பெண்களின் அபிவிருத்தியை நோக்கிய நுண்கடன் திட்ட அமுலாக்கங்களும் அவை பயனாளிகளின் சமூக, பொருளாதார நிலைமைகளில் நடைமுறையில் ஏற்படுத்தும் விளைவுகளும்; - மாவடிவேம்பு 02 கிராமசேவகர் பிரிவை மையமாகக் கொண்ட ஓர் சமூகவியல் ஆய்வு.
1 ரா. கிரு~pகா , 2 கு. விக்னேஸ்வரன் 1சிறப்புக் கலைமாணி பட்டதாரி, சமூக விஞ்ஞானங்கள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 2சிரேஸ்ட விரிவுரையாளர், சமூக விஞ்ஞானங்கள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
Keywords:
நுண்கடன், பெண்களின் அபிவிருத்தி, சமூக விளைவுகள், பொருளாதார விளைவுகள், சமுதாய அபிவிருத்திAbstract
இன்றைய சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்ற பட்சத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களின் மத்தியில் அவர்களது அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறான பட்சத்தில் 1976 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நுண்கடன் திட்டமானது ஏழை மக்களையும், பெண்களையும் பிரதான இலக்காளர்களாக கொண்டு சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வறுமை தணிப்பிற்கான கருவியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பங்களாதே~pல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டமானது ஏற்படுத்திய வெற்றிகரமான மாற்றங்களின் விளைவாக ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் பங்களாதே~pன் நடைமுறைகளை அடியொற்றி நுண்கடன்திட்டத்தினை அமுல்படுத்தும் வேளை இலங்கையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வகையில் இவ்வாய்வுக்கட்டுரையானது ஆய்வுப்பிரதேசமான மாவடிவேம்பு-02 கிராமசேவகர் பிரிவில் பெண்களின் அபிவிருத்தியில் நுண்கடன் திட்டமானது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதை ஆராய்வதாக அமைந்துள்ளது. இவ்வாய்வின் ஆய்வு முறையியல்களாக பண்பு ரீதியான விடயங்கள் கூடுதலாக உள்ளடக்கப்பட்ட போதிலும் எண்ரீதியான விடயங்களும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. தரவுசேகரிக்கும் முறைகளாக 2019 இல் மாவடிவேம்பு – 02 கிராமசேவகர் பிரிவில் நுண்கடனை பெற்ற பெண் பயனாளிகள் மாதிரியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். டுழுடுஊ னுநஎநடழிஅநவெ குiயெnஉந (டீசுயுஊ)இ டுழுடுஊஇ ர்Nடீ புசயஅநநn குiயெnஉந டுவனஇ ஊழஅஅநசஉயைட ஊசநனவை ரூ குiயெnஉந Pடுஊஇ டீநசநனெiயெஇ லுஆஊயுஇ சுனுடீஇ Pநழிடந’ள டீயமெஇ டீழுஊஇ ளயஅரசனாi ஆகிய 10 நிறுவனங்களிடமிருந்தும் வழங்கப்பட்ட 591 நுண்கடன்களிலிருந்து நோக்கமாதிரியை (pரசிழளiஎந ளயஅpடiபெ) பயன்படுத்தி எளிய எழுமாற்று மாதிரித்தெரிவின் (ளiஅpடந சயனெழஅ ளயஅpடiபெ) அடிப்படையில் 50 நுண்கடனைப் பெற்ற பெண்கள் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்தின் மூலம் தரவுசேகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாள்விடய ஆய்வு, நேர்காணல்முறை, மையக்குழுக்கலந்துரையாடல் முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்வானது நுண்கடனானது பெண்களின் அபிவிருத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது, அதனுடைய அனுகூலத்தன்மை, பிரதி கூலத்தன்மைகள், அதன் இலக்கு வெற்றியளிக்காமைக்கான காரணங்கள், இத்திட்டம் குறித்து பயனாளிகளுக்கும், வழங்குனர்களுக்கும் உள்ள திட்டமிடல் செயன்முறை என்பவற்றை என்பவற்றை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் சமுதாய அபிவிருத்தி சட்டகத்திற்குரிய நுட்பங்களை பின்பற்றாது அமுல்ப்படுத்தப்படும் நுண்கடனானது எவ்வாறு விளைதிறன் மிக்கதாக அமையாமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது, எனவும், பெண்களின் அபிவிருத்தியில் நேர்நிலையயான விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் நுண்கடன் திட்டம் எவ்வாறு அமுலாக்கப்படுகின்றது என்பதையும் சமுதாய அபிவிருத்தி நுட்பங்களுடன் பொருந்தும் வகையில் நுண்கடன் திட்டம் அமுல்ப்படுத்தப்படவேண்டும் எனவும் இவ்வாய்வு நிரூபிக்கின்றது.
Downloads
References
Ali . MS & Cook. K. 2020, ‘Micro-Credit Programs for Empowering Women to Alleviate Poverty’, American Research Journal of Business and Management, vol. 6, pp. 01-05.
Anindita Roy .2017, ‘Effects of Micro-Credit Programmes on Women’s Health: A Critical Review of Impact Studies with Special Reference to Grameen Bank in Bangladesh’, Master Thesis, Hamburg University of Applied Sciences (HAW), pp.03-24
Wilkinson, P., & Quarter, J. 1995. ‘A Theoretical Framework for Communily-Based Development’, Economic and Industrial Democracy , SAGE, London, Thousand Oaks and NewDelhi,Vol.16,no.4,pp.525-551. Available at: https://doi.org/10.1177/0143831X95164003.
Shahidul Islam. Md., 2014. ‘Impact of Grameen Bank’s Microcredit program on The Living Standard of Rural Women: A Study in Bogra District’, Development Compilation , Vol.10, no.2, pp. 95-107. Available at: https://www.researchgate.net .
Wenner M. D. 1995, ‘Group credit: A means to improve information transfer and loan repayment performance’, The journal of development studies, vol. 32, no.2, pp: 263-281. Available at: https://www.researchgate.net.
Chandrasiri, J.K.M.D & Bamunuarachchi B.A.D., 2016, Microfinance Institutions in Sri Lanka: Examination of Different Models to Identify Success Factors, Research report no:190, Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute, Sri Lanka, pp.14-23.
Anura Jayasinghe., 2019, Women empowerment and microfinance in Sri Lanka: With special reference to Homagama divisional secretariat division, International Journal of Multidisciplinary Research and Development, Vol. 5, Issue 12, pp:174-178.
Dalia Debnath , Sadique Rahman. Md., Debasish Chandra Acharjee, Waqas Umar Latif, & Linping Wang., (2019), “Empowering Women through Microcredit in Bangladesh: An Empirical Study”, International Journal of Financial Studies, Vol. 7, no.3, pp: 01-11
Sam Daley-Harris. 2007. State of the Microcredit summit campaign Report 2007, Microcredit Summit Campaign Washington, DC 20002 USA, pp.34-56.
Shahidul Islam. Md., 2014, Impact of Grameen Bank’s Microcredit program on The Living Standard of Rural Women: A Study in Bogra District, Development Compilation, Vol 10. No 02, pp: 95-107.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.