Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்

You are here:
  1. Home
  2. Article
  3. வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்
Kalanjiyam - International Journal of Tamil Studies

Kalanjiyam – International Journal of Tamil Studies, Volume: Pages: 6-9 : 2020

ISSN:2456-5148

வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்

முனைவர். அ. லோகமாதேவி, NGM College, Pollachi, “வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்”, Kalanjiyam – International Journal of Tamil Studies , , NGM College Library (2020): 6-9 

Abstract :

இயற்கையைக்குறித்தும் அதன் அங்கங்களான தாவரங்கள் விலங்குகள் நீர்நிலைகளைக் குறித்தும் எழுதப்படாத தமிழ் இலக்கியங்களே அன்றும் இன்றும் இல்லை எனலாம். இந்த நவீன மகாபாரத நாவலும் இவ்வாறே பல்வேறுபட்ட தாவரங்களை சரியான அறிவியல் அடிப்படையில் தெரிவிக்கிறது.. பலநூறு தகவல்கள் தாவரவியல் அடிப்படையில் வெண்முரசில் சொல்லபப்ட்டிருப்பினும் இக்கட்டுரையில் மிகசிறந்த சில உதாரணங்களே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் மாமலர் எனும் பதிமூன்றாவது நாவல் வரிசையும் ஆயிரம் இதழ் கொண்ட சொளகந்திக மலரினை பீமன் தேடிக்கண்டடைவதை குறித்தே பேசுவது வெண்முரசின் இன்னொரு சிறப்பு.

Content :

நம் தமிழ்மொழியின் பல்வேறு வகை இலக்கியங்களில் வழியே.  அறம், பொருள், இன்பம், வாழவேண்டிய முறை, கலை, பண்பாடு, நாகரிகம் இயற்கை, அறிவியல் என  உலகின் பல்வேறு  வாழ்வியல் கூற்றுக்களை மிகத்தெளிவாகவே நாம்  அறிந்துகொள்ளலாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சூழல் மண்டலம் பல்உயிரி, சுற்றுச்சூழல் கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து வெகு காலம் முன்னரே நம் தமிழ் இலக்கியங்களில்  விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.   சங்க இலக்கியங்களிலும் தாவர அறிவியல் தகவல்களை பல பாடல்களிலும் விரிவாய் காணலாம்.

தாவர அறிவியல் பற்றிய செய்திகள் நவீன தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்பதை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதி வரும் வெண்முரசு நவீன நாவல் தொடரின்  சில பாகங்களிலிருந்து இந்தக்கட்டுரையில் காணலாம்.

. ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க, மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ள  எழுத்தாளர்களில் ஒருவர் ..வெண்முரசு எனும் இந்த  நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன.. 12 புத்தகங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மாமலர் எனும் 13 ஆவது தொடர் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது. தாவரங்களையும் தாவரவியலையும் குறித்து  வெண்முரசு கூறும் தகவல்கள் மற்றும் சித்தரிப்புகள் அனைத்துமே  இந்நாளைய தாவரவியல் கருத்துக்களுக்கு  மிகச்சரியாக  ஒத்தும்  சிறந்தும் விளங்குகின்றன

Bauhinia acuminata –   மந்தாரை

முதல் நூலான முதற்கனலில் பாண்டுவின் பிறப்பு நிகழும் போது அவரின் வெண்ணிற மெல்லிய குருதி வெழுத்த உடலினை –மந்தாரை மொட்டு போன்று வெளுத்துச் சிறுத்திருந்த குழந்தை என்று சொல்லப்படுகின்றது. Bauhinia acuminata   எனும் மந்தாரையின் அரும்பைக்காண்கையில் அது எத்தனை பொருத்தமான் உவமை என்பதை உணரலாம்

Mangifera indica- மாம்பூ

விதுரன் பிறந்தபோது குழந்தையைக்காண சத்யவதி வருகையில் குழந்தையின் நகங்கள் மாம்பூ போல  இருக்கிறது  என்று நினைக்கிறார் மாம்பூவின் அரும்பைப்பார்க்கையில் அதன் சின்னஞ்சிறிய அழகிய கூரிய நுனிகொண்ட வடிவத்தில் மழலையின் மென்நகங்களை காணலாம்

Datura metal-ஊமத்தை மலர்

மழைப்படல்   நூலில் திருதிராஷ்டிரனின் திருமணத்திற்காக காந்தாரம் செல்லும் விதுரன்  சகுனியை முதல்முதலாய் சந்திக்கையில்.   பிங்கலநிறமான தலைமுடி பருந்தின் இறகுகள் போல தோளில் விழுந்திருக்க செந்நிறம்பூசப்பட்ட மெல்லிய தாடியும், மிகமெல்லிய செவ்வுதடுகளும் தொடர்ந்த வில்பயிற்சியால் இறுகிய தசைகளில் நரம்புகள் ஊமத்தைப்பூவிதழின் நீலரேகைகள் போலப்பரவியிருந்ததையும் காண்கிறான்   Datura metal எனும் ஊமத்தையின் வெண்ணிற  இதழின் ஊடே செல்லும் நீலரேகைகளைக்காண்கையில் இந்த உவமானத்தின் பொருத்தம் நன்கு புலப்படும்..

Corypha taliera  -தாலிப்பனை

காந்தார குல வழக்கப்படி பூத்த பீலிப்பனையின் ஓலையில் ஈச்சமர லச்சினையுடன்  அரசகுமாரிக்கு தாலிசுருட்டவேண்டுமென்பது விதி. பாலைநிலத்தில் தாலிப்பனை மிக அரிதாகவே இருந்ததால் தேடுவதற்காக  கிளம்பிச்சென்ற இருபத்திரண்டு பெண்கள் அத்திரிகளில் பாலையில் செல்கிறார்கள். தாலிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்குமென்பதையும், அந்த மலரே மலர்களில் மிகப்பெரியதென்பதையும் அவர்கள் வழிவழியாகக் கேட்டறிந்திருந்தனர்.   பதினெட்டாவது நாள் அவகாரை என்ற பெண் ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்குகிறாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலவும். அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்தும் நின்றிருந்தன. நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்ததுகிழக்கே விரிந்த தளிர் ஓலை ஒன்றையும் மூன்று பூமடல்களையும் வெட்டி எடுத்துக்கொண்டார்கள். இந்த தாலிப்பனையின் தாவரவியல் பெயர் ” Corypha taliera  ”. இதன் சிற்றினமாகிய தாலிராவில் ”தாலி” எனும் சொல்லே இருப்பது கவனிக்கத்தகக்து.. இந்த தாலிப்பனை தாவரவியல் வகைப்பாட்டின் படி மிகச்சரியாக விவரிக்கப்பட்டிருக்கிறது

Sustainable harvesting

வண்ணக்கடல்  நூலில் சிறுவர்களான பாண்டவர்களும் கொளரவர்களும் கானாடுகையில் உணவு சமைக்கும் பொருட்டு காய்கனிகளை சேகரிக்கிறார்கள். அப்போது பீமன் எவ்வாறு அவற்றை சேகரிக்க வேண்டுமென  அறிவுறுத்துகையில், வேர்க்கிழங்குகளை பாதியும் கனிகளை மூன்றில் ஒருபங்குமே எடுக்க வெண்டும் என சொல்வது இன்று sustainable harvesting என்று தாவரவியலில் சொல்வதுதான். .அடுத்த சந்ததி வளருவதை உறுதி செய்யும் வகையிலேயே நாம் அறுவடை செய்யவெண்டுமென்ற இன்றைய கருத்து அன்றே சொல்லப்பட்டிருக்கிறது

அலையாத்திக்காடுகள்

அதே நூலில் பெருநீர்கங்கையில் மூன்று ஆறுகள் கலக்கும் இடத்தில் இருக்கும் சதுப்பு நிலங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மூச்சுக்காக  வேர்களை மண்ணுக்கு மேல் கொண்டுவந்திருக்கும். அவற்றின் சென்னிற வேர்கள் பாம்புகள் போல பின்னிஅடர்ந்து வலை போல இருப்பது விவரிக்கபப்ட்டிருக்கிறது. அலையாத்திக்காடுகள் எனப்படும்   mangrove vegetation வகை மரங்கள் வளரும்  சதுப்பு நிலத்தில் அதிக உப்புத்தன்மையில் வளரும் மரங்களின் நுண்துளைகளுள்ள சுவாச வேர்கள் மண்ணுக்கு மெல் வளர்ந்து பின்னி பிணைந்துதான் இருக்கும்.

     

Desmostachya bipinnata –தருப்பைப்புல்

வண்ணக்கடல் நூலில் அரசப்பெருநகர் பகுதியில் கொளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கல்வி துவங்கும் நாளில் வேதவடிவமான தர்ப்பையை வழிபட்டு குருநாதர்களை வணங்கி புதியகல்வியைத் தொடங்கும்  மரபு. விவரிக்கபட்டிருக்கும். தர்ப்பயின் குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விஸ்வாமித்திரம், யவை எனும் ஏழுவகைகளும் அவற்றில். குசை காசம் ஆகிய முதலிரண்டும் வேள்விக்கு உகந்தவையாகவும். தூர்வையும் விரிகியும் அமர்வதற்கும். மஞ்சம்புல் தவச்சாலையின் கூரையாக பயன்படுத்தபப்டுவதும் விஸ்வாமித்திரம் போர்க்கலை பயில்வதற்குரியது. யவை நீத்தார் கடன்களுக்குரியது என்றும் விளக்கப்பட்டிருப்பது மிகச்சரியாக தாவரவியலில் சொல்லப்பட்டிருப்பதே. Desmostachya bipinnata எனப்படும் இந்த புல்லில் பல வகைகளை தாவரவியல் இவ்வாறே வகைபப்டுதுகிறது

இயற்கையாகவே தர்ப்பை தூய்மையானது. நுனிப்பகுதி விரிந்த தர்ப்பை பெண்மைகொண்டது. எனவே மங்கலவேள்விகளுக்கு உகந்தது. அடிமுதல் நுனிவரை சீராக இருப்பது ஆண்மை திரண்டது. அக்னிஹோத்ரம் முதலிய பெருவேள்விகளுக்குரியது அது. அடிபெருத்து நுனிசிறுத்தது நபும்சகத் தன்மைகொண்டது. அது வேள்விக்குரியதல்ல.” என்பதும் அந்த புல்லில் இலையமைப்பின் வேறுபாடுகளைக்குறித்த விளக்கமாகும்  தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது. நீருக்குள் பல
நாட்கள் கிடந்தாலும் அழுகாது. சூரிய கிரகணம் ஏற்படும்போது இதன்
வீரியம் அதிகமாக இருக்கும். இதன் காற்றுபடும் இடங்களில் தொற்று
நோய்கள் வராது என்பது போன்ற தகவல்களையும் தாவரவியல் கூறுகிறது

Ficus religiosa- அரச மரம்

அரணி கடைதல்/தீக்கடைதல்’, இந்த நாவல் வரிசையில் பல இடங்களில் வேள்விகள் இயற்றுகையில் நெருப்பு உண்டாக்கும் அரணிக்கட்டையைக்குறித்து விளக்கப்பட்டிருக்கிறது மத்தைக் கொண்டு தயிரைக் கடைவதுபோல் சிறு கோலைக் கொண்டு சிறு குழிக்குள் கடைந்து தீயை உண்டாக்குவதற்குப் பெயர்தான் தீக்கடைதல். இதற்குப் பயன்படும் கோலுக்கு ‘தீக்கடைக்கோல்’என்று பெயர்

Ficus religiosa எனும் அரசமரக்கட்டைகளே இந்த அரணிக்கட்டைகள். இதன் சிற்றினமாகிய  rligiosa என்பதே இதன் ஆன்மீக முக்கியத்துவத்தை விளக்குகிறது

Terminalia arjuna -மருத மரம்

நீலம்  நாவலில்   கண்ணனின் தோழன் சாத்யகி பேருருவ நாரையின் கால்கள் என வேர் விரித்து நீருள் இறங்கி நின்ற மருதமரத்தை பற்றிக்கொண்டு நின்றுவிட்டான். என்றொரு குறிப்பு வருகிறது Terminalia Arjuna எனப்படும் இந்த மரத்தின் வேர்களை தாவரவியல்  Thick growth of   apogeotropic roots என்கிறது.அதாவது நிலத்தின் மேற்பரப்பிலும் படர்ந்து நீண்டு நாரையின்  கால்களை பரப்பினாற்போல இருக்கும் முதிய  மருதமரங்கள், இந்த மரத்தின் சிறுகிளையே அர்ஜுனனுக்கு அவனுக்குரிய மரமாக கல்விச்சாலையில் தரப்படும். இதன் சிற்றினம் அர்ஜுனா என்றிருப்பதை கவனிக்கலாம்..

 

Aphrodisiac flowers and Nyctinasty

       அதே நாவலில் ராதை கண்ணனுடனான காதலில் திளைத்திருந்த ஒரு இரவில்  நிலவொளி நீராடி பல்லாயிரம் பதக்கங்கள் அணிந்து நின்றிருந்த புங்கத்தை, ஒளிசிதறச் செண்டெனச் சிலிர்த்த வேம்பை, குளிர்கொண்டு கண்மூடித் துயின்ற வாகையைக் கடந்து ஓடியதும், கைவிரித்த இலவ இலைகள். மழைத்துளிகளையும் மலராக தேக்கிக்கொண்டதும் வேங்கைமலர்க்கொத்துகள். முகில் நீக்கி எழுந்தது முழுநிலவு. ஒளி கொண்டு சுடரானதும், வாழையிலைப்பரப்புகள். தாழைமடல் நீட்சிகள். பகன்றை பேரிலைகள். பாலைப் பூங்குலைகள். என பலவற்றை ராதை கடந்து சென்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புங்கையின் காய்கள் பதக்கங்கள் போலவே இருக்குமென்பதை புங்கமரஙகளை பார்த்தவர்கள் அனைவரும் அறிவர், மாபெரும் பசும்செண்டு போலவே இருக்கும் அல்லவா வேம்பு? வாகையை தாவரவியல்  தூங்கு வாகை என்கிறது  அவற்றின் இலைகள் மாலையில் இலைகளை ஒன்றாகச்சேர்த்து தூங்குவது போல தோன்றுவது “Nyctinasty” எனப்படும்.

 

இதே பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள  முல்லை,பரிஜாதம், அல்லி மந்தாரை, மனோரஞ்சிதம், சம்பங்கி, மணிசிகை, பூவரசு, தாழம்பூ, பிரம்மகமலம் ,மரமல்லி, நிசாகந்தி, புங்கை,வேங்கை என அனைத்து மலர்களுமெ பாலுணர்வு தூண்டும் aphrodisiac எனும் குணமுள்ளவை என்கிறது மூலிகைத்தாவரவியல்.  இந்த வரிசையில் உளள அனைத்து மலர்களுமே  scientifically proven herbal aphrodisiacs எனப்படுபவை.

Leaf arrangments

இலவ இலைகளை தாவரவியல் “palmatley compound “ என்கிறது. உள்ளங்கைகளைபோல விரிந்த கூட்டு இலையமைப்பு கொண்டது இலவம்..

பாண்டு  இறக்கும் செண்பகக்காட்டை விவரிக்கையில் செண்பகமரங்களின் இலைகள் மானின் காதைப்போல இருந்தது என்கிறது வெண்முரசு

Pandanus utilis- தாழைமலர்

பிரயாகையில் சகுனி ஓநாய் கடித்த சிகிச்சையில்  கடிபட்ட இடத்தை அறுக்கப்பயன்படுத்திய கத்தி  நெருப்பில் சுடப்பட்டதால்  சிவந்து பழுத்து தாழை மலரிதழ் போல இருக்கிறது. என வர்ணிக்கப்படுகின்றது

நல்ல பொன் மஞ்சள் நிறமுள்ள தாழையின் ஒற்றை மடல் பழுத்துச்சிவந்த வாள் எனவே தோன்றும். வாடிய மலர்போலத் தெரிந்த சதைக்கதுப்பில் கம்பியால் தொட்டபோது சகுனி இரண்டாகக் கிழிபடும் உலோகத்தகடு போல ஒலியெழுப்பி அதிர்ந்து எழுகிறாரென்னும் உவமையிலும் வாடிய மலரிதழே கூறப்பட்டிருக்கிறது

Coniferous forests-ஊசீயிலைக்காடுகள்

பால்ஹிக நாட்டின் பூரிசிரவஸ் ஒரு பயணமொன்றில் இமயத்தின் கூம்பு வடிவ மரஙகள் அடர்ந்த காடுகளை கடப்பதாக சொல்லப்பட்டிருப்பது ஊசீஇலைக்காடுகளான coniferous காடுகளே!!!

Green house .glass house cultivation

அதே பால்ஹிக நாட்டில் அரண்மனைக்கொட்டகைக்குள் கூரையின் அடியில் மரத்தொட்டிகளில் வளர்க்கபப்டும்  மலர்ச்செடிகளும் காய்கறிச்செடிகளும்  தற்போது நடைமுறையில் உள்ள green house cultivation  என்னும் வெளிப்புற தட்ப வெப்பம் பாதிக்காத வகையில் வளர்க்கப்படும் தாவரங்களையே குறிக்கிறது, அந்த மரத்தொட்டிகள் அனைதிற்கும் அடியில் சக்கரம் வைத்து தேவையான சமயத்தில் ஒளிச்சேர்க்கைக்கு வெயிலில் வைப்பதும் கூறபப்ட்டுள்ளது

Xerophytes-பாலைச்செடிகள்

சிபி நாட்டின் பாலையில்  விவரிக்கபப்டும் முள்நிறைந்த குத்துச்செடிகள்  எல்லாம் தாவரவியல் வரையறுக்கும் xerophytic plants

Calophyllum inophyllum– புன்னை மலர்கள்

இந்திர நீலத்தில் சத்யபாமா கண்ணன் திருமண நாளன்று யமுனையில் நீராடுகையில் மகரந்த பசையுடன் புன்னை மலர்கள் ஆற்று நீரில் கலந்து அவள் மேல் தேனீக்கள் போல ஒட்டிக்கொள்கிறது, புன்னை Calophyllum inophyllum எனும் மரத்தின் பொன்மஞ்சள் நிறமுள்ள ஏராளமான மகரந்தம் உள்ல மலர்களை காண்கையில் நாம் இந்தக்காட்சியின் அழகை உணரலாம்

Cyanodan dactylon-அருகம்புல்

எட்டாவது நூலான காண்டீபத்தில் யாதவ குலம்  பெருகிக்கொடே வருவதை :மழைக்கால அருகுபோல பெருகுகிறது” என்று சொல்லுவது மிகப்பொருத்தமான ஒரு தாவர அறிவியல் கூற்று.. யாதவர்கள் அருகு போல வேரோடிக்கொண்டிருப்பதைக்குறிக்கும் தகவல்கள் இவை

Economic Botany- Phoenix farinifera   

அதே நூலில் அர்ஜுனன் செளராஷ்டிரம் செல்லும் போது பெரும்பாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்டை ஓலைகளும் முள்சூழ்ந்த கரிய உடலும் கொண்ட ஈச்சை மரங்கள் அரைப்பாலை நிலங்களில் நீள்வரிசையாக நடப்பட்டிருந்தைக்காண்கிறான்.அவை. ஒன்றுடன் ஒன்று இணைத்து மூங்கில்களை கட்டி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு நடந்து சென்றே பாளைகளை சீவும்படி அமைக்கப்பட்டிருந்ததும். ஈச்சமரப்பாளைகளின் முலைநுனிகளை மெல்லச்சீவி கலங்களுக்குள் விட்டு ஊறிச் சொட்டி நிறையவைக்கப்பட்டிருந்த இன்நீரை மரமேறிகள் மரக்குடுவைகளில் சேர்த்து சகடைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் கட்டி இறக்கி அதிலிருந்து வெல்லம் படிபடியாக எட்டு பதங்களில்காய்ச்சி எடுக்கபப்டுவதும் economic botany எனப்படும் வணிக  முக்கியத்துவம் உள்ள தாவரங்களைப்பற்றிய ஒரு பிரிவில் சொல்லபப்டுவது.

Phoenix Farinifera  எனப்படும் காட்டு ஈச்சை மரம் .பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய கொத்துக்கொத்தான சிறு பழங்களைத் தரும் முள் போன்று கூரிய நுனியுடைய ஓலைகளைக் கொண்ட தென்னையை ஒத்த சிறிய மரம்

இந்த மரத்தின் வேறு பல வளரியல்புகளும் இந்த பகுதியில்  இவ்வாறு சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.. //மேட்டுநிலத்தில் நிற்கும் மரம் எப்போதும் தனித்தது. ஆழ வேர் செல்வது. காற்றை தனித்து எதிர்கொள்வதனால் நெடிதோங்கி நிற்பது. அதை நோன்பு கொண்டு நிற்கும் மரம் என்பார்கள். அதன் நீரை காய்ச்சி எடுக்கப்படும் வெல்லம் அருகர்களுக்கு உகந்தது என இவர்கள் எண்ணுகிறார்கள்.//

//“ஆறு சுவைகளும் மண்ணுக்குரியவை. மண்ணிலிருந்து இவ்வினிமையை மட்டும் வேர்களால் அள்ளித் திரட்டி நமக்களிக்கும் காஜுர் மரங்கள் அன்னையருக்கு நிகரானவை. கரிய உடலுடன் குறுகிய இலைகளுடன் காற்றென்றும் மழையென்றும் வெயிலென்றும் பாராது கருணை சுரந்து இங்கு நின்றிருக்கின்றன.”

கஜ்ஜயந்தபுரிக்கு செல்லும் பாதையெங்கும் ஈச்ச மரங்கள் நிறைந்திருந்தன. இல்லங்களின் கூரைகள் ஈச்ச ஓலைகள் முடைந்து செய்யப்பட்ட தட்டிகளால் ஆகியிருந்தன. ஈச்சமரத்தின் நார்களை பின்னி செய்யப்பட்ட கூடைகள். ஈச்சமட்டைகளால் ஆன பீடங்கள். இளையோர் அணிந்திருந்த ஆடைகள்கூட ஈச்சையோலைகளை நுணுக்கமாகக் கீறி பின்னப்பட்டிருந்தன எனும் இவ்வனைத்துக்குறிப்புகளும் அந்த மரத்தின் பல்வேரு இயல்புகளையும் பயன்களையும் எடுதுக்காட்டுகின்றது.

.  பாண்டு சிதையில் எரிக்கப்படும் முன்பு  அடுக்கி வைக்கப்பட்ட மரஙகளில்  ஆழமான குழியில் சந்தனம்,தேவதாரு ஆகிய வாசமரங்களும், அரசு, ஆல், வன்னி ஆகிய நிழல்மரங்களும் பலா, மா, அத்தி ஆகிய பழமரங்களும் செண்பகத்தின் மலர்மரமும் விறகாக அடுக்கப்பட்ட சிதை.  விவரிக்கப்படுவது. தாவரவியலின் வகைப்பாட்டியலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்க்காட்டு

Ficus carica -அத்தி மரம்- seed dispersal methods

சொல்வளர்காடு நூலில் அத்திமரத்தின் மேல் நாரைகள் அமர்ந்திருந்தன. அவற்றினூடாகவே அந்த மரங்கள் அங்கு வந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகின்றது. Ficus carica  எனும் இந்த அத்தி மரம் பறவைகளின் எச்சத்தின் வழியாகவே  பரவுகின்றன எனும் அறிவியல் உண்மையை எடுத்துக்காடுவதாகவே இந்த தகவலும் அமைகிறது

Full Text - PDF
Full Text - PDF
BibTex
Cite

Cite:

MLA

ACM

Download PDF
Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader