சுருக்கச்சொற்றொடர்களின் சுவாரசியம்

கற்றல் என்பது குழந்தைகளின் இயல்பான செயல். பள்ளி வகுப்பறையில் ஆசிரியரின் முக்கிய கடமை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்துரைப்பதே ஆகும். அவ்வாறு கூறிய கருத்துக்களை மாணவர்கள் மனதில் எளிதாக இருத்தி வைக்க நாம் கையாளும் யுத்திகள் பல உள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கு ஒரு கருத்தை நேரடியாக சொல்லிவிடுவதால் புரிதல் கடினமாக இருக்கும். அறிஞர் அண்ணா சொன்ன தத்துவம் மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்கள் அறிந்தவற்றில் இருந்து…