Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம்

You are here:
  1. Home
  2. Research Article
  3. நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம்

நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம்

ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில்
arajkumartamil88@gmail.com
PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

செம்மொழியான தமிழ்மொழிக்குரிய இலக்கியம் பல்வேறு வடிவங்களில் விளங்குகின்றன. அவற்றுள் நவீன இலக்கியங்கள் இன்றையக் கால சமூகத்தின் பாடுபொருளாக விளங்குகின்றன. இன்றைய சமுதாயப் பாடுபொருள்களில் ஒன்று பெண்ணியம் பற்றியக் கருத்தாக்கங்கள். பண்டைய இலக்கிய இலணக்கண நூல்களும் பெண்ணியம் பற்றிப் பேசினாலும், இன்றுதான் அவைகள் தனி இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. இன்றைய தனி இலக்கிய வகையாக விளங்குவது நான்மணிக்கடிகை. அந்நூலில் பயின்றுவரும் பெண்ணியம் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

பெண்ணியம் விளக்கம்

ஆங்கிலத்தில் ‘‘Feminisam’ என்று வழங்கும் கலைச் சொல்லையே தமிழில் பெண்ணியம் என்றுகூறுகின்றோம்.இச்சொல் ‘Feminisam’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ‘பெண்’ என்னும் சொல்லுக்கு பெண்களுக்குரிய இயல்புகளை உடையவள் என்று பொருள்.

“1889 வரையில்‘Feminisam’ என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினைகளையும், அதன் அடிப்படையிலான பெண்களின் போராட்டங்களையும் உணர்த்தப் பயன்பட்டு வந்தது. பின்பே பெண்களின் உரிமையைப் பேசுவதற்காகக் குறிப்பிடப்பட்டது நான்மணிக்கடிகையில் வரும் பெண்கள் பற்றிய பாடல்கள், பெண்களின் உண்மை வாழ்வை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. காலத்திற்கு காலம் பெமினிசம் என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ் சொல்லின் பொருள் மாறி வந்துள்ளன. அச்சொற்கள் அனைத்தும் பெண்ணிய விளக்கத்திற்கு பலவாறு ஏற்புடையதாக அமைகின்றன. அந்தவகையில் “சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதி ‘Feminisam’ என்பதற்கு ‘பெண்ணுரிமை ஏற்புக் கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு என்று பொருள் கொள்கிறது.”4 என்று கூறியிருக்கும் பொருள் பொருத்தமுடையதாகும்.

பண்டைய சமுதாயத்தில் பெண்கள் ஆண்களின் உடைமையாக, பணிப்பெண்களாக, மனித உற்பத்தி சாதனமாக ஒடுக்கப்பட்ட சூழல் நிலவியது. பாலின வேறுபாட்டை ஏற்படுத்திய அந்நிலைகளை மாற்றும் பொருட்டும் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கும் பொருட்டும் போராடவேண்டிய தேவை ஏற்பட்டது.

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல்,பொருள், நூ-96)

என்ற தொல்காப்பியரின் பெண்மைக்குரிய இலக்கணம் மறைந்து

“நாணமும் அச்சமும் நாய்களுக்குத்தான் வேண்டும்”

அச்சமும் நாணமும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்”

என்கின்ற புதிய சித்தாந்தங்கள் உருவாகியிருக்கின்ற இன்றைய சூழலில் நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண்களின் நிலையினைப் பற்றி ஆய்வோம்.

குடும்ப பெண்கள் நிலை
பெண்கள் குடும்பப் பொருளாதராரத்தில் பங்கு கொள்ளாமல் வீட்டைச்சுத்தப்படுத்துவதும், பெருக்குவதும், துடைப்பதும், வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கொள்வதும், முதியர்களுக்குப் பணிவிடை செய்வதும் இல்லப்பணிகளில் தவிர்க்க முடியாமல் பெண்கள் ஈடுபடுகின்றனர். இல்லப்பணியில் நசுக்கப்படும் பெண்கள் தங்கள் சுயத்தையும் அடையாளத்தையும் இழந்து தனக்கென எந்தவிதமான விருப்பமும் இல்லாமல், மற்றவர்களின் விருப்பத்தை தனக்குரியதாக ஆக்கிக்கொண்டு வாழும் நிலையினை,“ பெண்கள் குழந்தைகளை உற்பத்தி செய்பவர்களாகவும், தாயாராகவும், மனைவியாகவும் கருதப்பட்டனர். அவர்களது வேலை வீட்டுவேலை செய்தல், தன்னையே ஆண்களுக்கு அர்பணித்தல் ஆகியனவாகும்” என்ற கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.

வர்க்கங்களுக்கிடையில், சாதிகளுக்கிடையில், அநீதியான ஆதிக்கம் மற்றும் சுரண்டல் உறவுகள் நிகழ்வது போல் பால்களுக்கிடையிலும் நிகழ்கின்றன. ஆண் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், பெண் அடிமைப்பட்டுக் கிடப்பவளாகவும் உள்ள அநீதியான சுரண்டல் உறவையே ஆண் ஆதிக்கம் என்கிறோம். ஆண்வர்க்க சமுதாய முறை என்கிறோம். ஆனால் இன்றைய பெண்கள் ஆணாதிக்கத்தையும் தாண்டி வளர்ந்து வந்துள்ள நிலையினை நம்மால் கண்கூடாக காண முடிகின்றது.

“எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று பாரதியார் படைத்த கவிதைகளுக்கு ஏற்ப பெண்ணினம்

இன்று ஆண்களுக்கு ஈடுசெய்யும் விதமாக வளர்ந்து வந்துள்ளனர்.

பெண்ணிகளின் நாணம்
பெண்ணை நிலத்துக்கு ஒப்பாகவும், மனிதர்களை வாழ வைக்கும் நெல்லுக்கு ஒப்பாகவும், நீர் நிறைந்த குளத்துக்கு ஒப்பாகவும், குளத்தில் பூத்திருக்கும் தாமரையை பெண்ணோடு ஒப்புமைப்படுத்தியும் கூறுவது ஒரு வகையில் ஏற்புடையதாக இருக்கின்றன. நிலம் நல்ல விளைச்சலை தருகின்றனது. மக்களின் பசியைப் போக்குகின்றது. நெல் உணவாகப் பயன்பட்டு பசியாகிய பிணியை விரட்டுகிறது. இன்றைய சூழலில் நீர் நிறைந்த குளமே சமுதாயத்தின் தேவையாக உள்ளன. ஆறுகள் வரண்டு. நீர் நிலைகள் வற்றி, விவசாயம் பெய்து, வேளாண்குடி மக்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில் நீர் நிறைந்த குளத்தின் தேவையை நான் உணர்ந்துள்ளேன். அதே சயமயத்தில் பெண்களுக்கு நாணம் இன்றியமையாதது என்பதை இன்றைய சமுதாய மதிப்பினைக் கொண்டு சித்தரிக்கையில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

“நிலத்திற்கு அணிஎன்ப, நெல்லும் கரும்பும்,
குளத்துக்கு அணிஎன்ப, தாமரை, பெண்மை
நலத்துக்கு அணிஎன்ப, நாணம் தனக்குஅணி
தான்செல் உலகத்து அறம் (நான்மணிக்கடிகை, பக். 64 )

என்ற பாடல் உணர்த்தும் பெண்களுக்கு உரிய நாணம்ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாக உள்ளது. ஏனெனில், தேசியக்கவி எனப் போற்றப்படுகின்ற பாரதியாராலும், புரட்சிக்கவி எனப் போற்றப்படுகின்ற பாரதிதாசனாலும் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. காலம் காலமாக பெண்களை அடிமைப்படுத்தும் சமுதாயத்தின் கருத்தாக்கமாக இவை பார்க்கப்படுகின்றன.

பெண்களிடம் ஊடல் எழுவதற்கு ஆண்களே காரணமாக இருக்கின்றனர். பெண்களின் உலகம் வீடு என கட்டுப்படுத்தும் சமூகம். ஆண்கள் வீட்டிற்கு வெளியே சென்று எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கியிருக்கலாம், என்ன செயல்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையே ஆணாதிக்கத்தின் திறவுவாயிலாக அமைகின்றன. ஆண் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம். பெண் வீட்டிலிருந்து தன் கணவனையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்டவள் கற்பு மகளிராகப் போற்றப்படுவர் என்ற ஒழுக்கம் பெண்மைக்கு எதிரான சித்தரிப்பாக அமைகின்றன.

“பல்லினாள் நோய் செய்யும் பாம்பெலாம் கொல்களிறு
கோட்டால் நோய் செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தால் நோய் செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் கருகுவர் நோய்” (நான்மணிக்கடிகை, பக்.65

என்ற பாடல் உணர்த்தும் பொருள் கணவன் எவ்வளவு தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் குணம் பெண்களுக்கு வேண்டும் என்று கூறுகிறது. இதுவே சமுதாயக் கேட்;டிற்கு ஆக்கமாக அமைகின்றன. குறை கண்டவிடத்து கடிந்து சுட்டிக்காட்டியும், நிறை கண்டவிடத்து பாராட்டுவதும் தான் மனித இயல்பு. அது, பெண்ணுக்குப் பொருந்தாது என்பதை யாராலும் ஏற்க இயலாது.

உடன்கட்டை ஏறுதல்
சமயச் சார்புடைய இலக்கியங்கள் உடன்கட்டை ஏறுவதை வலியுறுத்துகின்றன. ஐம்பெரும்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அற இலக்கியங்கள்,பிற காப்பியங்கள் அனைத்தும் சமயத்தை முன்னிறுத்தித் தோன்றியதாகும். ஒரு ஆண் இறந்தபோது, அவன் பிரிவைத் தாங்கமுடியாமல் ஒரு ஆண் உயிர்துயரந்தால் அதனை வடக்கிருத்தல் என்றும். அதே சமயம் கணவனை இழந்த மனைவி உயிர்துறப்பதை உடன்கட்டை ஏறுதல் என்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தன் கணவன் இறந்துவிட்டான் என அறிந்தவுடன் மனைவியாக ஆதிரை உயிர்விட துணிந்ததை மணிமேகலை காப்பியம் எடுத்துக் கூறுகிறது. அதைப்போலவே, நான்மணிக்கடிகையிலும் இடம்பெறும் பாடல் ஒன்று

“பறைநன்று, பண் அமையா யாழின் நிறைநின்ற
பெண்நன்று, பீடு இலா மாந்தரின் பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று” (நான்மணிக்கடிகை, பக்.65)

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் போருக்குச் சென்றோ அல்லது கடல்கடந்து பொருள்தேடச் சென்றோ அங்கேயே இறந்துவிடுகிறான். உடன்போக்கு சென்ற தலைவி தலைவன் இறந்த உடனே உடன்கட்டை ஏற்றப்படுகிறாள்.

குடும்ப உறவுகள
ஒரு குடும்பம் சிறக்க காரணமாக இருப்பது கணவன் மனைவி இருவருக்குள் இருக்கும் புரிந்துணர்வு ஆகும்.புரிதல் என்பது ஒருவர் குறையை ஒருவர் மறக்கச் செய்து மென்மையான வாழ்க்கைக்கு அடித்தளமிடுகிறது.

கணவன் மனைவின்பால் முக்கியத்துவம் பெறுகிறான். அவர்கள் சமூகத் தீமைக்கு ஆட்படாமலும், சமூகப் பிரச்சினைக்கு இவர்கள் காரணமில்லாமலும் வாழ்கின்றனர். எனினும் கணவன் தீயவான இருந்தாலும் மனைவி நல்லொழுக்கம் உடையவளாக வாழவேண்டும் எப்படி எனில்,

“கண்டார் இழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” (குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி, தருதுயரம் தடாயேல், பா.02)

என்ற பாடல் உணர்த்தும் பொருள் போல் மனைவி வாழ்வதை உணர்த்தும் பாடல் ஒன்று நான்மணிக்கடிகையில் இடம்பெற்றுள்ளது.

“நாகை இனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகை இனிது தொட்டு வழங்கின் தகை உடைய
பெண் இனிது பேணி வழிபடின் பண் இனிது
பாடல் உணர்வா ரத்து” (நான்மணிக்கடிகை , பக்.76)

என்று கணவனைப் பாதுகாத்து போற்றும் பெண்ணின் நிலை கூறப்பட்டுள்ளது.

பெண்களின் கல்வி அறிவு
பழைய வைதீக நெறிகள் பெண்களுக்கு கல்வியறிவு தேவையில்லை எற்ற விதிமுறை வகுத்திருந்தது. சில நூற்றாண்டுகள் இந்த வைதீக வேதாந்தத்தைப் பின்பற்றியே சமுதாயம் செயல்பட்டது. பெண்ணியத்தின் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடுகளாக அவைகள் பார்க்கப்பட்டன. ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே பெண்கல்வியின் இன்றியமையாமை சமுதாயம் உணர்ந்துகொண்டது. அதன்பின் தோன்றிய அனைத்து இலக்கியங்களும் பெண்கல்வியை வலியுறுத்தின. அதனை,

“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல- நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு” (நாலடியார், பா.131)

என்று பெண்கள்வியின் இன்றியமையாமை வெளிப்படுத்தியது. அந்தப் புரட்சி இருபதாம் நூற்றாண்டு கால படைப்பாளர்களின் உள்ளத்திலும் உருவாக்கம் பெற்றதை

“கல்வியில்லாத பெண் கலர்நிலம் போன்றவல் -அங்கே
புள் விளையுமே தவிர நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”

என்ற பாரதிதாசனின் கவிதைகள் முதல் பெண்களுக்கு கல்வி வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதற்குச் சமமாகும் என்று கூறுவதன் வாயிலாக அறியலாம். இதே பாடுபொருளைக் கொண்டுள்ள பாடல் ஒன்று நான்மணிக்கடிகையில் இடம்பெறுவதைக் காணலாம். சில பொருட்கள் சிலரிடம் இருப்பது சிறப்பபைத் தருவதாகும். தகுதி உடைய பொருள் தகுதியானவர்களிடம் இருப்பதே சிறப்பு. அந்தவகையில் உழவன் கையில்; இருக்கும் ஏரும், காளையும் போல் பெண்களிடம் இருக்கவேண்டிய மிகப்பெரிய செல்வம் அறிவும் அழகும் ஆகும் என்பதை பதிவு செய்யும்,

“எருது உடையான் வேளாளண் ஏலாதான் பார்ப்பான்;
ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப;
செறிவு உடையான் சேனாபதி” (நான்மணிக்கடிகை, பக்..84)

என்ற பாடல் பெண்மைக்கு மதிப்பு தரும் பாடலாக அமைந்துள்ளது

பெண் சமூகம் ஒரு சார்புச் சமூகம் பிறப்பு முதல் இறப்பு வரை மற்றவர்களை சார்ந்தே வாழவேண்டும். பிறப்பிலிருந்து திருணம் வரை கணவனைச் சார்ந்தும், திருணமான உடன் கணவனைச் சார்ந்தும், வாழ்வின் இறுதிக் காலத்தில் பிள்ளைகளைச் சார்நதும் வாழவேண்டும். பிறர் சார்பு இல்லாமல் தனியாக வாழமுடியாத நிலையில் திருமணம் முடிந்தவுடன் அவள் அதிகமாகக் கணவனைச் சார்ந்து வாழும் சூழலே அவளை அடிமைப்படுத்துகிறது.

தன் தேவை ஒவ்வொன்றிற்கும் கணவனை எதிர்பார்த்தே இருக்க வேண்டும் என்பது பழமையான சமூகக் கட்டமைப்பாகும். சுய சம்பாத்தியம் இல்லாத குடும்பப்; பொறுப்புகளுக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு குடும்பமே தானாக வாழும் அவள் கணவனே எல்லாவற்றிலும் தனக்கு இன்றியமையாதன் என்பதை இலக்கியங்களும் பிரதிபலிக்கின்றன.

“கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்
எண்ணக் கடவுளும் இல்” ( நான்மணிக்கடிகை, பக்..85)

என்ற பாடல் ஒரு மனிதனுக்கு கண் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றனவோ, அந்தளவில் பெண்ணிற்குக் கணவனைத் தவிர பிற உறவு இல்லை என்று கூறுகிறது.

முடிவுரை
பெண்கள் பழைய வேதகாலச் சமுதாயத்திலிருந்து அனுபவித்து வந்த அடக்குமுறைக்கு முறைகளைச் சுட்டிக்காட்டும் விதமாகவும், அந்த அடக்கு முறைகளுக்கு எதிராகவும் குரல்கள் இன்று எதிரொலிக்கின்றன என்பதை விளக்கும் விதமாகவும், பதினெண் கீழக்கணக்கு நூல்கள் பதினெட்டில், அற இலக்கியத்தில் ஒன்றாக விளங்கும் நான்மணிக்கடிகை, பெண்ணினத்திற்கு ஏற்றம் தரும் கருத்துகளையும், பெண்ணடிமைத்தனத்திற்கு ஆக்கம் தரும் கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றது என்பதை எடுத்துரைப்பதற்காகவும் இக்கட்டுரையில்  கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய பெண்ணியம் என்பது இன்று சமூகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும் வகையில் அமைந்திருப்பதைக் கண்கூடாக காணலாம்.

துணை நூற்பட்டியல்

தொல்காப்பியம், பொருளதிகாரம். நூ.96
பாரதியார் கவிதைகள், சாரதா பதிப்பகம்
க.ப. அறவாணன் (உ.ஆ), நான்மணிக்கடிகை, ப.64
குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி, தருதுயரம் தடாயேல், பா.02

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader