https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/issue/feedKalanjiyam - International Journal of Tamil Studies2023-03-21T06:15:41+00:00S.Veerakannanngmcollegelibrary@gmail.comOpen Journal Systems
களஞ்சியம் (Kalanjiyam) (ISSN: 2456-5148) – An International Journal of Tamil Studies is a quarterly, bi-lingual journal in Tamil and English. KIJTS publishes original research and review papers related to Tamil Language.

Tamil is the oldest language in the world, with a literary heritage dating back over two thousand five hundred years. It is no exaggeration if Tamil is one of the oldest and foremost languages in the world.

At this moment, there is a need for quality international research in Tamil to promote Tamil research. Considering this, the களஞ்சியம் (Kalanjiyam) – An International Journal of Tamil Studies (ISSN: 2456-5148) has been launched.

The quarterly and bilingual Journal (Tamil Language & English Language) gives keen scope to understand and evaluate the classical antiquity of Tamil Language and Literature and modern trends in it. The Journal KIJTS mainly focuses on the thrust areas such as History of Tamil Language and Culture, Folk Arts, Temple Studies, Siddha Medicine, Tamil Linguistics, Tamil Criticism, Tamil Literature, Creative writing in Tamil Language, Tamil Literature and Psychology, Women in Tamil Literature, Eco-criticism, Comparative Literature, World Literatures in Tamil Translation.

Researchers are kindly asked to make their contribution in this regard.
https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/40இலங்கையிலுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தில் நாகதம்பிரான் வழிபாடு - ஓர் ஆய்வு.2023-02-07T05:36:55+00:00அசோகராசா தனுஸ்கா, கலாநிதி. (திருமதி) எஸ்.கேசவன், ஆய்வாளர; சிரேஸ்ட விரிவுரையாளர்- (டு-1), மட்டக்களப்பு, இலங்கை. இந்துநாகரிகத்துறை, கிழக்குப் பல்ககலைக்கழகம், இலங்கை.ngmcollegelibrary@gmail.com
உலகில் பல்வேறு பகுதிகளில் புராதன நதிக்கரை நாகரிங்கள் தோன்றிய காலத்திலிருந்து நாகவழிபாடு சிறப்புற்று காணப்பட்டதை அறிய முடிகின்றது. இந்து சமய மரபில் தொன்மைக்கால முதலாக நிலவி வருகின்ற வழிபாடுகளில் நாகவழிபாடு ஒன்றாகக் காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் நாகவழிபாடு உலகின் நாகர் என்னும் இனத்தவர்களினால் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் பரவிக்காணப்பட்டுள்ளது. இதனைப் பல சான்றாதாரங்கள் மூலம் அறியலாம்.

அந்தவகையில் “மட்டக்களப்பில் நாகதம்பிரான் வழிபாடு பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” என்னும் தலைப்பில் இவ்வாய்வு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பண்டாரியாவெளி பிரதேசத்தை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இக்கிராமத்தில் களஆய்வுகளையும் வரலாற்று ஆய்வுஇ விபரணஆய்வுஇ பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டு நாகதம்பிரான் ஆலயத்தின் தனித்துவத்தையும் மாற்றத்தினையும் அதன் சிறப்பினையும் வெளிக்கொணரும் வகையில் இவ்வாய்வு அமையப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுகின்ற கிராமமாகப் பண்டாரியாவெளி காணப்படுகிறது. இக்கிராமத்தில் மேற்கொள்ளப்படும் நாகதம்பிரான் வழிபாட்டு முறைமைபற்றிய வரிவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லை இந்த நிலையில் இதுபற்றிய ஜதீக கதைகளைச் சமூகத்திற்கு வழங்குதல் மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தின் பூசை முறைகள் மற்றும் வருடார்ந்த உற்சவங்களில் இடம்பெறும் விழாக்கள்பற்றிய தகவல்களைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தல்.
ஆலயத்தின் தனித்துவம் மற்றும் அதன் சிறப்புகள்பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு கொண்டு வருதல். ஆய்வின் பிரதான நோக்கமாகும்.ஆரம்ப காலத்தில் கலிங்கப் பெண் ஒருத்தியான நாகம்மை உடன் வருகை தந்த நாகமானது பண்டாரிவெளியில்; அமைந்துள்ள இத்தி மரத்தில் உள்ள புற்று ஒன்றினுள் புகுந்தது. இப்புற்றிற்கு நாகம்மா பால் முட்டை என்பன வைத்து வழிபட்டு வந்தாள். அதன் பின்னர் மக்களால் இப் புற்றினை வழிபடனர். ஆரம்பகால மக்கள் மத்தியில் புற்றினை அடிப்படையாக வைத்து வழிபாடு இயற்றப்பட்ட வேளையில் பிற்பட்ட காலங்களில் ஒரு சிறிய ஆலயமாக அமைக்கப்பட்டு மரபுவழி மாறாத கிராமிய முறையிலமைந்த இவ்வாலயம.; காலத்தின் தேவையின் பொருட்டு ஆலய அமைப்பானது சமஸ்கிருத மயமாக்கலுகுட்பட்டுச் சென்றுள்ளது.

ஆரம்ப காலத்தில் இவ்வாலயத்தின் நித்திய பூசைகளும் விசேட நாளில் விசேட பூஜைகளும் இடம்பெறுகின்றது. வருடாந்த உற்சவ காலங்களில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து பத்து நாட்கள் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். உற்சவ காலத்தில் இங்குச் சிறப்பான பல கிராமிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர.; அவை தேசத்து பொங்கல்இ பால் பழம் வைத்தல் முட்டை வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. இவ்வாலயமானது தனக்கென்றுதனித்துவமான விடயங்களைக் கொண்டு காணப்படுகின்ற அதேவேளை மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையும் கொண்டு சமூக மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு நிலை கொண்டமைந்துள்ளது. நாகதம்பிரான் ஆலயத்தின் வரலாறு ஆலயத்தின் தனித்துவம் வழிபாட்டு அம்சங்கள் அவற்றின் சிறப்புகள்இ மரபுவழி மாறாத பல தனித்துவமான வழிபாட்டு முறைகள் போன்ற பல்வேறு அம்சங்களைச் சமூகத்திற்கு கொண்டு சென்று சமூக மக்கள் மத்தியிலும் ஆலயத்தின் சிறப்பம்சங்களையும் அவற்றின் தனித்துவத்தையும் வெளிக்கொணரும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கு இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இவ்வாய்வு ஓர்வழிகாட்டியாக அமையும்.
2023-02-07T00:00:00+00:00Copyright (c) 2023 https://ngmtamil.inhttps://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/41மனித வாழ்வியலில்; கடமையுணர்வு - பகவத்கீதையை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு”2023-02-07T07:51:41+00:00மனித வாழ்வியலில்; கடமையுணர்வு - பகவத்கீதையை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு”jeganathans@esn.ac.lk
மெய்யியலின் முக்கியமான பிரிவாக அமையும் ஒழுக்கவியல் மனித வாழ்வியலுக்குச் சவாலாக அமையும் பல விடயங்களில் கரிசனை செலுத்துகிறது. அந்த வகையில் மனித வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட கடமையுணர்வு பற்றியும் ஆய்வும் அதன் ஏற்புடைமை பற்றியும் கூறும் ஒழுக்கவியலின் கருத்துக்களை பகவத்கீதையோடு தொடர்புபடுத்தி இங்கு விளக்கப்பட்டுள்ளது. வாழவேண்டிய வாழ்கையோடு போராடவேண்டிய ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு கூறப்பட்டதே கீதை. நமது கடமைகளை உரிய விதிகளுடன் செய்து நிறைவான வாழ்க்கை வாழ கிதையில் கர்மயோகம் வழிகாட்டுகிறது. ஒவ்வொருவரும் வேத சாஸ்திரங்களில் தமக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறும் கர்மயோகத்தில் இரண்டு கடமைகள் பற்றிக் கூறப்பட்டடுள்ளது. ஓன்று பலனை எதிர்பார்த்துச் செய்தல் மற்றையது பலனை எதிர்பார்க்காமல் செய்தல். இவற்றில் பலனை எதிர்பார்க்காமல் செய்தலே சிறந்தது என்ற அடிப்படையில் “கடமையை செய் பலனை எதிர்பாராதே” எனக் கூறப்பட்டுள்ளது.. இவ்வுலகில் மனிர்கள் மேற்கொள்ள வேண்டிய பல கடமைகள் உள்ளன. ஆனால் கடமைகள் இன்றைய சமூதாயத்தில் திரிபடைந்த நிலையிலும் அழிவுப்பாதையிலும் காணப்படுகின்றன. இக்கடமைகள் யாவும் பல்வேறு விதிமுறைகளுடன் செய்யப்படவேண்டும். அந்த விதிமுறைகள் மீறப்படுகின்றபோது அவர்கள் தாம் மேற்கொள்ளவேண்டிய கடமையிலிருந்து தவறுகின்றனர். இந்த நிலையானது பொதுநல சமூதாயம் உருவாவதற்கு தடையாக அமைகின்றது. கீதையில் கர்மயோகத்தின் வாயிலாகச் செயல்களை செய்கின்ற ஆற்றலை தூண்டுகின்ற போதனைகள் சமகால மனிதனை வழிப்படுத்த ஒரு வழிகாட்டியாக அமைகின்றது என்பதை ஒப்பீடு, பகுப்பாய்வு, விமர்சனம் முதலான முறையியல்களினூடாக ஆராய இந்த ஆய்வு முனைகின்றது.
2023-02-01T00:00:00+00:00Copyright (c) 2023 https://ngmtamil.inhttps://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/42சேனைப் பயிர்ச்செய்கையும் நிலவளம் தொடர்பான சவால்களும்2023-02-09T05:44:35+00:00ஜனனி மmjanani74@gmail.comதவப்பிரபா சthavaprabas@esn.ac.lk
சேனைப்பயிர்ச்செய்கை வாழ்வாதார தொழிலாக காணப்படுவதோடு அதிக வருவாயையும் ஈட்டிதருகின்ற தொழிலாகவும் தற்காலத்தில் மாறி வருகின்றது. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் சேனைப் பயிர்ச்செய்கையானது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப் பிரதேசசெயலாளர் பிரிவில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நிலங்கள் வளம் தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்தலினை அடிப்படை நோக்கமாகக் கொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளைப் பயன்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஏறாவூர்ப்பற்று பிரிவிலிருந்து சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் ஐந்து பிரதேசங்களிலிருந்து மொத்த குடும்பங்களில் 12 சதவீதமானவர்களுக்கு என்ற அடிப்படையில் 100 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகளும் தகவல்களும் பெறப்பட்டன. இதனை விட கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு மூலமும் தகவல்கள்; பெறப்பட்டன. மேலும் இரண்டாம் நிலைத்தரவுகளும் பெறப்பட்டு அளவு ரீதியாவும் பண்பு ரீதியாகவும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் சேனைப்பயிர்ச்செய்கையினை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது மண்தரமிழப்பு ஏற்படுகின்றதா என்பதனை கண்டறிவதற்காக ஆய்வுகூடப்பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காடுகளை அழித்து முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் தடவை சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் இடங்களில் இருந்து 20 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்ணின் pH, மின்கடத்து திறன், நைட்ரஜன், பொசுபரசு, பொட்டாசியம் ஆகியவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. மண்பரிசோதனைக்கூடாக தொடர்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கை செய்யும் போது மண்ணின் வளம் குறைவடைவதினை உறுதிபடுத்தக்கூடியதாக இருந்தது. ஆய்வுப்பிரதேசத்தில் 64 சதவீதமானோர் அசேதனப் பசளையினையும் 36 சதவீதமானோர் சேதனப்பசளையினையும் பயன்படுத்தி சேனை உற்பத்தியினை மேற்கொள்வதை அறிய முடிந்தது. அத்துடன் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நிலங்களில் வளம் தொடர்பான சவால்களும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது.
2023-02-01T00:00:00+00:00Copyright (c) 2023 https://ngmtamil.inhttps://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/44ChatGPT and Education : Implications for academic libraries2023-03-21T06:02:28+00:00Veerakannan Sngmcollegelibrary@gmail.com
This article discusses ChatGPT, an artificial intelligence language model that can generate human-like text based on a given prompt. The article discusses how some educators are concerned about the implications of ChatGPT, a tool that has the ability to generate essays, book summaries, and other content. There is discussion of how ChatGPT is not reliable enough yet for college-level writing and there is praise for ChatGPT as a potential digital assistant or research partner.
2023-03-01T00:00:00+00:00Copyright (c) 2023 Kalanjiyam - International Journal of Tamil Studieshttps://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/45Pranayama and Meditation for College Students to Improve Memory2023-03-21T06:15:41+00:00Veerakannan Sngmcollegelibrary@gmail.com
This article discusses the benefits of yoga and meditation for students, including improved memory, concentration, and mental health.
2023-03-01T00:00:00+00:00Copyright (c) 2023 Kalanjiyam - International Journal of Tamil Studies