மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் கருத்துகளைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். ஆன்மீகம்,யோகம், தத்துவம், மருத்துவம், இயற்கை, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று பல நிலைகளில் தம் பாடல் கருத்துகளை வழங்கியுள்ளனர். மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்தளித்தவர்கள் சித்தர்கள் ஆவர். சித்தர்கள் தம் பாடல்கள் மூலம் மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் பாடல்கள் மக்களுக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதாக உள்ளது.
Category: Uncategorized