Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார் பண்பாட்டின் தாக்கம் (விழுப்புரம் மாவட்டம்)

You are here:
  1. Home
  2. Research Article
  3. கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார்…

கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார் பண்பாட்டின் தாக்கம் (விழுப்புரம் மாவட்டம்)

PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

முன்னுரை

தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த தன்மை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன், பிலவேந்தரின், இருதயராஜ் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர் இந்நிலையை நாட்டார் பண்பாடு வடத்தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது. என்பதை பற்றி ஒரு சில விழாக்களில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

புனித வியாழன்

“பெரியவியாழன் அல்லது புனித வியாழன் என்பது கிறித்தவா்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகவா்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது Holy Thusday Maundy Thusday என்றும் அழைக்கப்படுகிறது.”1

இயேசு தான் சிலுவையில் பாடுகள் படும் முன் தினம் இரவு கெஸ்தமணி தோட்டத்தில் செபித்தார் அதை நினைவுக் கூறும் வகையில் அனைத்து கிறித்துவ கோவில்களிலும் “மாற்றுப் பீடம் அமைத்து மக்கள் அன்பின் வாரியாக வந்து விளக்குகளை ஏற்றி அன்று இரவு முழுவதும் கண்விழித்து இயேசு அணுபவித்த துன்பத்தை தானும் உணரவேண்டும்”2 என்று திரு.அ.மாரியநாதன் அவா்கள் கூறுகின்றார். இந்த நிகழ்வு ஒருவா் இறந்துவிட்டார் இரவு முழுவதும் இருந்து வேண்டுவதை குறிக்கும் ஒரு நாட்டார் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

புனித சனி
திருச்சபை பழங்கால முறைப்படி பெரிய சனி என்பது கிறித்துவ மக்கள் தம் ஆண்டவராகிய இயேசுவின் கல்லறையின் பக்கம் நின்று அவருடைய பாடுகளின் சாவு பற்றி தியானிக்கின்ற நாளாகக் கொண்டாடுகின்றது. இது அமைதியின் நாளாக திருச்சபை அனுசரிக்கின்றது.

“புனித சனி அன்று இயேசு இறந்து விட்டதை எண்ணி வாசலில் சானி தெளித்து கோலம் போடுவதை தவிர்ப்பார்கள் அன்று மக்கள் அரிசி கஞ்சி சோறு மட்டும் உண்ணுவார்கள்.”3

இந்த நிகழ்வை நம் வீட்டில் யாரேனும் இறந்து விட்டார் வாசலை சாணம் தெளித்து கோலம் போடமாட்டோம் அல்லவா அதே போல இயேசு வைப்பும் நம் வீட்டில் ஒருவராக நினைத்து ஆய்வு இப்பகுதியில் மக்கள் இந்த முறையை கடைப்பிடிக்கின்றது இது ஒரு நாட்டார் பண்பாடாகவே கருதப்படுகிறது.

பாஸ்கா விழா (ஈஸ்டா்)
இவ்விழா இயேசு மரித்து பின் உயிர்த்தெழுந்தார் என்ற நிகழ்வை நினைவுக் கூறும் விதமாக அமைகிறது. இவ்விழாவை கிறித்துவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர்.

கிறித்துவா்கள் பாஸ்கா விழா (ஈஸ்டா்) திருப்பலி முடிந்தவுடன்  “மக்கள் தங்கள் கையில் இருக்கும் மெழுகு திரிகளை அணையாமல் தங்கள் வீட்டுக்கு எடுத்து செல்வார்கள் இவற்றை மக்கள் புனிதப்பொருளாக கருதுவார்கள் புதிய ஒளியின் நினைவாக எடுத்து செல்வா். பின் மந்திரித்த தண்ணீா் ஒரு சொட்டாக இருந்தாலும் அதை கோவிலில் இருந்து எடுத்து சென்று நிறைய நீருடன் கலந்து வீட்டை சுற்றி தெளிப்பா். அப்படி தெளித்தால் வீட்டில் போய் வராது நோய் நொடியும் வராது என்பது என்பது கிறித்துவா்களின் நம்பிக்கையாகும்”4 இங்கு இந்த நம்பிக்கை ஒரு நாட்டார் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது என்று திருமதி.எஸ்.சகாய மேரி கூறிப்பிடுகிறார்.

கிறித்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா
கிறித்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா மூவொரு கடவுள் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இயேசு நற்கருணையில் உடலும், இரத்தமுமாக இருக்கின்றார் என்பதை உணா்த்து வதை நினைவுக் கூறும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

“இவ்விழா தெருக்களில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் இயேசுவின் திருவுடல் உள்ள ஓமக்கலனை வைத்து ஆராதிப்பார். அன்பியவாரியாக பீடம் அமைத்து விவிலியவாசகங்கள் பாவிப்பார். இதில் புதியாக நற்கருணை விருந்து பெற்ற குழந்தைகள் பூவை தெளித்து ஒவ்வொரு இடத்திலும் ஊா் முழுக்கவருவா். இது பூத்திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழாவில் மூலம் இயேசுவின் இந்த திருவுடல் தான் உண்மையான ஆன்மாவை தூய்மைப்படுத்தும் உணவு என்று இவா்கள் நம்புகின்றனர்.”5 என திருமதி.வி.விக்டோரியா கூறுகிறார்.

மறைப் பங்கு பாதுகாவலா் விழா
(புனித வனத்தச் சின்னப்பா் தேவாலயம் கல்பட்டு)  ஒரு மறைமாவட்டத்தில் கீழ் இயங்கும் பங்கில் ஒரு புனிதரை பாதுகாவலராக நியமித்து அவருக்காக அப்பங்கில் விழா எடுத்து சிறப்பித்து பங்கு பாதுகாவலா் விழா என்று அழைக்கப்படுகிறது. ஆய்வும் பகுதியில் எல்லா ஊா்களிலும் வைத்து திருவிழா எடுக்கப்படுகிறது. இங்கு கல்பட்டில் கொண்டாடும் விழாவைப் பார்ப்போம் புனித வனத்த சின்னப்பா் திருத்தலம் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் கி.பி.1898 ஆம் ஆண்டு கல்பட்டு கிராமத்தை சோ்ந்த கல்யாண ஐயா் குடும்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ஐயா் ஒருநாள் காணாமல் போன மாடுகளை தேடி போனபோது தற்போதுள்ள பழைய கோவிலை ஒட்டினார் போல புதா் செடிகள் இருந்தன, மாலையில் சிலுவை அடையாளம் தோன்றி மறைந்தது போல காட்சி கண்டார் மணியோசையுடன் தூப நறுமணமும் கண்டார். ஒரு புதா் செடியின் பக்கத்தில் பின் அவா் வீடுசென்று உரங்கிவிட்டார். அப்போது கனவில் வெள்ளைக் குதிரையில் துறவிப் போன்று ஒருவா் தோன்றி நானே! வனத்துச் சின்னப்பா் பகலில் காட்சி கண்ட இடத்திற்கு சென்றால் உன் மாடுகள் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.

பின் காலையில் எழுந்து கிறித்தவரான சூரப்ப வாத்தியார் குமார் கலங்காணிமுத்து என்பவரிடம் நடந்ததைச் சொன்னார். பின் அவருடன் இன்னும் சிலரும் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் மாடுகள் கிடைத்தன, பின் மக்கள் இந்த காட்சிக்கு பிறகு அந்த இடத்தில் புல், செடி, கொடிகளை, புதா்களையும் சுத்தம் செய்து மேடைகட்டி சிலுவை குச்சிவைத்து மண்கூடு விளக்கேற்றி நாள்தோறும் புனித வனத்துச் சின்னப்பரை பக்தியுடன் வேண்டி பல விதமான அற்புதங்களையும் வரங்களையும் பெற்று சென்றனா். இந்த செய்தியை கேட்டு மக்கள் திரண்டு வந்து புனிதரின் மகிமையை கண்டு கொண்டாடி மகிழ்ந்தனா்.

“பின் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த புனிதரின் சுருபம் வந்த பார்சல் ஏற்றிவந்த இரயில் மாம்பழப்பட்டு இரயில் நிலையம் வந்தவுடன் நகராமல் இருந்ததாகவும், அந்த பார்சலை எடுத்தப்பின் இரயில் தானாக போக ஆரம்பித்ததாகவும், பின் அப்பொழுது முகையூரின் பங்கின் கீழ் இயங்கிய இந்த ஊா், பங்கு குருவிற்கு இந்த செய்தியை சொல்லி பின் குரு வந்து அவருடனும் மக்கள் வந்து அந்த சுருபத்தை எடுத்துச் சென்றார்கள் என்று வாய்மொழியாகவும், செவிவழியாகவும் அறியப்பட்டது என்றும் இது ஒரு வெகுசன மக்களிடம் பரவியிருக்கிற நாட்டார் கரையாகவும் கருதப்படுகிறது.”6
திருமதி.எஸ்.புனித என்பவா் குறிப்பிடுகிறது.

முடிவுரை
கிறிஸ்துவ மக்களின் விழாக்களில் தென்மாவட்டங்களில் நாட்டார் பண்பாடு பரந்து காணப்படுகின்றன. அங்கு மட்டும் இல்லாமல், வடத்தமிழகத்திலும் நாட்டார் பண்பாடு, கதைகள், நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள் மூலம் வடதமிழகத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்கா்களின் திருவிழாக்களில் நாட்டார் பண்பாடின் தாக்கம் காணப்படுகின்றது என்று நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.ta.m. Wikipedia.org
2.நோ்காணல் : திருமதி.அ.மரியநாதன்
3. நோ்காணல் : திருமதி.எஸ்.நிர்மலா
4. நோ்காணல் : திருமதி.எஸ்.சகாய மேரி
5. நோ்காணல் : திருமதி.வி.விக்டோரியா
6. நோ்காணல் : திருமதி.சே.புனிதா.

 

* கட்டுரையாளர்: – எஸ்,வயோலா, ஆய்வியல் நிறைஞர் ,க்தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம், இந்தியா –

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader