கஞ்சியேற்றிய ஆடை
நமது அடிப்படைத் தேவைகளுள் உடையும் ஒன்று. தற்காலத்தில் அனைவரும் உடையை நேர;த்தியாக அணிய விரும்புகிறோம். உடைகளைச் சலவை செய்து, கஞ்சியில் தோய்த்து, மின்சாரம் மூலம் சூடேற்றி, சுருக்கமின்றித் தேய்த்து அணிவது நாகரிகமாகக் கருதப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று சொல்லி வந்தாலும் இன்னும் அதனினும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர;கள் கருதி வருகின்ற சங்க இலக்கியப் பாட்டுகளுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில் இந்நாகரிகம் காணப்படுகிறது. பாண்டிய மன்னனின் தோற்றப் பொலிவினைப் பாடும் மாங்குடி மருதனார;,
சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ (ம.கா:721-722)
என்று பாடியுள்ளார;. அதாவது சோறு சமைத்த நீராகிய கஞ்சியில் தோய்த்த உடையைப் பாண்டிய மன்னன் உடுத்தியிருப்பதாகச் சொல்வதன் மூலம் இந்நாகரிகம் பழந்தமிழர; கண்டறிந்தது என்பதையும் அதுவே இன்றுவரை தொன்றுதொட்டுத் தொடர;ந்துவருவதையும் அறியமுடிகிறது.
நெடுநல்வாடையில் அரசியின் படுக்கை அறையில் தந்தத்தால் செய்யப்பெற்ற கட்டிலின்மேல், அன்னப்பறவைகள் புணரும்போது உதிர;ந்த மிக மென்மையான தூவிகளைச் சேர;த்துச் செய்த அணையினை விரித்து அதன்மேல் கஞ்சியில் தோய்த்த தூய துகில் சுருக்கமின்றி விரிக்கப்பட்டிருந்தது என்பதை,
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர; அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை இட்டுக்
காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை (நெ.வா:131-135)
என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. இதனால் அரண்மனையில் படுக்கை மீது விரிக்கப்படும் துணிகளும் கஞ்சியில் தோய்க்கப்பட்டு நேர;த்தியாக அழகாக இருந்தமையை அறியலாம்.
அடிபுதை அரணம்
காட்டுவழியே செல்லும் வணிகக் கூட்டத்தினர; மலையினின்றும் கடலினின்றும் பெற்ற பொருள்களைப் பிறர; பயன்கொள்ளுமாறு விற்று, அதன்மூலம் கிடைத்த அரிய பொருளைக்கொண்டு தம் சுற்றத்தாரை உண்பித்தனர;. இவர;கள் பாதம் உள்ளே புதைந்து மறையும்படியான அமைப்புடைய செருப்பினை அணிந்திருந்தனர; என்பதை,
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன்தாள்
அடிபுதை அரணம் எய்தி…..(பெரும்.67-69)
என்னும் பாடலடிகளால் அறியமுடிகிறது. தற்காலத்தில் அணியப்படும் ளுhழநளஇ டீழழவள முதலியவை மேலைநாட்டு நாகரிகத்தின் தாக்கம் என்று இன்று பலர; பேசி வருகின்றனர;. ஆனால் பழந்தமிழகத்தில், பல இடங்களுக்கு அலைந்து திரியக்கூடிய வணிகர;கள் அடிகளைப் பாதுகாத்து மூடி மறைக்கும்படியான செருப்பு வகைகளை அணிந்திருந்தனர; என்பதை உணரலாம்.
கள்வர;கள் தோலாலான ஒருவகை செருப்பினை அணிந்திருந்தனர; என்பதை,
தொடலை வாளர; தொடுதோல் அடியர; (ம.கா:636)
என்னும் மதுரைக்காஞ்சி அடியினால் அறியலாம்.
குமரிமூத்தகூடு
உழவரது இல்லத்தில் ஏணியாலும் எட்டமுடியாத மிகநெடிய வடிவினையும் தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பலவகை நெல்லினையும் உடைய அழியாத்தன்மை வாய்ந்த முதிர;ந்த நெற்குதிர; இருந்ததனை,
ஏணிஎய்தா நீள்நெடு மார;பின்
முகடுதுமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரிமூத்த கூடோங்கு நல்லில்…(பெரும்.245-247)
என்று பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது. நெல் என்றும் தீராமல் மேன்மேலும் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்ற பழமையான நெற்குதிரினைக் ‘குமரிமூத்தகூடு’ என்று கடியலூர; உருத்திரங்கண்ணனார; நயம்படப் பாடியுள்ளார;. பெருமழைப்புலவரின் உரை இதனைத் தெற்றெனப் புலப்படுத்துகிறது. “குமரி மூத்தல் என்றது, பயன்படாது காலங்கழிதல் என்னும் பொருட்டு. ஒரு கன்னி மணப்பருவம் பெற்றும் கணவனைப் பெறாதே வீணே முதியவளாய்விடுதலைக் குமரி மூத்தல் என்ப.
அமரர;கோன் ஆணையின் அருந்துவோர; பெறாது
குமரி மூத்தவென் பாத்திரம் (மணி.76-77)
என மணிமேகலையிலும் கூறப்பட்டமை காண்க.
அற்றார;க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. (குறள்-1007)
என வள்ளுவனாரும் குமரிமூத்தமை கூறுதல் காண்க. மேன்மேலும் புதிய வருவாய் வந்து நிரம்பலாலே, கூடுகள் குமரி மூத்தனவாயின என்க. பல்லுணவு என்றது, பலவகையான நெல் என்றவாறு” என்னும் விரிவான உரைப்பகுதியாலும் உழவர;களின் அன்றைய வளமான வாழ்வியலை அறியமுடிகிறது.
பல்வகைக் கொடிகள்
மதுரை நகரின் திருக்கோயில்களில் பெருந்திருவிழாக்களின் பொருட்டு ஏற்றப்பட்ட பல அழகிய கொடிகள் அசைந்து கொண்டிருந்தன. மேலும் அரசனது ஏவலின்படிச் சென்ற தண்டத் தலைவர;கள் ஒவ்வொரு அரண்களை வென்று கைக்கொள்ளுந்தோறும் எடுத்த பல வெற்றிக் கொடிகளும், வேல்படையோடு சென்று புலால் நாறும்படிப் பகைவரைக் கொன்று குவித்து, அவரது யானைப் படையையும் குலைத்தமைக்காக எடுத்த வெற்றிக் கொடியும் அசைந்து கொண்டிருந்தன. கள்விற்கும் கடைக்கு மேலே கள்ளின் களிப்பை நினைவூட்டித் தன்பால் ஈர;ப்பது போலக் கொடி அசைந்து கொண்டிருந்தது. இதுதவிரக் கல்வி, கொடை, அறம், தவம் முதலிய நல்வினைகளைக் குறிக்கும் கொடிகளும் அசைந்து கொண்டிருந்தன. பாண்டியனது மீனக்கொடியும் நிலைபெற்று அசைந்து கொண்டிருந்தது. இக்காட்சி பெரிய மலையிடத்தே பல அருவிகள் அசைவன போன்று காணப்பட்டது.
சாறயர;ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாள்தோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீரொலித் தன்ன நிலவுவேல் தானையொடு
புலவுபடக் கொன்று மிடைதோல் ஓட்டிப்
புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇ
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க.. (ம.கா:366-374)
என்று மதுரைக்காஞ்சி வருணிக்கின்றது.
சைவ, வைணவ திருக்கோயில்களில் இன்றும் பெருந்திருவிழாக்களின் போது இடபம், வாரணம், கருடன் முதலிய பல்வேறு உருவங்கள் வரையப்பட்ட கொடிகள் ஏற்றப்படும் வழக்கம் தொடர;ந்து வருகின்றது. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் முதலிய இடங்களில் நமது தேசியக்கொடி இன்றும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது. வெகுதொலைவில் வருவோருக்கும் தெரியும்படியாக அன்று கடைகளில் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தது போலவே இன்றைய நவீன யுகத்தில் வணிக நிறுவனங்கள் விளம்பரப் பலகைகளை மிக உயரத்தில் வைத்து வண்ண விளக்குகளைப் பொருத்தி வாடிக்கையாளர;களைக் கவர;கின்றன.
புலம்பெயர; மாக்கள் கலந்தினிது உறைதல்
இன்று பெருநகரங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர;ந்த, பல மொழிகளைப் பேசும் மக்கள் தொழில் அல்லது பணிகளின் பொருட்டு ஒன்றாக வாழ்கின்றனர;. சங்ககாலத்தில் சோழர;களின் தலைநகராகவும் மிகப்பெரிய துறைமுகப்பட்டினமாகவும் ஏற்றமதி இறக்குமதிகளில் சிறந்து விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு மக்களோடு பழகிய, வெவ்வேறு துறைசார;ந்த அறிவுடையோர; ஒன்று கூடியிருந்தனர;. திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஊர;களுக்குச் சுற்றத்தார; திரளாகச் சென்று கூடுவது போல அப்பட்டினத்தில், குற்றமற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர;ந்து வந்த, பல மொழிகளைப் பேசும் மக்கள் ஒன்றுகூடி இனிதாக வாழ்ந்து வந்தனர;.
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுணர;ந்த முதுவாய் ஒக்கல்
சாறயர; மூதூர; சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர; தேஎத்துப்
புலம்பெயர; மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்… (பட்டி.213-218)
இன்றைய வணிக நகரங்களைப் போலவே அன்றைய காவிரிப்பூம்பட்டினமும் பலருக்கும் வாழ்வளிக்கும் நகரமாகச் சிறந்து விளங்கியுள்ளது.
பழந்தமிழர;கள் அகநாகரிகம் என்று சொல்லப்படுகின்ற பண்பாட்டில் சிறந்து விளங்கியதோடு புறநாகரிகத்திலும் உயர;ந்திருந்தனர; என்பதற்குப் பத்துப்பாட்டு நூல்களே முதன்மைச் சான்றுகளாகும். மேலும் இன்று நாம் பின்பற்றி வருகின்ற சில வழக்கங்கள் காலத்துக்கேற்ப நவீனத்துவம் பெற்றிருந்தாலும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்று வளர;ந்துள்ளன என்பதையும் ஒவ்வொரு தமிழரும் அறிந்து போற்றுதல் வேண்டும்.