ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி”
மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு…