பூசலார் நாயனாரின் தன்னம்பிக்கையும் யோகநிலையும்

பூசலார் நாயனாரின் தன்னம்பிக்ககயும் யயாகநிகலயும் என்ற தகலப்பிலான ஆய்வுக் கட்டுகரயில் முன்னுகர இகற ஆகச பநறிஇ குறிக்யகாள் பநறிஇ தன்னம்பிக்கக பநறிஇ மனம் சீ ர் அகமப்பு பநறிஇ யயாக பநறிஇ ஈகக பநறிஇ உறுதிப்பாட்டு பநறி ஆகிய துகைத்தகலப்புகளில் இக்கட்டுகர ஆராயப்பட்டுள்ளது. யமலும் இக்;கட்டுகரயின் நிகறவாகபதாகுப்புகர வழங்கப்பட்டுள்ளது

சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ – விஞ்ஞான நுட்பங்கள்!

சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன. இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். “வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது…

பழமொழி நானூற்றில் அரசுசார் நிர்வாகத்திறனும் தற்காலப்பயன்பாடும்

சங்ககாலத்தில் தோன்றிய எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்களாகப் போற்றின.அதற்குப் பின் தோன்றிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்  நீதியையும், அறத்தையும் போற்றி வலியுறுத்தின.அப்பதினெட்டு நூல்களில் அறம் சார்ந்த நூல்களின் வரிசையில் ஒன்றாகப் பழமொழி நானூறு விளங்குகின்றது.அறத்தை வலியுறுத்துவதோடு இந்நூல் நிற்காது அவற்றின் உள்ளீடாக பல்வேறு கருத்துக்களையும் உணர்த்துகின்றது.அவற்றில் ஒன்றாக நிர்வாகம் அமைகின்றது. ஓன்றை முறைப்படுத்தி,திட்டமிட்டு, பொறுப்புடன் தலைமை ஏற்று வழி நடத்துவது நிர்வாகத்தின் வேலையாகும். இதை அரசுசார்  நிர்வாகத்தில் பழமொழிநானூறு எவ்வாறு…

சித்தர்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்

மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் கருத்துகளைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். ஆன்மீகம்,யோகம், தத்துவம், மருத்துவம், இயற்கை, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று பல நிலைகளில் தம் பாடல் கருத்துகளை வழங்கியுள்ளனர். மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்தளித்தவர்கள் சித்தர்கள்…

பாண்டியர்களின் ஆளுமை

இந்திய தீபகற்பத்தின்  தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட  மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய  மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும்  முதற்சங்கம,; இடைச்சங்கம,;  கடைச்சங்கம்  என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள்  பாண்டியர்கள்.  இத்தகு சிறப்பு  வாய்ந்த  பாண்டியர்களின் ஆளுமையை புறப்பாடல் கொண்டு ஆய்வதாக  இக்கட்டுரை  அமைகின்றது.

களஞ்சியம் (Kalanjiyam) Call for papers | Special Issue Nov 2024

களஞ்சியம் (Kalanjiyam) – An International Journal of Tamil Studies பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்ருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2018 முதல் இயங்கிவருகிறது. அருமைத் தமிழ் உறவுகளே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் களஞ்சியம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித் தமிழ், தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளுக்கு…

முனைவர் ப.மகேஸ்வரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை 18.

தொன்மங்கள் (ஆலவா) தெய்வங்களைப் பற்றிய தொல் பழங்காலத்தைச் சேர்ந்த கதைகளாகும். இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொண்டு இவ்வுலகம் மட்டுமல்லாமல் கீழ் உலகங்கள், மேல் உலகங்கள் என்று பலவற்றிற்கும் ஊடுருவிச் செல்லும் நிகழ்ச்சிகளைக் கொண்டவையாகும். அவையாவும் உண்மையென்றும், புனிதமென்றும் நம்பப்பட்டு வருகின்றன. “மேலை இலக்கியங்களுக்கெல்லாம் பைபிளே மூலத்தொன்மம் (ளுழரசஉந ஆலவா) என்றும் அதிலிருந்தே இலக்கிய கருக்களும், இலக்கிய வகைகளும், பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் பெறப்பட்டன என்றும் நார்த்ராப்ஃபிரை கூறுவார்”. சங்கப்பாடல்கள் பல தொன்மக்கருத்துகளைக் கொண்டுள்ளன. அவ்வகையில் தொன்மங்கள் புறநானூற்றில்…

முனைவர் தோ. கிரேசி

மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம்.

வளையாபதி காப்பியத்தில் உளவியல்

மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை உடல் மொழியாக வெளிப்படுத்துவது உளவியல். தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் வாயிலாக உளவியலை பற்றி விளக்கியுள்ளார். உளவியல் (psychology) என்னும் கிரேக்க சொல் ‘ஸைக்கி’ (Psyche)என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும் ‘லோகஸ்’ (Logus) என்ற அறிவியலை (Science) குறிக்கும் சொல்லையும் மூலமாக மூலமாக கொண்டுஉருவாக்கப்பட்ட சொல்லாகும்.தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியம் சமண சமயத்தைச் சேர்ந்த காப்பியமாகும்.இக்காப்பியம் சமண சமயத்தைச் சார்ந்தது.சமண சமயக் கோட்பாடுகளை விளக்கக் கூடியதாக இக்காப்பியம் திகழ்கிறது.இக்காப்பியம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை,72 பாடல்கள்…

பத்துப்பாட்டில் பண்பாட்டுக் கூறுகள்: உணவுமுறை

பண்பாடு என்பது தொடர்ந்து கற்பது. அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது. ஒரு தலைமுறையில் கற்றவற்றைப் பின்வரும் தலைமுறையினர் பெற்றுக் கொண்டு அவர்கள்தம் தலைமுறையில் மேலும் புதியனவற்றைக் கற்கின்றனர். இதனால் பண்பாடு தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்படுகிறது.