சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ – விஞ்ஞான நுட்பங்கள்!
சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன. இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். “வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது…