ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்
முன்னுரை தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹைக்கூவும் சென்ரியுவும் வடிவ அளவில் ஒன்றாக தோன்றினாலும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மனித நடத்தைகளையும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவின் சென் தத்துவம், புரிதல் அற்ற தன்மை, வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஆகிய இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டது. சென்ரியு எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி…