வாணிதாசனின் குழந்தை இலக்கியம்

குழந்தைகளுக்குக் கற்பிக்கும் எளிய வழியே குழந்தை இலக்கியம். குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள் என வாய் அளவில் மட்டுமே பேசப்படுகின்றது. அதற்கான செயல் வீட்டிலும் இல்லை நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்.ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தை கருவுற்றிருக்கும்12 வாரத்திலேயே குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என அறிவியல் தெரிவிக்கிறது. ஆக குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என்பதால் குழந்தை கருவிலேயே கேட்கும் திறனைப்  பெற்றுவிடுகின்றது. அதனாலேயே தாய் கருவுற்றபோது நல்ல செயல் செய்யவும், நற்சிந்தனையுடன் இருக்க வேண்டும் எனவும்;, பொறனி அதாவது பொறாமை பேசுபவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது எனவும் நாம் உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ண வேண்டும் எனவும் சொல்வதற்கான காரணம் குழந்தை கருவிலேயே கற்றுக்கொள்கிறது என்பதாலே தான்.

இதனை விளக்குவதாக இரணியனின் மகன் பக்த பிரகலாதன் கருவிலேயே நாராயணமந்திரத்தைக் கற்றுக்கொண்டான் என்ற தொன்ம செய்தியின்வழி கருவிலேயே குழந்தைக்குக் கேட்கும் திறன் வளர்ந்து விட்டது என்பது புலனாகின்றது.

குழந்தை இலக்கியத்தின் இன்றியமையாமை

குழந்தைகளின் கேட்கும் திறனை மேம்படுத்தவும்  சிந்தனைத்திறனை வளர்க்கவும் குழந்தைகளிடம் பேச வேண்டியுள்ளது .  குழந்தைகளுக்குப் பேச்சின் ஒருகருத்தைப் பதிய வைப்பதை விட பாடல்வழி எளிமையாக புரிய வைக்க முடியும்.  அதனாலேயே அக்காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தாலாட்டுப்பாடல்வழி உறவுகளையும், மரபுகளையும், வரலாற்றுச் செய்திகளையும், குடும்பப்பெருமைகளையும் பாடி வெளிப்படுத்தினர்.

மேலும் அக்காலத்தில் கூடி வாழ்ந்தனர். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து பாட்டி, தாத்தாவின் அன்பிலும் அனுபவக் கதைகளிலும்,விடுகதைகளிலும் சிறுசிறு விளையாட்டுக்கதைகளிலும் துடுக்கான பேச்சுக்களிலும் குழந்தைகளின் சிந்தனைத்திறனைத்தூண்டி குழந்தைகளைப் பேச வைப்பர். உதாரணமாக “எங்க வீட்டுச் சேவல் பக்கத்து வீட்டில் முட்டை இட்டு விட்டது” என்பர். இக்காலக் குழந்தையாக இருந்தால் சேவலை அடைத்து வைக்க வேண்டும் என்று கூறும். ஆனால் அக்கால குழந்தைகள் தாத்தா எப்படி சேவல் முட்டை இடும்  கோழி தானே முட்டை இடும் என்;று துடுக்காக பேசி குழந்தை சிந்தித்து பதில் சொல்லும்.அக்கால கட்டங்களில் குழந்தைகளிடம் பாடல்வழியும் விடுகதைகளின்வழியும் குட்டிக்கதைகளின்வழியும் சிந்தனைத்திறனை வளர்த்தனர்.  ஆனால் இக்காலக்குழந்தைகளின் அவல நிலை கைப்பேசியோடு பேசுவதும் தொலைக்காட்சியோடு விளையாடுவதுமே. தனிமை, ஒருமை, வெறுமை என்றநிலையில் இக்காலக்குழந்தைகள் செயற்கை கதிர்வீச்சின் பாதிப்பிற்;;கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையை மாற்ற அக்காலத்தில் நம்முன்னோர்கள் கடைபிடித்த குழந்தைப்பாடல்கள் மீட்டுருவாக்கம் செய்யும் வகையிலும்; குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும்குழந்தை இலக்கியம் படைத்துள்ளனர். அவ்வகையில் வாணிதாசனின் குழந்தை இலக்கியம் பற்றி ஆய்வதே இக்கட்டுரை நோக்கமாகும்.

குழந்தை இலக்கியம் முன்னோடிகள்

குழந்தைகளுக்கு விடுகதை சொல்வதை தொல்காப்பியர் “பிசி” என்று குறிப்பிடுகிறார்.  இதனை,

“ஒப்போடு புணர்ந்த வுவமத் தானும்

தோன்றுவது கிறந்த துணிவினாலும்

என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே” (தொல். பொருள். 488)

என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் செவிலியர்கள் குழந்தைகளை நல்முறையில் வளர்க்கவும் அவர்களை மகிழ்விக்கவும் விடுகதைகளையும் வேடிக்கைக்கதைகளையும் கூறுவர். இதனை உறுதிசெய்யும் விதமாக,

“நீராடான் பார்ப்பான்

கிறஞ்செய்யான் ரோடில்

ஊரோடு சேல்காக் கை (அகம், 54.17:20)

என்ற பாடல்வரிகளின்வழி உணர முடிகின்றது. மேலும் அகநானூற்றில் மாற்றூர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடிய பாடல் ஒன்றில் தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டும்போது நிலவைக்காட்டி ஊட்டுவதாக,

“முகிழ்கிலாத் திகழ் தாரும் மூவாத் திங்கள்

கொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி

வருகுவை யாயின் தருகுவென் பால் என

விலங் கமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி” (அகம்.

என்று பாடுவதன்வழி சங்க இலக்கியத்திலேயே நிலவைக்காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டி பாடல் பாடியுள்ளனர் என்பதும் பிற்காலத்தில் இது பல நிலாப்பாடல்களுக்கும் குழந்தை பாடல்களுக்கும் வழிவகுத்துள்ளது எனலாம்.

1901 இல் குழந்தை பாடல்கள் பாடினார் கவிமணி. இவர் குழந்தைகள் பள்ளி செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக,

“கறவைப் பசுவை அதன்  /  கன்று சுற்றித் துள்ளுது பார்!

பால் குடிக்க வேண்டாமோ?  /  பழம் தின்ன வேண்டாமோ?

பாடங்கள் எல்லாம்? /   படித்திட வேண்டாமோ?

சீக்கிரம் பள்ளிக்குச்  / சென்றிட வேண்டாமோ?”

என்று பாடி குழந்தை இலக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து 1915 இல் முண்டாசுக்கவிஞர் பாரதி பாப்பாப்பாட்டு பாடி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார். இவர்கள் குழந்தை இலக்கியமாகப் பாடாமல் ஒரு நல்ல விதையைக் குழந்தைகளுக்கு விதைத்தால் நாடு செழிக்கும் என உணர்ந்து நல்ல செய்திகளை குழந்தைப் பாடலாகப் பாடி குழந்தைகளைப் பக்குவப்படுத்தும் முயற்சியில் முனைந்தனர். இதன் பயனாக பிற்காலத்தில் குழந்தை இலக்கியம் பரவலாயின.

கா நமச்சிவாய முதலியாரும்  மயிலை முத்துகுமார சுவாமியும் குழந்தைகளுக்காக கதைகளும்  பாடல்களும் கதைப்பாடல்களும் எழுதி புத்தகங்களில் சேர்த்தனர்.  இவர்கள் வழியைப் பின்பற்றிய பலர் இன்று வரை பல குழந்தை இலக்கியங்கள் மலர தனது படைப்புக்களை படைத்து வருகின்றனர்.

குழந்தை இலக்கியங்கள் பாடி சிறப்புற்ற அழ வள்ளியப்பா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் படைத்துள்ளார்.  இவர் குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவி பெரும் சாதனை படைத்தவர் எனலாம்.  இவரது முதல் நூல் மலரும் உள்ளம் என்பது.

இவரைத்தொடர்ந்து குழந்தை இலக்கிய முன்னோடி என்று போற்றப்படுபவர் மயிலை சிவமுத்து. இவர் முத்துப்பாடல்கள், நல்ல எறும்பு, நல்ல குழந்தை போன்ற 25 – க்கும் மேற்பட்டட நூல்கள் படைத்து சிறுவர் இலக்கியத்தை சிறக்கச் செய்தார்.  மேலும் நித்தில வாசகம் என்ற முதல் 5 வகுப்புகளுக்கான பாடநூல் படைத்த பெருமைக்கு உரியவர் இவர்.

இவரைத் தொடர்ந்து தூரன்,  வாணிதாசன், தம்பி சீனிவாசன், பூவண்ணன் போன்றவர்கள் குழந்தை இலக்கியம் படைத்த சிறந்த படைப்பாளர்கள் அவர்களில் வாணிதாசனின் குழந்தை இலக்கியம் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞர் வாணிதாசன்

கவிஞரேறு வாணிதாசன் 1915 ஆம் ஆண்டு ஜூலை 22 நாள் புதுவையில் உள்ள வில்லியனூர் என்ற   ஊரைச் சேர்ந்த தமிழரிஞரும் கவிஞரும் ஆவார். இவர் பாரதிதாசன் பரம்பரையைச் சார்ந்தவர். இவர் அரங்க திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது. இவருக்கு ரமி என்ற புனைப்பெயரும் உண்டு. இவர் தாய்மொழி தெலுங்கு. இவர் தனது தொடக்கக் கல்வியை பாவேந்தர் பாரதிதாசனிடம் கற்றவர். இவர் தொடக்கக் கல்வியே இவருக்கு பா புனையும் ஆற்றலையும் தமிழ்மீது ஆழ்ந்த பற்றையும் ஏற்படுத்தியது எனலாம். இவர் பாடல்கள் சாகித்ய அகாடமி வெளியிட்ட தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்ற நூலில் வெளிவந்தது. மேலும் படைப்புகள் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க்கவிமலர்கள் என்ற நூலிலும், பற்பல தொகுப்பு நூல்களிலுமத் இடம் பெற்றுள்ளன. இவர் பாடல்கள் உருசியம் ஆங்கிலம் ஆகிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் பிரஞ்சு, மொழியிலுமு; புலமை பெற்று தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு செவாலியர் என்ற விருதினை வழங்கிஞள்ளார்.

மேலும் இவருக்கு கவிஞரேறு பாவலர்மணி  என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர். இவரைப் பன்மொழி வித்தகர் என்றே சொல்லலாம்.  இவர் தமிழ், தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.  34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். இரவு வரவில்லை,இன்ப இலக்கியம்,இனிக்கும் பாட்டு, எழில்விருத்தம்,எழிலோவியம்,குழந்தை இலக்கியம்,கொடிமுல்லை,சிரித்த நுணா,தமிழச்சி,தீர்த்தயாத்திரை,தொடுவானம்,பாட்டரங்கப் பாடல்கள், பாட்டு  பிறக்குமடா, பெரிய இடத்து  செய்தி,பொங்கற்பரிசு போன்றவையாகும். இவரதுசிறுகாப்பியங்கள்    தமிழச்சி,  கொடிமுல்லை  இவரை  மயிலை சிவமுத்து தமிழ்நாட்டுத் தாகூர் வாணிதாசன் என்று புகழ்ந்தார்.

இவர்  07.08.1974 ஆண்டு இயற்கை எய்தினாலும்  .தமிழக அரசு இவரது தமிழ்த்தொண்டைப் புகழ்ந்து பாராட்டி இவர் குடும்பத்திற்கு  10000 பரிசு வழங்கியது. இவர் பெயரில் சேலிய மேட்டில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இவர் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது.

கவிஞர் வாணிதாசனின் குழந்தை இலக்கியம்

கவிஞர் வாணிதாசனின் தனது குழந்தை இலக்கியத்தில் குழந்தைமை,இயற்கை,செயற்கை,விலங்குகள், பறவைகள், மக்கள், கல்வி,அறிவுரை,கதை,தமிழ்,என்ற பொருண்மைகளில் குழந்தைகளுக்கு ஏதுவான கருத்துக்களை பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைமை

தாய்தான் குழந்தையின் முதல் ஆசிரியர். பிறந்தது முதலே குழந்தையை அங்கே பார்! இங்க பார்! என்று கூறுவதும், கை தட்டியும் சத்தம் எழுப்பியும் குழந்தையைப் பார்க்கச் செய்வதும், ஐந்தாவது ஆறாவது மாதங்களில் குழந்தை உட்கார ஆரம்பிக்கும்போது குழந்தையைக் கைதட்டு, கைவீசு, சாய்தாடு எனச்சொல்வதைப் பாடலாக பாடினால் குழந்தை அச்செயலை குதூகலத்துடன் செய்யும் என்பதை உணர்ந்த கவிஞர்

சாய்ந்தாடம்மா! சாய்ந்தாடு!

தங்கச் சிலையே சாய்ந்தாடு!

 

அதைக்கேட்டு குழந்தை அப்படியே செய்யும் அதுதான் குழந்தை இலக்க்pயத்தின் இன்றியமையாமையாக அமைகின்றது. அதுபோலவே குழந்தைக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லி வழி நடத்தினால் அது நல்ல குழந்தையாக வளரும் என்பதை உணர்ந்த கவிஞர் குழந்தைக்கு பிறகுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தையும்,பள்ளி செல்ல வேண்டும் என்பதையும், வீடு கட்டி வாழும் பழக்கத்தில் திண்ணை இன்றியமையாதது அப்போதுதான் பிற உயிரினங்களை அன்போடு வளர்க்க முடியும் என்பதை கற்றுக்கொடுக்கும் பாடலாக,

அம்புலி அக்கா வா வா  / ஆடலாம் பாடலாம் வா வா

என்றும்

வீடு கட்டிச் சமைக்கலாம்  / வெளியில் திண்ணை அமைக்கலாம்

ஆடு, கோழி வளர்க்கலாம்  /  அமியில் சாந்தை அரைக்கலாம்

என்று பாரம்பரிய பழக்கத்தைப் பாடலின்வழி கற்றுக்கொடுக்கிறார்

இயற்கை

கவிஞர் இயற்கை என்ற தலைப்பில் காலை, அந்தி, நிலவு, மழை கடல், ஆறு, ஏர்p, தாமரை, சிற்றூர், பேரூர் போன்ற தலைப்புகளில் பாடல் புனைந்துள்ளார். அவற்றில் காலை என்ற தலைப்பில் சூரியனின் விடியல் அழகையும் உலகமாற்றங்களையும் படம்பிடித்துக் காட்டுவதை,

கவின்மிகு விடியற் காலை வந்தது  /  சேவல் கூவிக் காதைக் கிழிக்கச்

சிறுஒளி கீழ்வான் இருளை அழிக்கப்  / பூவிற் பனிநீர் உருண்டு கிடக்கப்

புதரிற் சிட்டு பாடிக் களிக்க  / கும்பல் கும்பலாய்க் காக்கை பறக்க,

என்றும்,

தம்பி விழித்து தாத்தா பாட /   தங்கை எழுந்து கோலம் போட

என்று வீட்டின் செயல்பாடுகளையும் குழந்தைக்குச் சொல்லிப்பாடும் பண்பு போற்றத்தக்கதாகும். அதுபோலவே அந்தி பொழுதில் சூரியன் மறைவையும் வான் நிகழ்வையும்,

வெந்து தணிந்த சிற்றூர் போலும்

மேற்கு வான் விரிவு தோணும்

என்றும் சூரியன் மறையும் திசையையும் விளக்குவதோடு, நிலவு பற்றிப் பாடும் பாடலில் நிலவு பகலில் வராது என்பதையும் கூறியதோடு, நாட்டுப்புறங்களிலும் படிக்காத பாமர மக்கள் நிலவைக் குழந்தைகளுக்குக் காட்டும்போது நிலவ பார்… அதுக்குள்ள ஒரு பாட்டி, காலை நீட்டிக் உட்கார்ந்து உணவு உண்ணுகிறாள். அப்படினு சொல்லுவாங்க. அதே செய்தியைக் கவிஞர் சிந்திக்கும் வகையில்,

உலகிற் கல்லார் உன்னிடத்தில்  /  ஒளவைக் கிழவி உண்டென்பார்

நிலவே அந்தக் கிழவிக்கு /   நீரும் சோறும் கொடுப்பது யார்?

என்று முதியவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறார். மேலும் நிலவு தேய்ந்து வளர்வதையும் இப்பாடலில் விளக்குகிறார்.

மேலும் மழையை விரும்பாதவர் இல்லை,‘மாரி இல்லையேல் காரியம் இல்லை’ என்பதையும் குழந்தைகளுக்கு புரிய வைக்கும் விதமாக,‘மழையே மழையே வா வா’என்றும் மழை நீரால் தான் உலக உயிர்கள் வாழ்கின்றன என்றும் ஆறு, ஏரி களில் வரும் நீரால் விவசாயம் செழிக்கின்றது என்றும் மரம், செடி, கொடிகள் வளர்வதற்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்வதற்கும் நீர் நிலைகள் காரணம் என்பதைக் கூறியதோடு, நீர் நிலைகளில் பூத்திருக்கும் பூக்கள் போல் நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் வேற்றுமை பாராட்ட கூடாது என்றும் பாடியுள்ளார்.

குழந்தைகளுக்கு மலர்;களைப் பிடிக்கும் எனவே “மலர்கள் பூத்துச் சிரித்திடவும்” என்று சொன்ன நோக்கம் ஒரு கருத்தைக் குழந்தைகளிடம் பதிய வைக்க அக்குழந்தைக்குப் பிடித்த செயலை முதலில் செய்தால் தான் உள ரீதியாக குழந்தைக்கு அடுத்த சொல்ல போகும் செய்தியைக் கேட்பார்கள் என்று குழந்தைகளின் உளப்பாங்கை உணர்ந்து பாடியுள்ளார்  கவிஞர் வாணிதாசன்,

மேலும் கடல் என்ற பாடலில் கடலின் அலை எப்போதும் ஓய்வதில்லை என்பதை “கத்துங் கடலே” எனத் தொடங்கி “இரவெல்லாம் கரையைச் சீறி மோதுவது ஏன்”“பித்துப்பிடித்து விட்டதா”என்று விளையாட்டாக கேட்டதோடு கருத்தாக கடலும் வானமும் நீல நிறம் என்ற அறிவியல் உண்மையைப் பாடலில் சொல்வதை,

வானும் நீயும் ஒரு தாயின்  / வயிற்றில் உதித்த இருவர்போல்

மானும் தன்மை நிறத்தாலே / வளர்ந்தவர் யாரே கூறாயோ?என்றும்

பாடு பட்டு உழைத்த பொருளை பயன்படுத்த வேண்டும் என்றும் பிறருக்கு உதவும் பண்பு வேண்டும் என்றும் கருமியாக கஞ்சனாக இருக்க கூடாது என்றும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் விதமாக கடலிடம் கேட்பதாக,

“பாடு பட்டுத் துய்க்காது / பதுக்கி வைக்கும் கஞ்சன்போல்

ஈடில் முத்தைப், பவழத்தை  / எவருக்காகக் கொண்டுள்ளாய்

என்று பாடியதோடு பிறருக்கு உதவுதல் பேரின்பம் என்பதை ஆறு என்ற பாடலில் கூறுவதை

ஏழை எளியோர் எண்ணாமல் /எவர்க்கும் குளிர்மை தந்தாயே!

கொடுத்தே உதவி வாழ்வதில்தான் / குளிர்மை உண்டெனக் கண்டாயோ

என்று அனைவருக்கும் வேறுபாடு காட்டாமல் உதவி செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறார்;.

குடும்பச்சூழல் உணர்த்துதல்

நம் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடியது உண்மை என்றாலும் அதில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் நடந்த எதார்த்தத்தை,

தோப்புக்கிடையில் சிறுகுடிசை! /  தொடர்ந்து தொடர்ந்து பலகுடிசை

காப்புக் கதவு கிடையாது! / காற்று வாங்கும் பல குடிசை

என்றும் உணவு சமைக்கக் கூட பெரும் பாடு பட்டதை விளக்கும் விதமாக,

வீட்டின் முன்னர்ச் சிறுவேலி  / வேலிக்கிடையில் மண்;பானை

ஆட்டுக்கல்லில் வெறும்பானை / அடுப்பின் மீதோ பெண்பூனை

என்றும் பாடுவதன் வழி உணவு சமைப்பதற்கு வழியின்றி துன்பம் அடைந்த குடும்பங்கள் பல இருந்தன என்பதை விளக்குவதன்வழி கவிஞரின்  சமுதாய அக்கறையோடு குடும்பச்சூழலை குழந்தைகளுக்குப் புரிய வைத்தால்தான் பெற்றோர்களின் வலிமையும் பொறுப்பும் புரியும் என்பதோடு, அனுபவப் பாடத்தையும் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள் என்பதை உளவியல் தன்மையோடு விளக்கியுள்ளார்.

பிற உயிர்களிடத்தும் அன்பு

விலங்குகளைப் பார்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதன் உருவம்,  கத்தும்முறை,  செயல்கள் இவற்றை குழந்தைகள் தானும் அவற்றைப்போல விரும்பி செய்ய ஆசைப்படும்.  எனவே குழந்தைகளின் உளப்பாங்கை நன்கு உணா்ந்த கவிஞா் வாணிதாசன் யானையின் உருவ அமைப்புஇ செயல்கள் உண்ணும்முறை போன்றவற்றையு;ம் விளக்குகிறார். மேலும் விலங்குகளை வதைத்தல் கூடாது என்பதையும் அவை நமக்கு சிறந்த செல்வம் என்பதை மாட்டை அடிக்காதே என்ற பாடல்வழி விளக்குவதைஇ

”வீட்டின் செல்வம் மாடு – நெல்  / விளைவின்  வெல்வம் மாடு

ஊட்டக் கொடுப்பது மாடு – பால் /  உண்ணக் கொடுப்பது மாடு

என்றும்

பசுவின் கன்று காளை – கட்டை /  வண்டி இழுக்கும் நாளை !

பசுவைப் பேணி வளா்த்தால்- காசு  / பணத்தை வாங்கலாம் முறத்தால்

என பசுவால் பலன் அதிகம் என்பதை குழந்தைகளுக்கு அழகாக விளக்குகிறார். பறவைகளில் கிளிஇ புறாஇ குயில்இ சேவல்இ கோழி வாத்து போன்ற பறவைகள் பற்றியும்  குழந்தைகள் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் பாடல் பாடியுள்ளார்.

 உழைப்பின் மேன்மையை உணர்த்துதல்

உழைப்பின்  இன்றியமையாமையையும்  உழைத்தால் தான்  சிறப்பு என்பதையும்  குழந்தைகளுக்குப்  புரிய வைக்க வேணடும்  இதை உணர்ந்த நாட்டுப்புற மக்கள் அக்காலத்தில்

பச்சை மிளகாய் படியிலே  /  பழமிருக்குது செடியிலே

கோழி சேவல் மேட்டிலே / புடுச்சாடா வேலப்பா

கொழம்பு வெச்சுத் தின்னலாம். / ஏரோட்டுற மாமனுக்கு எடுத்தெடுத்து ஊத்தலாம்

சும்மா இருக்கிற மாமனுக்கு சட்டிய போட்டு  கவுத்தாலாம்

என்று வீட்டில்  கூட உழைத்தால்தான்; மதிப்பு என்பதை புரியும்படி பாடி சொல்லிக்கொடுக்கின்றனர். கவிஞர்  வாணிதாசனும் உழைப்பின்  மேன்iமை கற்றுக்கொடுக்கும் வகையில்

“வெயில் மழையில் வயல்வேலை / வேண்டா மென்றால்  உணவில்லை

என்றும் காய்கறி விற்றால்  அரை வயிறு உணவு கிடைக்கு;ம் என்றும்  கூலிக்கு உழைத்தால்  கூழ் வெச்சுக் குடிக்கலாம் இல்லையேல் சாலைக்கு வர வேண்டியதுதான் என்றும் பாடுகிறார். மேலும் அக்காலத்தில் பிள்ளைச்செல்வம் பெரும் செல்வமாகக் கருதப்பட்டது என்பதை,

தாயைக் காணாச் சிறுகுழந்தை / தடவி எடுக்கும் வெறுமொந்தை!

பனையைச் சப்பும் ஒரு பிள்ளை  / விரலைச் சப்பும் ஒரு பிள்ளை!

தினையைக் கோதும் ஒரு பிள்ளை /கிள்ளிச் சிணுங்கும் ஒரு பிள்ளை

மாட்டை ஓட்டும் ஒரு பிள்ளை / மனையைக் காக்கும் ஒருபிள்ளை

வீட்டிற் சமைக்கச் சுள்ளிதனை / வெளியில் தேடும் ஒருபிள்ளை

என்று பாடுவதன்வழி குழந்தைகளைச்  சிறுவயது முதலே ஒரு வேலையில் ஈடுபடுத்தி பொறுப்புணர்வை ஏற்படுத்தி வளர்த்திருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.

ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இது கேள்விக் குறியே….. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர்கள் முதலில் அதிகம் பேசுவதும் இல்லை. ஒரு பொருப்பைக் கொடுப்பதும் இல்லை. உணவு பசிக்கிறதா உணவு கொடுப்பார்கள் குழந்தைக்குப் பசிக்காமலேயே உணவைத் தினிப்பார்கள்;. அது எங்கிருந்து வருகிறது. அந்த உணவை விளைவிக்க ஒரு விவசாயின் உழைப்பு என்ன என்பது பற்றித் தெரியாது.  இதுபோலவே குழந்தை எந்த  பொருள் கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுதல். ஆகவே இன்றைய குழந்தைக்கு அனைத்தும் கேட்டது கிடைத்துவிடுவதால் ஏதாவது இல்லை என்றாலோ தோல்வி என்றாலே துவண்டுவிடும் நிலையில் உள்ளனர். வெற்றி தோல்வி வாழ்வில் எதார்த்த நிலை என்பதை புரிய வைப்பது இல்லை. ஆக அக்கால கட்டத்தில் குழந்தைகளுக்கு பாடல்வழி பல அரிய அனுபவங்களைப் பதிய வைத்ததுபோல் இக்கால கட்டத்திலும்  பதியவைத்தால் சிந்தனை மிக்க அறிவு சார்ந்த குழந்தைகள் உருவாக வழிவகுக்கும். குழந்தை நலன் கருதுவோம். வளமான குடும்பத்தை உருவாக்குவோம். வளர்ச்சி பெற்ற நாடாக முன்னேறுவோம். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.