அம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்

முன்னுரை 1966- ஆம் ஆண்டு வெளியான தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் புதினம் அன்றைய காலத்தின் ஆசாரங்களைப் பின்பற்றும் அந்தணக் குடும்பமொன்றில் நடைபெறும் வித்தியாசமான  வாழ்வியலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமூக கட்டுகளை உடைத்தெறிந்து விட்டு நுட்பமான பார்வையில் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் நிலையில்  புதினம் அமைந்துள்ளது. ஒளிவு மறைவின்றி கதாபாத்திரங்களின் மனநிலைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு புதினம் வெளிவந்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட பிற…

தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்

கவிதை என்பது ‘வாழ்வின் விமர்சனம்‘ என்பர் மாத்யூ அர்னால்டு. மனிதத்தைப் பாடுவதும் அவனின் மறுமலர்ச்சிக்குத் துணை செய்வதும்தான் கவிதை. தான் வாழும் காலத்தில் தன்னைக் கடந்து சென்ற நிகழ்வுகளையும் பட்டறிவினால் உணர்ந்ததைப் பிறருக்கு உணர்த்தும் வகையிலும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். சமுதாய சீர்கேடுகளானது ஒழிக்கப்பட்டு அக்கேடு மீண்டும் உருவாகாமல் இருப்பதில் கவிஞர்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. கவிஞனின் இதயக் கருவறையில் தோன்றுவது கவிதை. தன் வாழ்வியல் அனுபவங்களுக்கு உயிர்கொடுத்து கவிஞன் கவிதையைப் படைக்கிறான். “கவிதைகள் அனைத்தும்…

நாட்டுப்புறக்கலைகளில் நிகழ்த்துக்கலைகள்

முன்னுரை நாட்டுப்புறக்கலைகளுள் சிறந்த இடத்தைப் பெறுவன நிகழ்த்துக்கலைகளாகும். திருவிழாக்காலங்களின் போதோ அல்லது சுபநிகழ்ச்சிகளின் போதோ நிகழ்த்துப்படுகின்ற கலையாதலால் இது ‘நிகழ்த்துக்கலை’ எனப்பெயர்பெறுகின்றது. நிகழ்த்துக்கலை மக்களின் முன் நிகழ்த்திக்காட்டப்படுவதால் இது நிகழ்த்துக்கலை எனப் பெயர் பெற்றன. நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் என்னும் சொற்றொடர் ‘Folk Performing Art’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாகக் காட்சிதருகிறது. இச்சொற்றொடரில் முக்கியமான நிகழ்த்துதல் என்பது ஏனையவற்றை உள்ளடக்கி நிற்பதை நம்மால் உய்த்து உணரமுடிகிறது. நாம் நடத்துகின்ற நிகழ்த்துதல் அழகு உடையதாகவும், நம்முடைய…

ஒப்பாரியும் பெண்களும்

முன்னுரை : ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது. வாய்மொழி இலக்கிய வடிவங்களில் ஒன்று பாட்டு இலக்கியமாகும். பாட்டு என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை நிற்கின்றது. தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறு நிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பாää சாவுப்பாட்டு, இழிவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர். ஒப்பாரி என்பது பெண்களுக்கே உரிய வழக்காற்று வடிவமாக உள்ளது. ஒப்பாரி பாடல்கள் இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றிப் பாடப்படுகிறது. ஒப்பாரி – சொற்பொருள்…

மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும்

உலகில் சிந்தனையாலும் பண்பாட்டாலும் வளர்ச்சியடைந்த  தொல்குடி தமிழ்ச்சமூகம். இதற்கு இரண்டாயிரமாண்டு கால சிந்தனை மரபு உண்டு. வாழ்தல் சார்ந்த, உழைப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாக்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான  பனுவல்களே தக்கச் சான்றாக அமைகின்றன. அந்த வகையில் தமிழரின் மழை சார்ந்த பகுத்தறிவு சிந்தனை எப்படி கருத்துமுதல்வாதச் சிந்தனைக்குச் சென்றது அதற்கான சமூகக் காரணங்களை இலக்கியத்தில் இருந்ததும் சமூக அரசியல்…

புறநானூற்றில் வானவியல் செய்திகள்

முன்னுரை இலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது. ஐம்பூதங்கள் இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை , மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசம்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும்…

ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி”

மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு…

பாரதியின் ஆன்மீக நாத்திகம்

ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி – பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் – இப்படியெல்லாம் பார்க்கும் போது…

வைணவ சமய நெறிமுறைகள்

வைணவ சமயம் விவை முழூமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம்  இந்து  சமயத்தின் ஆறு  உட்பிரிவுகளில் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும்போது விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக்கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.ஆனால் திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கன மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் ஆகும். அதே போல் உபநிதடங்கள் 14-ம் சிறப்பாகப் பேசப்படுகிறது..