அற இலக்கியங்கள் காட்டும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகள்: நான்மணிக்கடிகையை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, மானிடவியல் ஆய்வு.
ராஜேந்திரன் கிருஷிகா சிறப்புக்கலைமாணி பட்டதாரி, சமூகவியல் மற்றும் மானிடவியல் சிறப்புக் கற்கை, சமூக விஞ்ஞானங்கள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, “அற இலக்கியங்கள் காட்டும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகள்: நான்மணிக்கடிகையை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, மானிடவியல் ஆய்வு.”, KALANJIYAM – International Journal of Tamil Studies , , NGM College, Pollachi (2023): 450-456
Abstract :
அறநெறிக்காலமான சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அநேகமான நூல்கள் அறக்கருத்துக்களை எடுத்தியம்புவனவாகவும், மானிட வர்க்கத்திற்கு அறங்களினை போதிப்பனவாகவும், வாழ்க்கையின் நிலையமைப்பையும், ஒழுங்கையும் பிரதிபலிப்பனவாகவும், அவற்றை பேணுவனவாகவும், மனித சமூகத்தை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. சங்கமருவியகாலத்தில் தோன்றிய பதினோர் அற இலக்கியங்களில் நான்மணிக்கடிகையும் ஒன்று. இது விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட ஒரு நீதி நூல். இவ் ஆய்வுக்கட்டுரையானது நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்படும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் விதத்தினை எடுத்தியம்புவதை நோக்காக கொண்டு அமைந்துள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளான அழகு, கற்பு, நாணம், அன்புடைமை, காதல், ஊடல், மகிழ்ச்சி, தாய்மை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு கீழ்ப்படிதல், கணவனைப் பாதுகாத்தல், சார்ந்திருத்தல், பெண்களின் அறிவு, விருந்தோம்பல் பண்பு என பல்வேறு தத்துவ, அறப் பண்புகள் நான்மணிக்கடிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை பெண்களின் மகிமையையும், ஒழுக்கத்தையும், பெண்களின் பெருமையையும், வாழ்வியல் அறங்களையும் எடுத்தியம்புகின்றன. இவை சமூக, மானிடவியல் நோக்கில் பால்நிலைக்கட்டுமாணத்தில் பெண்களின் வகிபங்கையும், பால்நிலை பங்அறநெறிக்காலமான சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அநேகமான நூல்கள் அறக்கருத்துக்களை எடுத்தியம்புவனவாகவும், மானிட வர்க்கத்திற்கு அறங்களினை போதிப்பனவாகவும், வாழ்க்கையின் நிலையமைப்பையும், ஒழுங்கையும் பிரதிபலிப்பனவாகவும், அவற்றை பேணுவனவாகவும், மனித சமூகத்தை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. சங்கமருவியகாலத்தில் தோன்றிய பதினோர் அற இலக்கியங்களில் நான்மணிக்கடிகையும் ஒன்று. இது விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட ஒரு நீதி Áல். இவ் ஆய்வுக்கட்டுரையானது நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்படும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் விதத்தினை எடுத்தியம்புவதை நோக்காக கொண்டு அமைந்துள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளான அழகு, கற்பு, நாணம், அன்புடைமை, காதல், ஊடல், மகிழ்ச்சி, தாய்மை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு கீழ்ப்படிதல், கணவனைப் பாதுகாத்தல், சார்ந்திருத்தல், பெண்களின் அறிவு, விருந்தோம்பல் பண்பு என பல்வேறு தத்துவ, அறப் பண்புகள் நான்மணிக்கடிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை பெண்களின் மகிமையையும், ஒழுக்கத்தையும், பெண்களின் பெருமையையும், வாழ்வியல் அறங்களையும் எடுத்தியம்புகின்றன. இவை சமூக, மானிடவியல் நோக்கில் பால்நிலைக்கட்டுமாணத்தில் பெண்களின் வகிபங்கையும், பால்நிலை பங்குகளில் பெண்களின் நிலையினையும் அதற்கூடாக பால்நிலை உறவுகள், பால்நிலை வேறுபாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தாலும், காலமாற்றத்தின் காரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வாழ்வியல் நெறிமுறைகள் தற்கால பெண்களால் கடைப்பிடிக்கப்படாத அறங்களாகவும், சமகால சூழலில் பின்பற்றப்படாத அறங்களாகவும் அமைந்துள்ளதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இவ் ஆய்வானது விவரண ரீதியான ஆய்வாக அமைந்துள்ளது. எனவே நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை சமூக, மானிடவியல் ரீதியில் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்காகும்.குகளில் பெண்களின் நிலையினையும் அதற்கூடாக பால்நிலை உறவுகள், பால்நிலை வேறுபாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தாலும், காலமாற்றத்தின் காரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வாழ்வியல் நெறிமுறைகள் தற்கால பெண்களால் கடைப்பிடிக்கப்படாத அறங்களாகவும், சமகால சூழலில் பின்பற்றப்படாத அறங்களாகவும் அமைந்துள்ளதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இவ் ஆய்வானது விவரண ரீதியான ஆய்வாக அமைந்துள்ளது. எனவே நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை சமூக, மானிடவியல் ரீதியில் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்காகும்.