எயினர்கள்

எயினர்கள் வாழ்வியல் சங்ககாலம்  இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.  காரணம் அப்போது தோன்றிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய பதினெண்மேல்கணக்கு நூல்களில் காணலாகும் அக்காலச்சமூகம் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு காலத்தும் தோன்றிய இலக்கியப்படைப்புகள் அந்தந்த கால மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள். பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் போன்றனவற்றை  காலம்தாண்டியும் உணர்த்தி நிற்கும் கருவூலமாய்த் திகழ்வதேயாகும். அந்த வகையில் சங்ககாலச் சமூகத்தின் ளெிப்பாடாய்க் காணப்படும் செம்மொழி இலக்கியங்களில் காணலாகும்  எயினர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது. எயினர்கள் மணல் சார்ந்த…

சமகாலத் திறனாய்வுகள்

படைப்பிலக்கியம் என்பது வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்புகளின் விளக்கமாகும். என்ற கூற்று திறனாய்வின் இன்றியாமையை விளக்குகின்றது. ஓர் படைப்பாளனின் சிறந்த அனுபவமே படைப்பாகின்றது. அவ்வனுபவத்தின் மதிப்பினை அளவிடுவதே திறனாய்வின் நோக்கமாகும். சிறந்ததை, உயர்வனதைக் கண்டறிந்து தன்னலமற்ற முறையில் பரவலாக்குவது, அறச்சிந்தனை உணர்வினை விளக்குவது, இலக்கியத்தின் குறைநிறைகளைக் காண்பது, கலைஞனின் கூற்று – அதன் வெற்றி – அதன் தகுதி ஆகிவற்றை காண்பது, கலையினை நுண்ணறிவுக் கொண்டு உணர்த்தி  அதன் தரத்தினை மதிப்பிடுவது என்று திறனாய்விற்கான…

அள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை

சங்க இலக்கியச் சிறப்பு தமிழ்மொழியின் நீடித்த நிலைத்த தன்மைக்கு வளமும் பலமும் பொருந்திய வேராகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையுமாகப் பாடப்பட்ட சங்க இலக்கியம் அக்கால மக்களின் வாழ்வியலுடன் இரண்டக் கலந்த ஒன்றாகும். சங்கப் புலவா்கள் சமூகப் பொறுப்பு உடையவா்களாகத் திகழ்ந்தனா். அவா்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் அக்காலப் பழக்க வழக்கங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்து, தமது நுண்மான் நுழைபுலத்தையும் சமூகக் கடமையையும் வெளிப்படுத்தியுள்ளனா். ”தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக்…

நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம்

செம்மொழியான தமிழ்மொழிக்குரிய இலக்கியம் பல்வேறு வடிவங்களில் விளங்குகின்றன. அவற்றுள் நவீன இலக்கியங்கள் இன்றையக் கால சமூகத்தின் பாடுபொருளாக விளங்குகின்றன. இன்றைய சமுதாயப் பாடுபொருள்களில் ஒன்று பெண்ணியம் பற்றியக் கருத்தாக்கங்கள். பண்டைய இலக்கிய இலணக்கண நூல்களும் பெண்ணியம் பற்றிப் பேசினாலும், இன்றுதான் அவைகள் தனி இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. இன்றைய தனி இலக்கிய வகையாக விளங்குவது நான்மணிக்கடிகை. அந்நூலில் பயின்றுவரும் பெண்ணியம் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். பெண்ணியம் விளக்கம் ஆங்கிலத்தில் ‘‘Feminisam’ என்று வழங்கும் கலைச் சொல்லையே…

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலை

இருபதாம் நூற்றாண்டினை ஒரு தொழிற்புரட்சிக் காலம் என்று சொல்லலாம். சமுதாயத்தில் பெரும்பாலோராக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே. இவ்வுலகம் இயங்குவதற்கும் மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாற்றங்களுக்கும் உழைப்பின் பயனே அடிப்படையாக அமைகின்றன.. எனவே தொழிலாளர்களைச் சமுதாயச் சிற்பிகள் என்றும் சமுதாய மாற்றத்திற்குக் கிரியா ஊக்கிகள் என்றும் கூறுவர். இதனை உணர்ந்த தமிழ்க் கவிஞர்கள் உழைப்பின் பெருமையையும் உழைப்போரின் இழிநிலைமையையும் அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற அலட்சியப் போக்கினையும், உழைப்பாளர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய நல்வாழ்வையும்…

பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

முன்னுரை குழந்தைகள் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வ10ட்டும் செல்வங்கள்.  மொட்டாக அரும்பி, மலர்களாக மலர்ந்து மணம் வீசுங்கால் அந்தக் குடும்பம் குதூகலத்தில் குலுங்கும்.  சிறப்பும் மேன்மையும் அடையும்.  குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலச் சிற்பிகள்.  குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அணிகலன்கள்.  மகாகவி பாரதியும் அவரது பரந்த பார்வையில்  குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆத்மார்த்த சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களைப் பதித்துள்ளார். …

குறிஞ்சி, முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை

முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம். வேட்டையாடல்:- குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை…

ஹைக்கூ கவிதைகளில் நாட்டுப்புறவியல் கூறுகள்

முன்னுரை: நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புறம் சார்ந்த இயற்கை எழில்கள், கிராம மக்களின் வீடுகள், தெருக்கள்,மரம்,செடி, கொடிகள், குளம்,குட்டைகள், பறவைகள், அம்மக்களின் இயல்பான வாழ்க்கைப் பதிவுகளையும் கிராமப்புற மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகள், உணவு முறைகள், விளையாட்டுகள், தாலாட்டுப் பாடல் முதல் ஒப்பாரிப் பாடல் வரையிலான இன்ப – துன்ப நிகழ்ச்சிகளையும் அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஏற்படும் விரயங்கள்,அவர்களின் பேச்சு வழக்கு, திருவிழாக்கள் போன்ற அனைத்து நிலைகளிலும் அனுபவம் சார்ந்த கவிஞர்கள்…

சுவடிகளின் வகைகள்

முன்னுரை: சுவடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஓலைச்சுவடிதான். தமிழகத்தில் முன்பெல்லாம் முதியோர் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும் ஓலைச்சுவடிகள் இருக்கும். அக்காலத்தில் ஓலையில் தான் கணக்கு எழுதுவர். சுவடி என்பது எழுத்துக்கள் பதிமாறு (சுவடு) எழுதப் பெற்ற ஏடுகளில் தொகுப்பு சுவடி எனப் பெயர் பெறுகின்றது. சான்றாக, “பூ வாரடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே” – மாணிக்கவாசகர் “யாதும் சுவடு பாடாமல் ஐயாநடைகின்ற போது” -திருநாவுக்கரசர் இதில் சுவடு என்னும் சொல்…