தொன்மங்கள் (ஆலவா) தெய்வங்களைப் பற்றிய தொல் பழங்காலத்தைச் சேர்ந்த கதைகளாகும். இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொண்டு இவ்வுலகம் மட்டுமல்லாமல் கீழ் உலகங்கள், மேல் உலகங்கள் என்று பலவற்றிற்கும் ஊடுருவிச் செல்லும் நிகழ்ச்சிகளைக் கொண்டவையாகும். அவையாவும் உண்மையென்றும், புனிதமென்றும் நம்பப்பட்டு வருகின்றன. “மேலை இலக்கியங்களுக்கெல்லாம் பைபிளே மூலத்தொன்மம் (ளுழரசஉந ஆலவா) என்றும் அதிலிருந்தே இலக்கிய கருக்களும், இலக்கிய வகைகளும், பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் பெறப்பட்டன என்றும் நார்த்ராப்ஃபிரை கூறுவார்”. சங்கப்பாடல்கள் பல தொன்மக்கருத்துகளைக் கொண்டுள்ளன. அவ்வகையில் தொன்மங்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளமையைச் சுட்டுவதே இவண் நோக்கம்.
Category: Uncategorized