கொங்கு நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளும் இன்றைய நிலையும்
Kongu Nattuppura Nigalththukalaikalum Indraiya Nilaiyum - M.SANKAR, Assistant Professor Department of Tamil, tamilsankarm@gmail.com
DOI:
https://doi.org/10.5281/Keywords:
நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், கொங்குAbstract
நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நிகழ்த்திக் காட்டும் (நடத்திக் காட்டப்படும்) வகையில் அமைந்தவை. அவை ஆடலாகவோ, பாடலாகவோ, ஆடலும் பாடலும் இணைந்ததாகவோ, ஆடல் பாடல் உரையாடலுடன் கூடியதாகவோ நிகழ்த்திக் காட்டப்படும். இதில் ஒரு கலைஞரோ பல கலைஞர்களோ பங்கு பெற்று, ஒரு சம்பவத்தையோ, கதையையோ, கருத்தையோ ஆடல் பாடல் வழி, பார்வையாளர் முன் நிகழ்த்திக் காட்டுவர். நாட்டுப் புறங்களில் நிகழ்த்திக் காட்டப்படும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை ஆட்டங்கள் பலவாகவும் ஆடப்படும் சூழல் களம் வேறு வேறாகவும் இருந்தாலும் கூட அவற்றுள் சில பொதுக் கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டால் மட்டுமே கலைகளையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை நிகழ்த்துவதற்கென்று குறிப்பிட்ட இடமோ, களமோ, அரங்கமோ கிடையாது. எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (கோயில், ஊர்மந்தை, தெருக்கள்) நிகழ்த்திக் கொள்ளும் சுதந்திரப் போக்கைக் கொண்டவையாகும். சிறுதெய்வ வழிபாடுகளின் போது எங்கெல்லாம் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கலைஞர்களும் சென்று ஆடுவார்கள். தெய்வங்களை அலங்கரித்து ஊர்வலம் வரும்போது, அதன் முன்னால் கலைஞர்கள் ஆடிச் செல்வதை நீங்களும் பார்த்திருக்கலாம். நாட்டுப்புற நிகழ்த்து கலைகளுக்கான ஆடுகளம் விரிந்த பரப்பைக் கொண்டது என்பதை இதன்வழி அறியலாம்.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.