வேளாண்மையின் வரலாறும் போக்கும்

வேளாண்மைத்தொழில் உலகில் தனிப்பெரும் தொழிலாக, உயிர்காக்கும் ஒப்புயர்வற்றதாகத் திகழ்கிறது. வேளாண்மை ஒரு வாழ்க்கை முறையாக ஆரம்பித்து இன்று ஒரு வணிகரீதியான தொழிலாக வளர்ந்துள்ளது. நம் நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மாறிவரும் தட்பவெப்பநிலை, நிலவளக்குறைவு, நீர்வளக்குறைவு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற காரணங்களை உற்றுப்பார்த்தால் நம்முடைய பொறுப்பு முக்கியமாக உள்ளது. வேளாண்மையில் விதைத்தேர்வு, உழவுக்கருவிகள், பருவத்தே விதைப்பு, களைக்கட்டுப்பாடு, நீர் ப்பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப்பின் தானியசேமிப்பு ஆகிய உத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் தீநுண்மிக் (கொரோனா) காலக்கட்டத்தில் செயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மீண்டும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவ்வகையில் இயற்கை வேளாண்மை பற்றிச் சுட்டுவது இவண் நோக்கமாக அமைகின்றது.

வேளாண்குடி வரலாறும் அடையாளமும்

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி” என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடிகள், தமிழின வேளாண்குடிகளின் தோற்றத்தை, தொன்மையை புலப்படுத்தும். வேளாண்குடிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்திற்கேற்ப பண்பாட்டையும், வாழ்க்கைச் சூழலையும் அமைத்துக் கொண்டனர்.

வேளாண் – வேள் ஆள் எனப் பிரித்து ‘வேள்’ என்பது ‘மண்’ எனும் பொருளையும், ‘ஆள்’ என்பது ‘ஆளுதல்’ எனும் பொருளையும் தருகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த மருதநிலத்து மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையிலேயே வாழ்ந்து இயற்கையில் கிடைக்கக் கூடியப் பொருள்களை உண்டு தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்து வந்தான். நாளடைவில் உணவின் தேவை கருதி ஆற்றுப் படுக்கையில் நெல்லை பயிரிட்டு வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு மருதநில மக்கள் ஆற்றங்கரை நாகரிகத்தை தோற்றுவித்த நாகரிகத்தின் வளர்ச்சியே ஊர், மூதூர், பேரூர், சேரி, நகரம், நாடு, ஞாலம், மாஞாலம் எனப் பரந்துபட்டு ‘ஒரு குடையின் கீழ் மல்லன் மா ஞாலாமாக’ பன்னெடுங்காலமாக இருந்து வருவது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மையே. அந்த வகையில் வேளாண் குடிகளின் வரலாற்றையும் அடையாளத்தையும் இன்றைய உலகிற்கு வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்

இயற்கையைக்குறித்தும் அதன் அங்கங்களான தாவரங்கள் விலங்குகள் நீர்நிலைகளைக் குறித்தும் எழுதப்படாத தமிழ் இலக்கியங்களே அன்றும் இன்றும் இல்லை எனலாம். இந்த நவீன மகாபாரத நாவலும் இவ்வாறே பல்வேறுபட்ட தாவரங்களை சரியான அறிவியல் அடிப்படையில் தெரிவிக்கிறது.. பலநூறு தகவல்கள் தாவரவியல் அடிப்படையில் வெண்முரசில் சொல்லபப்ட்டிருப்பினும் இக்கட்டுரையில் மிகசிறந்த சில உதாரணங்களே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் மாமலர் எனும் பதிமூன்றாவது நாவல் வரிசையும் ஆயிரம் இதழ் கொண்ட சொளகந்திக மலரினை பீமன் தேடிக்கண்டடைவதை குறித்தே பேசுவது வெண்முரசின் இன்னொரு சிறப்பு.

வாணிதாசனின் குழந்தை இலக்கியம்

குழந்தைகளுக்குக் கற்பிக்கும் எளிய வழியே குழந்தை இலக்கியம். குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள் என வாய் அளவில் மட்டுமே பேசப்படுகின்றது. அதற்கான செயல் வீட்டிலும் இல்லை நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்.ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தை கருவுற்றிருக்கும்12 வாரத்திலேயே குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என அறிவியல் தெரிவிக்கிறது. ஆக குழந்தைக்கு முதலில் திறக்கும் மடல் காது மடல் என்பதால் குழந்தை கருவிலேயே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகின்றது. அதனாலேயே தாய் கருவுற்றபோது நல்ல செயல் செய்யவும், நற்சிந்தனையுடன் இருக்க வேண்டும் எனவும்;, பொறனி அதாவது பொறாமை பேசுபவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது எனவும் நாம் உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ண வேண்டும் எனவும் சொல்வதற்கான காரணம் குழந்தை கருவிலேயே கற்றுக்கொள்கிறது என்பதாலே தான்.

வளையாபதி காப்பியத்தில் உளவியல்

மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை உடல் மொழியாக வெளிப்படுத்துவது உளவியல். தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் வாயிலாக உளவியலை பற்றி விளக்கியுள்ளார். உளவியல் (psychology) என்னும் கிரேக்க சொல் ‘ஸைக்கி’ (Psyche)என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும் ‘லோகஸ்’ (Logus) என்ற அறிவியலை (Science) குறிக்கும் சொல்லையும் மூலமாக மூலமாக கொண்டுஉருவாக்கப்பட்ட சொல்லாகும்.தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியம் சமண சமயத்தைச் சேர்ந்த காப்பியமாகும்.இக்காப்பியம் சமண சமயத்தைச் சார்ந்தது.சமண சமயக் கோட்பாடுகளை விளக்கக் கூடியதாக இக்காப்பியம் திகழ்கிறது.இக்காப்பியம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை,72 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.வளையாபதியின் காலம் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு என அறிஞர்களின் கருத்தாகும்.வளையாபதி காப்பியத்தில் உள்ள உளவியல் சிந்தனைகளை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருண்மையியல் அணுகுமுறையில் வேற்றுமை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகியவற்றைக் கற்பித்தல்

தமிழ் இலக்கண இலக்கியம் கற்பித்தற் பயன் சிறக்கவும் நடைப் பிழை தவிர்க்கவும் பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாவதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கூறின் பொருளையும் சூழல் நோக்கி முறையாகப் கருத்துணர்ந்து தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் என்பது பொருண்மையியல் அணுகுமுறையின் அடிப்படைக் கொள்கையாகும்.
முதல் வகுப்பிலிருந்து பள்ளிகளிலும், பட்டப் படிப்பு வரை கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடம் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதோடு தமிழ் முதன்மைப் பாட வகுப்புகளிலும் மாணவர்கள் இலக்கணம் கற்பதோடு கட்டுரைப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். நல்ல தமிழ் எழுத அறிவுறுத்தும் நூல்களும் இயற்றப்படுகின்றன. இருப்பினும், இக்காலத் தமிழில் அனைத்துப் பயன்பாட்டிலும் முனைவர் பட்ட ஆய்வேடுகள் சிலவற்றிலும் ஒற்று மற்றும் தொடர்ப் பிழைகள் நேர்கின்றன. இலக்கண விதிகளை முறையாக அறியாமையாலும், பிழை நேரக்கூடாது என்னும் எச்சரிக்கை / விழுமிய உணர்வு இன்மையானும் இத்தகைய பிழைகள் வாய்க்கின்றன. இவை மொழி வளர்ச்சியையும் புரிதிறனையும் பாதிப்பதுடன் மரபையும் குலைப்பதால் ஆசிரியர்களும் அறிஞர்களும் பிழை தவிர்ப்பை வலியுறுத்துகின்றனர். இலக்கணக் கல்வியில் பிழை ஆய்வு வளர்ந்துவரும் துறையாகும். இத்தகைய மொழி வழக்காற்றுச் சிக்கலை எதிர்கொள்ளப் பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாவதைக் கற்பித்தலிலும் ஆய்விலும் அறிந்ததால் பட்டறிவுப் பகிர்வாகவும் வேணவாவாகவும் இக் கட்டுரை பயன்பாட்டு நோக்கில் அமைக்கப்படுகின்றது.

புறநானூற்றில் பண்பாடு விழுமியங்கள்

மனிதனை விலங்கினத்திலிருந்து பிரித்துக்காட்டுவது பண்பாடு ஆகும். காலம் காலமாக மனிதனால் ஆராய்ந்து தெளிந்து கற்றவைகளே பண்பாடு ஆகும். ஒருவரின் அறிவு வளர்ச்சி மற்றவர்களை ென்றடையும்போது அவனது பண்பாடும் பரந்து விரிகிறது, தமிழ் மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு போன்ற ஒழுகலாறுகளை அறிவதற்கு பண்டைய இலக்கியங்கள் உதவுகின்றன. தமிழரின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்கக்கூடிய சங்க இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்துள்ளன. எட்டுத்தொகையில் புறநானூற்றில் பண்பாடு சார்ந்த செய்திகளை ஆராய்வோம்.

புறநானூற்றில் கல்வெட்டுகள் வழி அறியலாகும் ஊர்கள்

தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு ஆகும். இந்நூலில் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கணவொழுக்கமும் இலக்கியச்செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும் சீரிய நாகரிகப்பண்பாட்டையும் பல்வேறு ஊர்களின் பழைமயையும் விளக்கி நிற்கின்றன. தமிழக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை காலவாரியான பகுப்பு, சான்றுவாரியான பகுப்பு எனப் பிரிப்பர். கே.ஏ. நீலகண்டசாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாறு என்ற நூலில் கல்வெட்டுகளே இந்திய வரலாற்றிற்குக் குறிப்பாகத் தென்னிந்திய வரலாற்றிற்கான வளமிக்க நம்பகமான சான்றுகளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். நடுகல் வடிவில் அமைந்த கல்வெட்டுக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. புறநானூற்றில் கல்வெட்டுகள் வழியாக அறியலாகும் ஊர்களைச் சுட்டுவதே இவண் நோக்கம்.

புறநானூற்றில் அறம்

தொல்காப்பியர் காலத்தற்கு முன்பு இலக்கிய வகைகளை அகம், புறம் எனப் பிரித்தனர். அகவொழுக்கம் என்பது வீட்டு வாழ்க்கையைக் குறித்தும் புறவொழுக்கம் என்பது நாட்டு வாழ்க்கையைக் குறித்தும் அமையப்பெறுகின்றது. புறம் என்ற சொல்லுக்கு வெளியிடம்; அன்னியம்; புறத்திணை; வீரம்; பக்கம்> முதுகு; பின்புறம்; இடம்; இறையிலி நிலம் போன்ற பல பொருள்கள் உள்ளன. வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்கும்;  குறிக்கோள்களை அடைவதற்கும், எடுத்த நோக்கங்களை வெற்றி பெறச் செய்வதற்கும் புறநானூற்றுப் பாடல்கள் துணைசெய்கின்றன. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் நிறைந்து
காணப்படுகின்றன. அதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புறநானூறு கூறும் வாழ்த்தியல் விழுமியம்

வாழ்த்துதல் என்பது சமூகப் பண்பாட்டு உயர்வின் அடையாளமாகும். வாழ்த்தும் பண்பு தனி மனிதனைப்
பண்புடையவனாக மேம்படுத்தவல்லது.அனைத்து சமூகத்தினரிடமும் வாழ்த்து மரபுகள் ாணப்படுகின்றன. மனிதர்களிடையே ஒருவரோடு ஒருவர் பழகுவதற்குரிய முகமனாக அமைகின்றன.

ஓவ்வொரு இனத்திற்கும் அவ்வவ் இனத்திற்கே உரிய வாழ்த்து மரபுகள் நிலைத்துள்ளன. அவரவர் வாழும்
சூழல்கள்ரூபவ் சமூகம் சார்ந்த பண்பாடு ஆகியவை வாழ்த்து மரபுகளைத் தீர்மானிக்கிறது. வாழ்த்தும் பண்பானது மனிதனைப் பணிவுத்தன்மையால் மேம்படுத்துகிற பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கிறது. பிறர் நலம் நாடியுரைக்கும் சொற்கள் வாழ்த்தின்பாற்பட்டவை. இவ்வாழ்த்து ஓரினத்தின் பண்பாடுரூபவ் பழக்கவழக்கங்களை அறிவதற்கு வழிவகுக்கின்றன.

மூத்தோர் இளையோர்களுக்கு நல்ல சொற்களை ஆசியாக வழங்குதல் என்பது பண்பாகும். இயற்கையோடு
இணைந்து வாழ்ந்த மனிதன் காலம் கடந்தும் வாழக்கூடிய நிலம்ரூபவ் நீர்ரூபவ் தீரூபவ் வளிரூபவ் வெளி எனும் ஐம்பெரும் பொறிகளின் ஆற்றலை உணர்ந்தவன். பண்டைய கால வாழ்த்து முறையும் மானுட குலத்தைக் காக்கும் ஐம்பொறிகளைப் போல நிலைபெற்று வாழும் தன்மை கொள்ள வேண்டும் என்ற நற்சிந்தை நிரம்பியிருந்ததனை புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் வாயிலாக அறிய முடிகின்றது.