முனைவர் தோ. கிரேசி

மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம்.

முனைவர் ப.மகேஸ்வரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை 18.

தொன்மங்கள் (ஆலவா) தெய்வங்களைப் பற்றிய தொல் பழங்காலத்தைச் சேர்ந்த கதைகளாகும். இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொண்டு இவ்வுலகம் மட்டுமல்லாமல் கீழ் உலகங்கள், மேல் உலகங்கள் என்று பலவற்றிற்கும் ஊடுருவிச் செல்லும் நிகழ்ச்சிகளைக் கொண்டவையாகும். அவையாவும் உண்மையென்றும், புனிதமென்றும் நம்பப்பட்டு வருகின்றன. “மேலை இலக்கியங்களுக்கெல்லாம் பைபிளே மூலத்தொன்மம் (ளுழரசஉந ஆலவா) என்றும் அதிலிருந்தே இலக்கிய கருக்களும், இலக்கிய வகைகளும், பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் பெறப்பட்டன என்றும் நார்த்ராப்ஃபிரை கூறுவார்”. சங்கப்பாடல்கள் பல தொன்மக்கருத்துகளைக் கொண்டுள்ளன. அவ்வகையில் தொன்மங்கள் புறநானூற்றில்…