நாலடியார் உணர்த்தும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்
முன்னுரை சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி…