Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

இசக்கியம்மன்; வழிபாட்டு

வே.முரளிகிருஷ்ணன்,

Keywords:

Abstract:

இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன் இதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, வழிபாடுகளையும் விழாக்களையும் தோற்றுவித்தான.; காலப்போக்கில் இயற்கைக்கு உருவம் கொடுத்து வழித் தொடங்கினான.; ஆரம்ப காலத்தில் வழிபாட்டிற்கு அடிப்படையாக மந்திரம் மட்டுமே தோன்ற, பின் வழிபாடும் சமய விழாக்களும் தோன்றின. ஒவ்வொரு பெயரையும் இறைவனுக்குச் சார்த்தி வழிபாட்டு முறைமைகளில் வேறுபாட்டை கொண்டனர். அதிலும் இசக்கியம்மன் வழிபாட்டு முறைகளைப்பற்றி இங்கு காணலாம்.

திரு விளக்கு வழிபாடு

‘திரு’ என்பதற்கு, மாங்கல்யம், அழகு, திருமகள்;, செல்வம். தெய்வத்தன்மை பொருந்தியது எனப் பலபொருள் உண்டு. விளக்கு என்பதற்கு இருளைப்போக்கும் ஒளி என்று பொருள் ஆகும். மாதந்தோறும் தமிழ் மாதத்திற்கு இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. மாதர் சங்கப் பெண்களால் இவ்வழிபாடு நிகழ்த்தப்பெறுகிறது.

இதனை.

“தேவியின் வடிவே திருவிளக்கு

தேவியே உனக்கு நமஸ்காரம்’’

என்ற வரிகள் மூலம் அறிய முடிகின்றது, விளக்கு கோவிலில் இருந்து கொடுக்கப்படுகின்றது.விளக்கிற்கு சந்தனம். குங்குமம். பூ வைத்து வாழை இலை விரித்து அதன் நடுவே விளக்கை வைத்து பாக்கு, வெற்றிலை, வாழைப்பழம், பொங்கல் முதலிய பொருள்களை இசக்கிக்குப் படைக்கின்றனர். விளக்கின் அருகில் வைக்கின்றனர், அதன்பின் அம்மனுக்குரிய பாடல்களைப்பாடுகின்றனர்,

பேயோட்டும் சடங்குகள்.

சமயங்களில் பேய்

பேய் பற்றிய எண்ணங்கள் தொன்றுதொட்டு இருந்துவந்துள்ளன என்றாலும் மக்கள் மனதில் பேய்ப்பற்றிய எண்ணங்கள் வளர்வதற்கு சமயங்கள் காரணமாகின்றன. பேயுடன் ஒத்த பண்புடையதாக ‘டெவில் என்றும் சாத்தான் என்றும் கிறித்துவ மதத்தில் குறிப்பிடப்படுகிறது. இதுபோலவே முகமதியார்கள் சைத்தான் என்று குறிப்பிடுகின்றனர். பௌத்தத்திலும் பேய், பிசாசு நம்பிக்கை உண்டு. இந்து சமயத்தில் ஆழமான கருத்துண்டு. “இந்த தோன்றங்களைப் பற்றி இந்துக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்களைச் சொல்லவே வேண்டியதில்லை. ஒவ்வொரு பாழ்வீட்டிலும், இடத்திலும், சுடுகாட்டிலும், குட்டிச் சுவற்றிலும் பேய் உண்டு என்ற நம்பிக்கை உண்டு.

தமிழலக்கியங்களில் அணங்கின் உறைவிடம்

அணங்கு மலையில் உறையும் என்பதனை,

“அணங்குடை நெடுவரை யுச்சில் இழிதரும்

கானட்கொள் அருவி கான்கெழு நாடன்”

என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், நீhநிலைகள், ஊர், காடு, போர்க்களம், காவல்மரம் முதலிய இடங்களில் அணங்கு தங்கியிருக்கும் என்று சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இவைகள் அணங்கு உறையும் இடங்களாகும்.

அணங்கின் செயல்கள் :

“அணங்கு விலங்கே கள்வர் தம் இறையென

பிணங்கால் சால அச்சம் நான்கே”

என்று குறிப்பிடுகின்றனர் தீமை தருவன நான்கு என்றும் அவற்றும் அணங்கு முதலாவதாகக்  சுட்டப்பட்டதால் அணங்கின் ஆற்றலை அறிந்து கொள்ளமுடிகிறது.

அணங்கானது வேண்டும் பொழுது வேண்டும் உருவம் கொண்டு, ஏமாற்றவல்லது. தாக்கி துன்புறுத்தும் குணமுடையது, புனித பொருள்களின் புனிதம் நீங்கின் அப்பொருள்களுக்கு தொடர்புடையவர்களைத் துன்புறுத்தும் பண்புடையது,

பேய்களின் செயல்கள்

பேய்கள் பிணம் திண்ணும் பண்பினது என்ற போதிலூ}ம்  புண்பட்டவரை உண்ணமாட்டா. எனவே. புண்பட்டவரின் உயிர்போகும் வரையில் அருகில் இருந்து பிற விலங்குகள் அணுகாது காக்கும் என்பார். இதனை.

“ஏமச் சுற்றும் இன்றிப் புண்ணோன்

பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்”

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார், இதே கருத்தை மணிமேகலையிலும் நற்றினையிலும் காணலாம்,

கடும்பசி உடைய பேய்களுக்கு உணவு படைத்தல் இயலாது, அதனால் பேய்களின் தெய்வமே கடும் பசிப்பிணி போக்க முடியும். என்பதைனைக் “காடமர் செல்வி கடிப்பசி களைய” என்ற குறிப்பிடுவதால் அறியலாம். பேய்களின் தலைவி காளிதேவி என்று கலிங்கத்துபரணியில் குறிப்பிடப்படுகிறது. போர்களத்தில் புண்பட்ட கணவனை பேய் அணுகாது இருக்க பேய்க்குப் பகையான செயல்கள் செய்து தனது கணவனைக் காத்தாள் என்று புறநானுற்றில் குறிப்பிடப்படுகிறது.

கோடங்கியின் தோற்றம்:

கோணங்கி. கோ ூ அணங்கி எனப் பிரிக்கப்படும்.’கோ’ என்பது தலைவன் தலைவி. அரசன். வீரன் போன்றவர்களை குறிப்பிட பயன்படுத்தும் சொல்லாகும். அணங்கி என்பது அணங்கு என்பதன் சுற்றுத்திரிபு ஆகும். அணங்கு என்பது ஆற்றல் படைத்த தெய்வம் என்ற பொருளில் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. அணங்கு உறையும் பொருள்கள் புனிதத்தன்மை உடைய ஆற்றலுள்ளவையாகும். இதனால் அணங்கு உறையும் பண்பினது எனலாம். எனவே கோணாங்கி என்பவன் அணங்கு என்ற தெய்வத்தின் ஆற்றலைப் பெற்றவன் என்று பொருள் கொள்ள இடமுண்டு.

கோடாங்கி என்பது கோணாங்கியின் தொடர்புடையது என்ற போதிலும் கோடாங்கி என்பதனை விரித்துப் பார்க்கின் விளக்கம் இன்றும் கிடைத்திடக் காணலாம். கோடாங்கி என்பது கோடு ñ ஆங்கி என்று பிரிக்கலாம். கோடு என்பது குற்றம் என்று பொருள்படும். ஆங்கி என்பது வடமொழி சாத்திரங்களில் கைதேர்ந்தவன் என்றும் ஆரிய அரசன் சப்தரிஷிகளில் ஒருவனை வடமொழி நிபுணன் என்று சொல்லப்பெறுகின்றது,

கோடாங்கிகள் பேயோட்டும் நிகழ்ச்சியில் மேலாடை அணிவது இல்லை கோடாங்கியிகள் சாராயம், கள், கஞ்சா, போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களின் கண்கள் சிவந்து காணப்படும். பார்ப்பவர்களுக்கு அச்ச உணர்வை ஊட்டும் அடர்ந்து நீண்ட தம் தலைமுடிக்கேற்ப இவர்கள் பெரிய தலைபாகை கட்டியிருப்பர்.புலித்தோல். புலிப்பல். புலிநகம். யானைக்கண்ணி போன்றவற்றை ஆபரணங்களாக அணிவர்.

நெற்றியில் விபூதியை அதிகளவு பளிச்செனத் தெரியுமாறு கோடாகி; பூசிக்கொள்வர். நடுவில் குங்குமத்தைத் திட்டு போல பெரியதாக இட்டுக்கொள்வர். கோடாங்கிகள் தங்களது தொழில் காரணமாக மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர். மற்றவர்கள் இவர்களுடன் பழகுவது அரிது. கோடங்கிகளின் வாழ்வு முறையில் ஏதோ மர்மம் உள்ளது என்று கருதுகின்றனர். சில கோடாங்கிகள் மண்டை ஓடுகளையும் மனித எலும்புகளையும் உடன் வைத்துள்ளனர்.

பேயோட்டும் சடங்கு

நாட்டுப்புற மக்கள் பேய்ப்பற்றிக் கொண்ட கருத்துபோலவே  கோடாங்கியையும் பேயை விரட்டும் ஆற்றல் பெற்றவர் என்று நம்புகின்றனர். எனவே பேய் பிடிக்கப்பட்டவரிடமிருந்து அப்பேயை விரட்ட வேண்டி கோடாங்கிகளை நாடுகின்றனர்.

“ஆடாத பேய்களெல்லாம் ஆட்டிவைப்பேன்

ஓடாத பேய்களையெல்லாம் ஓட்டிவைப்பேன்

ஒழுங்கா போடா”

என்று கட்டளையிட்டு மனிதருள் புகுந்த பேயினை போகச் சொல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

சடங்கும் படையல்களும்

பேயோட்டும் சடங்கில் பேயோட்டும் கோடாங்கியே இன்றியமையாத இடத்தைப் பெறுவர். ஆதனால் பேயோட்டும் நிகழ்ச்சியின் இயக்குநரை கோடாங்கி என்று குறிப்பிடுவது பொருத்தமுடையது ஆகும். “பேயோட்டச் செல்லும் கோடாங்கி தன்னுடன் உடுக்கை என்ற தோல் இசைக்கருவி, திருநீர், பிரம்பு, புளியம் விளார், வேம்பம் தலை பேய்களுக்குப் பகை என்பர்.

படையல்களின் பயன்

சேவலின் காலில் சிறிது கீறி இரத்தத்தைப் படையல்களின் மீது தூவுவார். குருதிப்பலி தூவுதல் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம் ஆகும்.

பேயோட்டும் நிகழ்ச்சி

பேயோட்டும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கோடாங்கி உடுக்கை இசைத்து ஓசை எழுப்புவார். உடுக்கின் இசை இனிமையானது. உள்ளத்தைக் கிளர்ச்சி அடையச் செய்யும் பண்பினது உடுக்கின் பிடி. கயிற்றில் (நாடா) ஒலி எழுப்பும் மணி கட்டப்பட்டிருக்கும். உடுக்கு இசையுடன் மணியும் அதிர்ந்து ஓசை எழுப்பும் மணியோசைக்குப் பேய்கள் அஞ்சும் தன்மையுடையது.

கோடாங்கியின் கூற்று

அத்துடன் கோடாங்கி ஏதேனும் பொருள் விரும்பினால் தருகிறேன் போய்விடு என்று பாடுகிறார். பேய்ப்பிடித்தவர் உளநலம் கெட்டிருப்பதனால் அவர் உடனடியாக கோடாங்கியின் கூற்றினை உணர்ந்து கொள்ள முடியாது. எனவே, பேய்ப்பிடித்தவரால் பதிலளிக்க முடியாது அதனால் கோடாங்கி பேய்ப்பிடித்தவர் உள்ளத்தில் தமது கூற்று உரைக்க வேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பாடியதை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் வருமாறு பாடுவார்.

உடுக்கின் இசையாலும் பாடலாலும் பேய்ப்பிடித்தவரின் உள்ளமானது சிறுகச் சிறுக கிளர்ச்சியடைந்து செயல்படத் துவங்குகிறது. இதனை, பேய்பிடித்தவர் தமது உள்ளத்தில் கொண்ட கருத்தை வெளியிடுவதன் மூலம் அறியலாம். அவர் வெறிகொண்டு தலைவிரித்துச் சுற்றுவா.;  இந்தச் செயல்கள் பேய்ப்பிடித்தவரின் மூளைக்கும் உடல் உறுப்புகளுக்கும் இயக்கத் துடிப்பு ஏற்படக் காரணமாகிறது என்பர். இதனை மருத்து நூலார் உடல்நலம் கெட்டவர்களின் உடல் உறுப்புகளுக்கு பயிற்சியாக அமையும் என்பர்.

பேய்ப்பிடித்தவர் தம் நிலை திருந்தி விலங்கு தன்மை பெறுவதனால் உடுக்கடிப் பாடலால் மேலும் உணர்ச்சி மேலிட தம்முள் அடங்கிக் கிடந்த மூர்க்கத்தனத்தை வெளிக்காட்டுகிறார். இந்த மூர்க்கத்தனமானது அவரது இயல்பான ஆற்றலுக்கு மிஞ்சியது ஆகும். இச்செயல் உள்மனத் தூண்டுதலின் விளைவு ஆகும்.

பேய்; பாடுதல்

பேயோட்டும் நிகழ்ச்சியின் விளைவால் தம் உள்ளத்துடன் உருகக் கொண்டு அடக்கி வைத்த உணர்ச்சிகளை பேய்ப்பிடித்தவர் வெளியிடுகிறார். இதனையே பேய்ப் பாட்டு என்பர். தனது மனைவிக்கு நஞ்சூட்டிக் கொன்று விட்டு பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டேன் என்று விபரம் கூறுவதை பேய்க் கூற்றிற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். தான் யார்?, எப்படி இறந்தார்? என்ற விவரங்கள் பேய்ப்பாட்டில் கிடைக்கிறது. பேய் தனக்கு விருப்பமானவற்றைக் கூறும் இதனை,

“பிள்ளைய பாக்காம – நான்

புண்ணியம் போறதில்ல – எம்

புள்ளய கூட்டியா பூசாரி

புள்ளைய கூட்டியா

கூட்டி வருவாயா?”

என்று பேயோட்டும் நிகழ்ச்சியில் பேயினால் பிடிக்கப்பட்டவர் நீண்ட நேரம் ஆடுவதாலும், பாடுவதாலும் சோர்ந்து காணப்படுவார். ஊடலை வருத்தி ஆடியதனால் உடலுக்குத் தேவைப்படும் குளிர்ந்த நீரைசோர்ந்த நேரத்தில் கோடாங்கி  முகத்தில் தெளிப்பதனால் அதிர்ச்சியும் விழிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு.

நீராட்டல்

குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்தப் பின்னர் பேயினால் பீடிக்கப்பட்டவரை நீராட்டுவர். நீராட்டுதல் பண்டைய நாள்முதல் கொண்ட பழக்கமாகும். பழங்காலத்தே அன்று தீட்டுக் கழியவும், குழந்தைகளின் மீது எந்தவிதமான தீயசக்தியும் படாமலும் இருக்க எண்ணியும்  நீராட்டுவர்.

பிற சடங்குகள்

நீராட்டியப் பின்னர் மும்முறை நீரைப் பேய்ப்பிடித்தவர் முன் ‘து’ என்று ஊதித் தலையில் தெளித்து நெற்றியில் பூசி விடுவார். திருநீறு தெய்வச் சின்னமாகும். தெய்வச் சின்னம் கண்டு பேய் அச்சம் கொள்ளும் என்று நம்புகின்றனர். பேய்ப்பிடித்தவர் தலையில் ஒரு கல்லை வைத்து ஊருக்கு வெளியில் கல்லை எறிந்து விட்டு வரச் செய்வர். பின்னர் பேய்ப்பிடித்தவரின் தலையில் முடியை சிறிது வெட்டி எடுத்து புளிய மரத்தில் கட்டிப்போட்டதாக கருதுகின்றனர். மேலும் புளியமரம் பேய் வாழும் இடங்களுள் ஒன்று என்பதால் பேய்

புளியமரத்தில் ஏறிக்கொண்டது என்றும் கூறுவர். இதனை, பேய்ப் புளியமரத்தில் ஏறியது போல என்ற நாட்டுப்புற மொழியால் தெளியலாம். முடியில் பேயாற்றல் உள்ளது என்பணத நம்பிக்கை. அதனாலயே பேய்ப்பிடித்தவரிடம் கோடாங்கி தலைமயிரை அவிழ்த்து விட்டு ஆடு என்று பேயோட்டம் நிகழ்ச்சியில் கூறுவது குறிப்பிடத்தக்கது. இதனை,

“அஞ்சு சட முன்னால வர

ஆட்டி விட்டு உன் தலைய”

என்ற கோடாங்கியின் பாடல் வரியால் அறியலாம்.

பேய் வேண்டியவை தருதல்

பேய் சில பொருட்களை விரும்பி கேட்கும் அவை, அப்பேய் மனித நிலையில் வாழும் பொழுது விரும்பியப் பயன்பயன்படுத்திய பொருட்கள் என்பர். இயற்கையான மரணம் அடைவதற்கு முன்னர் அறந்து விட்டதால் அப்பொருள்களின் மீது இன்னும் விருப்பம் கொண்டுள்ளனர். சுருட்டு, பீடி, சாராயம், கள், சட்டை, சைக்கிள், மாடு, மல்லிகைப் பூ ஆகியவைகள் பொதுவாக காணப்படுகின்றன. சைக்கிள் மாடு போன்றவைகளுக்குப் பதிலாக, அதுபோல களிமண்ணால் (அல்லது) மரத்தால் செய்து வைப்பது வழக்கம். இப்பொருள்களை ஊருக்கு வெளியில் எறிந்துவிட்டு திரும்பிப் பாராது வந்துவிடுவர். திரும்பிப் பார்த்தால் பேய் மறுபடியும் வந்துவிடும் என்பது அவர்தம் நம்பிக்கை இதனை,

“மன்றப் பேய்கள் வந்து கைக்கக் கொள்கென

நின்நெறி பலியினெடுங் குரலோசையில்”

என்று மணிமேகலை குறிப்பிடுவதைக் கொண்டு அறியலாம்.

பேய் ஓட்டும் சடங்கின் முடிவில் பேய் விரட்டப்பட்டதாக எண்ணுகின்றனர். இசையும் பாடலும் கலந்து மரபு வழியில் செயல்படும் நிகழ்ச்சியே பேயோட்டும் சடங்கு ஆகும்.

தொகுப்புரை

பேய் குறித்த நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொடர்ந்து இருந்து வருவதை அறிய முடிகின்றது. பேய்ப்பிடித்தவரிடம் அக விழிப்பை தன் உடுக்கை ஒலி மூலம் ஏற்படுத்தி அவர்களிடம் உள்ள பேய் உணர்வை கோடாங்கி வெளியேற்றுவதையும் இது நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை சார்ந்த சடங்காக இருப்பதையும் அறியமுடிகின்றது.