இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த, மொழியாகும். உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது.

தமிழ் மொழி தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மையெனப் பலவகை சிறப்புகளை ஒருங்கேயுடையது.

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது உள்நாட்டிலும் மற்றும் வௌிநாட்டிலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்தத் தமிழில் தரமான சர்வதேசஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு களஞ்சியம் (Kalanjiyam) சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (International Journal of Tamil Studies) E-ISSN: 2456-5148. தொடங்கப்பட்டுள்ளது.

எமது ஆய்விதழில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கட்டுரைகள் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பங்களிப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நோக்கம்

ஓராண்டிற்கு இருமுறை இருமொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வெளிவரும் தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் தமிழ் வளர்ச்சியின் நவீன முன்னேற்றங்களை அனைவரும் மதிப்பிட்டு புரிந்து கொள்ள உதவுவது இதன் நோக்கமாகும். இவ்விதழானது தமிழ்மொழி மற்றும் இலக்கிய கலாச்சாரம், நாட்டுப்புறக்கலை, கோயிற்கலை, சித்த மருத்துவம், மொழியியல், திறனாய்வு, தமிழிலக்கிய படைப்புகள், உளவியல், பெண்ணியம், ஒப்பியல் நோக்கு, உலகளாவிய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்ற தமிழ் சார்ந்த பிற தளங்களையும் நோக்கும் விதமாய் அமைந்துள்ளது.

அழைப்பு

பேராளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நேர்த்தியான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

திறந்தநிலை அணுகல் அறிக்கை

திறந்தநிலை அணுகல் முறை சார்ந்த கொள்கைகளின் படி எமது சஞ்சிகை வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிரக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், விநியோகிக்கவும், அச்சிடவும் மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

உரிமம்

எமது சஞ்சிகை சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களைத் தகுந்த குறிப்பு முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

பதிப்புரிமை

கட்டுரையாளரிடம் உரிம மாற்று படிவம் பெற்று காப்புரிமையைச் சஞ்சிகையே பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்திச் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால் அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.

UGC CARE

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி படைப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளின் நிலைப்பாட்டைத் தரப்படுத்தும் விதமாக 28.11.2018 அன்று “கன்சார்ட்டியம் ஃபார் அகடமிக் அண்டு ரிசர்ச் எத்திக்ஸ்”; (சிஎஆர்இ-UGC) என்ற அமைப்பை நிறுவியது. யுஜிசி (சிஎஆர்இ)ன் குறிக்கோள்கள்:

  • இந்திய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆய்வுத்தரம், ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் நம்பகமான பதிப்பு முறைகளை நம்பகத்தன்மைக்கு உறுதிப்படுத்த அடிகோலுகிறது.
  • உலக தரத்திற்கு தரமான படைப்புகள் தரமான ஆய்வு இதழ்களில் பதிப்பு செய்ய வழிவகுக்கிறது.
  • உண்மைத்தன்மையுள்ள ஆய்விதழ்களை இனங்காண வழிவகுக்கிறது.
  • இந்திய ஆராய்ச்சி களத்தில் கொள்ளை அடிக்கும், தரமான ஆய்விதழ்களை ஒத்ததுபோல இயங்கும் தரம் குறைந்த இதழ்கள் மற்றும் பதிப்பகங்களை முறியடித்தல்.
  • கல்வி மற்றும் பணி சார்ந்த முன்னேற்ற தளங்களுக்காகப் ஆய்வுப் பதிப்புகளைச் செய்ய தரமான சிஎஆர்இ (CARE) பட்டியல் தருவது.

The Tamil language is widely regarded as one of the most beautiful and eloquent literary languages in the world, with a rich history spanning over 2,500 years. While Tamil may not be the most widely spoken language in the world, it is a language that is unparalleled in its beauty and complexity. Renowned Tamil scholar Nja Devaneyapavanar describes Tamil as possessing a multitude of unique and exceptional qualities, including simplicity, elegance, youthfulness, gracefulness, maternal warmth, purity, perfection, grandeur, importance, sweetness, individuality, greatness, holiness, beauty and soulfulness.

The Tamil language has been a major focus of study and appreciation both within India and across the globe, with many universities and institutions devoting significant resources to its study and promotion. In recent years, there has been a growing need for Tamil-language research publications that are accessible to scholars and researchers worldwide. To fill this void, the international Tamil research journal (E-ISSN: 2582-1113) has been established, dedicated to providing high-quality, open-access research articles covering a wide range of Tamil-related topics. These articles will be freely available to all interested readers, regardless of location or affiliation.

It is kindly requested for researchers to provide their contribution.

Aims and Scope

The focus of this Tamil language and literature research journal, published biannually in two languages (Tamil and English), is to help everyone understand and appreciate the latest developments in Tamil language growth. With an emphasis on Tamil language and literature, cultural studies, folk arts, dance, Siddha medicine, linguistics, research, Tamil literary history, agriculture, women’s studies, comparative studies, and translation of world literature into Tamil, this journal comprehensively investigates various aspects of Tamil language and its related fields.

Call for Papers

Research articles of scholars, researchers, writers, and Tamil enthusiasts are being published online. All research articles are uploaded and made available on the website, having been through the process of scrutiny.

Open Access Policy

According to the Open Access Policy, our readers are authorized to seek, read, save, duplicate, distribute, and link to our articles in a responsible manner.

License

Our content is licensed under the Creative Commons Attribution 4.0 International License (CC BY 4.0) by Creative Commons organization. This license enables users to use and distribute our content with attribution, as well as make modifications and create derivative works.

Copyrights

The author can obtain copyright protection by obtaining a registration certificate and safeguarding it. If publishers misuse it by using it in the wrong way, the editor of the publication won’t stand by and watch it happening without creating issues.

UGC Care

The establishment of the Consortium for Academic and Research Ethics (CARE) by the University Grants Commission (UGC) on November 28, 2018, aims to ensure the quality of research and publications in academic and research-related fields within India. It is particularly relevant for Indian colleges and universities, as CARE focuses on promoting reliable research practices and dependable publishing standards. The UGC CARE list encourages the publication of research papers that meet global standards, particularly those appearing in the Tamil Research Journal. In addition, CARE aims to limit low-quality papers and publications in Indian research fields by prioritizing high-quality papers and publication sources. Hence, CARE’s mission is to promote reliable research practices in academic and professional platforms, particularly in the fields of education and employment, and to encourage publishing research papers that meet the UGC CARE list standards.