ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு: தமிழ் ஆய்வுலகை வளர்ப்போம்!

பேராளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரின் கவனத்திற்கு, தங்கள் அறிவுத்திறனையும், ஆய்வு முதிர்ச்சியையும் வெளிப்படுத்தும் தரமான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் பல்வேறு தலைப்புகளிலான உங்கள் ஆழ்ந்த ஆய்வுகளை உலகறியச் செய்ய ஒரு களம் அமைத்துத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்த இணையதளம், தமிழ் ஆய்வுகள் குறித்த ஒரு முக்கியமான மையமாக திகழும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையுமே, அந்தந்த துறைகளில் நிபுணத்துவம்…

களஞ்சியம் – ஆசிரியர்களுக்கான அழைப்பு

தமிழ் இலக்கியத்திற்கும் ஆய்வுலகிற்கும் ஒரு கௌரவப் பங்களிப்புக்கான அழைப்பு செம்மொழியாம் நம் தமிழ்மொழியின் வளத்தையும், அதன் இலக்கியச் செழுமையையும் பன்னாட்டு அரங்கில் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் களஞ்சியம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் கடந்த காலங்களில் பல அரிய பணிகளைச் செவ்வனே செய்து வந்துள்ளது. இலக்கியச் சிந்தனைகளைத் தூண்டும் ஆழமான கட்டுரைகளையும், ஆய்வுலகின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிப் படைப்புகளையும் வெளியிட்டு, தமிழ் ஆய்வுலகின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது, களஞ்சியம் மேலும் ஒரு முக்கியமான…

தமிழ் ஆய்விதழ் டிசம்பர் மாதத்திற்க்கான சிறப்பு வெளியீடு

தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக எமது களஞ்சியம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் டிசம்பர் மாதத்திற்க்கான சிறப்பு வெளியீடு சிறப்பு வெளியீடு: December 2024 Issue கல்வியில், இலக்கியத்தில் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கான ஒரு அரிய வாய்ப்பாக, எமது சர்வதேச தமிழ் ஆய்விதழ், சிறப்பு வெளியீடு ஆக டிசம்பர் 2024 மாதத்திற்கான ஆய்வுக்கட்டுரைகளைப் வரவேற்கின்றது. இந்த வெளியீட்டில், தமிழ்மொழி மற்றும் அதன் இலக்கியத்திற்கான புதிய ஆராய்ச்சிகளை முன்வைக்க, ஆராய்ச்சி செயல்முறைகளை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள, ஆராய்கையில் ஏராளமான…

தமிழ்மொழிச் சிக்கல்கள்

உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் சில கருத்தைத் தம் இனத்திற்குத் தெரிவித்துக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளன. கோழி ஒருவித ஒலியை எழுப்பிக் குஞ்சுகளை உணவுண்ண அழைக்கின்றது. பருந்து தன் குஞ்சுகளைத் தாக்கவரும் போது, வேறுவிதமான ஒலியை வெளிப்படுத்தி அவற்றைப் புலப்படுத்துகின்றது. இவை எண்ணத்தை வெளிப்படுத்தும் முறையில், இவ்வகை ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் இவற்றை மொழி என்று கூறுவதற்கில்லை. மொழி வளர்ச்சிக்குரியது. புதிய சிந்தனைகளை அறிவிக்கும் தன்மையுடையது. படைப்பாற்றலுக்கு இடம் தருவது. இலக்கியம் தோன்றும் சிறப்புடையது. பறவை, பாலூட்டி ஆகியவற்றின் ஒலிக்குறிகள் இத்தகைய சிறப்புகளைப் பெறவில்லை. உள்ளம், உடல் என்ற இவற்றின் துணையால் மொழி பிறக்கிறது. உள்ளத்தின் போக்கும் உடற்கூறும் எல்லா மனிதருக்கும் ஒத்திருப்பதில்லை. எனவே அவர்கள் பேசும் மொழியில் வேறுபாடு தோன்றும். எனவே மொழியின் சிக்கல் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அற இலக்கியங்கள் காட்டும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகள்: நான்மணிக்கடிகையை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, மானிடவியல் ஆய்வு.

அறநெறிக்காலமான சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அநேகமான நூல்கள் அறக்கருத்துக்களை எடுத்தியம்புவனவாகவும், மானிட வர்க்கத்திற்கு அறங்களினை போதிப்பனவாகவும், வாழ்க்கையின் நிலையமைப்பையும், ஒழுங்கையும் பிரதிபலிப்பனவாகவும், அவற்றை பேணுவனவாகவும், மனித சமூகத்தை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. சங்கமருவியகாலத்தில் தோன்றிய பதினோர் அற இலக்கியங்களில் நான்மணிக்கடிகையும் ஒன்று. இது விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட ஒரு நீதி நூல். இவ் ஆய்வுக்கட்டுரையானது நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்படும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் விதத்தினை எடுத்தியம்புவதை நோக்காக கொண்டு அமைந்துள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளான அழகு, கற்பு, நாணம், அன்புடைமை, காதல், ஊடல், மகிழ்ச்சி, தாய்மை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு கீழ்ப்படிதல், கணவனைப் பாதுகாத்தல், சார்ந்திருத்தல், பெண்களின் அறிவு, விருந்தோம்பல் பண்பு என பல்வேறு தத்துவ, அறப் பண்புகள் நான்மணிக்கடிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை பெண்களின் மகிமையையும், ஒழுக்கத்தையும், பெண்களின் பெருமையையும், வாழ்வியல் அறங்களையும் எடுத்தியம்புகின்றன. இவை சமூக, மானிடவியல் நோக்கில் பால்நிலைக்கட்டுமாணத்தில் பெண்களின் வகிபங்கையும், பால்நிலை பங்அறநெறிக்காலமான சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அநேகமான நூல்கள் அறக்கருத்துக்களை எடுத்தியம்புவனவாகவும், மானிட வர்க்கத்திற்கு அறங்களினை போதிப்பனவாகவும், வாழ்க்கையின் நிலையமைப்பையும், ஒழுங்கையும் பிரதிபலிப்பனவாகவும், அவற்றை பேணுவனவாகவும், மனித சமூகத்தை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. சங்கமருவியகாலத்தில் தோன்றிய பதினோர் அற இலக்கியங்களில் நான்மணிக்கடிகையும் ஒன்று. இது விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட ஒரு நீதி Áல். இவ் ஆய்வுக்கட்டுரையானது நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்படும் பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் விதத்தினை எடுத்தியம்புவதை நோக்காக கொண்டு அமைந்துள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளான அழகு, கற்பு, நாணம், அன்புடைமை, காதல், ஊடல், மகிழ்ச்சி, தாய்மை, குடும்ப பொறுப்பு, கணவனுக்கு கீழ்ப்படிதல், கணவனைப் பாதுகாத்தல், சார்ந்திருத்தல், பெண்களின் அறிவு, விருந்தோம்பல் பண்பு என பல்வேறு தத்துவ, அறப் பண்புகள் நான்மணிக்கடிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை பெண்களின் மகிமையையும், ஒழுக்கத்தையும், பெண்களின் பெருமையையும், வாழ்வியல் அறங்களையும் எடுத்தியம்புகின்றன. இவை சமூக, மானிடவியல் நோக்கில் பால்நிலைக்கட்டுமாணத்தில் பெண்களின் வகிபங்கையும், பால்நிலை பங்குகளில் பெண்களின் நிலையினையும் அதற்கூடாக பால்நிலை உறவுகள், பால்நிலை வேறுபாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தாலும், காலமாற்றத்தின் காரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வாழ்வியல் நெறிமுறைகள் தற்கால பெண்களால் கடைப்பிடிக்கப்படாத அறங்களாகவும், சமகால சூழலில் பின்பற்றப்படாத அறங்களாகவும் அமைந்துள்ளதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இவ் ஆய்வானது விவரண ரீதியான ஆய்வாக அமைந்துள்ளது. எனவே நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை சமூக, மானிடவியல் ரீதியில் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்காகும்.குகளில் பெண்களின் நிலையினையும் அதற்கூடாக பால்நிலை உறவுகள், பால்நிலை வேறுபாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தாலும், காலமாற்றத்தின் காரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வாழ்வியல் நெறிமுறைகள் தற்கால பெண்களால் கடைப்பிடிக்கப்படாத அறங்களாகவும், சமகால சூழலில் பின்பற்றப்படாத அறங்களாகவும் அமைந்துள்ளதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இவ் ஆய்வானது விவரண ரீதியான ஆய்வாக அமைந்துள்ளது. எனவே நான்மணிக்கடிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் வாழ்வியல் நெறிமுறைகளை சமூக, மானிடவியல் ரீதியில் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்காகும்.

பெண்களின் பாதுகாப்பு

நம் நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு மட்டும் அன்றில் இருந்து இன்று வரை மாறாமல் என்றும் இருக்கின்றது . எப்பொழுதும் பெண்களுக்கு பாதுகாப்பு என்று எல்லாம் கூறினால் மட்டும் போதாது, அதற்கு தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் அவை மட்டும் போதுமா? சட்டங்கள் இயற்றி தண்டனைகள் கொடுத்தால் பாதுகாப்பு வந்துவிடுமா பெண்களுக்கு? சட்டங்கள் இருந்தல் பாதுகாப்பு வந்துவிடுமா அல்ல சமூகத்தில் உள்ளவர்கள் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டுமா என்று சமூகத்தில் தான் இருக்கிறது. பெண்கள் இந்த நாட்டில் பாதுகாப்பு வீட்டின் உள் மற்றும் வெளியில் பாதுகாப்பு இல்லை என்று தினம் தினம் நிகழும் சம்பவங்களை நாம் அறிவதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாமே…சட்டங்கள் எங்கே சென்றன தண்டனைகள் என்ன ஆகின? பெண்களை பாதுகாக்க தான் இந்திய தண்டனை சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013, வரதட்சணை தடைச் சட்டம் 1961, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006, பெண்களின் அநாகரீகமான பிரதிநிதித்துவம் (தடை) சட்டம் 1986, தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990. இத்தனை சட்டங்கள் இருந்தும் என்ன பலன் என்று தான் தெரியவில்லை. என்ன நடக்கின்றது இந்த சமூகத்தில், பாதுகாப்பு எங்கே சென்றது என்று தேடிப்பார்க்க வேண்டிய நிலை இருக்கின்றதா என்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது.

Kalanjiyam களஞ்சியம் - International Research Journal of Tamil Studies

டிசம்பர் மாதத்திற்க்கான சிறப்பு வெளியீடு

தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக எமது களஞ்சியம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் டிசம்பர் மாதத்திற்க்கான சிறப்பு வெளியீடு வெளியிட உள்ளது. இதற்காக ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் ISSN என்னுடன் தொகுப்பாக வெளியிடப்படும். ஆய்வுக்கட்டுரைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும். அல்லது கீழ்கண்ட பொத்தானை சொடுக்கவும். SUBMIT ARTICLE / MANUCRIPT ONLINE – ஆய்வுக்கட்டுரைகளை ஆன்லைன் மூலம் அனுப்ப For Enquiry: S. VEERAKANNAN, Deputy Librarian,…

சுவடித் திரட்டும் சிலப்பதிகாரமும் பதிப்பு முறைகளில் ‘கோவலன் கதைகள்’

ஆய்வுச் சுருக்கம்

மானுடச் சமூகம் வாழ்வில் கருத்துரைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் கொண்டு செல்வதற்கு வாய்மொழி மரபில் செவிவழியாக வழங்கியிருக்கிறது. சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் கருத்தமைவுகள் இடப்பெயர்வு சூழலில் ஓரிடத்தில் வழங்கப்பட்டவைகள் மறைந்து இருக்கிறது. வாய்மொழி கதைகள், பாடல்கள் பதிப்பு செய்யப்படாத கி.மு காலகட்டத்தின் வரலாற்று தகவல்களாக விளங்குகின்றன. வாய்மொழி மரபில் கொண்டு வந்த தகவல்கள் வரிவடிவ அமைப்பில் தொடக்கக் காலத்தில் மண், ஓலை, கல், துணி, தோல் என பயன்படு பொருள்களில் எழுத்து வடிவ அமைப்பில் செய்திகள் பதிவாக்கம் ஆனது.

மானிட வாழ்க்கையில் மக்கள் காலத்திற்கு ஏற்றாற்போல பொருள் பயன்பாட்டையும் குறிப்பிடுகின்றனர்.   எழுத்தறிவு பெறாத பாமரர்கள் மனவறிவை பெற்று கதைகளும் கணக்கியலும் தன் சூழலியல் முறைகளையும் மனக்குவியல்களில் தேர்ந்தவராக வாழ்ந்துள்ளனர். ஒருவர் பகிர்ந்த கருத்துகள் கதை வடிவில் வழங்கியபோது இரண்டாம், மூன்றாம் மனிதர்களிடம் வந்து கதைகள்  திருத்தம் பெற்றுள்ளன என்பதை சுவடித் திரட்டும் பதிப்பு நூலும் கோவலன் கதையை விளக்குவதை பதிப்புமுறை ஆய்வாக நெறிப்படுகிறது.

ஆய்வு செல்கை

தமிழ் நில பரப்புகளான வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்னும் வரைக்குள் பூம்பட்டிணம் மற்றும்  வடமதுரை பாண்டியர்களின் ஆளுகை இடம் வகித்தது. பூம்பட்டிண வணிகர்களின் வாழ்வியலும் பாண்டிய அரசியலும் நாட்டுப்புற வாழ்வியலோடு ஒப்புமை செய்து கதைப்போக்கையும் பதிப்பு முறைகளையும் கொண்டு கோவலன், கண்ணகி பாண்டிய மன்னர்களின் பிறப்புவினை அறியும் ஆய்வின் செம்மையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

பயன்பாட்டு முறைகள்

மானுட ஆய்வில் மக்களின் வாழ்வியல் கூறுகளைக் கண்டறிந்து இனக்குறியியல், மொழி, பண்பாடு, மருத்துவம், பழக்கவழக்கம், என வாய்மொழி மரபு அமைப்புகள் கதைகள் வழி வெளிப்பட்டு வருகிறது. கதைகள்  பல்வேறு இடத்து மக்களிடம் மருங்கொலித்து வாய்மொழியாக வந்துள்ளது. அச்சு வடிவம் வந்த காலத்தில் வரிவடிவ எழுத்து முறைகள் பயன்படுத்தி வரப்படுகிறது. எழுத்து வடிவ முறைகள் நாட்டுப்புற மக்கள் மண் ஓடுகளிலும் ஓலைகளிலும் கல்களிலும் ஆடைகளிலும் பயன்படுத்தியதைக் காணலாம். அச்சு இயந்திரக் கூடங்கள் வருகையினால் மரக்கூழில் செய்யப்பட்ட காகிதங்களில் எழுத்த வடிவ முறைகள் பயன்படுத்த முயன்று வளர்ச்சிப் பெற்றுள்ளன. கதைகள் மக்களின் இடம் பெயர்வு வாழ்வியலின் வாய்மொழியாகவும் பதிப்பின் நூலாக்க வடிவிலும் விளக்கம் பெற்று வருகின்றன. 

தமிழர் கோவில் சிலைகளில் யோகா – யோகா முக்கியத்துவத்தை தமிழர் கோயில் சிற்பங்களின் வாயிலாகவும் அறியலாம்

இயற்கையின் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்த ஒரு பொருளாகக் கருதப்படும் தமிழர் கலாச்சாரம், பல்வேறு ஆன்மீக, பாணி மற்றும் தத்துவங்களை உள்ளடக்கியது. இந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையாகக் கொள்கைகளை விரிவாக்குவதற்கான முக்கிய ஊடகமாக கோயில்கள் செயல்படுகின்றன. தமிழர் கோயில்களில் உள்ள சிலைகள் யோகா, அதாவது உள்மயக்கம் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றின் அடையாளங்களாக விரிவாக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட அம்மன் கோயில்கள்

முன்னுரை விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டின் முற்பகுதியில் அமைந்துள்ள ஒரு விசேஷமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல அம்மன் கோயில்கள் உள்ளன, அவையெனில் உள்ளூர் மக்கள் மற்றும் பூமியினர் ஆகியோரின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கின்றன. இந்த கோயில்கள், அந்தரங்கவும் சமூகக் கழகத்துக்கும் முக்கியமான வேற்றுமையான கட்டமைப்புகளை வழங்குகின்றன. இந்த ஆய்வு, விருதுநகர் மாவட்ட கேளிக்கோயில்களின் வரலாறு, அமைப்பு, வழிபாடு மற்றும் நம்பிக்கைகளை ஆராய்கிறது. அறிமுகம் விருதுநகர் மாவட்டம், மிகவும் பழமையான மற்றும் பண்பாட்டு மையமாகக் கல்வெட்டு செய்யப்பட்ட இடமாகும். இந்த…