சூழல் தூய்மை
பாரி பறம்பு மலையைச் சிறப்பிக்க வந்த கபிலர்,
“குறத்தி மாட்டிய வறல்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கை பூஞ்சினைத் தவழும்”
என்று வரும் பாடலடிகளால் சந்தன மரம் எரிக்கப்பட்டமையும், அதனால் எழுந்த புகை வேங்கை மரத்தில் படிதலையும் குறிக்கின்றார். அன்றாடத் தேவைகளுக்கு அரிய வகை சந்தன மரங்கள் அழிக்கப்பட்ட நிலையினைக் குறிப்பால் உணர்கிறோம்.
நீர்
போர் காரணமாக எதிரி நாட்டு மன்னனின் நீர் நிலைகள் பாழ்படுத்தப்படுவது போர் நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு உள்ளது.
“ஒளிறு மருப்பின் களிறு அலர
காப்புடைய கயம் படியினை”
என்றும்,
“கடிதுறை நீர்க் களிறு படீஇ”
என்றும் கூறப்படுகின்றவற்றால் எதிரிகளின் நீர்நிலைகள் யானைகள் கொண்டு மாசுபடுத்தப்பட்ட செய்தி பெறப்படுகிறது.
இலக்கியங்களில் பிற உயிர்களுக்குத் தீங்கு தராத வண்ணம் குறிப்பிடப்படுகிறது. காரணமில்லாமல் எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது. தாவர இனங்களையும் காக்க வேண்டும். விளையாட்டிற்காகக் கூட சிறு செடியையும், தாழ்வாகக் கருதி தீங்கிழைக்கக்கூடாது.
ஆழிப்பேரலைகளைப் பற்றி சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் காமநிலையை ஆழிப்பேரலையோடு ஒப்பிட்டு நற்றிணைப் பாடலில் தலைவியின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஒரு பெண் படுகின்ற துன்பம் ஆழிப்பேரலைப் போன்றது. அதனை அமைதிப்படுத்துகின்ற ஆற்றல், தலைவனுக்கு மட்டுமே உள்ளது. இதனோடு கடற்கரைச் சோலைகளில் ஆழிப் பேரலைகளைத் தடுக்கின்ற மரங்களை வளர்த்திருக்கின்றனர். இதனால் தாழை என்று அழைக்கப்படுகின்றனர். இதற்கு ‘தாழைக்குமரி’ என மரங்களை அழைத்திருக்கின்றமை காணமுடிகிறது.
செவ்வியல் இலக்கியங்களில் சூழலியல் தொடர்பான சிந்தனைகள் அமைந்து காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் பற்றிய பார்வை பழந்தமிழரிடையே இருந்தமை கூறப்பட்டுள்ளன. தமிழர்கள் சூழல்களோடு ஒன்றி வாழ்ந்தமையையும், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துள்ளனர்.
இயற்கை
சங்க கால மக்கள் விழிப்புணர்வு இல்லாத கால கட்டங்களில் தமிழர்களின் வாழ்க்கையில் இயற்கை பிரிக்க முடியாத முறையில் வாழ்ந்துள்ளனர்.
“……………………நம் படைப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவற்கீழ
மான் உண்டு எஞ்சிய கலுழி நீரே” (ஐங்குறு.203)
சங்க கால மக்கள் இயற்கை வளமும், நீர் வளமும் நிறைந்த பகுதியாக இருந்தாலும் கலங்கிய நீரைப் பயன்படுத்தியுள்ளனர்.
பேரிடர்
இலக்கியத்தில் தங்களை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகளைக் கையாண்டுள்ளதை,
“வான்கடற் பரப்பில் தூவற்கு எஞ்சிய
………………………………………
முடவுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை”
(அகம்.10)
“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
படப்பை நின்ற முடந்தாள் புன்னை”
(அகம்.180)
கடல் நிலப்பரப்புகளில் ஆழிப் பேரலைகள் போன்ற சேதங்கள் ஏற்படாமலிருக்க புன்னை,தாழை ஞாழல் மரங்களைக் கொண்டு கடல்நீரைத் தடுத்துள்ளனதை அறியமுடிகிறது.
நிலம்
வெள்ளப்பெருக்கு ஏற்படம் போது, நிலச்சரிவுகளினால் மக்களுக்கு பாதிப்புகள் நிகழாத வண்ணம் மரங்கள் இருந்தமை,
“வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவு இன்று கிளையோடு மேல்மலை முற்றி
தளிபொழில் சாரல் ததர் மலர் தாஅய்
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
அகரு, வாழை,ஞெமை,ஆரம் இனைய
தகரமும்,ஞாழலும், தாரமும்,தாங்கி
நனிகடல் முன்னியது போலும்,தீம்நீர்
வளிவரல் வையை வரவு”
(பரி.12)
வையையில் ஆறு கடல்போல் விரைந்து வந்தாலும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட செய்திகள் இல்லை. சங்க இலக்கியங்களில் ஆற்றுப் பெருக்கு ஏற்பட்டிருந்த காலங்களிலும் உயிர்ச்சேதம் நிகழவில்லை என்பதை அறியமுடிகிறது.
காற்று
நம் சூழல்களைச் சுற்றிலும் மாசுபாடு ஏற்படுகிறது. அதனால், பழந்தமிழரிடம் காற்று மாசுபாடு இருந்தமை பட்டினப்பாலையில்,
“கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத்தெறுவின் கவின்வாடி
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
………………………………
கோள் தெங்கின் குலைவாழைக்
காய்க்கமுகின் கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் இளைஇஞ்சி”(பட்டினப்பாலை.9-19)
இப்பாடலில், தென்னை, வாழை, பாக்கு, பனைமரங்கள் போன்றவைகள் மருதநிலத்தில் காணப்பட்டிருக்கும். இவை புகைகளையும், தூசுகளையும் தடுக்கின்றவைகளாக இருந்துள்ளமையைக் காணமுடிகிறது. காற்று மாசுபாட்டினைத் தடுக்க மரங்கள் பயன்பட்டிருக்கிறது. மரங்கள் காற்றில் கலந்து வருகின்ற மாசுக்களை இலைகளால் தடுப்பதற்கு பயன்பட்டுள்ளமை அறியமுடிகிறது.
மரங்களையும், செடிகளையும், போற்றியுள்ளமையைக் காட்டிலும், உடன்பிறப்பாக எண்ணி வாழ்ந்துள்ளதை,
“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது, நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே”
(நற்றிணை.172)
இவற்றில் தலைவி தான் சிறுவயதாக இருக்கும் போது புன்னைச் செடி ஒன்றினை வளர்த்து வருகிறாள். அச்செடிக்கு நெய்கலந்த பாலினை நீராக ஊற்றி வளர்க்கிறாள். அதனால் தன் தலைவனுடன் பேசி மகிழ நாணம் கொள்வதாக அமைந்துள்ளது. இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளமை அறியமுடிகிறது. எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி வாழந்தமை அறியமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துள்ளனர். மரங்கள், நீர்,நிலம்,காற்று போன்ற இயற்கை சார்ந்த சூழல்களில் வாழ்க்கையை நடத்தியுள்ளமை போற்றற்குரியதாகும்.
REFERENCES:
- நற்றணை – புலவர் மாணிக்கனார்(உரையாசிரியர்), வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்பளக்ஸ், 141,உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
- பரிபாடல் – புலவர் மாணிக்கனார்(உரையாசிரியர்), வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்பளக்ஸ், 141,உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17
- அகநானூறு – புலவர் மாணிக்கனார்(உரையாசிரியர்) வர்த்தமானன் பதிப்பகம் ஏ.ஆர்.ஆர்.காம்பளக்ஸ் 141,உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17
- ஐங்குறுநூறு – புலவர் மாணிக்கனார்(உரையாசிரியர்), வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்பளக்ஸ், 141,உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17