உவா நாள்
ந.தமிழரசி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை முனைவர் ஆ.மகாலட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
Keywords:
உவா, பௌரணை, மதி, பஞ்சாங்கம், நெய்தல், காருவா வெள்ளுவாAbstract
மனிதன் இயற்கையை நேசித்து அதனோடு ஒட்டி வாழ்ந்த காலமே சங்க இலக்கியக் காலமாகும். சங்கப் புலவர்கள் உலகத்தின் தோற்றத்தையும், அதன் இயக்கத்தையும் கூறும் அறிவுடையவர்களாகத் திகழ்ந்தனர். சிறந்த வானியலறிவும் கோள்கள் பற்றிய அறிவும் கொண்டிருந்தனர். ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம் என்றும் அவற்றை இறையாக எண்ணி வழிபட்டும் வந்தனர். இதில் திங்கள் வழிபாடான உவா நாளும் ஒன்று. திங்களைப் பாடாத இலக்கியங்களோ புலவர்களோ இல்லையென்று கூறலாம். திங்களைக் குழந்தையாக, கடவுளாக, தூது செல்லும் பொருளாக எனப் பலவாறு போற்றிப் பாடியுள்ளனர். பண்டைய தமிழர்கள் தாங்கள் வாழும் இருப்பிடங்களில் நிலா முற்றம் அமைத்து நிலவின் பயனைப் பெற்றனர். திங்களானது மனிதர்களின் மனதோடு தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த வழிபாடானது மக்கள் அறுவடை நாள் முடிந்து ஓய்வு எடுக்கும் போது கொண்டாடப்படுவதாக அமைந்தது. சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை வரும் அனைத்து பௌர்ணமி நாட்களும் இறைவனுக்கு உகந்த நாளாகக் கருதி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏதேனும் ஒரு வகையில் இயற்கை வழிபாடும், விழாக்களும் இன்று வரை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மருத நிலத்தில் இந்திர வழிபாடாக இருந்து பின்பு ஆரியர்களின் கலப்பால் நெய்தல் நில வழிபாடாக மாறியது. இவ்வழிபாட்டின் நோக்கமானது நிலவைப் போற்றி வணங்குவதும் இயற்கையைப் பாதுகாப்பதுமே ஆகும். பண்டைய தமிழர் நிலவின் ஒவ்வொரு வடிவத்தையும் கண்டு கடவுளாகப் போற்றி வழிபட்டனர். சங்க இலக்கியப் பாடல்களில் பெண்கள் பிறை கண்டு தொழுததற்கான சான்றாதாரங்கள் உள்ளன. திங்கள் வழிபாடு என்பது குறிப்பிட்ட மதத்தவருக்கோ இனத்தவருக்கோ இல்லாமல் அனைத்து மக்களுக்குமான பொது வழிபாடாக இன்றுவரை அமைந்துள்ளது என்பது மிகச் சிறப்பாகும். உவா எனும் சொல்லானது முழுமதி நாளைக் குறித்தது. முழுமதி நாளுக்கு முன் உள்ள நிலைகளைப் பிறை என்ற சொல்லால் வழங்கினர். தற்போது இந்த இரண்டையும் விடுத்து பௌர்ணமி, அமாவாசை என்ற சொல்லானது புழக்கத்தில் உள்ளது. உவா நாள் என்ற வார்த்தையை தற்போது மலையாளத்தில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். கருத்த உவா என்பது அமாவாசையாகவும், வெளுத்த உவா என்பது பௌர்ணமியாகவும் மலையாள மொழியில் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் உவா என்ற சொல் பற்றியும் அச்சொல்லை பயன்படுத்திய சூழலைப் பற்றியும், உவா நாளின் சிறப்புப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்பட உள்ளது
Downloads
References
சுப்பிரமணியன்,ச.வே,முனைவர்.(ப.ஆ).மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 108, இரண்டாம் பதிப்பு -2009.
செயபால், இரா,முனைவர். (உ.ஆ) அகநானூறு மூலமும் உரையும் இரண்டாம் பகுதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600098, நான்காம் பதிப்பு -2013.
துரை இராசாராம் புலவர், முனைவர், (உ.ஆ), குறுந்தொகை தெளிவுரை, திருமகள் நிலையம், சென்னை 600 017, மூன்றாம் பதிப்பு - 2011.
நாகராஜன்,வி,முனைவர்.(உ.ஆ), பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600 098, முதற்பதிப்பு - 2004.
பாலசுப்பிரமணியன்,கு,வெ.(உ.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 600 098, முதற்பதிப்பு -2004.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி முதல் பாகம், சந்தியா பதிப்பகம், சென்னை – 600 083, முதற்பதிப்பு – 2004.
வாழ்வியல் களஞ்சியம்- தொகுதி ஒன்று, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், இரண்டாம் பதிப்பு – 1991.
ஸ்ரீசந்திரன்.ஜெ. சிலப்பதிகாரம் மூலமும் உரையும்,வர்த்தமானர் பதிப்பகம், சென்னை -600 017, நான்காம் பதிப்பு - 1996.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.