- நெறிமுறைகள் Policies
கருத்துத் திருட்டுத் தடுப்புக் கொள்கை Plagiarism Policy
மதிப்பாய்வுக்கு முன் ஒவ்வொரு கட்டுரையும் ஒப்புமைச் சோதனைக்கு உட்படுகிறது. கருத்துத் திருட்டு, சொந்த ஆக்கத்தின் மறுபயன்பாடு, இருமுறை அல்லது மொழிபெயர்ப்பு வெளியீடு ஆகியவை கையாளப்படும் முறை.
Every submission is screened for similarity before peer review. How plagiarism, text recycling and duplicate or translated publication are handled.
ஒரு பார்வையில் At a glance
- சோதனை Screeningஎல்லாக் கட்டுரைகளும், மதிப்பாய்வுக்கு முன் every submission, before review
- கருவி Toolஒப்புமை கண்டறியும் மென்பொருள் similarity-detection software
- வரம்பு Thresholdவழிகாட்டியாக 10% 10% as a guide
- மொழிபெயர்ப்புகள் Translationsவெளிப்படுத்தல் கட்டாயம் disclosure required
ஒப்புமைச் சோதனை Screening
- ஆசிரியர் குழுவின் தொடக்க ஆய்வின்போது, மதிப்பாய்வுக்கு முன், ஒப்புமை கண்டறியும் மென்பொருளால் சோதிக்கப்படும்; கணிசமாக மாறிய கட்டுரைகள் வெளியீட்டுக்கு முன் மீண்டும் சோதிக்கப்படும். Manuscripts are checked with similarity-detection software during editorial screening, before peer review; manuscripts that change substantially are checked again before publication.
- வழிகாட்டியாக, மொத்த ஒப்புமை 10%க்கு மேல் இருந்தால் கட்டுரை திருப்பி அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும். துணைநூற்பட்டியல், முறையாக மேற்கோள் காட்டிய பகுதிகள், வழக்கமான முறையியல் விவரிப்புகள் இக்கணக்கில் சேராது. As a guide, manuscripts with an overall similarity above 10% are returned or rejected. The figure excludes the reference list, properly quoted text and standard method descriptions.
- ஏதேனும் ஒரு மூலத்தோடு கணிசமான ஒப்புமை இருந்தாலும் திருப்பி அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும். Substantial overlap with any single source also leads to return or rejection.
- ஒப்புமை எண் தொடக்கப் புள்ளி மட்டுமே: ஆசிரியர்கள் முழு அறிக்கையையும் படித்து ஒவ்வொரு ஒப்புமையையும் மதிப்பிடுகின்றனர். The score is only a starting point: editors read the full report and judge every match.
- மென்பொருள் தமிழை ஆங்கிலம் அளவுக்குத் துல்லியமாக ஒப்பிடுவதில்லை; எனவே ஐயமான பகுதிகளை ஆசிரியர்கள் அச்சு, இணைய மூலங்களுடன் கைமுறையாகவும் ஒப்பிடுகின்றனர். Software matches Tamil less reliably than English, so editors also compare doubtful passages by hand with print and online sources.
கருத்துத் திருட்டு எவை What counts as plagiarism
அப்படியே நகலெடுத்தல் Verbatim copying
மேற்கோள் குறியும் மூலக் குறிப்பும் இன்றி உரை, அட்டவணை, படங்களைப் பயன்படுத்துதல். Using text, tables or figures without quotation marks and citation.
சொல் மாற்றி எழுதுதல் Paraphrasing
பிறரின் கருத்தையோ உரையையோ மூலம் குறிப்பிடாமல் வேறு சொற்களில் தருதல். Rewording another’s ideas or text without citation.
சொந்த ஆக்கத்தின் மறுபயன்பாடு Text recycling
உங்கள் முந்தைய வெளியீட்டின் கணிசமான பகுதிகளை மூலமும் வெளிப்படுத்தலும் இன்றி மீண்டும் பயன்படுத்துதல். Reusing substantial parts of your own published work without citation and disclosure.
இருமுறை வெளியீடு Duplicate publication
ஒரே ஆய்வையோ தரவையோ ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களில் வெளியிடுதல். Publishing the same study or data in more than one journal.
மொழிபெயர்ப்புத் திருட்டு Translation plagiarism
வேறு மொழியில் வெளியான கட்டுரையையோ பிறரின் ஆக்கத்தையோ வெளிப்படுத்தலும் அனுமதியும் இன்றித் தமிழிலோ ஆங்கிலத்திலோ வெளியிடுதல். Publishing a Tamil or English translation of an article already published in another language, or of someone else’s work, without disclosure and permission.
செவ்வியல் நூல்களை மேற்கோள் காட்டுதல் Quoting classical texts
சங்கப் பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்திப் பாடல்கள், அவற்றின் உரைகள் ஆகியவற்றைப் பதிப்பையும் பாடல் அல்லது நூற்பா எண்ணையும் குறிப்பிட்டு மேற்கோள் காட்டுவது வரவேற்கப்படுகிறது. ஆனால் வெளியான உரையையோ, ஒரு பாடலுக்குப் பிற அறிஞர் தந்த விளக்கத்தையோ உங்கள் சொந்த விளக்கமாகக் காட்டுவது கருத்துத் திருட்டாகும்.
Quoting Sangam poems, the Tolkāppiyam, the Thirukkural, the Silappatikāram, devotional hymns and their commentaries is welcome when you cite the edition and the verse or sūtra number. Presenting a published commentary, or another scholar’s reading of a verse, as your own interpretation is plagiarism.
நடவடிக்கை What happens
- வெளியீட்டுக்கு முன்: சிக்கலின் அளவைப் பொறுத்துக் கட்டுரை திருத்தத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும்; காரணம் கட்டுரையாளருக்குத் தெரிவிக்கப்படும். Before publication: depending on the extent, the manuscript is returned for revision or rejected, and the authors are told why.
- வெளியான பின்: COPE செயல்வழி வரைபடங்களின்படி திருத்தம் அல்லது திரும்பப் பெறுதல்; கட்டுரையாளரின் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்படலாம். After publication: the journal follows the COPE flowcharts; the outcome may be a correction or a retraction, and the authors’ institution may be informed.
தொடர்புடைய நெறிமுறைகள் Related policies
எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளை ஆசிரியர் அலுவலகத்துக்கு editorial.kalanjiyam@ngmc.org முகவரியில் எழுதுங்கள்.
Questions about our policies? Write to the editorial office at editorial.kalanjiyam@ngmc.org.