மனிதர் தம் வாழ்நாளில் சகமனிதர்களையும் தம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் நேசிக்கும் இயல்பைப் பெற வேண்டும் என்று கவிஞர் எஸ்.டி.சுந்தரம் வலியுறுத்துகிறார். குழந்தையின் ஞான நிலையை வளர்ந்தவர்கள் பெறவேண்டும் என்றும், ஜீவ ஆதாரமாகவும் அளப்பரிய ஆற்றல் மிக்கதாகவும் உள்ள இயற்கையை நேசிக்கும் பண்பை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் சகஉயிர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உரைக்கிறார். இவ்வாறு இயந்திரங்களைப்போல் இல்லாது தருமசிந்தனை மிக்கதாக மனித இனம் விளங்குவதற்குரிய வழிமுறைகளை மனிதம் என்ற கவிதையின் வாயிலாகக் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் புலப்படுத்துகிறார்.