Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

புறநானூறு கூறும் வாழ்த்தியல் விழுமியம்

முனைவர். ஆ. சாஜிதா பேகம்

Keywords:

Abstract:

வாழ்த்துதல் என்பது சமூகப் பண்பாட்டு உயர்வின் அடையாளமாகும். வாழ்த்தும் பண்பு தனி மனிதனைப் பண்புடையவனாக மேம்படுத்தவல்லது.அனைத்து சமூகத்தினரிடமும் வாழ்த்து மரபுகள் ாணப்படுகின்றன. மனிதர்களிடையே ஒருவரோடு ஒருவர் பழகுவதற்குரிய முகமனாக அமைகின்றன. ஓவ்வொரு இனத்திற்கும் அவ்வவ் இனத்திற்கே உரிய வாழ்த்து மரபுகள் நிலைத்துள்ளன. அவரவர் வாழும் சூழல்கள்ரூபவ் சமூகம் சார்ந்த பண்பாடு ஆகியவை வாழ்த்து மரபுகளைத் தீர்மானிக்கிறது. வாழ்த்தும் பண்பானது மனிதனைப் பணிவுத்தன்மையால் மேம்படுத்துகிற பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கிறது. பிறர் நலம் நாடியுரைக்கும் சொற்கள் வாழ்த்தின்பாற்பட்டவை. இவ்வாழ்த்து ஓரினத்தின் பண்பாடுரூபவ் பழக்கவழக்கங்களை அறிவதற்கு வழிவகுக்கின்றன. மூத்தோர் இளையோர்களுக்கு நல்ல சொற்களை ஆசியாக வழங்குதல் என்பது பண்பாகும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் காலம் கடந்தும் வாழக்கூடிய நிலம்ரூபவ் நீர்ரூபவ் தீரூபவ் வளிரூபவ் வெளி எனும் ஐம்பெரும் பொறிகளின் ஆற்றலை உணர்ந்தவன். பண்டைய கால வாழ்த்து முறையும் மானுட குலத்தைக் காக்கும் ஐம்பொறிகளைப் போல நிலைபெற்று வாழும் தன்மை கொள்ள வேண்டும் என்ற நற்சிந்தை நிரம்பியிருந்ததனை புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

தமிழர் தம் நாகரீகத்தினையும் உயர்பேரொழுக்கத்தையும்ரூபவ் தன்மானத்தையும் உலகுக்குப் பறைசாற்றும் ஆவணமாக புறநானூறு திகழ்கின்றது.இந்நூலின் மூலம் நம் முன்னோர்களின் பொருள் ஆழம் மிக்க சொற்பயன்பாட்டினை இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வாழ்த்து – சொற்பொருள் விளக்கம்:
வாழ்த்து எனும் சொல்லுக்கு பிங்கல முனிவர்
“வாழ்த்தின் பெயர் – ஆசிடைரூபவ் ஆசி”
என்று பிங்கலநிகண்டு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அபிதான சிந்தாமணியில்

“வாழ்த்து – மெய்வாழ்த்துரூபவ் இருபுற வாழ்த்து என இருவகை”
என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மதுரைத் தமிழ்ப்பேரகராதிரூபவ்

“வாழ்த்து – ஆசீர்வாதம்ரூபவ் ஒருவருக்கு நன்மை வருவதாகவெனக் கூறுவது”

என்று பொருளுரைக்கின்றது. இதன் வழி ஆயுமிடத்து தூயமனதோடு நல்ல சொற்களை ஆசியாக வழங்கும் போது அச்சொற்கள் ஆற்றல் பெறுகின்றன என்பதும் அவை நன்மையை தேடித்தரும் என்பதும் அறியலாகிறது.

இலக்கண நூல்களின் வரையறை:

தொல்காப்பியம்:
பண்டைத் தமிழ்மக்களின் வாழ்வியலை சான்றாக்கிரூபவ் உலகப் பொதுமையாக்கி மனிதநேயத்தை நாகரீக நயத்தோடு எல்லாக் காலத்திற்கும் எடுத்துரைக்கும் நூல் தொல்காப்பியம். தனிமனித ஒழுக்கநெறியைக் கட்டமைத்து வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். சொற்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை
இந்நூல் வாயிலாக அறியலாம். பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கலாற்றைக் கூறும் புறத்திணைகளுள் ஒன்றான பாடாண்திணையில் தொல்காப்பியர் பண்டையதமிழ்ப் புலவர்களின் பாக்களை முன்மொழிவதனைக் காணமுடிகின்றது.

“வழங்கிய மருங்கின் வகைபட நிலைஇம்
புரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே”

(தொல். பொருள்: புறத்: 1028)

என்ற சூத்திரத்தில் எடுத்து மொழித்துள்ளார். பண்டைச்சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே
வாழ்த்துதலுக்கும்ரூபவ் புகழ்தலுக்கும் சான்றாகும்.

புறப்பொருள் வெண்பாமாலை:
பன்னிரு திணைகளுக்கு இலக்கணம் கூறும் நூல் புறப்பொருள் வெண்பாமாலை.பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாற்றைப் பாடுூஆண் ூதிணை என்று பாடாண் திணையாக விரித்துரைக்கும் இந்நூலின் பாடாண்படலத்தில் அரசர்களிடம் பரிசிலர் பரிசில் வேண்டும் முறைஇ அரசர்களை வாழ்த்தும் முறைஇ அரசர்க்குப் புலவர்கள் அறிவுறுத்தல் இநாடாளும் மன்னனைப் போற்றுதல் இ கடவுளை வாழ்த்தும் முறை ஆகியன உரைக்கப்பட்டுள்ளன. குடிகளைப்புரக்கும் காவலனாகிய மன்னனுக்கான பண்புகளாக இவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனை

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ரூடவ்கையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத்தன்று”(கொளு.1)
என்று இந்நூல் எடுத்துரைக்கின்றது.அரசனுடைய புகழையும் இ வலிமையையும் இ கொடைத்தன்மையையும் இஅருளுடைமையையும்
அறிந்துணர இப்பாடாண்திணைப் படலம் ஏதுவாகிறது.

தண்டியலங்காரம்:
தமிழ்மொழிக்கு அணிசேர்க்கும் இலக்கணநூலாகிய தண்டியலங்காரத்தில் பெருங்காப்பியத்திற்கான இலக்கணம் உரைக்கையில்ரூபவ் வாழ்த்துக்கூறும் மரபை முதலாவதாகக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.

“பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொ ளிவற்றினெனே றேற்புடைத் தாகி”

(தண்டியலங்காரம்:க:அ)

என்ற இலக்கணத்தில் பெருங்காப்பியம் இயற்றும்போது வாழ்த்துக் கூறவேண்டும் என்பது மரபு என்பதனை அறியவியலுகிறது.

இயற்கைரூபவ் இறைவன்ரூபவ் நாடாளும் மன்னர்கள் மட்டுமல்லாது சாதாராண குடிமக்களும் வாழ்த்துப் பெறுவதற்கு உரியோர் என்பதற்கு புறநானூறு சான்று பகர்கின்றது.

புறநானூறு கூறம் வாழ்த்தும் மரபு:
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூற்றில் நாடாளும் மன்னன் புலவர் பெருமக்களால் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளான். எந்த நிலமாக இருப்பினும் ஆளுகின்ற மன்னன் நல்லவனாயிருத்தலின் அடிப்படையிலேயே அந்நாடு சிறப்பினை அடையும் என்பதனை

“நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

(புறம்: 187)

என்ற ஒளவையின் பாடல் மண்ணைக் காக்கும் மன்னவனின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகின்றது. இப்பெருவுலகினைக் காக்கும் தன்மையுடைய ஞாயிறுரூபவ் மதிரூபவ் விசும்புரூபவ் மணல் போன்ற மாற்று இல்லாத இயற்கை உண்மைகளை தனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்குரிய சொற்களாக இவ்இயற்கை மெய்ப்புகளைப் போல மன்னனும் வாழ

வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு புலவர்கள் மன்னர்களை வாழ்த்தியுள்ளனர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரஆசியூர் முடிநாகராயர்ரூபவ்

“பொற் கோட்டு இமயமும்ரூபவ் பொதியமும் போன்றே!”
(புறம்:2:24)
“நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம் போல
நீலிஇயா அத்தை நீ நிலம் மிசையானே”

என்னும் வாழ்த்துச் சொற்களில் மலை நடுக்கமற்றது; உயர்ந்தது; நிலைத்தது; அத்தகைய நிலைப்புத்தன்மையோடு மன்னன் தனது வாழ்நாளைப் பெற்று வாழ வேண்டும் என்ற உறுதிப்பாடு நிரம்பியிருப்பதனைக் காண முடிகின்றது.

ஒளிமிக்க கதிரவனும்ரூபவ் குளிர்ச்சி பொருந்திய நிலவும் மாற்று இல்லாதன. அவைகளைப் போன்று இணையற்றவனாக மன்னன் திகழவேண்டும் என்பதனை

“தண்டா ரூடவ்கைத் தகை மாண் குடுமி!
தன் கதிர் மதியம் போலவும்ரூபவ் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!”
(புறம்:6)

என்ற பாடலில் காரிக்கிழார் பாண்டிய மன்னனை வாழ்த்தியுள்ளமை புலனாகின்றது. மக்களைக் காக்கும் காவலனாகிய அன்றைய கால அரசன் நல்லாட்சி புரிந்துள்ளான் என்பதனை

“கடுவழி தொகுப்ப ரூடவ்ண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!”

(புறம்: 55)

“நெடியோன் நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!”
(புறம்: 09)
“தண் புனல் வாயில் துறையூர் முன்துறை நுண் பல மணலினும் ஏத்திரூபவ்
உண்குவம்; பெரும!”

(புறம்:136)

என்ற பாடலடிகள் மூலம் தன்னலப் போக்கற்று குடிகளைக் காப்பதற்காக எண்ணவியலாத மணலின் எண்ணிக்கை போல மன்னர்கள் நீண்ட நாள் வாழ்ந்து மக்களைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும்ரூபவ் ஏக்கமும் கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

மன்னர் தம் வீரத்தை உலகிற்கு பறைசாற்ற வாய்ப்பளிப்பவர்கள் பகைமன்னர்கள். எனவேரூபவ் அவர்களும் நெடுநாள் வாழ வேண்டும் என்று பிட்டங் கொற்றனை வடம வண்ணக்கண் தாமோதனார் பாடிய பாடலில்

“மாறுகொள் மன்னரும்ரூபவ் வாழிய நெடிதே!”
(புறம்:9)

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப்பெரியனார் வாழ்த்தும் பொழுது

“நீ வாழியம்! நின் தந்தை
தாய் வாழியர்ரூபவ் நிற் பயந்திசினோரே!”
(புறம்:137:14-15)

என்று நாஞ்சில் வள்ளுவனின் பெற்றோரை வாழ்த்துவதன் மூலம் மன்னனின் பெருமை புலனாகின்றது. புறந்தந்து சான்றோனாக்கிய கடமையை நிறைவாக்கிய தாய் தந்தையரையும் வாழ்த்தி பெருமைப்படுத்தியிருப்பதன் மூலம்ரூபவ் பெற்றோரின் கடமையை உலகுக்கு உணர்த்திய தண்டமிழ்ப் புலவர்தம் மாண்பு போற்றுதலுக்குரியதாகும்.

முடிவுரை:
சங்க இலக்கியங்களுள் ஒன்றாகிய புறநானூறு தமிழர் நாகரீகத்தைப் பறைசாற்றும் பண்பாட்டு ஆவணமாகும். நாடாண்ட மன்னர்களையும் மக்களின் வாழ்வியலையும் காலங்கடந்தும் மண்ணில் நிலைபெற்று வாழச் செய்யும் அருஞ்செயலை நம் புலவர் பெருமக்கள் ஆற்றியுள்ளனர். வாள்வீசி மன்னர்கள் பெற்ற வெற்றித்திறத்தை தமிழ்ச்சொல் வீசி புலவர்கள் நிலைபெறச் செய்துள்ளனர் என்பதனை இன்றைய தமிழ்ச்சமூகம்
அறிந்துணரத் தலைப்பட வேண்டும்.