பாண்டியர்களின் ஆளுமை

இந்திய தீபகற்பத்தின்  தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட  மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய  மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும்  முதற்சங்கம,; இடைச்சங்கம,;  கடைச்சங்கம்  என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள்  பாண்டியர்கள்.  இத்தகு சிறப்பு  வாய்ந்த  பாண்டியர்களின் ஆளுமையை புறப்பாடல் கொண்டு ஆய்வதாக  இக்கட்டுரை  அமைகின்றது.

சித்தர்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்

மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் கருத்துகளைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். ஆன்மீகம்,யோகம், தத்துவம், மருத்துவம், இயற்கை, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று பல நிலைகளில் தம் பாடல் கருத்துகளை வழங்கியுள்ளனர். மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்தளித்தவர்கள் சித்தர்கள்…