Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

பன்முக நோக்கில் – நாட்டுப்புற இலக்கியம்

அ.அருணகிரிவேலவன்,

Keywords:

Abstract:

ஒரு நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்க்கை முறையும் ஆராய்ந்து பார்த்தால் அந்நாட்டின் வளர்ச்சி தெரியும். வளங்களையும் ஆராய்ச்சி முறைகளையும் ஆராய்கின்ற பொழுது அதற்கு பெரிதும் துணைபுரிவது இலக்கியங்கள் ஆகும். ஏனென்றால் மக்களின் வாழ்க்கை முறையினை ஆராய்கின்ற பொழுதுஅங்குள்ள மக்களின் அன்றாட பணிகள் சார்ந்து காணப்படும். அதற்கு மிக முதன்மை காரணம் அம்மக்களின் தொழிலாகும். நாட்டுபுறங்களில் காணப்படும் இலக்கிய தன்மை பெரிதும் நமக்கு துணைபுரிகிறது. வரலாற்றில் மக்களின் இலக்கியமான நாட்டுபுற இலக்கியத்தின் தோற்றம் பற்றி மிக துள்ளியமாக கூற இயலாது. இது மனித சிந்தனை திறனை வளர்க்க முற்பட்ட போதே வாய்மொழி இலக்கியமாக உருப்பெற்றது எனலாம். நாட்டுபுற மக்களின்  பழக்கவழக்கங்களையும் ஆராயப்படுகிறது. உலகில் பழம்பெரும் நூல்களுள் ஒன்றான ரிக்வேதத்தில் பழமையான நாட்டுப்புற பாடல்களும் கதைப்பாடல்களும் நமக்கு சான்றாக
அமைகிறது.

சார்லஸ் கோவர் (Charles E.Gover) 1871 தென்னிந்திய நாட்டுப்புற பாடல்கள் (Folksongs of
Southern India) என்ற நூல் இந்திய நாட்டுப்புறப்பாடல் வரிசையில் வந்த முதல் நூலாகும்.
அதன் பிறகு 1884-1901 ல் “பஞ்சாப் புராணக்கதைகள்” (Legends of Punjob) என்னும் பெயரில்
பலதொகுதிகளாக வெளிவந்தது. வில்லியம் குரூக்கின் (W.Crooke) 1896ல் “பொதுமக்கள்
சமயம், மந்தும் வட இந்திய நாட்டுபுறவியல்” (Popular Religion and Folklore of North India)
என்னும் நூல் இந்திய நாட்டுப்புறவியலில் குறிப்பிடதக்க நூலாகும். தமிழ் இலக்கியத்தில் முதல் பதிவு தொல்காப்பியத்தில் “பண்ணத்தி” என்ற சொல் காணப்பகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன்> கண்ணகி> கவுந்தியடிகள் மதுரையைவிட்டு புறப்பட்டு காவிரி பகுதியில் சென்று மக்களின் வாழ்நிலை பார்த்து அம்மக்கள் வயல்களில் களை எடுக்கின்ற போது சலிப்பு தட்டாமல் இருக்க தான் பிறந்தநிலை> வாழ்க்கைப்பட்ட நிலையை பாடலாக பாடப்பெறுவது சான்று காணப்படுகிறது.
சிலப்பதிகாரத்தில் வழங்குறை காதைக்குப்பின் வருகின்ற ஒப்பாரிபாடலும் சான்றாக
அமைகிறது. புறநானூற்றில் கையறுநிலை (இறங்கற்பா) பாடல்களும் தமிழ் இலக்கியத்தில்
நாட்டுப்புறபாடல்கள் காணப்படுகிறது.பாரிவள்ளல் இறந்தபிறகு கபிலர் நாட்டைவிட்டு
வெளியேறி வருந்தி பாடும் பாடல்களில் அற்றைத் திங்கள்….. என்ற பாடல்களில் நமக்கு
நன்கு புலப்படுகிறது. ஆண்டாள் திருப்பாவையில் தாலாட்டு பாடலான எள்லே
இளங்கிளியே…. என்ற பாடல் நாட்டுபாபுறபாடலுக்கு மிக முக்கிய சான்று எனலாம்.
நாட்டுப்புறபாடலில் ஒரு திருத்த பதிப்பகமாக Dr.த. கனகசபை அவர்கள்
வெளியிட்டார். அதன் பிறகு 1943-44 ஆண்டுகளில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள
திருச்சிற்றம்பலம் என்ற சிற்றூறை சேர்ந்த மு. அருணாசலம் என்பவர் நாட்டுப்புறபாடல்களில்
முதன்முதலாக தொகுத்து பதிப்பிடுகிறார். அதன் பிறகு மெல்ல மெல்ல 1980களில்
கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப்புறபாடல் தனித்துறையாக விளங்கியது.
ஒரு நாட்டின் வாழ்வையும்> வரலாற்றையும் நிறைகுறையையும், நாட்டுப்புற இலக்கியம்
மிகத்தெளிவாக காட்டுகிறது. இது மக்களது உணர்வுகளையும்> கற்பனை திறனையும் பாடல்
எழுதும் ஆற்றலையும் இதில் நாம் காணலாம். தமிழில் நாட்டுப் பண்பாட்டியல் என
வழங்கப்பட்டாலும் நாட்டுப்புறவியல் என்பதே நிலைத்து நிற்கின்றது.
நாட்டுப்புறப்புற பாடல் என்பது குழந்தை பருவத்தில் பாடும் தாலாட்டு முதல் மனிதன்
இறுதிகாலத்தில் பாடும் ஒப்பாரி பாடல் வரை நாட்டுப்புற இலக்கியத்தில்
குறிப்பிடப்படுகிறது. இதில் பொருட்கள் அடிப்படையில் வரும்

  •  கழைக்கூத்து
  •  கரகாட்டம்
  •  பொய்க்கால் குதிரையாட்டம்
  •  கோலாட்டம் போன்றவை……

இசைக்கருவி அடிப்படையில்

  •  வில்லுப்பாட்டு
  •  மயிலாட்டம்
  •  காவடியாட்டம்

போன்றவை தமிழ்நாட்டில் நாட்டுப்புறபாடல்களில் காணப்படும் மிக முதன்மையான
பாடலாகும்.

நாட்டுபுறவியலில் காணப்படும் மண்பாண்டக்கலை மண்ணால் உருவம் கொடுக்கப்படும் பொருட்கள் “மட்பாண்டக்கலை” எனப்படும். இதில் கண்களுக்கு புலப்படாத சிறிய துளை அனைத்து மண் பாண்டங்களிலும் காணப்படும். மட்பாண்டக்கலை என்பது மிகவும் பழமையானது. ஏசு பிறப்பதற்குப் முன்பே பல நூற்றாண்டுகளுக்கு மொகஞ்சதாரோ ஹரப்பா ஆகிய நாகரிகத்தின மூலம் மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. மண்பாண்டம் செய்யும்போது சுற்றும் சக்கரத்தை கண்டுபிடித்ததன் மூலம் அறிவியலுக்கு முன்னோடியாக நாகரிகம் அறிந்து கொள்ள சான்றாக அமைகின்றது. தற்காலத்தில் மண்பானைகளில் நீர் வைத்து குடித்தால் அறிவியல் பூர்வமாக உடல்நலத்திற்கு நல்லது என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

நாட்டுபுறப்பாடல்களின் உவமைநயம்

காதல் நோய் பெண் மகளுக்கு மட்டன்று, ஆண் மகனும் பல மாற்றங்கள் தோன்றும் இங்கு
காதலன் காதலியை பார்த்து கூறுவது

கத்தரிக்காக் காம்பு போல……..

மேற்கண்ட கூற்று கத்தரிக்காய்க்கு காம்புக்கு உவமை கூறப்பட்டுள்ளது.இதில் கத்தரிக்காய்க்
காம்பு போன்று தோடுகளை வடிவமைத்து ஒருவகை காதணியை அணிந்திருக்கும் என்பது
தெரிய வருகிறது.

நெத்திலி வத்தல் போல
நெஞ்சுணர்ந்த செவத்தப்புள்ள

மேற்கண்ட கூற்றில் காதலிக்கு காதலனை பிரிந்து போக முடியவில்லை கால்கள் நகர
மறுக்கின்றது சிலையாக நிற்கிறாள். செல்ல மனமில்லை காதலன் காதலியைப் பார்த்து
கூறுவதாக அமைகிறது.
நாட்டுப்பாடலில் திருமண வாழ்த்து
திருமணத்தின் தம்பதிகளை வாழ்த்துவதாக பாடல் வருகிறது அதில் உவமைகள் பல
கூறப்பட்டுள்ளன.
“ஆல் போல் தழைத்து
அறுகு போல் வேரோடி
மூங்கில் போல் சுற்றம்
முறியாமல் வாழ்ந்திடுவீர்”
என்பது மணமக்களை வாழ்த்து பாடல்களையும் நாம் முன்னோர்கள் இலக்கியத்திற்கு
இணையாக பாடியுள்ளனர்
நாட்டுப்புறப்பாடல்களில் கல்வி
தன் கணவனுக்கு எழுத்தாணியைஎப்படி பிடிப்பது என்பதுகூட தெரியாது, எழுதி
கொடுத்தாலும் படிக்க தெரியாது இதை தன் கணவனை பார்த்து மனம் கசந்துபாடும் பாடல்
“ எட்டு விரல் மோதிரத்தான்
எழுத படிக்கல என் அத்தான்
எழுதாத மூடனுக்கு
எழுத்தாணி பை எதற்கு”
தன் சட்டையால் உள்ள பை அதனை எதற்கு பயனற்றது என்று கணவனைப் பார்த்தும்,
கல்வியின் சிறப்பு குறித்தும் நாட்டுப்புறபாடல் நமக்கு நன்கு விளக்குகிறது.

5 இலக்கிய தன்மைக்கு இணையான பல சான்றுகள் நாட்டுபுறப்பாடல்களில் பெரிதும்
செறிந்து காணப்படுகின்றது என்றே சான்றோர்கள் கூறும் கூற்றாகும் தற்காலத்தில்
மேடைகளில் பாடும் நாட்டுபுறப்பாடல்கள் யாவும் நாட்டுபுறப்பாடல்கள் அன்றே என்று
கூறுவர்.