புறநானூறில் வாழ்வியலும் பண்பாடும்

சங்க இலக்கியங்கள் காலக்கண்ணாடியாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் அமைந்து தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றி நிற்பதை அனைவரும் அறிவர். ஆத்தகைய சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறில் புறம் தொடர்பான போர் செய்தி, அரசர்களின் வரலாறு, நாட்டுவளம், படை பலம், முதலானவை மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாடுகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. அத்தகைய வாழ்வியலையும், பண்பாட்டையும் பற்றி இக்கட்டுரையின் மூலம் காணலாம்.

பன்முக நோக்கில் – நாட்டுப்புற இலக்கியம்

ஒரு நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்க்கை முறையும் ஆராய்ந்து பார்த்தால் அந்நாட்டின்  வளர்ச்சி தெரியும். வளங்களையும் ஆராய்ச்சி முறைகளையும் ஆராய்கின்ற பொழுது அதற்கு பெரிதும் துணைபுரிவது இலக்கியங்கள் ஆகும். ஏனென்றால் மக்களின் வாழ்க்கை முறையினை ஆராய்கின்ற பொழுதுஅங்குள்ள மக்களின் அன்றாட பணிகள் சார்ந்து காணப்படும். அதற்கு மிக முதன்மை காரணம் அம்மக்களின் தொழிலாகும். நாட்டுபுறங்களில் காணப்படும் இலக்கிய தன்மை பெரிதும் நமக்கு துணைபுரிகிறது. வரலாற்றில் மக்களின் இலக்கியமான நாட்டுபுற இலக்கியத்தின் தோற்றம் பற்றி மிக துள்ளியமாக கூற…

பத்துப்பாட்டில் பழந்தமிழர; நாகரிகமும் வழக்கங்களும்

கடைச்சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டு, ஆற்றுப்படை நூல்களும் அகநூல்களும் புறநூல்களும் அடங்கிய தொகுப்பாக உள்ளது. ஆற்றுப்படை நூல்களின் வாயிலாக ஐவகை நிலத்தைச் சார;ந்த மக்களின் வாழ்வியலும் கலைஞர;களின் வறுமையும் அரசர;களின் கொடைச்சிறப்பும் உயரிய விருந்தோம்பல் பண்பாடும் வெளிப்படுகின்றன. அக மற்றும் புற இலக்கியங்கள் பழந்தமிழர;களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், செல்வச் செழிப்பு, வறுமை, வாணிகச் சிறப்பு முதலிய எண்ணற்ற செய்திகளை அறிந்துகொள்ள உதவுகின்றன. தொன்மை வாய்ந்த இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களில் பழந்தமிழரின் உயர;ந்த நாகரிகம் மற்றும் இன்றுவரை தொடர;ந்து பின்பற்றப்பட்டு வருகின்ற வழக்கங்கள் சிலவற்றையும் காண்போம்.

பத்துப்பாட்டில் பண்பாட்டுக் கூறுகள்: உணவுமுறை

பண்பாடு என்பது தொடர்ந்து கற்பது. அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது. ஒரு தலைமுறையில் கற்றவற்றைப் பின்வரும் தலைமுறையினர் பெற்றுக் கொண்டு அவர்கள்தம் தலைமுறையில் மேலும் புதியனவற்றைக் கற்கின்றனர். இதனால் பண்பாடு தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்படுகிறது.

நாட்டார் வழக்காறுகளும் சமஸ்கிருதமயமாக்கலும்

மக்களுடைய இன உணர்வானது, அந்த இனத்தின் நாட்டார் வழக்காறுகளின் தூண்களாக என்றும் நிலைத்து வெளிக்காட்டும். நாட்டார் வழக்காற்றின் மீதான ஆர்வம் இயல்பானது, ஆழமானது. நம்நாட்டைப் பொருத்தமட்டில், இறைநம்பிக்கை என்பது அனைத்து மக்களிடம் இயல்பான ஒன்று. நாட்டுப்புற மக்களின் பண்பாடானது ஒன்றுடன் ஒன்று இணைந்த பகுதியாக உள்ளது. அந்த வகையில் நாட்டார் வழக்காறுகள் ஒரு இனத்தின் மீதான ஆதிக்கத்தை, பண்பாட்டை, வரலாற்றை, அடையாளப்படுத்தும் விதமாக இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது.

தொல்காப்பியம் காட்டும் புறத்திணை மரபுகள்

தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தொல்காப்பியம் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்களாக 27 இயல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் வாழ்வானது அகம், புறம் என்ற தன்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. அக வாழ்விற்கு அளித்த முக்கியத்துவத்தை புற வாழ்விலும் காணமுடிகின்றது. போரில் வீரமரணம் அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ் சமுதாயம் விளங்கியதை கண்கூடாகக் காணமுடிகின்றது.

திருக்குறளில் செருக்கு– சொற்கருத்தாய்வு

இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் விண்டுரைத்து மானுட வெற்றிக்கு வழிவகுக்கின்றன.  அறிவுறுத்தல், இன்புறுத்தல், மொழித்திறன் மிகுத்தல், பண்பாட்டுக் காப்பு.  பொழுதுபோக்கு ஆகிய படைப்பு நோக்கங்களுள், தமிழ் இலக்கியங்களில் அறிவூட்டல் பண்பு மேலோங்கிக் கோலோச்சுதல் வெளிப்படை. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் சொல்லாட்சிச் செறிவும் திருக்குறளில் காணப்படுகின்றன.   அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும்  உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும்.

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது.

சேனாவரையர் உரையில் பெயர்கள்

சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு ஆகச்சிறந்த உரை நல்கியுள்ளார். சேனாவரையரின் பெயரே விவரணையாக விரிவடைகிறது. சேனாவரையின் உரைப்புலப்பாட்டுச் செறிவில் பெயர்கள் என்ற ஒற்றைக் கருதுகோளைக் கொண்டு கற்றையான செய்திகளை அணுகும் ஆய்வுக்களமாக இக்கட்டுரை இயங்குகிறது.

சிவகாசி வட்டாரத்தில் ஒயிலாட்டக்கலை

நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளில் ஒன்றாக ஒயிலாட்டகலைக் குறித்தும் அக்கலை சிவகாசி வட்டாரத்தில் நலிவடைவதை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு இளையநிலா ஒயிலாட்டக்கலைக்குழு நிகழ்த்தப்பட்டு வருவதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை நோக்கமாக அமைகிறது.