Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

புறநானூற்றில் பண்பாடு விழுமியங்கள்

You are here:
  1. Home
  2. Article
  3. புறநானூற்றில் பண்பாடு விழுமியங்கள்
Kalanjiyam - International Journal of Tamil Studies

Kalanjiyam – International Journal of Tamil Studies, Volume: Pages: 6-9 : 2020

ISSN:2456-5148

புறநானூற்றில் பண்பாடு விழுமியங்கள்

முனைவர்; க.மகேசுவரி, “புறநானூற்றில் பண்பாடு விழுமியங்கள்”, Kalanjiyam – International Journal of Tamil Studies , , NGM College Library (2020): 6-9 

Abstract :

மனிதனை விலங்கினத்திலிருந்து பிரித்துக்காட்டுவது பண்பாடு ஆகும். காலம் காலமாக மனிதனால் ஆராய்ந்து தெளிந்து கற்றவைகளே பண்பாடு ஆகும். ஒருவரின் அறிவு வளர்ச்சி மற்றவர்களை ென்றடையும்போது அவனது பண்பாடும் பரந்து விரிகிறது, தமிழ் மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு போன்ற ஒழுகலாறுகளை அறிவதற்கு பண்டைய இலக்கியங்கள் உதவுகின்றன. தமிழரின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்கக்கூடிய சங்க இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்துள்ளன. எட்டுத்தொகையில் புறநானூற்றில் பண்பாடு சார்ந்த செய்திகளை ஆராய்வோம்.

Content :

பண்படு என்னும் வேர்ச்சொல்லே பண்பாடு எனக் காலப்போக்கில் மருவி விழங்குகின்றது. சங்கத் தமிழர்கள் பண்பாட்டை தன் உயிரினும் மேலாக மதித்து போற்றியுள்ளனர் அறம், ஒழுக்கம், கல்வி,
விருந்தோம்பல், பிறர்க்கு இன்னா செய்யாமை போன்ற பண்பாட்டு கூறுகளை பெரிதும் போற்றியுள்ளமையை தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றது. புறநானூற்றில் இம் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒருகடமையுண்டு என்று வலியுறுத்துவதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.

கடமையுணர்வு :

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே
நண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்த்தல் காளைக்குக் கடனே

(புறநானூறு 312)

இப்பாடல் தாய், தந்தை, தொழிலாளர், நாடாளும் மன்னர், இளைஞர் என ஒவ்வொரு வருக்குரிய கடமையினை எடுத்தியம்புகிறது. ஈகை பற்றிய புறநானூறுப் பாடலில்,

உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் ‘இனிது’ எதை
தமியர் உண்டலும் இலரே

(புறநானூறு 182)

இவ்வுலகம் அழிவுறாததற்கு நல்லவர்கள் வாழ்வதே காரணம் என்ற கருது இன்னும் பேச்சுவழக்கில் இருப்பதை அறிய முடிகிறது.

பொதுமைப்பண்பு :

உலக அமைதி வேண்டி அனைவரும் பின்பற்ற வேண்டிய
உலகளாவிய தத்துவத்தினை புறநானூறு எடுத்தியம்பிய பாடல்
“ யாதும் ஊரே, யாவரும் கேளிர் “

(புறநானூறு 192)

எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகள் வழி வெளிப்படுத்துகிறது.

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே

(புறநானூறு 189)

என்ற மேன்மையான கருத்தினை புறநானூறு பாடல் எடுத்தியம்புவதை அறிய முடிகிறது.
சேர்த்து வைத்த பெரும் பொருளைத்தான் ஒருவனே துய்ப்போம் என்று நினைப்பவர்க்குப் பல்வேறு நன்மைகள் தருவது தப்பிப்போகும் என்பதை உணர்த்துகின்றது.

நம்முன்னோர்கள் கடைப்பிடித்த வாழ்வியல் நெறிகளே பண்பாடு அவற்றை அடுத்த அடுத்த தலைமுறையினரும் அறிந்து பின்பற்றும் விதமாக இலக்கியங்களாக அமைந்துள்ளது. அவற்றின் மூலம் நாம் பண்பாட்டு விழுமியங்களை அறிய முடிகிறது.

“நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுதோர் உயற்கொடுதோரே”

(புறநானூறு 18)

“நல்லவை செய்தல் ஆற்றி ராயினம்
அல்லவ செய்தல் ஓம்புமின”

(புறநானூறு 195)

என்ற புறநானூறு வரிகள் மூலம் அறியமுடிகின்றது.

கல்வி :

நாடு வளரவும் நாட்டுமக்கள் மேன்மையடைவும் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியின் பெருமையினை எடுத்துரைக்காத அறிஞர்களே இல்லை எனலாம்.

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற
ஒளவையாரின் கருத்து கல்வியின் சிறப்பை அவசியத்தை உணர்த்துகிறது.
இக்கல்வியின் சிறப்பை

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று

(புறநானூறு 183)

என புறநானூறு பாடல் கல்விச் சிறப்பை உணர்த்துகிறது.

விருந்தோம்பல் :

புறநானூறு கல்வி, பொதுமைப்பண்புகள், கடமை போன்ற பண்பாட்டு விழுமியங்களுடன் விருந்தோம்பலையும் காட்டுகின்றது. கணவர் இருந்தால் பாணர்தம் வறுமைத்துயர் நீங்கும் அளவுக்கு வாரி வழங்குவான். பாடினிக்கு அணிய பொன்னரி மாலையினையும்

சூட்டிக்கொள்ள பொற்றா மரையும் வழங்கி மகிழ்வான், அவன் இல்லாத நேரத்தில் வந்தவர்க்கு இல்லை என்று சொல்லியனுப்ப மனமில்லை இல்லாளுக்கு, பாணரே ஊற்று நீர் தூய்மையாக சாடியிலே உள்ளது. முற்றத்தில் புறா, காடை போன்ற பறவைகளும், உண்பதற்காக சமைத்த தினைச்சோறு இருக்கிறது என் செய்வேன்? சுட்ட முயல் இறைச்சி உள்ளது அதையாவது தருகிறேன். இங்கு இருந்து உண்டு செல்வீராக
என்று இல்லத்தரசி அன்பொடு அழைப்பதை,

“முயல் சுட்டவாயினும் தருவோம் புகுந்து
ஈங்கு இருந்தீமோ முதுவாய்ப் பாண”

(புறநானூறு)
என்று ஆலங்குடிவங்கனார் எனும் புலவர் பாடுவதன் மூலம் விருந்தோம்பலை பற்றி அழகாக எடுத்துரைக்கிறது புறநானூறு.

உழைப்பின் பெருமை:

மனித வாழ்வில் எத்துணை ஒழுக்கங்கள் இருந்தாலும் பொருள் சேர்ப்பதில் மேம்பட்ட ஒழுக்கம் இருக்கவேண்டும் உழைத்துப் பெறும் பொருளையும், இயன்றளவும் பிறர் வாழக்கொடுத்து உதவுவ
வாழ்க்கையில் ஒப்பற்ற நிலைப்யாகும் எனும் இக்கருத்தை,

‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
‘ஈயேன்’ என்றால் அதனினும் இழிந்தன்று, ‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் ‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று

(புறநானூறு 204)

என்று எளிமையாக எடுத்தியம்புகிறது. பிறரிடம் பொருளை கேட்டு வாழ நினைப்பது இழிவானது தான், அதைவிட கேட்பவனுக்கு இல்லை என்போன் இழிவானவன் என்றும், இல்லாதவர்க்கு கொடுத்து  உதவுவது உயர்ந்தது தான், அதைவிட உழைக்காமல் பெறும் பொருளை வேண்டாம் என மறுப்பது உயர்வானது என்று நயமுடன் புறநானூறு உணர்த்துவதை அறியமுடிகிறது.

போர், மனிதநேயம்:

சங்க காலத்தில் மன்னர்கள் போர் செய்வதற்கென்று பண்பாட்டை பின்பற்றினர், போர் மேல் செல்ல  விரும்பும் அரசன் பகைவர் நாட்டில் உள்ள பசுக்களை கவர்ந்து வருவான் இதனை புறநானூறு, “ஆவும்

ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலவாழ் நர்க் கருங்கடனிருக்கும்
பொன் போற் புதல்வர்ப் பெறா அதீரும்
எம்பு கடிவிடுதும் நும்மரன் சேர்மின்”

(புறநானூறு 9)

எனக்குறிப்பிடுகின்றது. பசுக்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள், அந்தணர், முன்னோர்  வழிபாடு செய்வோர், புதல்வரைப் பெறாதவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்திய பின்பே போர் தொடங்குவதாக இப்பாடல் உணர்த்துவதன் மூலம் அறியமுடிகிறது.

Full Text - PDF
Full Text - PDF
BibTex
Cite

Cite:

MLA

ACM

Download PDF
Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader