதால் முதலில் உடம்பானது ஒரு விபரீத நிலையை மேற்கொள்கிறது. பின்னர் உண்டவனின் அறிவு மயங்குகிறது என்று வள்ளுவர் கூறுகின்றார். அத்தகைய கள் குறித்தும், கள் அருந்துவதால் தோன்றும் மெய்ப்பாடுகள் குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஆராய்வோம். | Read Artcle | ||
கம்பராமாயணத்தில் மீன்கள் | மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம். உலகின் உயிர்களுக்கு அன்பை விளைவிக்கும் கடவுளான மன்மதனின் கொடி ‘மீன்கொடி’. மூவேந்தர்களில் பாண்டியர்களின் கொடி மீன்கொடி ஆகும். மீன்கள் முட்டையிட்டு தம் பார்வையாலேயே குஞ்சு பொறிக்கும் இயல்புடையன. | Read Artcle | ||
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடைக்காப்பு | திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார். அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh, இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும். சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை. ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது. இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார். சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார். அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம். | Read Artcle | ||
வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் | தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார் | Read Artcle | ||
ஒளவையார் | ஒளவை என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்ததை நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. புகழுக்குரியாரது பெயரைப் பின்வரும் தலைமுறையினர் தம் பிள்ளைகளுக்கும்ச் சூட்டுவது இன்றும் நாம் காணும மரபுதான். எனவே சங்க காலத்தில் பீடுபெற்று விளங்கிய ஒளவையாரின பெயரைப் பின்னால் பலர் பெற்றுத் திகழந்ததில் வியப்பில்லை. மேலும் ஒளவை என்றாலே அறிவு என்பதாக அறிவுக்கேயுரிய பெயராக ஒளவை என்பது வழங்கலாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககால ஒளவையாரைப் பற்றிக் காண்போம். | Read Artcle | ||
மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்! | இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும். சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். | Read Artcle | ||
கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள் | முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம். | Read Artcle | ||
குறுந்தொகை காட்டும் தமிழர் வாழ்வியல் | பண்டைத் தமிழரின் வாழ்வியலானது பண்பாட்டுக் கூறுகள் மிகுந்ததாகும். தமிழர் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய மேலான வாழ்வியலுக்குச் சான்றாக அமைவன சங்க இலக்கியங்களாகும். அவை மனித வாழ்வியலை அகம் புறம் என இருதிறத்ததாய்ப் பகுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழரின் அகவாழ்வையும் அதன் சிறப்பியல்புகளையும் எடுத்துக்கூறும் நூலாகக் குறுந்தொகை அமைகிறது. குறுந்தொகையில் அமைந்துள்ள தமிழர் வாழ்வியல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. | Read Artcle | ||
பண்டைய தமிழரின் தொல்வழிபாட்டு நீட்சியில் நடப்பியல் ஆதிக்கம் | மனித சமூகம் தொல் நிலையிலிருந்து இன்றைய நாகரீக நிலை வரை படிப்படியாக வளர்ச்சி பெறவையாகும். இவ்வளா்ச்சி குறிப்பிட்ட பண்பாட்டு மாறுதல் அல்லது சமூக மாறுதலாகும். இதில் பல்வேறு வழிபாடுகள் தொல்மரபைக் கடைபிடித்தாலும் சமூக அசைவியக்கத்தில் சில மாற்றங்களையும் சந்திந்துள்ளது. இருப்பினும் வழிபடு தெய்வம் அதே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் வடிவங்களில் மட்டும் மாற்றங்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது. இது ஒரு வகையான புறக்கிாியைக்கான தூண்டுதல் என்றும், சமூக அசைவியக்கதிற்கான அடையாள மென்றும், மக்களை ஈா்ப்பதற்கான உத்தியென்றும் கூறவேண்டியிருக்கிறது. அந்த வகையில் தொல் தமிழாின் வழிபாட்டு மரபுகளில் நெடுங்கல் வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு ஆகியவற்றில் இன்று பல்வேறு மாறுதல்கள் தென்பட்டுள்ளன. அது குறித்து சங்கப்பனுவல்களோடு ஒப்புமை படுத்தி இன்றைய நடப்பியல் தன்மையில் அதன் நீட்சி எத்தகைய மாற்றுத் தளத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும். | Read Artcle | ||
Humanity and Yoga: The Powerful Combination for Improved Physical and Mental Health | Join the movement towards better physical and mental health with Humanity and Yoga! Research shows that practicing yoga can improve overall well-being and lead to a happier, healthier life. Come experience the benefits for yourself and join our community of yogis today. | Read Artcle | ||
வைணவ சமய நெறிமுறைகள் | வைணவ சமயம் விவை முழூமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளில் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும்போது விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக்கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.ஆனால் திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கன மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் ஆகும். அதே போல் உபநிதடங்கள் 14-ம் சிறப்பாகப் பேசப்படுகிறது.. | Read Artcle | ||
வேளாண்மையின் வரலாறும் போக்கும் | வேளாண்மைத்தொழில் உலகில் தனிப்பெரும் தொழிலாக, உயிர்காக்கும் ஒப்புயர்வற்றதாகத் திகழ்கிறது. வேளாண்மை ஒரு வாழ்க்கை முறையாக ஆரம்பித்து இன்று ஒரு வணிகரீதியான தொழிலாக வளர்ந்துள்ளது. நம் நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மாறிவரும் தட்பவெப்பநிலை, நிலவளக்குறைவு, நீர்வளக்குறைவு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற காரணங்களை உற்றுப்பார்த்தால் நம்முடைய பொறுப்பு முக்கியமாக உள்ளது. வேளாண்மையில் விதைத்தேர்வு, உழவுக்கருவிகள், பருவத்தே விதைப்பு, களைக்கட்டுப்பாடு, நீர் ப்பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப்பின் தானியசேமிப்பு ஆகிய உத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் தீநுண்மிக் (கொரோனா) காலக்கட்டத்தில் செயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மீண்டும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவ்வகையில் இயற்கை வேளாண்மை பற்றிச் சுட்டுவது இவண் நோக்கமாக அமைகின்றது. | Read Artcle | ||
வேளாண்குடி வரலாறும் அடையாளமும் | “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி” என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடிகள், தமிழின வேளாண்குடிகளின் தோற்றத்தை, தொன்மையை புலப்படுத்தும். வேளாண்குடிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்திற்கேற்ப பண்பாட்டையும், வாழ்க்கைச் சூழலையும் அமைத்துக் கொண்டனர். வேளாண் – வேள் ஆள் எனப் பிரித்து ‘வேள்’ என்பது ‘மண்’ எனும் பொருளையும், ‘ஆள்’ என்பது ‘ஆளுதல்’ எனும் பொருளையும் தருகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த மருதநிலத்து மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையிலேயே வாழ்ந்து இயற்கையில் கிடைக்கக் கூடியப் பொருள்களை உண்டு தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்து வந்தான். நாளடைவில் உணவின் தேவை கருதி ஆற்றுப் படுக்கையில் நெல்லை பயிரிட்டு வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு மருதநில மக்கள் ஆற்றங்கரை நாகரிகத்தை தோற்றுவித்த நாகரிகத்தின் வளர்ச்சியே ஊர், மூதூர், பேரூர், சேரி, நகரம், நாடு, ஞாலம், மாஞாலம் எனப் பரந்துபட்டு ‘ஒரு குடையின் கீழ் மல்லன் மா ஞாலாமாக’ பன்னெடுங்காலமாக இருந்து வருவது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மையே. அந்த வகையில் வேளாண் குடிகளின் வரலாற்றையும் அடையாளத்தையும் இன்றைய உலகிற்கு வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். | Read Artcle | ||
வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள் | இயற்கையைக்குறித்தும் அதன் அங்கங்களான தாவரங்கள் விலங்குகள் நீர்நிலைகளைக் குறித்தும் எழுதப்படாத தமிழ் இலக்கியங்களே அன்றும் இன்றும் இல்லை எனலாம். இந்த நவீன மகாபாரத நாவலும் இவ்வாறே பல்வேறுபட்ட தாவரங்களை சரியான அறிவியல் அடிப்படையில் தெரிவிக்கிறது.. பலநூறு தகவல்கள் தாவரவியல் அடிப்படையில் வெண்முரசில் சொல்லபப்ட்டிருப்பினும் இக்கட்டுரையில் மிகசிறந்த சில உதாரணங்களே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் மாமலர் எனும் பதிமூன்றாவது நாவல் வரிசையும் ஆயிரம் இதழ் கொண்ட சொளகந்திக மலரினை பீமன் தேடிக்கண்டடைவதை குறித்தே பேசுவது வெண்முரசின் இன்னொரு சிறப்பு. | Read Artcle | ||
வாணிதாசனின் குழந்தை இலக்கியம் | குழந்தைகளுக்குக் கற்பிக்கும் எளிய வழியே குழந்தை இலக்கியம். குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள் என வாய் அளவில் மட்டுமே பேசப்படுகின்றது. அதற்கான செயல் வீட்டிலும் இல்லை நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்.ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தை கருவுற்றிருக்கும்12 வாரத்திலேயே குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என அறிவியல் தெரிவிக்கிறது. ஆக குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என்பதால் குழந்தை கருவிலேயே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகின்றது. அதனாலேயே தாய் கருவுற்றபோது நல்ல செயல் செய்யவும், நற்சிந்தனையுடன் இருக்க வேண்டும் எனவும்;, பொறனி அதாவது பொறாமை பேசுபவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது எனவும் நாம் உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ண வேண்டும் எனவும் சொல்வதற்கான காரணம் குழந்தை கருவிலேயே கற்றுக்கொள்கிறது என்பதாலே தான். | Read Artcle | ||
வளையாபதி காப்பியத்தில் உளவியல் | மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை உடல் மொழியாக வெளிப்படுத்துவது உளவியல். தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் வாயிலாக உளவியலை பற்றி விளக்கியுள்ளார். உளவியல் (psychology) என்னும் கிரேக்க சொல் 'ஸைக்கி' (Psyche)என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும் 'லோகஸ்' (Logus) என்ற அறிவியலை (Science) குறிக்கும் சொல்லையும் மூலமாக மூலமாக கொண்டுஉருவாக்கப்பட்ட சொல்லாகும்.தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியம் சமண சமயத்தைச் சேர்ந்த காப்பியமாகும்.இக்காப்பியம் சமண சமயத்தைச் சார்ந்தது.சமண சமயக் கோட்பாடுகளை விளக்கக் கூடியதாக இக்காப்பியம் திகழ்கிறது.இக்காப்பியம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை,72 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.வளையாபதியின் காலம் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு என அறிஞர்களின் கருத்தாகும்.வளையாபதி காப்பியத்தில் உள்ள உளவியல் சிந்தனைகளை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். | Read Artcle | ||
பொருண்மையியல் அணுகுமுறையில் வேற்றுமை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகியவற்றைக் கற்பித்தல் | தமிழ் இலக்கண இலக்கியம் கற்பித்தற் பயன் சிறக்கவும் நடைப் பிழை தவிர்க்கவும் பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாவதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கூறின் பொருளையும் சூழல் நோக்கி முறையாகப் கருத்துணர்ந்து தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் என்பது பொருண்மையியல் அணுகுமுறையின் அடிப்படைக் கொள்கையாகும். முதல் வகுப்பிலிருந்து பள்ளிகளிலும், பட்டப் படிப்பு வரை கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடம் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதோடு தமிழ் முதன்மைப் பாட வகுப்புகளிலும் மாணவர்கள் இலக்கணம் கற்பதோடு கட்டுரைப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். நல்ல தமிழ் எழுத அறிவுறுத்தும் நூல்களும் இயற்றப்படுகின்றன. இருப்பினும், இக்காலத் தமிழில் அனைத்துப் பயன்பாட்டிலும் முனைவர் பட்ட ஆய்வேடுகள் சிலவற்றிலும் ஒற்று மற்றும் தொடர்ப் பிழைகள் நேர்கின்றன. இலக்கண விதிகளை முறையாக அறியாமையாலும், பிழை நேரக்கூடாது என்னும் எச்சரிக்கை / விழுமிய உணர்வு இன்மையானும் இத்தகைய பிழைகள் வாய்க்கின்றன. இவை மொழி வளர்ச்சியையும் புரிதிறனையும் பாதிப்பதுடன் மரபையும் குலைப்பதால் ஆசிரியர்களும் அறிஞர்களும் பிழை தவிர்ப்பை வலியுறுத்துகின்றனர். இலக்கணக் கல்வியில் பிழை ஆய்வு வளர்ந்துவரும் துறையாகும். இத்தகைய மொழி வழக்காற்றுச் சிக்கலை எதிர்கொள்ளப் பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாவதைக் கற்பித்தலிலும் ஆய்விலும் அறிந்ததால் பட்டறிவுப் பகிர்வாகவும் வேணவாவாகவும் இக் கட்டுரை பயன்பாட்டு நோக்கில் அமைக்கப்படுகின்றது. | Read Artcle | ||
புறநானூற்றில் பண்பாடு விழுமியங்கள் | மனிதனை விலங்கினத்திலிருந்து பிரித்துக்காட்டுவது பண்பாடு ஆகும். காலம் காலமாக மனிதனால் ஆராய்ந்து தெளிந்து கற்றவைகளே பண்பாடு ஆகும். ஒருவரின் அறிவு வளர்ச்சி மற்றவர்களை ென்றடையும்போது அவனது பண்பாடும் பரந்து விரிகிறது, தமிழ் மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு போன்ற ஒழுகலாறுகளை அறிவதற்கு பண்டைய இலக்கியங்கள் உதவுகின்றன. தமிழரின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்கக்கூடிய சங்க இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்துள்ளன. எட்டுத்தொகையில் புறநானூற்றில் பண்பாடு சார்ந்த செய்திகளை ஆராய்வோம். | Read Artcle | ||
புறநானூற்றில் கல்வெட்டுகள் வழி அறியலாகும் ஊர்கள் | தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு ஆகும். இந்நூலில் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கணவொழுக்கமும் இலக்கியச்செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும் சீரிய நாகரிகப்பண்பாட்டையும் பல்வேறு ஊர்களின் பழைமயையும் விளக்கி நிற்கின்றன. தமிழக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை காலவாரியான பகுப்பு, சான்றுவாரியான பகுப்பு எனப் பிரிப்பர். கே.ஏ. நீலகண்டசாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாறு என்ற நூலில் கல்வெட்டுகளே இந்திய வரலாற்றிற்குக் குறிப்பாகத் தென்னிந்திய வரலாற்றிற்கான வளமிக்க நம்பகமான சான்றுகளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். நடுகல் வடிவில் அமைந்த கல்வெட்டுக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. புறநானூற்றில் கல்வெட்டுகள் வழியாக அறியலாகும் ஊர்களைச் சுட்டுவதே இவண் நோக்கம். | Read Artcle | ||
புறநானூற்றில் அறம் | தொல்காப்பியர் காலத்தற்கு முன்பு இலக்கிய வகைகளை அகம், புறம் எனப் பிரித்தனர். அகவொழுக்கம் என்பது வீட்டு வாழ்க்கையைக் குறித்தும் புறவொழுக்கம் என்பது நாட்டு வாழ்க்கையைக் குறித்தும் அமையப்பெறுகின்றது. புறம் என்ற சொல்லுக்கு வெளியிடம்; அன்னியம்; புறத்திணை; வீரம்; பக்கம்> முதுகு; பின்புறம்; இடம்; இறையிலி நிலம் போன்ற பல பொருள்கள் உள்ளன. வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்கும்; குறிக்கோள்களை அடைவதற்கும், எடுத்த நோக்கங்களை வெற்றி பெறச் செய்வதற்கும் புறநானூற்றுப் பாடல்கள் துணைசெய்கின்றன. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். | Read Artcle | ||
புறநானூறு கூறும் வாழ்த்தியல் விழுமியம் | வாழ்த்துதல் என்பது சமூகப் பண்பாட்டு உயர்வின் அடையாளமாகும். வாழ்த்தும் பண்பு தனி மனிதனைப் பண்புடையவனாக மேம்படுத்தவல்லது.அனைத்து சமூகத்தினரிடமும் வாழ்த்து மரபுகள் ாணப்படுகின்றன. மனிதர்களிடையே ஒருவரோடு ஒருவர் பழகுவதற்குரிய முகமனாக அமைகின்றன. ஓவ்வொரு இனத்திற்கும் அவ்வவ் இனத்திற்கே உரிய வாழ்த்து மரபுகள் நிலைத்துள்ளன. அவரவர் வாழும் சூழல்கள்ரூபவ் சமூகம் சார்ந்த பண்பாடு ஆகியவை வாழ்த்து மரபுகளைத் தீர்மானிக்கிறது. வாழ்த்தும் பண்பானது மனிதனைப் பணிவுத்தன்மையால் மேம்படுத்துகிற பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கிறது. பிறர் நலம் நாடியுரைக்கும் சொற்கள் வாழ்த்தின்பாற்பட்டவை. இவ்வாழ்த்து ஓரினத்தின் பண்பாடுரூபவ் பழக்கவழக்கங்களை அறிவதற்கு வழிவகுக்கின்றன. மூத்தோர் இளையோர்களுக்கு நல்ல சொற்களை ஆசியாக வழங்குதல் என்பது பண்பாகும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் காலம் கடந்தும் வாழக்கூடிய நிலம்ரூபவ் நீர்ரூபவ் தீரூபவ் வளிரூபவ் வெளி எனும் ஐம்பெரும் பொறிகளின் ஆற்றலை உணர்ந்தவன். பண்டைய கால வாழ்த்து முறையும் மானுட குலத்தைக் காக்கும் ஐம்பொறிகளைப் போல நிலைபெற்று வாழும் தன்மை கொள்ள வேண்டும் என்ற நற்சிந்தை நிரம்பியிருந்ததனை புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் வாயிலாக அறிய முடிகின்றது. | Read Artcle | ||
புறநானூறில் வாழ்வியலும் பண்பாடும் | சங்க இலக்கியங்கள் காலக்கண்ணாடியாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் அமைந்து தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றி நிற்பதை அனைவரும் அறிவர். ஆத்தகைய சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறில் புறம் தொடர்பான போர் செய்தி, அரசர்களின் வரலாறு, நாட்டுவளம், படை பலம், முதலானவை மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாடுகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. அத்தகைய வாழ்வியலையும், பண்பாட்டையும் பற்றி இக்கட்டுரையின் மூலம் காணலாம். | Read Artcle | ||
பன்முக நோக்கில் – நாட்டுப்புற இலக்கியம் | Read Artcle | |||
பத்துப்பாட்டில் பழந்தமிழர; நாகரிகமும் வழக்கங்களும் | கடைச்சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டு, ஆற்றுப்படை நூல்களும் அகநூல்களும் புறநூல்களும் அடங்கிய தொகுப்பாக உள்ளது. ஆற்றுப்படை நூல்களின் வாயிலாக ஐவகை நிலத்தைச் சார;ந்த மக்களின் வாழ்வியலும் கலைஞர;களின் வறுமையும் அரசர;களின் கொடைச்சிறப்பும் உயரிய விருந்தோம்பல் பண்பாடும் வெளிப்படுகின்றன. அக மற்றும் புற இலக்கியங்கள் பழந்தமிழர;களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், செல்வச் செழிப்பு, வறுமை, வாணிகச் சிறப்பு முதலிய எண்ணற்ற செய்திகளை அறிந்துகொள்ள உதவுகின்றன. தொன்மை வாய்ந்த இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களில் பழந்தமிழரின் உயர;ந்த நாகரிகம் மற்றும் இன்றுவரை தொடர;ந்து பின்பற்றப்பட்டு வருகின்ற வழக்கங்கள் சிலவற்றையும் காண்போம். | Read Artcle | ||
பத்துப்பாட்டில் பண்பாட்டுக் கூறுகள்: உணவுமுறை | பண்பாடு என்பது தொடர்ந்து கற்பது. அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது. ஒரு தலைமுறையில் கற்றவற்றைப் பின்வரும் தலைமுறையினர் பெற்றுக் கொண்டு அவர்கள்தம் தலைமுறையில் மேலும் புதியனவற்றைக் கற்கின்றனர். இதனால் பண்பாடு தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்படுகிறது. | Read Artcle | ||
நாட்டார் வழக்காறுகளும் சமஸ்கிருதமயமாக்கலும் | மக்களுடைய இன உணர்வானது, அந்த இனத்தின் நாட்டார் வழக்காறுகளின் தூண்களாக என்றும் நிலைத்து வெளிக்காட்டும். நாட்டார் வழக்காற்றின் மீதான ஆர்வம் இயல்பானது, ஆழமானது. நம்நாட்டைப் பொருத்தமட்டில், இறைநம்பிக்கை என்பது அனைத்து மக்களிடம் இயல்பான ஒன்று. நாட்டுப்புற மக்களின் பண்பாடானது ஒன்றுடன் ஒன்று இணைந்த பகுதியாக உள்ளது. அந்த வகையில் நாட்டார் வழக்காறுகள் ஒரு இனத்தின் மீதான ஆதிக்கத்தை, பண்பாட்டை, வரலாற்றை, அடையாளப்படுத்தும் விதமாக இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது. | Read Artcle | ||
தொல்காப்பியம் காட்டும் புறத்திணை மரபுகள் | தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தொல்காப்பியம் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்களாக 27 இயல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் வாழ்வானது அகம், புறம் என்ற தன்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. அக வாழ்விற்கு அளித்த முக்கியத்துவத்தை புற வாழ்விலும் காணமுடிகின்றது. போரில் வீரமரணம் அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ் சமுதாயம் விளங்கியதை கண்கூடாகக் காணமுடிகின்றது. | Read Artcle | ||
திருக்குறளில் செருக்கு– சொற்கருத்தாய்வு | இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் விண்டுரைத்து மானுட வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அறிவுறுத்தல், இன்புறுத்தல், மொழித்திறன் மிகுத்தல், பண்பாட்டுக் காப்பு. பொழுதுபோக்கு ஆகிய படைப்பு நோக்கங்களுள், தமிழ் இலக்கியங்களில் அறிவூட்டல் பண்பு மேலோங்கிக் கோலோச்சுதல் வெளிப்படை. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் சொல்லாட்சிச் செறிவும் திருக்குறளில் காணப்படுகின்றன. அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும். | Read Artcle | ||
சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி | இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது. | Read Artcle | ||
சேனாவரையர் உரையில் பெயர்கள் | சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு ஆகச்சிறந்த உரை நல்கியுள்ளார். சேனாவரையரின் பெயரே விவரணையாக விரிவடைகிறது. சேனாவரையின் உரைப்புலப்பாட்டுச் செறிவில் பெயர்கள் என்ற ஒற்றைக் கருதுகோளைக் கொண்டு கற்றையான செய்திகளை அணுகும் ஆய்வுக்களமாக இக்கட்டுரை இயங்குகிறது. | Read Artcle | ||
சிவகாசி வட்டாரத்தில் ஒயிலாட்டக்கலை | நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளில் ஒன்றாக ஒயிலாட்டகலைக் குறித்தும் அக்கலை சிவகாசி வட்டாரத்தில் நலிவடைவதை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு இளையநிலா ஒயிலாட்டக்கலைக்குழு நிகழ்த்தப்பட்டு வருவதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை நோக்கமாக அமைகிறது. | Read Artcle | ||
சங்கஇலக்கியத்தில் பழந்தமிழர் பண்பாடு ( உணவு , உடை ,பழக்கவழக்கங்கள்) | பழந்தமிழர் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்தது. ஐந்நில வாழ்வே ஐந்திணைகளாக மலர்ந்து மணம் பரப்பியது. இத்தகைய திணை சார்ந்த வாழ்வியலைத் தான் சங்க இலக்கியம் கட்டமைத்துள்ளது. மனிதன் வாழ்ந்த, வாழும் வாழ்வியலைப் பதிவு செய்யும் மூலங்களுள் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்று. இலக்கியம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார் சான்றோர். இலக்கியம் வாழ்வியலை மட்டுமன்று காலத்தையும் பிரதிபலிக்கும், பதிவு செய்யும் சிறந்த ஆவணமாக விளங்குவதற்குச் சிறந்த சான்று சங்க இலக்கியங்களே. மனிதன் தான் வாழும் புவியியற்ச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்கின்றான். “வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிபாகும்”.1 சங்கத் தமிழரின் வாழ்வியலை அறிந்து கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எனவே தான் “பண்டைக் காலத்துத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும் என்று வையாபுரிப்பிள்ளையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகச் சங்க இலக்கியங்களையே குறிப்பிடுகிறார்” 2. மக்கள் வாழ்வியலின் இன்றியமையா கூறுகளான உறைவிடம், உணவு, உடை, தொழில், தெய்வம், மொழி, அரசியலமைப்பு, விருந்தோம்பல், ஒற்றுமை உணர்வு போன்ற பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன. சங்கத்தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் சிலவற்றை மையப்படுத்தியதாக இவ்வாய்வுரை அமைகின்றது . | Read Artcle | ||
சங்க காலத்தின் எழுதிணை மரபுகள் | ஏழு வகை புறத்திணைகளை தொல்காப்பியர் கூறுகிறார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன. ஐந்திணைக்கு மலர்களின் பெயர்களைச் சூட்டியது போலவே புறத்திணை வகைக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பாடாண் திணைக்கு மட்டும் மலரின் பெயர் சூட்டப்படவில்லை. பிற்காலத்து இலக்கணங்களில் புறத்திணை பன்னிரண்டு வகையாக விரித்துக் கூறப்பட்டன. | Read Artcle | ||
சங்க கால உணவு முறைகள் | உயிர்வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கிய உணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவுகள் தான் நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பது தான் ஆரோக்கிய உணவு என்பதாகும். அப்படிப்பட்ட உணவு வகைகளை நமது சங்க கால மக்கள் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பததைத்தான் இக்கட்டுரையில் காண போகிறோம். | Read Artcle | ||
சங்க இலக்கியத்தில் தமிழ் எழுத்துருக்கள் | கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் தொடர்பாடல்கள் பற்றிய செய்திகள் காலத்திற்கும் அப்பாற்பட்டவையாக அமைந்துள்ளது. எழுத்துருக்கள் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் விவரமாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன எனினும் அது குறிப்பிடும் மூல நூல் அகத்தியம் பற்றி நாம் அறியாததால் எழுத்துருக்களின் வளர்ச்சியின் ஆரம்பம் குறித்து நம்மால் தெளிவாக எடுத்துக்கூற இயலவில்லை. இருப்பினும் சங்க காலம் சுட்டும் எழுத்துருக்கள் பற்றிய செய்திகளை இங்கு காண்போம். | Read Artcle | ||
சங்க இலக்கியத்தில் சூழலியல் | இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் பழந்தமிழரிடத்தும் இருந்துள்ளமைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல், படர்தல், ஆராய்தல், கருதுதல், ஆலோசித்தல் என்று ஒரு சொல் பல பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வு பிறரையும், பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது. சூழ்தல் என்பது மனிதன் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிப்பதாகும். பழந்தமிழர்கள் காடுகளை அழித்து நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் சமன் நிலையை குளம் போன்று உருவாக்கி பேணிப் பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களின் அவசியத்தை, “மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது. | Read Artcle | ||
கலித்தொகை காட்டும் வாழ்வியற் போதனைகள் | மனித நல்வாழ்வுக்கான போதனைகளை கூறுவதில் தமிழ் இலக்கியங்கள் காத்திரமான பங்கு வகிக்கின்றன. தழிழ் இலக்கியங்களுள் ஒன்றானகவும் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் கலித்தொகையில் மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்வியற் போதனைகள் பல காணப்படுகின்றமை குறிப்பிடற்குரியதாகும். சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற வாழ்வியல் நெறியை வகுத்துச் செம்மையாக வாழ்ந்துள்ளமையை சங்கத்தமிழ் நூல்கள் முலம் நாம் அறியமுடிகிறது. “கல்வி வல்லார் கண்ட கலி” (கனகசபாபதி, தை.ஆ., 1937, கலித்தொகை மூலமும் விளக்கவுரையும் – பாலைக்கலி, ப.ஒi) என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையிலும் தமிழர்களின் வாழ்வியல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. பழந்தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் பெட்டகமாகத் திகழும் இந்நூலின்கண் கூறப்படும் வாழ்வியற் போதனைகளை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகிறது. | Read Artcle | ||
கரூர் மாவட்ட கும்மிப் பாடல்கள் | வாழையடி வாழையாக மக்கள் வாய்மொழியாகவே போற்றிப் புகழ்ந்து வரும் எண்ணற்ற எழுதாத இலக்கியங்களாக வாழும் இலக்கியமாக திகழ்வது நாட்டுப்புறப் பாடல்கள். மக்கள் தங்களின் வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் (பிறப்பு முதல் இறப்பு வரை) பாடல்கள் பாடி இருந்துள்ளனர். கிராமப்புற மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளை உள்ளதை உள்ளவாறு பாடுவது கிராமியப் பாடல்கள் என்று கூறலாம். அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான கரூர் மாவட்ட மக்களின் கும்மிப் பாடல்கள் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். | Read Artcle | ||
எதிர்காலத் தமிழ் இலக்கியங்கள்- தமிழின் அடுத்த பொற்காலத்தின் அடித்தளம் | இன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது. தமிழ்மொழியில் இன்று பலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும் நூல்கள் பல அவர்களின் பள்ளிப்பாடமாகவோ அல்லது, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவோ மட்டுமே அமைந்து உள்ளன. பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி மாணவர்கள் தமிழ்மொழியை இலக்கியங்களை அணுகுகின்றனரா என்பதும் சந்தேகமே! தொலைக்காட்சி திரைப்படம் இவற்றைத்தாண்டி சமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள் ஆகியவற்றிலேயே அவர்களின் நேரம் செலவாகின்றது. கணினிச் சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம். | Read Artcle | ||
உடன்போக்கிற்குப்பின் நற்றாயின் உணர்வு | தேனும் பாலும் ஊட்டி வளர்த்த மகள,; தனக்கு ஒத்த ஆண்மகனோடு களவு வாழ்வினை மேற்கொண்டு, கற்பு வாழ்வினை நிகழ்த்த தன் சுற்றம் அறியாமல் தலைவனோடு செல்லுதல் உடன்போக்கு ஆகும். சங்க கால வாழ்வில் இந்நிகழ்வு கற்பு வாழ்விற்கு அடித்தளமாக அமைகின்றது. உடன் போக்கினை மேற்கொண்ட தனது மகளை எண்ணி வருந்தும் ஒரு தாயின் உணர்வு நிலையினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. | Read Artcle | ||
உ.வே.சா.வின் பதிப்புக் கூறுகளுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி | பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வகை நூல்களைச் சுவடியிலிருந்து நூல் உருவாக்கம் செய்தார் எனினும், சங்க நூல்களுள், எட்டுத்தொகையில் ஐந்தையும், பத்துப்பாட்டு முழுவதையும் பதிப்பித்துச் சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தான் பதிப்பிக்கும் எந்த ஒரு நூலையும் வெறும் சுவடியின் படியெடுப்பாக அமைக்காமல் பதிப்பினுள் அந்நூல் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தருவது உ.வே.சா.வின் தனித்த அடையாளம். நூலாராய்ச்சி செய்து தன்னுடைய பதிப்பை ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிடும் உ.வே.சா., இந்நூலில் (அ) இவ்வுரையில் வரும் இன்ன கருத்துக்கள் தனக்குப் புலப்படவில்லை என்பதையும் சுட்டிச் செல்வார். அவ்வாறு அவர் குறிப்பிடும் பகுதியுள் ஒன்று ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’. இவ்வகராதி, அதன் பின்புலம், உ.வே.சா.விற்குப் பின்னாளில் அதில் விளங்கியவை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். | Read Artcle | ||
இலங்கையில் இராவணன் ஆட்சி முறை | பண்டைய காலத்தில் முடியாட்சியே நடைமுறையில் இருந்து வந்தது. மன்னன் மட்டுமே உயர்ந்தவனாகக் கருதப்பட்டான். “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” - (குறள் என்: 385) என்ற திருக்குறளின்படி அரசர்கள் பொருட்களை உருவாக்கி, செல்வத்தை ஈட்டி, நாட்டின் வளத்தைப் பெருக்கி, மக்களைப் பாதுகாத்தனர். மக்களின் நலனுக்காக சிறந்த நெறிமுறைகளை வகுத்துத் திறமையான ஆட்சி நடத்தினார்கள். மக்களும் மன்னர்களைத் தெய்வமாகவே எண்ணி வாழ்ந்தார்கள். ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று புறநானூற்றுப் பாடல் பின்வருமாறு கூறுகிறது. “நாடா கொன்றோ, காடா கொன்றோ அவலா கொன்றோ, மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” - புறம் - 187 காடு, மேடு, பள்ளம் போன்ற நிலத்தோற்றங்கள் ஒரு நாட்டில் இயல்பாகவே காணப்படுபவை. அவை, எப்படி மாறுபட்டு இருந்தாலும் அங்கு வாழும் மக்கள் நல்லவர்களாக இருந்கும்போது அது நல்ல நாடாகவே கருதப்படும் என்பது இப்பாடலின் கருத்தாகும். அரசர்களும் அறிவு, அன்பு, ஆற்றல் உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆறிவினால் நாட்டின் காவலுக்கு உரியவற்றை ஆராய்ந்து முறை தவறாது காப்பாற்ற வேண்டும். “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு” - குறள் - 544. குடிமக்களின் நலனை அரவணைத்து நல்லாட்சி செய்யும் தலைவனின் வழியைப் பின்பற்றியே உலக மக்கள் துணைநிற்பர் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும். அன்பினால் குடிமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்று வருபவர்களுக்கு ஈதலும், தன்னுடைய ஆற்றலினால் பகையரசனை வீழ்த்துவதும், போரில் வெற்றி பெறுதலும் அரசனின் கடமைகளாக இலக்கியங்கள் கூறுவதைக் காணலாம். அதே சமயம் சில அரசுகள் சிறப்பான ஆட்சியைத் தரமுடியாத நிலையில் இருந்திருக்கின்றன. அரசர்களின் குணநலன்களைப் பார்க்கும்போதும், அரசுகள் ஒன்றுக்கொன்;று மாறுபட்ட இருந்திருக்கின்றன. இந்த வேறுபாடுகள்தான் ஒரு அரசு நல்லரசா? வல்லரசா? என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியிருக்கின்றன. | Read Artcle | ||
இசக்கியம்மன் - வழிபாட்டு | இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன் இதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, வழிபாடுகளையும் விழாக்களையும் தோற்றுவித்தான.; காலப்போக்கில் இயற்கைக்கு உருவம் கொடுத்து வழித் தொடங்கினான.; ஆரம்ப காலத்தில் வழிபாட்டிற்கு அடிப்படையாக மந்திரம் மட்டுமே தோன்ற, பின் வழிபாடும் சமய விழாக்களும் தோன்றின. ஒவ்வொரு பெயரையும் இறைவனுக்குச் சார்த்தி வழிபாட்டு முறைமைகளில் வேறுபாட்டை கொண்டனர். அதிலும் இசக்கியம்மன் வழிபாட்டு முறைகளைப்பற்றி இங்கு காணலாம். | Read Artcle | ||
ஆசாரக்கோவை புகட்டும் வாழ்வியல் ஒழுகலாறுகள் | பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை அறிவியல் நெறிமுறைகளை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது. அறநெறி சார்ந்த கருத்துக்களும் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. இன்றைய காலத்தில் நம் அன்றாட நிகழ்வுகளில் செயல்படுத்தும் சிறுசிறு நிகழ்வுகளும் அறிவியலாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் தூய்மையும் ஒழுக்கமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளளன. ஆசாரக்கோவை புகட்டும் வாழ்வியல் ஒழுகலாறுகளைச் சுட்டுவதே இவண் நோக்கம். | Read Artcle | ||
New Frontiers of Translation in 21 st Century | Translation is one of the various branches of learning and it has become an important discipline that encompasses separate body of Knowledge. Newmark considers translation as '' A craft consisting in the attempt to replace a written message or statement in one language into another language ''. The need for translation has existed since immemorial. Translating important literary works from one language into others has contributed significantly to the development of international culture. Particular social forms and cultural norms and ideas have constantly been spreading an assimilating into other cultures by the way of translation. This paper attempts to examine the status of Translation in this Century. It is also intended to help budding translators to understand the current status of the field of translation and to suggest ways and means for them to prepare themselves in advance for their professional task. No one can down play the crucial role played by the translators in serving as a bridge between languages thereby coming to the rescue of monolingual speakers. That is why translation is viewed as a means to reinforce international and intercultural relationship. | Read Artcle | ||
Embracing the West in Pearl S. Buck’s East Wind: West Wind | American literature started its journey in a search for ideal light directed by hope and expectation. It has always been a platform to involve the human situation in its established works. Pearl S. Buck is a successful novelist who belongs to two worlds- an American missionary world and a Chinese world. As a novelist, she was encouraged by her parents and society to write about intercultural and social understanding of different people. East Wind: West Wind is a story which depicts the life of the characters bound by the culture and traditions of upper class society. The novel compares the development and structure of two worlds- China and the West. The novel is based on the relationship with Hsu Chih-Mo, Kwei-Lan’s husband in which she finds difficult to accommodate between tradition and modernity. Through the voice of Kwei-Lan, Pearl S. Buck attempts to portray the position of women in Chinese society. | Read Artcle | ||
A Study on Challenges of Agricultural Laborers in India | Agriculture has always been the backbone of the Indian economy supported by the fact that nearly 67 per cent of our population and 55 per cent of the total work force depending on agriculture and other allied activities. In India a very high proportion of working population engaged in agriculture, which helps to eradicate poverty in rural area. Thus by providing employment to agricultural labourers, agriculture sector play an important role in rural development. Agricultural labourers work on the land of others on wages for the major part of the year and earn a major portion of their income as a payment in the form of wages for works performed on the agricultural farms owned by others. They will perform simple and routine tasks as part of agriculture, forestry and fishery production process. They depend on agriculture sector for their livelihood. The demand for workers in Agriculture sector is growing fast which increase their status in the society and agricultural workers play a multi-dimensional role in agriculture and in allied fields and also contribute more for the development of rural economy. Though, they are facing lot of issues such as low wages, hard work, long hours of work, seasonal unemployment, low standard of living, traditional bounded, etc.,. Hence this paper explains the problems of agricultural labourers and different programmes introduced by the Government to solve their problems in India. | Read Artcle |